Posted on Leave a comment

வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

ஓர் உணவகத்திற்கு நீங்கள் செல்கிறீர்கள். நீங்கள்தான் வாழை இலை, உணவு தயாரிப்பதற்கான பொருட்கள் மற்றும் குடிக்க நீர் ஆகியவற்றைக் கொண்டுவர வேண்டும் என்கிறார் உரிமையாளர். நீங்கள் ஒத்துக்கொள்கிறீர்கள். பின்னர் நீங்களே சமைக்க வேண்டும் என்கிறார். நீங்கள் சமைக்கவும் செய்கிறீர்கள். அங்கு உணவு உண்ண உங்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. நீங்கள் வெளியேறும் நேரம் உணவக உரிமையாளர் உணவிற்கான தொகையைப் பெற்றுக் கொள்கிறார். Continue reading வரம்பற்ற அதிகாரமும் பொறுப்பற்ற தன்மையும் | சுசீந்திரன்

Posted on Leave a comment

புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

இந்த கட்டுரை காந்தி மற்றும் அவரது பஞ்சதளபதிகளைப் பற்றியதே. இந்திய சுதந்திரம் என்பது காந்தி எனும் தனிநபர் சாதனையல்ல என்பது மறுக்க இயலாத கூற்றே. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பிற தலைவர்களின் தேசப்பற்றைக் கொச்சைப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்காக நேதாஜியின் படையைக் கண்டு அச்சமுற்ற ஆங்கிலேயன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும், உண்மையான போராளிகள் செக்கிழுத்தும், கல்லுடைத்தும் பாடுபட்டுக் கொண்டிருந்த போது காந்தி போன்ற போலிப் போராளிகள் சிறைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றும் சொல்லி காந்தியின் பங்களிப்பைச் சிறுமைப்படுத்துவதும் சரியல்ல. Continue reading புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

Posted on Leave a comment

ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன்

‘ஆத்மநிர்பர்’ – ஆவலுடன் காத்திருந்த சதக்கோடி மக்களுக்கு நமது பிரதமர் தந்த பதில். ‘இந்த முன்வைப்பு ஆச்சரியத்தை ஏற்படுத்தக்கூடியதும் அல்ல, தன்னம்பிக்கை ஊட்டக்கூடியதும் அல்ல. முதல் பாரதப் பிரதமர் நேரு ஆரம்பித்த இந்த லட்சிய கோஷம் கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டாகியும் முன்னேறாமல் முடங்கிக் கிடக்கிறது. நேற்றுவரை உலகமயமானதை மெச்சிய வலதுசாரிய சிந்தனையாளர்களா இன்று சுயசார்பு பாரதம், ஸ்வதேசி என்று பல்டி அடித்திருக்கிறீர்கள்’ என்ற கேலியும், ‘வளைகுடா நாடுகளில் பெட்ரோலையும், பிரான்ஸ் ஆயுதங்களையும் வாங்கிக் கொண்டு ‘கோ லோக்கல் என்று கூவுவது அபத்தமில்லையா’ என்ற கிண்டலும் காதில் விழுகிறது. 

Continue reading ஆத்மநிர்பர் – தன்னிறைவா? தற்கொலை முயற்சியா? | சுசீந்திரன்

Posted on Leave a comment

முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்

கடந்த காலத் தவறுகள் எரிந்து போகட்டும் – இதுதான் தன் ஆய்வறை எரிந்தபோது எடிசன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகள். இப்போது பற்றி எரியும் கொரொனா தீயில் நாம் எரிக்க வேண்டிய கடந்தகாலத் தவறுகள் கம்யூனிசமும் சோசியலிசமும்தான். நலத்திட்டங்கள், சமத்துவம் பேசும் சோசியலிசத்தை விடுத்து, நம்மைச் சுரண்டி ஏய்க்கும் முதலாளித்துவத்திற்கு வழிவகை செய்வதா எனக் கேட்கத் தோன்றலாம்.  Continue reading முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்

Posted on Leave a comment

16-ஆகஸ்ட்-1946, 15-ஆகஸ்ட்-1947, 14-பிப்ரவரி-2020 | சுசீந்திரன்

16 ஆகஸ்ட் 1946 – பொது
விடுமுறையாக அறிவிக்கப்பட வேண்டும் என்கிற முஸ்லிம் லீகின் கோரிக்கை நிராகரிக்கப்பட
வேண்டும் என்று வங்காள காங்கிரஸ் வாதாடியது. பாகிஸ்தான் பிரிவினை வேண்டும் என்கிற முஸ்லிம்
லீகின் ஆசையை அனைத்து மக்களின் விருப்பம் போல் காட்டுவதாக அமையும் என்பதால் பொது விடுமுறையாக
அறிவிப்பது சரியல்ல என்ற காங்கிரஸின் வாதத்தை ஏற்றுக்கொண்டு வங்காள கவர்னர் பிரெட்ரிக்
பர்ரோவ்ஸ் முஸ்லிம் லீகின் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் ஜின்னா அதைப் பொருட்படுத்த
வில்லை. ஆகஸ்ட் 16ஐ பொது ஹர்த்தால் தினமாக அறிவித்தார். அந்த தினத்தை நேரடி நடவடிக்கை
நாள் என்று அழைத்தார் ஜின்னா.

