Posted on Leave a comment

நம்மை நோக்கிப் பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்

Thanks: DDIndia

‘மோடி தடுத்து நிறுத்தியது கொரோனாவை அல்ல, உண்மைகளை!’

திருவாய் மலர்ந்திருக்கும் ராஹுல் காந்திக்கு நம் அனுதாபங்களைத் தெரிவித்தே இந்த வ்யாசத்தைத் தொடங்க வேண்டும். ஏனென்றால் இந்தக் காலக்கட்டத்தில் (அதாவது மே 01, 2021 எழுதப்பட்ட கட்டுரை இது) மோடி அல்லாமல் காங்கிரஸ் ஆட்சியிலிருந்தால் என்னும் ‘மாற்றுச்சிந்தனை’யை ஓடவிட்டால் கிடைக்கும் பதில் அடிவயிற்றில் சில்லிடவைக்கும். கொரோனா அளவுக்கு வீர்யம் இல்லாவிட்டாலும் அந்த அளவு பீதியை உண்டு பண்ணிய 26/11 தாக்குதலின் போது காங்கிரஸ் அரசு ஒரு அவசரகால நிலமையை நிர்வகிக்க எடுத்த, இல்லை இல்லை, எடுக்காமல் ஊறப்போட்ட முடிவுகள்தாம் நமக்கு இப்போது வழிகாட்டி. அதன்படி பார்த்தால் நமது மாற்றுச்சிந்தனை செய்யவே முடிந்திராத அளவுக்கு நாடு சீர்குலைந்துபோயிருக்கும் என்பதுதான் நமக்குக் கிடைக்கும் பதில். கால்களில் முட்டிக்குப் பதிலாக ஜெல்லியை வைத்துக்கொண்ட காங்கிரஸ் அரசும் பிரதமர் மன்மோகன் சிங்கும் எந்த உறுதியான முடிவும் எடுக்காமல் தயங்கித்தயங்கி பாகிஸ்தானுடன் ஹீனமான குரலில் பேச்சு வார்த்தைக்கு முயன்ற அவலத்தை நாமே பார்த்தோம். அப்படிப்பட்ட செயல்பாடுடைய அரசு இன்றிருந்தால் என்னும் எண்ணமே நமக்கு பயத்தைத் தருகிறதா இல்லையா? Continue reading நம்மை நோக்கிப் பாயும் தோட்டா – கொரோனா | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்

வடக்கே போகும் தேசம் என்றவுடன் ஏதோ நான் தனித்தமிழ் அன்பனாக மாறி சீரிய திராவிடச்சிந்தனையின் பாதிப்பில் ‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்னும் நைந்து போன வசனம் பேசுவதாக நினைக்க வேண்டாம். நான் சொல்லும் வடக்கே என்பது இரு பரிமாணப் பரப்பில் உயருவதைக் குறிக்கும் சொல்லாடலான ‘Going north’ என்பதுதான்! Continue reading மத்திய பட்ஜெட் 2021 – வடக்கே போகும் தேசம் | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

பிஜேபி அரசு கடந்த 2014 மற்றும் 2019 தேர்தல்களின்போது கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறது. விவசாயத்துறை மாறுதல்களும் அதை முன்னெடுக்கும் மூன்று வேளாண் சட்டங்களும் அவற்றில் முக்கியமானவை. Continue reading விவசாயிகள் போராட்டம் – வழி மாறியதா வெள்ளாடு? | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

அந்தப் பிரசித்தி பெற்ற ஆகஸ்டு 15, 1947ன் நள்ளிரவு, மௌண்ட்பேட்டன் கப்பலேறும்போது மறதியாக விட்டுச்சென்ற ஆங்கிலம் என்னும் மொழி இந்தியாவைப் படாத பாடு படுத்திக்கொண்டிருக்கிறது. அன்றிலிருந்து ஆங்கிலத்துக்கான இடம் எது என்பதில் நமது சண்டையும் சச்சரவும் ஓய்ந்தபாடில்லை. முக்கியமாகச் சொல்ல வேண்டுமானால் எந்த மொழியில் நம் குழந்தைகள் படிக்க வேண்டும் என்பதில் இன்னும் குடுமிப்பிடி தொடருகிறது. சமீபத்தைய தேசிய கல்விக் கொள்கை இன்னொரு பரிமாணத்தைச் சொல்லியிருப்பது சிக்கலைத் தீர்க்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். Continue reading பள்ளிக் கல்வியில் ஆங்கிலமும் தாய்மொழியும் | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

20 லட்சம் கோடி – பொருளாதார மாற்றக் கணம் | ஜெயராமன் ரகுநாதன்

கொரோனாவின் பாதிப்பால் அடி வாங்கிய இந்தியப் பொருளாதாரத்தைத் தூக்கி நிறுத்துவதற்காக மோடி அரசாங்கம் அறிவித்திருக்கும் 20 லட்சம் கோடி ஊக்கத் திட்டங்களைப் புரிந்தும் புரியாமலும் புகழும் அல்லது விமர்சிக்கும் கோஷ்டிகளுக்கு 20 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று தெரியாது என்பதுதான் உண்மை!

பிரதமரின் மே 12ம் தேதி உரையில் தெரிவிக்கப்பட்ட ஐந்து அம்சங்களையும் உள்ளடக்கிய திட்டங்களாக நமது நிதி அமைச்சர் ஐந்து நாட்களில் திட்டங்களை அறிவித்தார்.

Continue reading 20 லட்சம் கோடி – பொருளாதார மாற்றக் கணம் | ஜெயராமன் ரகுநாதன்

Posted on Leave a comment

எஸ் வங்கி பிரச்சினை | ஜெயராமன் ரகுநாதன்

 

கடந்த ஒரு வருடத்தில்
நாம் இரண்டு பெரிய நிதித்துறை அதிர்ச்சிகளை எதிர்கொள்ள வேண்டியதாகிவிட்டது. முதலில்
பஞ்சாப் மஹாராஷ்டிரா கோ-ஆப்பரேடிவ் வங்கியின் திவால். அதன் தாக்கம் முழுமையாகச் சரி
செய்யப்படுவதற்குள் இப்போது எஸ் வங்கியின் (
Yes
Bank)
வீழ்ச்சி. இந்த வீழ்ச்சி வெகு ஆழமான காரணங்களுக்கு உட்பட்டது என்பது இப்போதுதான் தெரிய வருகிறது. பதிலில்லாத பல
கேள்விகளை எழுப்பி இருக்கிறது. ஒரு சராசரி இந்தியனின் மனக்குமுறலை அதிகரிக்கும் வண்ணம்
சிக்கல்களை இந்த வங்கியின் வீழ்ச்சி உள்ளடக்கியிருக்கிறது.