16 ஆகஸ்ட் 1946, அஃதோர்
வெள்ளிக்கிழமை. அன்றைய தினம் ஆங்கிலேய ராணுவப் படை செல்டாஹ் (Sealdah) எனும் இடத்தில்
முகாமிட்டிருந்தது. அன்று தொழுகைக்காகக் கூடிய இஸ்லாமியர்கள் தொழுகை முடிந்தபின்னர்,
கத்தி, லத்தி போன்ற ஆயுதங்களுடன் ஹர்த்தால் அனுஷ்டிக்காத ஹிந்துத் தரப்புக் கடைகளை
அடித்து நொறுக்கினர். குழுக்குழுக்களாக பிரிந்து சென்று கலவரத்தை ஏற்படுத்தினார்கள்.
கலவரத்தைத் தடுக்கும் பொருட்டு தலைமைக் காவல் அதிகாரி ஹாட்விக் அந்த முகாமில் இருந்த
ஆங்கிலேயப் படைக்குத் தந்த உத்தரவை நிராகரித்தார் அன்றைய வங்க மாகாண ப்ரீமியரும் முஸ்லிம்
லீகின் முக்கியத் தலைவருமான ஸய்யாத் ஹுசைன் ஸூர்வர்டி. கலவரத்தில் ஈடுப்பட்ட இஸ்லாமியத்
தரப்பால் ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் கொல்லப்பட்டனர், குற்றுயிராக்கப் பட்டனர், ஹிந்துப்
பெண்கள் மானபங்கப் படுத்தப்பட்டனர், உடைமைகளை இழந்தனர். 
இத்தனை கொடூரங்களும் நடைபெறும்
போது ஆங்கிலேய ராணுவப்படை அந்த முகாமை விட்டு வெளியேறுவதற்கான அனுமதியின்றி வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தது. ஆகஸ்ட் 17 நள்ளிரவு சுமார் 2 மணிக்கு அப்படை அந்த முகாமை
விட்டு வெளியேறிய போது, சரிசெய்யமுடியாத வரலாற்றுப் பிழை ஒன்று நிகழ்ந்து முடிந்து
விட்டிருந்தது. நடந்த தாக்குதலுக்கு பதில் தரும் பொருட்டு ஹிந்துத் தரப்பும் வன்முறையைக்
கையிலெடுத்தது. இஸ்லாமியத் தரப்பும் கொலைகள், வன்புணர்வுகள், பொருட்சேதம் போன்ற துன்பங்களுக்கு
இலக்கானது. இதுவே நவகாளி படுகொலைகள் போன்ற எல்லா ஹிந்து-முஸ்லிம் வகுப்புவிரோதத்திற்கான
மூலவிதை ஆனது.

பெரும்பான்மை ஹிந்துக்கள்
இஸ்லாமியர்களான தங்களைச் சரியாக நடத்த மாட்டார்கள் என்ற ஜின்னாவின் எண்ணத்தைத் பல முஸ்லிம்கள்
நம்பினார்கள், அது உண்மையில்லை என்ற போதிலும்! ஆனால் இந்தியா – பாகிஸ்தான் பிரிவினைக்கான
பேச்சுவார்த்தைக்குக் கூட உடன்படாமல் முஸ்லிம் லீக் முரண்டு பிடித்தது. பஞ்சாப் மற்றும்
லாகூர் ஆகியவற்றை உள்ளடக்கிய பஞ்சாப் – சிந்து மாகாணத்தையும் மற்றும் முழு வங்காளத்தையும்
பாகிஸ்தானாகப் பிரித்துத் தர கேட்டார் ஜின்னா. இஸ்லாமியர்கள் அதிகம் உள்ள பகுதிகள்
மட்டும் பாகிஸ்தானாகட்டும், இல்லையென்றால் பொது வாக்கெடுப்பு நடத்தி அங்குள்ள மக்களின்
கருத்துக் கேட்போம் என்ற யோசனையை நிராகரிக்க ஜின்னா சொன்ன காரணம், அப்படி பொது வாக்கெடுப்பு
நடத்தினால் இஸ்லாமியர்கள் அல்லாதோரும் வாக்களிப்பார்கள் என்பதுதான். அதாவது பாகிஸ்தான்
வேண்டுமா, வேண்டாமா என்று முடிவு செய்யும் உரிமை அந்த மாகாணங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு
மட்டுமே உண்டு, மொத்த மக்கட்தொகையில் சுமார் 40 சதவீதம் பேர் ஹிந்துக்களாக இருந்தாலும்
அதில் ஹிந்துக்கள் பங்கு கொள்ளக் கூடாது என்பதே ஜின்னாவின் எண்ணம்.

இதற்கு இந்திய தேசிய
காங்கிரஸ் உடன்பட மறுத்ததாலேயே ஜின்னா ஆகஸ்ட் 16ஐ பொது ஹர்த்தால் தினமாக அறிவித்து
வன்முறைகளை ஊக்குவித்து பாகிஸ்தான் பிரிவினை என்பதைத் தவிர்க்க முடியாத ஒன்றாக மாற்றினார்.

ஹிந்து – இஸ்லாமியர்
ஒற்றுமையைப் பெரிதும் விரும்பினார் காந்தி. அவர் பாகிஸ்தான் பிரிவினையைத் தவிர்க்க
தன்னால் முயன்ற எல்லாம் செய்து பார்த்தார். ஆனால் நேரடி நடவடிக்கை நாளுக்குப் பின்னர்
அவரது சகாக்கள் இனியும் முஸ்லிம் லீகுடன் ஒற்றுமை ஏற்படுத்த முயல்வது வீண் என்ற மனநிலைக்கு
வந்துவிட்டனர். அரசியல்ரீதியான நிகழ்வுகள் இவையென்றால் வரலாற்றுரீதியாக நிகழ்ந்தவை
இன்னும் மோசமானவை.

நேரடி நடவடிக்கை நாளுக்குப்
பிறகு நாட்டின் பல பகுதிகளில் ஹிந்து – முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. இந்நிகழ்வுகளின்
உச்சமாக கோட்ஸே என்பவர், இப்பிரச்சினைகளுக்குக் காரணம் பாகிஸ்தான் பிரிவினையைச் சரியாக
கையாளாத காந்தியின் செய்கைகளே என்று எண்ணி, நம் தேசப்பிதாவின் உயிரைக் காவு வாங்கியதில்
போய் முடிந்தது.

வெறும் பேச்சுவார்த்தைகள்
மூலம் தீர்த்திருக்கக் கூடிய இப்பிரச்சினைகளை, வெற்று அரசியல் லாபங்களுக்காக வன்முறைக்
கோரங்களை ஊக்குவித்ததுடன் அதற்கு மறைமுகமாகக் கைகொடுத்த முகமது அலி ஜின்னா பாகிஸ்தானின்
முதல் கவர்னர் ஜெனெரலாகவும், ஸய்யாத் ஹுசைன் ஸூர்வர்டி பாகிஸ்தானின் ஐந்தாவது பிரதமராகவும்
பதவி பெற்றனர். அவர்களின் பெயர்களில் பல்கலைக்கழகங்கள், சிலைகள் என நினைவுச் சின்னங்கள்
பல உள்ளன. ஆனால் அந்தக் கோர நிகழ்வாலும் அதனால் உண்டான சங்கிலி வினைகளாலும் பாதிக்கப்பட்ட
ஹிந்து இஸ்லாமியக் குடும்பங்களின் நிலையைச் சொல்ல எந்த ஆவணமும் இல்லை, நினைவுச் சின்னமும்
இல்லை.

குடியுரிமைத் திருத்தச்
சட்டம், தேசிய மக்கட்தொகைக் கணக்கீடு மற்றும் தேசியக் குடிமக்கள் பதிவேடு போன்றவற்றை
எதிர்ப்பதோ ஆதரிப்பதோ, அவற்றை விமர்சிப்பதோ அரசியலமைப்பு தரும் அடிப்படை உரிமை. அந்தக்
கருத்துக்களுக்கு ஆதரவு திரட்டும் பொருட்டு சட்டத்திற்கு உட்பட்ட வழியில் போராடுவது
இந்திய இறையாண்மை தரும் ஜனநாயக உரிமை. ஆனால் போராட்டங்களில் ஒலிக்கும்
ஆஸாதி
ஆஸாதி
என்ற குரல்களும், தொழுகைக்குப் பின்னர் கூடும்
போராட்டங்களும் அதன் பின்னர் உண்டாகும் வன்முறைகளும் இன்னொரு நேரடி நடவடிக்கை நாள்
என்ற பெரும் விலையை இந்தியா தந்துவிடுமோ என்ற அச்சத்தை ஊட்டுகிறது. பதவிக்காகப் போராட்டங்களைத்
தூண்டும் ஜின்னாக்களுக்கும், ஸூர்வர்டிகளுக்கும் இங்கு பஞ்சமில்லை. ஆனால் ஒற்றுமைக்காக
ரத்தம் சிந்தும் காந்திக்குத்தான் பஞ்சம். இதைப் புரிந்து மக்கள் நடந்தால் எல்லாம்
நலமே. ஆனால் ஏனோ
பிரிவினை கேட்பது முஸ்லிம்களா, முஸ்லிம்
லீகா
என்ற நேருவின் கேள்விக்கு, பெரும்பான்மை
முஸ்லிம்கள் மீதான முஸ்லிம் லீகின் ஆதிக்கத்தைக் குறைத்து விடுவது மிகவும் கடினம்

என்ற சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியின் பதில் மனதில் எதிரொலிப்பதைத் தவிர்க்க இயலவில்லை.