அக்டோபர்
2019 தொடங்கி டிசம்பர் 2019 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கி அடைந்திருக்கும்
நஷ்டம் ரூ
பாய் 18,564 கோடி. ஒரு வருடம் முன்பு, அதாவது
அக்டோபர் 2018 தொடங்கி டிசம்பர் 2018 வரையிலான மூன்று மாதங்களில் எஸ் வங்கியின் லாபம்
ரூ 1000 கோடி என்று அறிக்கை சொல்லியிருக்கிறது. இந்த மாதிரியான அதலபாதாள வீழ்ச்சி ஒரே
வருடத்தில் சாத்தியமா? அப்படியானால் இதுநாள் வரையிலான அறிக்கைகளும் தணிக்கை செய்யப்பட்ட
கணக்குகளும் சொல்லியவை எல்லாம் பொய்தானா? இந்த அளவுக்கா அடிப்படை முறைமைகளே கேள்விக்குள்ளாகும்?
இது நமது நாட்டின் நிதித்துறையின் சட்டதிட்டங்களையே கேலிக்குள்ளாக்கும் அவலமில்லையா?


உடனடி முடிவாக
ரிசர்வ் வங்கி எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறும் (M
oratorium) அளவை ரூ
50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது இந்தக் கட்டுப்பாடு மர்ச் 18ம் தேதி வரை மட்டுமே.
இந்த முடிவுமே கேள்விக்குரியதாக ஆகியிருக்கும் நிலையில் இதைக் கொஞ்சம் விவரமாக அலசுவது
அவசியம். ஆனால் அதற்கு முன்னால் இந்த எஸ் வங்கியில் நடந்த நிகழ்ச்சிகளை
த் தேதி வாரியாகப் பார்க்கலாம்:

செப்டம்பர்
19, 2018 
வங்கியின் தலைப்பொறுப்பில்
இருந்த ரானா கபூருக்கு அந்தப் பதவியில் தொடருவதற்கான அனுமதியை ரிசர்வ் வங்கி மறுத்து,
அவர் ஜனவரி 2019ல் பதவி விலகவேண்டும் என்று கட்டளை இடுகிறது.


நவம்பர் 27,
2018
நிதித் தரத்தை
நிர்ணயிக்கும் மூடி (Moody) என்னும் சர்வதேச நிறுவனம் எஸ் வங்கியின் அந்நியச் செலாவணி
அளிக்கும் நிறுவனத் தரத்தை சந்தேகத்துக்குரியது என்று நிர்ணயித்தல்.


ஃபிப்ரவரி
13, 2019
எங்களின் சொத்து மற்றும் வாராக்கடன் பற்றின ஒதுக்கீட்டில்
எந்த முறைகேடும் இல்லை என ரிசர்வ் வங்கி சொல்லிவிட்டது
என்று எஸ் வங்கி
அறிவிப்பு


ஏப்ரல் 8,
2019
முதலீட்டுத்
தேவையை மனதில் கொண்டு எஸ் வங்கி நாங்கள் பங்குகள் மற்றும் கடன் பத்திரங்கள் மூலம் இன்னும்
முதலீட்டைப்பெருக்குவோம் என்ற அறிவிப்பு


ஏப்ரல், 26,
2019
முதன் முறையாக,
கடந்த மூன்று மாதத்திய (ஜனவரி – மார்ச் 2019) வருவாயில் இழப்பு என்று எஸ் வங்கி அறிவிக்க,
எஸ் வங்கியின் பங்கு அடுத்த நாள் சந்தையில் 30% வீழ்ச்சி.


மே 14, 2019
இதுவரை காணாத
வகையில் ரிசர்வ் வங்கி ஆர். காந்தி என்னும் ஓய்வுபெற்ற உதவி கவர்னரை தன் சார்பில் எஸ்
வங்கியில் கூடுதல் நிர்வாக இயக்குநராகப் புகுத்தியது.


ஜூலை 17,
2019
முதல் மூன்று
மாதங்களுக்கான (ஏப்ரல் – ஜூன் 2019) லாபம் 91% குறைவு என்றும், வாராக்கடன் தொகை விகிதம்
5.01%க்கு உயர்ந்து விட்டது என்றும் எஸ் வங்கி அறிவிப்பு.


செப்டம்பர்
10, 2019
எஸ் வங்கியின்
தலைவர் ரன்வீட் கில் (Ranveet Gill), சர்வதேச தொழில்நுட்ப கம்பெனி ஒன்று எஸ் வங்கியின்
பங்குகளை வாங்கி முதலீடு செய்வதற்குச் சம்மதித்திருப்பதாக அறிவிப்பு.


அக்டோபர் 3,
2019
மேலும் பல முதலீட்டாளர்களுடன்
பேச்சுவார்த்தை நடத்தி அதிக முதலீடு பெறப்படும் என்று மறுபடி கில் அறிவிப்பு.


அக்டோபர்
31, 2019
ஒரு சர்வதேச
முதலீட்டாளர் எஸ் வங்கிக்கு 1.2 பில்லியன் டாலர் (ரூ. 8,400 கோடி) முதலீடு அளிக்க வாக்குக்
கொடுத்திருப்பதாக அறிவிப்பு. இந்தச் செய்தி வந்தவுடன் எஸ் வங்கியின் பங்குகள் 39% விலை
உயர்வு.


நவம்பர் 1,
2019
அடுத்த மூன்று
மாதங்களுக்கான (ஜூலை – செப்டம்பர் 2019) வரவு செலவு கணக்கில் மிகப்பெரிய இழப்பும் வாராக்கடன்
விகிதம் 7.39% உயர்வும் மற்றும் வாராக்கடன் ஒதுக்கீடு 133.6 கோடி ரூபாய் எனவும் எஸ்
வங்கி அறிவிப்பு.


நவம்பர் 26,
2019
2 பில்லியன்
டாலருக்கு (ரூ 14,000 கோடி) முதலீடு பெறுவதற்கான முயற்சிகளை எஸ் வங்கி எடுத்திருப்பதாக
அறிவிப்பு. அதில் கிட்டத்தட்ட 1.2 பில்லியன் டாலர் (ரூ 8,400 கோடி) எர்வின் சிங் பிரெய்ச்
என்னும் கனடா தொழிலதிபருக்குச் சொந்தமான, ஹாங்காங்கைச் சேர்ந்த எஸ் பி ஜி பி ஹோல்டிங்ஸ்
என்னும் கம்பெனி (
Erwin Singh Braich and Hong Kong-based SPGP Holdings) அளிக்கவிருப்பதாகவும்
அறிவிப்பு.


ஜனவரி 10,
2020
எர்வின் சிங்
பிரெய்ச்சின் திட்டத்தை எஸ் வங்கி நிராகரித்து விட்டதாகவும் வேறு முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும்
அறிவிப்பு.


ஃபிப்ரவரி
12, 2020
அக்டோபர் முதல்
டிசம்பர் வரையிலான வருமான விவரங்களை அளிக்க இன்னும் அவகாசம் தேவைப்படுவதாகவும் தாம்
இன்னும் முதலீட்டைப் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாகவும் அறிவிப்பு. JC
Flowers, Tilden Park Capital Management, OHA (UK) and Silver Point Capital போன்ற
கம்பெனிகளிடமிருந்து முதலீட்டை அளிப்பதற்கான விருப்பம் வந்திருப்பதாக அறிவிப்பு.


மார்ச் 5,
2020
ரிசர்வ் வங்கி
எஸ் வங்கியில் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு என்று கட்டுப்படுத்திவிட்டது.
அதோடு எஸ் வங்கியின் நிர்வாகத்தை அடுத்த முப்பது நாட்களுக்கு ரிசர்வ் வங்கியே எடுத்துக்கொண்டு
விட்டதாகவும் அறிவிப்பு.
ஏதோ ஒரு மர்மக்கதை போல நடந்த அறிவிப்புக்களைத் தொடர்ந்து ரிசர்வ் வங்கி தன்
பொறுமையை இழந்து செயல்பாட்டில் இறங்கியதைப் பார்த்தோம்.
2004ல் தொடங்கப்பட்ட இந்த எஸ் வங்கி மிக ஆக்ரோஷமாகத்தான் செயல்பட ஆரம்பித்தது.
பதினைந்தே வருடங்களில் இந்த வங்கியின் சொத்து மதிப்பு ரூ நான்கு லட்சம் கோடியை எட்டியது.
இந்த வங்கியின் வெற்றி பரபரப்பாகப் பேசப்பட்டது.
‘‘இப்படி அல்லவா
இருக்க வேண்டும் தனியார் வங்கி
’’ என்று சொல்லும்படி அதன் செயல்பாடுகள்
இருப்பதாக வங்கியின் அதிகாரிகள் டீவியிலும் பத்திரிகைகளிலும் பேட்டி அளித்தனர். போன
வருடம் கூட வங்கியின் தலைவர் எஸ்
வங்கியின் வளர்ச்சி அபாரமாக
25% வரை இருக்கக்கூடும் என்று அறிவித்திருந்தார். பங்குச் சந்தையில் எஸ் வங்கியின்
பங்குகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் வாங்கி விற்கப்பட்டன. வங்கியின் வருடாந்திர அறிக்கையில்
காணப்பட்ட வாக்கியம் “எதிர்காலம் இன்றே“!
எந்த ஒரு பொருளுமே ஒளியின் வேகத்தைவிட வேகமாகப் பாய முடியாது. அப்படிப் பாயுமானால்
இன்று மட்டுமல்ல நாளையும் கூட நேற்றாகிவிடும் என்பார் ஐன்ஸ்டீன்! எஸ் வங்கியின் முன்னேற்ற
வேகம் அப்படித்தான் இருந்தது.
இதுநாள் வரையிலான எஸ் வங்கியின் செயல்பாடுகளில் ஒரு சர்ரியலிஸம் இருப்பதை உணரலாம்.
போதுமான மூலதனம் (capital adeqacy – 16.5%),
குறைவான
வாராக்கடன் (3.5%)
என்று கடந்த மார்ச் 31 2019 வரை அபார வளர்ச்சியுடன் விளங்கியதாக
அறிக்கையில் சொல்லப்பட்ட வங்கி, எப்படி பன்னிரண்டே மாதங்களில் இப்படிச்
சரிய முடியும்? அப்போது இது நாள் வரை அறிக்கையில் வந்தவை, அதிகாரிகள் பேட்டியில் தெரிவித்தவை,
மேலே நாம் பார்த்த அறிவிப்புக்கள் எல்லாம் மேலும் மேலும் மூலதனம் வாங்குவதற்காகச் சொல்லப்பட்ட
வெற்று வார்த்தைகள்தானா? ரிசர்வ் வங்கி ஆடிட்டர்கள், அரசாங்கம், மக்கள் என எல்லாரையும்
ஒரு சேர ஏய்க்க முடியுமா அல்லது இது திட்டமிடப்பட்ட அரசியல் குறுக்கீடுகள் கொண்ட இன்னொரு
குளறுபடியா என்னும் கேள்வி எழாமலில்லை.
கடந்த சில வருடங்களாகவே நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் பல வீழ்ச்சிகளில் –
ஐ டி பி ஐ வங்கி, ஐ எல் எஃப் எஸ், டி ஹெச் எஃப் எல், பி எம் சி கோஆப் வங்கி, ஆல்டிகோ
காபிடல் போன்ற அதிர்ச்சிகளை ஒட்டியே இப்போது எஸ் வங்கியும் கவிழ்ந்திருப்பது நமது நிதித்துறை
எத்தனை அபாயகரமான பாதுகாப்பின்மையுடன் இயங்குகிறது என்பதைப் பறைசாற்றவில்லையா?
அப்படி எஸ் வங்கியில் எதில்தான் தவறு நிகழ்ந்தது?
இதற்குப்பதில் மிகச்சுலபம்! எல்லாவற்றிலும்தான்!
(ரானா கபூர்)
ராணா கபூருக்கும் அவரின் மைத்துனி மது கபூருக்கும் வங்கியின் பொறுப்பில் யாருக்கு
முக்கியத்துவம் என்னும் தகராறு வெளிப்படையாகவே அரங்கேறியது. கடந்த செப்டம்பர் மாதம்
ரிசர்வ் வங்கி ரானா கபூர் பதவிக்காலம் முடிவடையும்போது வெளியேறி விட வேண்டும் என்று
சொல்லி, அவர் வங்கியில் தொடருவதற்கான வாய்ப்பை மறுத்துவிட்டது. நிர்வாகச் சீர்கேடு
என்று காரணம் சொல்லி வங்கியின் தனி இயக்குநர் (independent Director) உத்தம் பிரகாஷ்
அகர்வால் ஜனவரி மாதம் ராஜினாமா செய்துவிட்டார்.
தேசலான நிர்வாகம், செயல்பாடில்லாத நிர்வாகக்குழு, குளறுபடிகளுடன் கூடிய தணிக்கை
முறைகள், உடைபட்ட நிதிச்சந்தை சட்டங்கள், துணிவில்லாத மேலாண்மை, இவையெல்லாம் தவிர,
அரசியல் மூக்கு நுழைப்பை உறுதியாகக் கையாளாததால் ஏற்பட்ட சிக்கல்களால் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது.
அத்துடன், பல வருட நேர்மையற்ற உள் விவகாரங்கள், எஸ் வங்கியின் முதலாளிகளுக்கும் நிர்வாகிகளுக்கும்
அரசியல் தலையீட்டுக்கும் இருந்த சங்கிலித்தொடர்புகள் எல்லாமாகச் சேர்ந்துதான் இந்த
நிலைமை உண்டாகி விட்டிருக்கிறது.
அதுவும் இந்த எஸ் வங்கி வீழ்ச்சி ஏற்பட்டிருக்கும் இந்தத் தருணம் ஒரு மிக மோசமான
தருணமாகிவிட்டது. ஏற்கெனவே பொருளாதாரம் இடியாப்பச் சிக்கலில் சிக்கித் தவித்துக்கொண்டிருக்கும்
வேளையில் இப்படி ஒரு தனியார் வங்கி வீழ்ந்தது இன்றைய வங்கித் துறையின் மீதான பொது மக்களின்
நம்பிக்கைக்கு பலத்த அடியைச் சாத்தியிருக்கிறது.
நிகழ்ந்த அவலங்களை மட்டும் பேசுவது எவ்விதத்திலும் நன்மை தரப்போவதில்லை. ஆனாலும்
இதைச் சரி செய்ய வேண்டிய அரசாங்கத்தின் மற்றும் ரிசர்வ் வங்கியின் நிதி நிர்வாகத்திறமை
மீது ஏற்பட்டுள்ள சந்தேகத்தை மறுக்க இயலாது. மக்களின் மத்தியில், முக்கியமாக முதலீட்டாளர்களின்
மத்தியில் ஒரு இயலாமை, வருத்தம் ஏன் கொஞ்சம் கோபம் கூட உண்டாகியிருக்கிறது. இந்தச்
சந்தேகம் சில அரசியல் மற்றும் நிதித்துறைப் பலிகளை வாங்கப்போகிறது என்பது நிச்சயம்.
நிதித்துறை எந்த நாட்டிலுமே கொஞ்சம் மென்மையானது. சீர்கேடுகளுக்குள் சுலபத்தில்
மாட்டிக்கொண்டுவிடும் அபாயம் இருக்கிறது. இத்துறையின் ஏதோ ஒரு பகுதி எல்லை மீறினாலும்
மொத்த நிதித்துறையும் அதற்கான விலையைத்தர வேண்டியிருக்கும் என்பதுதான் சரித்திரம் நமக்கு
மீண்டும் மீண்டும் உணர்த்தும் பாடம். இந்தியாவின் இன்றைய நிதித்துறைச் சட்ட திட்டங்களும்
கட்டுப்பாடுகளும் சர்வதேசத்தரம் வாய்ந்தவை என்பதில் சந்தேகமில்லை, ஆனால் அவற்றை நிர்வகிக்கும்
திறமை ரிசர்வ் வங்கிக்கு போதுமான அளவில் இருக்கிறதா என்பதற்கான பதிலைத்தான் தேட வேண்டும்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து 1969 வரை 559 தனியார் வங்கிகள் திவாலாகியிருக்கின்றன.
1969ல் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டுவிட்டதால் திவால் நிலைமை ஏற்படவில்லை. ஆனால் மீண்டும்
வங்கித்துறை தனியாருக்குத் திறந்துவிடப்பட்ட பின்னர் 36 வங்கிகள் வீழ்ச்சியடைந்து அவை
வேறு பொதுத்துறை வங்கிகளோடு இணைக்கப்பட்டன. கடந்த ஐந்து வருடங்களில் 26 பொதுத்துறை
வங்கிகளின் 3400 கிளைகள் மூடப்பட்டோ அல்லது வேறொரு வங்கிக் கிளையுடனோ ஐக்கியப்படுத்தப்பட்டிருக்கின்றன.
இந்த எண்ணிக்கையில் 75% கிளைகள் பாரத ஸ்டேட் வங்கியின் கிளைகள் என்பதில் சப் டெக்ஸ்ட்
இருப்பதாகக் கருதலாம்! தவிர இப்போது இன்னும் பத்து பொதுத்துறை வங்கிகள் ஒருங்கிணைக்கப்பட்டு
நான்கு பொதுத்துறை வங்கிகளாக்கப்படும் என்னும் திட்டமும் செயல்பாட்டில் உள்ளது.
(திவால் அல்லது இணைக்கப்பட்ட தனியார் வங்கிகளின் பட்டியலைப் பெட்டிச் செய்தியில்
காண்க.)
எஸ் வங்கி விவகாரத்திலேயே சென்ற வருடம் அறிவிக்கப்பட்ட வாராக்கடன்களின் மொத்த
மதிப்பு கிட்டத்தட்ட ரூ 3277 கோடி வரை குறைத்துச் சொல்லப்பட்டதாக (under
reporting) அன்றைய தணிக்கை சொல்லுகிறது. ஆனால் இந்தத் தொகையே மிக்குறைவு. அதாவது மறைக்கப்பட்ட
வாராக்கடன் இதை விட மிக மிக அதிகமாக இருந்திருக்க வேண்டும். ஏன் என்றால் இந்த மார்ச்
மாதம் 6ம் தேதி ரிசர்வ் வங்கி எஸ் வங்கியின் பணம் திரும்பப்பெறுதல் அளவை ரூ 50,000க்கு
என்று கட்டுப்படுத்திவிட்டபோதே (Moratorium), வங்கியின் முதலீடான ரூ 26,904 கோடியில்
பாதிக்கு மேல் இழக்கப்பட்டு விட்டது (Eroded) என்பது புரியத்
தொடங்கியது.
கடந்த சில வருடங்களாகவே தனியார் வங்கிகளின் வருடாந்திரக் கணக்கு வழக்குகளைப்
பார்க்கும்போது ஒரு சில விஷயங்களில் சந்தேகம் வருகிறார் போல இருப்பதாக வல்லுநர்கள்
சொல்லி இருக்கின்றனர். அவர்கள் எல்லாம் தனியார்மயக்
கொள்கைக்கு எதிரானவர்கள், அப்படித்தான் பேசுவார்கள்
என்று அசட்டை செய்து விட்டோமோ என்ற சந்தேகம் இப்போது எழுகிறது. எஸ் வங்கியிலேயே
2016-17ல் அளித்த கடன்கள் ஆண்டுக்கு 35% வரை உயர்ந்திருக்கிறது. அடுத்த வருடத்தில்
கடன் 54% உயர்ந்திருக்கிறது. இதே வருடங்களில் வட்டியில்லா வருமானமும் மிக அதிகமான விகிதத்தில்
மேலே போயிருக்கிறது. ஒரு தனியார் வங்கி தன் வருடாந்திரக் கணக்கில் அசாதாரணமான தொகைகளை
வட்டியில்லா வருமானமாகக் காண்பிக்கும்போது நம் சந்தேக ஆண்டென்னாக்கள் விடைத்து எழுந்திருக்க
வேண்டும் என்று இப்போது புரிகிறது. இந்த வட்டியில்லா வருமானமானது சந்தேகோபாஸ்தமான வழிகளில்
ஈட்டப்படுகிறது என்பதும் அதற்கான திரை மறைவு நன்மைகள் யார் யாருக்கோ போய்ச்சேருகின்றன
என்பதும், நிரூபிக்க முடியாவிட்டாலும் விஷயமறிந்தவர்கள் ஒப்புக்கொள்ளுகிற சமாச்சாரம்தான்.
ஆகவே ரிசர்வ் வங்கி இந்த எஸ் வங்கி விவகாரத்தில் சென்ற வருடம் முதல் நடந்த சில தணிக்கைகளில்
கண்டுபிடிக்கப்பட்ட விவரங்களை
த் தெரிவிக்க வேண்டும்.
பொறுப்பேற்க வேண்டியவர்களையும் அடையாளம் காட்ட வேண்டும்.
முக்கியமாக வல்லுநர்கள் சொல்லுவது ரிசர்வ் வங்கி இதற்கு முழுப்பொறுப்பேற்க வேண்டும்
என்பதே. திசை திருப்புதல், முழுமையான வெளிப்படுத்துதல் (Disclosure) இல்லாத தகவல்கள்,
ஏறிக்கொண்டிருந்த வாராக்கடன்கள், அரிக்கப்பட்ட மூலதனம், மேலும் மூலதனம் திரட்டும் தகுதியின்மை
போன்ற சிக்கல்கள் எஸ் வங்கியில் தொடர்ந்திருப்பது எப்படி ரிசர்வ் வங்கியின் கண்காணிப்பில்
வெளிப்படாமல் போனது என்னும் கேள்வி பெரிதாக எழுந்து நிற்கிறது. இதற்கான சீரமைப்பாக
மாரட்டோரியத்தைக் கொண்டு வந்து டெபாசிட் போட்ட வாடிக்கையாளர்களின் நிம்மதியை வேறு ரிசர்வ்
வங்கி கெடுத்துவிட்டது என்னும் குற்றச்சாட்டும் வைக்கப்படுகிறது. (இந்தக் கட்டுரை அச்சேறும்
தறுவாயில் இது சரி செய்யப்பட்டுவிட்டது.) எனவே தனியார் வங்கிகள் மிகவும் திறமையானவை,
பொதுத்துறை வங்கிகளைப்போல மெத்தனமாகச் செயல்படுவதில்லை என்ற கருத்து இப்போது மரண அடி
வாங்கியிருக்கிறது.
இது ஒன்றும் புதிதும் அல்ல. குளோபல் டிரஸ்ட் வங்கி மற்றும் பஞ்சாப் மஹாராஷ்டிரா
கோஆப்பரேடிவ் வங்கிகளிலும் நடந்தவைதாம் இங்கும் நடந்தேறியிருக்கின்றன.
சரி, இந்த வீழ்ச்சியைச் சரி செய்ய என்ன மறுசீரமைப்பு திட்டமிடப்பட்டிருக்கிறது
என்பதைப் பார்ப்போம்.
முதலாக ஸ்டேட் வங்கி முன் வந்து ரூ 2450 கோடி முதலீட்டைத் தருவதற்குச் சம்மதித்துள்ளது.
சம்மதித்ததா அல்லது நிர்பந்தப்படுத்தப்பட்டதா என்பது பதிலில்லாத கேள்வி. அந்த அளவு
மூலதனத்திற்கு ஸ்டேட் வங்கிக்கு எஸ் வங்கியின் 49% பங்குகள் கொடுக்கப்படும். ஒரு நல்ல
விஷயம் என்னவென்றால் ஸ்டேட் வங்கியின் நிர்வாகத்திறமையும் இது போன்ற சவால்களைச் சந்தித்த
அனுபவமும் எஸ் வங்கி விஷயத்திலும் கை கொடுக்கும். அதோடு மேலும் சில தனியார் வங்கிகளும்
மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றன. ஹெச் டி எஃப் சி வங்கி, ஆக்ஸிஸ் வங்கி, கோட்டக்
வங்கி, ஐசிஐசிஐ வங்கி ஆகியவையும் மொத்தமாக ரூ 3,100 கோடி வரையும் ஃபெடரல் வங்கி மற்றும்
பந்தன் வங்கி ரூ 600 கோடி வரையிலும் மூலதனம் இட ஒப்புக்கொண்டிருக்கின்றார்கள்.
மிகச்சிறந்த நிர்வாகிகளும் ரிசர்வ் வங்கியும் அரசாங்கமும் நிதித்துறையும் ஒருங்கிணைந்து
எஸ் வங்கியின் நிர்வாகத்தைக் கையில் எடுத்துக்கொண்டுவிட்டபடியால் இச்சங்கடங்கள் தீர்க்கப்பட்டு
டெபாசிட் செலுத்திய பொது மக்களின் பணத்துக்கு பங்கம் வராமல் காப்பாற்றிவிடுவார்கள்
என்னும் நம்பிக்கை வலுக்கிறது.
இதில் கவனிக்க வேண்டிய இன்னொரு அம்சம் முன்பு போல அரசாங்கம் எஸ் வங்கியை இன்னொரு
வங்கியுடன் இணைக்கும் முடிவை எடுக்கவில்லை. இதுவும் சரியான முடிவுதான் என்று தோன்றுகிறது.
ஏனென்றால் சில வருடங்களுக்கு முன்னால் குளோபல் டிரஸ்ட் வங்கி வீழ்ச்சி அடைந்தபோது அதை
ஓரியண்டல் வங்கியுடன் இணைத்து விட, பின் நிகழ்ந்தவை மிகவும் மறக்க வேண்டியவையாக மாறிப்போன
சரித்திரத்தை அரசு நினைவில் கொண்டு, இணைப்பு என்னும் முறையைக் கைவிட்டிருக்கிறது. அச்சமயத்தில்
குளோபல் டிரஸ்ட் வங்கி இணைப்பால் ஓரியண்டல் வங்கி அடிபட்டுச் சாய்ந்தது. ஓரியண்டல்
வங்கியின் வீழ்ச்சிக்கு இது மட்டுமே காரணம் அல்ல. அரசியல் தலையீட்டுக் கடன், வாராக்கடன்
பெருக்கம், துணிவில்லாத வங்கிக்கொள்கை மற்றும் நிர்வாகத்திறமையின்மை என்று பல காரணங்களைச்
சொன்னாலும் ஓரியண்டல் வக்கியின் வீழ்ச்சிக்கு இந்த குளோபல் டிரஸ்ட் இணைப்பு கடைசி வைக்கோலாகிப்
போனதை மறுக்க முடியாது.
பதவியேற்ற 2014ல் நாட்டின் வங்கித்துறை எப்படி இருந்தது என்பது பற்றி வெள்ளை
அறிக்கை வெளியிடவேண்டும் என்று பல முறை கேட்டபோதும் பாஜக அரசு அதை மறுத்து விட்டது.
அப்படிப்பட்ட வெள்ளை அறிக்கை வங்கித்துறையின் மீதான பொது மக்களின் நல்லெண்ணத்தை சீர்
குலைத்துவிடும் என பாஜக அரசு தெரிவித்திருந்தது. அதனாலேயே பல சீர்திருத்தக் கொள்கை
முடிவுகள் மூலமாகவே வங்கித்துறை மாற்றங்களைக் கொண்டு வர ஆரம்பித்து. ஆனால் வெள்ளை அறிக்கை
இல்லாமையால் யார் தவறு என்பதில் காங்கிரஸ் மற்றும் பாஜக மாறி மாறி குற்றம் சாட்டிக்
கொண்டிருந்ததே தவிர பொது வெளியில் அதற்கான தெளிவு பிறக்கவில்லை. பல கொள்கை முடிவுகள்
எடுக்கப்பட்டு வங்கித்துறைச் சீர்திருத்தங்கள் நடைபெற்ற நிலையில் இப்போதாவது பாஜக அரசு
2014க்கு முன் மற்றும் அதற்குப்பின் இன்றைய நிலை என்ன என்பதைத் தெளிவு படுத்த வேண்டும்
என்னும் எதிர்பார்ப்பு வல்லுநர்களிடம் இல்லாமலில்லை.
பொருளாதாரத்தில் கண்ணுக்குத் தெரிகின்ற மற்றும் தெரியாத தாக்கங்கள் என்பவை உண்டு.
இந்த எஸ் வங்கி விவகாரத்தில், அதுவும் முக்கியமாக ரிசர்வ் வங்கி ரு 50,000க்கு மிகாமல்
பணத்தை எடுக்க வேண்டும் என்னும் மாரடோரியம் கொண்டு வந்த சமாச்சாரம் நிச்சயம் இரு வகைத்
தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது. வெளிப்படையான மற்றும் மறைமுகமான தாக்கங்கள்.
இந்த வங்கியில் சேமிப்பு மற்றும் இதரக் கணக்குகள் வைத்திருக்கும் வாடிக்கையாளர்களின்
வெளிப்படையான தாக்கங்கள் என்று பார்த்தால்: அவசரத்தேவைக்கு ரூ 50,000க்கு மேல் எடுக்க
முடியாதது, எஸ் வங்கியில் செக் கொடுத்தவர்களின் நிலை, இந்த பாங்கின் மூலம் மாதாந்திர
ஈ.எம்.ஐ. ஏற்பாடு செய்தவர்களின் நிலை.
ஆனால் இவற்றைவிட கண்ணுக்குத்தெரியாத மறமுகமான தாக்கங்கள் ஆழமானவை.
தனியார் வங்கிகளெல்லாம் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் அதனாலேயே பொதுத்துறை வங்கிகள்
மிகவும் நம்பிக்கை வாய்ந்தவை என்னும் எண்ணம் உருவாகி இருப்பது. இது நிச்சயம் ஒரு மாயத்தோற்றமே!
ரிசர்வ் வங்கி இந்த மாரட்டோரியத்தை நீக்கும்போது இருக்கிறது வேடிக்கை. வாடிக்கையாளர்கள்
வங்கிக்கு விரையப்போகிறார்கள். Run on the bank என்று சொல்லும் படையெடுப்பு நிகழவிருக்கிறது.
அதை எதிர்பார்த்து ரிசர்வ் வங்கி எஸ் வங்கிக்குத் தேவையான பணத்தைக் கொடுத்து உதவ வேண்டியிருக்கும்.
எஸ் வங்கியின் நிர்வாகத்திற்காக ரிசர்வ் வங்கியால் நியமிக்கப்பட்ட பிரஷாந்த்
குமார் இந்த மாரட்டோரியம் இன்னும் ஓரிரு வாரங்களில் நீக்கப்பட்டுவிடும் என்று சொல்லி
இருந்தார். அதே போல் நீக்கப்பட்டும் விட்டது. அப்படியானால் இதை முதலில் விதித்ததற்கான
காரணம் என்ன என்னும் கேள்வியும் எழுகிறது.
31 மார்ச் 2019க்கான ஆண்டறிக்கை எஸ் வங்கியின் நிதிநிலைமை நன்றாக இருக்கிறது
என்று சொல்லப்பட்டிருந்தும் இத்தனை குறுகிய காலத்தில் நிலைமை இவ்வளவு மோசமானது எங்ஙனம்?
ஆடிட்டர்களும் ரிசர்வ் வங்கியின் தணிக்கையும் என்ன செய்துகொண்டிருந்தனர்?
இன்னொரு பரவலான தாக்கம் பொது மக்கள் தங்கள் டெபாசிட்டுகளைத் தனியார் வங்கியிலிருந்து எடுத்துப் பொது வங்கிக்குள் செலுத்தக்கூடும். இது
நிகழ ஆரம்பித்து விட்டதை சில உதாரணங்களின் மூலம் நாமே காணலாம். 2015 முதல் 2019 வரை
பொதுத்துறை வங்கிகளின் டெபாசிட் ரூ 1,65,000 கோடியாக இருக்க
, தனியார் வங்களின் டெபாசிட் ரூ 46,680கோடிதான். ஆனால் கடந்த சில வருடங்களாக
நிலமை மாறி, பொதுத்துறை வங்கிகள் ரூ 14,60,000 கோடி டெபாசிட் திரட்ட, தனியார் வங்கிகள்
திரட்டிய டெபாசிட் தொகை ரூ 18,60,000 கோடிகள். ஆனால் எஸ் வங்கி வீழ்ச்சிக்குப்பிறகு
மீண்டும் டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கிகளை நோக்கி நகரும். ஆகவே தனியார் வங்கிகள்
டெபாசிட்டை வரவேற்க அதிக வட்டி கொடுக்க வேண்டும். அப்போது தனியார் வங்கிகள் தரும் கடன்
வட்டி விகிதமும் உயரக்கூடுமல்லவா?
இது போலவே கடன் விநியோகத்திலும் தனியார் வங்கிகள், கடந்த சில வருடங்களில் பொதுத்துறை
வங்கிகளை விட மிக அதிகமான அளவில் கொடுத்தார்கள். 2019-20ல் தனியார் வங்கிகள் கொடுத்த
கடன் தொகையானது அதிகரிக்க, பொதுத்துறை வங்கிகள் கொடுத்த கடன் தொகை ரூ 25,560 கோடி குறைந்திருந்தது.
இனி டெபாசிட்டுகள் பொதுத்துறை வங்கியை நோக்கிப் போனாலும் அவை கடன் கொடுக்க மெத்தனமாக
இருப்பதால் தொழில்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதும் வெளிப்படையாகத் தெரியாத இன்னொரு
தாக்கமாகும்.
இன்று நாமெல்லோரும் எஸ் வங்கியின் வீழ்ச்சி பற்றி விலாவாரியாகப் பேசி விவாதித்துக்
கொண்டிருக்கிறோம். ஆனால் மேலே சொன்ன மறைமுகமான தாக்கங்கள் நமது நிதித்துறையில் ஏற்படக்கூடும்.
இதையெல்லாம் கருத்தில் கொண்டு எஸ் வங்கியின் மறு சீரமைப்பு முயற்சிகள் எடுக்கப்பட்டு,
அவை திறமையாக நிர்வகிக்கப்பட்டால்தான் நிதித்துறை சந்திக்கவிருக்கும் சவால்களைச் சமாளிக்க
முடியும். முக்கியமாக எஸ் வங்கி போல வீழக் காத்திருக்கும் அடையாளங்கள் தெரியும் வங்கிகளையும்
இப்போதே அடையாளம் கண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். ரிசர்வ் வங்கியின்
தணிக்கை முறைகள் இன்னும் கடுமையாக்கப்பட்டு, அளிக்கப்பட்ட கடன்கள் திரும்ப வராமல் இருக்கக்கூடிய
சமிக்ஞைகளை உடனுக்குடன் கண்டறிந்து, சம்மந்தப்பட்ட வங்கிகளின் மீது சீர் செய்யும் நடவடிக்கைகளுக்கு
வழி செய்ய வேண்டும்.
(சக்திகாந்த தாஸ்)
இந்த வருட பட்ஜெட்சமயத்தில்
நமது தலைமை பொருளாதார ஆலோசகர் கிருஷ்ணமூர்த்தி சுப்பிரமணியன்,
‘‘பொதுத்துறைகளில் இடப்படும் ஒரு ரூபாய்
மூலதனம் அரசுக்கு 23 பைசா நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதே ஒரு ரூபாய் மூலதனம்
தனியார் வங்கிகளில் போடப்பட்டால் அது 9.6 பைசா லாபம் தருகிறது
’’ என்று சொன்னதை நினைத்துப் பார்ப்போம்.
அரசாங்கத்தின் தனியார்மயக் கொள்கையினைக் கேள்விக்குரியதாக ஆக்கிவிட்ட எஸ் வங்கி மற்றும்
இதர வீழ்ச்சிகளை எப்படி நிகழாமல் காக்கப்போகிறோம் என்பதில் முழு முனைப்போடு அரசும்
ரிசர்வ் வங்கியும் உழைக்க வேண்டும். முக்கியமாக இன்று பொருளாதாரச் சவால்களை எதிர்நோக்கியிருக்கும்
அரசு, நிதித்துறையின் மீதான மக்களின் நம்பிக்கையை மீட்டெடுக்கும் வண்ணம் செயல்பட வேண்டியது
முக்கியம். பாரத ஸ்டேட் வங்கியைத் தவிர எஸ் வங்கிக்கு மூலதனம் அளிக்க முன் வந்திருக்குப்பவை
அனைத்துமே தனியார் வங்கிகள்தாம் என்பது, ரிசர்வ் வங்கி அமல்படுத்தியிருக்கும் மறு சீரமைப்புத்திட்டம்
சரியான நோக்கில் செயல்படுத்த முடியக் கூடியதுதான் என்னும் நம்பிக்கையைத் தருகிறது.
மேலும் ரிசர்வ் வங்கியின் கவர்னர் சக்திகாந்த தாஸ்,
எந்த நிலையிலும் டெபாசிட்டர்களின் பணத்துக்கு
ஆபத்தில்லை. அதில் சிக்கல் ஏற்படாது. அப்படியே ஏற்பட்டாலும் ரிசர்வ் வங்கி முன் வந்து
பணத்தைத் தந்து உதவும்
என்று ஆணித்தரமாகத் தெரியப்படுத்தியிருப்பது, இந்த அரசாங்கமும்
ரிசர்வ் வங்கியும் நிதித்துறை மேலாண்மையை
ச் சரியான முறையில் நடத்திச் செல்லுகிறார்கள்
என்னும் நம்பிக்கையை உண்டாக்குகிறது. தவறுகள் நிகழ்ந்தாலும் அவற்றைக் கண்டறிந்து சரிசெய்யும்
முயற்சிகள் பாராட்டத்தக்க வகையில் இருப்பதை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.


1969ல் இருந்து மூடப்பட்ட தனியார் வங்கிகள்Posted on Leave a comment

நாடாளுமன்ற பட்ஜெட் 2020 | ஜெயராமன் ரகுநாதன்

பட்ஜெட்டின்
சில முக்கிய அம்சங்கள்


 • விவசாயத் துறைக்கு,
  2.83 லட்சம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
 • 2022ம் ஆண்டுக்குள் விவசாயிகளின்
  வருமானத்தை இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • விவசாயத் துறையைப் போட்டிமிக்க
  துறையாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • மத்திய அரசின் நவீன விவசாய
  சட்டங்களை மாநில அரசுகளும் பின்பற்ற ஊக்குவிப்போம்.
 • 20 லட்சம் விவசாயிகளுக்கு
  சூரிய ஒளியில் இயங்கும் மோட்டார் பம்ப் வழங்கப்படும்.
 • தானியலெட்சுமி திட்டம்
  (விதைகளை சேமித்து விநியோகிக்கும் திட்டம்) அறிமுகம், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு
  அதிகக் கடன் உதவி.
 • ‘கிருஷி உடான் திட்டத்தில் தேசிய, சர்வதேச
  விமானப் போக்குவரத்து மூலம் விவசாய பொருட்கள் ஏற்றிச் செல்ல வசதி.
 • 2020 – 21 நிதியாண்டில்
  கல்வித் துறைக்கு 99,300 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • திறன் மேம்பாட்டுக்கு
  3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு
 • நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படும்
  எனக் கணிக்கப்பட்டுள்ள 100 மாவட்டங்களில் தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
 • விவசாயிகள் தங்களது வேளாண்
  பொருட்களைக் கொண்டு செல்ல குளிர்சாதன வசதியுடன், ‘கிசான் ரயில்
  சேவை தொடங்கப்படும்.
 • விவசாயிகளுக்குக் கடன்
  வழங்குவதற்காக, 15 லட்சம் கோடி ரூபாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
 • 2022 – 23 நிதியாண்டுக்குள்
  மீன் உற்பத்தி 200 லட்சம் டன்னாக உயர்த்தப்படும்.
 • ரசாயன உரம் தவிர, இயற்கை
  உரம் தயாரிக்கவும் ஊக்குவிக்கப்படும்.
 • சுகாதாரத் துறைக்குக் கூடுதலாக
  69 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • 2020 – 21 நிதியாண்டில்
  துாய்மை இந்தியா திட்டத்துக்கு, 12 ஆயிரத்து 300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • ‘ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் மேலும்
  112 மாவட்டங்களில் மருத்துவ வசதி.
 • சுத்தமான குடிநீர் வழங்க,
  ‘ஜல் ஜீவன் மிஷன்
  திட்டத்துக்கு, 3.6 லட்சம்
  கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • அரசு – தனியார் பங்களிப்பு
  மூலம், 100 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளது.
 • குறைந்த விலையில் மருந்துகள்
  வழங்கும் மருந்தகம், நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவுபடுத்தப்படும்.
 • 2025ம் ஆண்டுக்குள் காசநோய்
  முற்றிலும் ஒழிக்கப்படும்.
 • கல்வித்துறைக்கு,
  99,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • நாட்டின் ‘டாப் – 100 கல்வி நிறுவனங்களில்
  ‘ஆன்லைன்
  பட்டப்படிப்புக்கான பாடப்பிரிவு
  தொடங்கப்படும்.
 • தேசிய காவல்துறை, தேசிய
  தடய அறிவியல் பல்கலை அமைக்க நடவடிக்கை.
 • கல்வித் துறையில் நேரடி
  அன்னிய முதலீட்டுக்கு அனுமதி.
 • 2026க்குள் பல்கலையில்,
  150 புதிய பாடப்பிரிவுகள் உருவாக்க நடவடிக்கை.
 • ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளின்
  மாணவர்கள் இந்தியாவில் கல்வி பயில்வதற்கு, ‘இன்ட்சாட்
  நுழைவுத்தேர்வு நடத்தப்படும்.
 • அலைபேசி மற்றும் மின்சார
  உபகரணங்கள் இந்தியாவில் தயாரிக்க திட்டம் தொடங்கப்படும்.
 • 2020 – 21 நிதியாண்டில்
  தொழில் மற்றும் வணிகத் துறையின் வளர்ச்சி மற்றும் மேம்படுத்தலுக்கு 27,300 கோடி ரூபாய்
  ஒதுக்கீடு.
 • டில்லி – மும்பை எக்ஸ்பிரஸ்
  மற்றும் இரண்டு சாலை திட்டங்கள் 2023க்குள் நிறைவேற்றப்படும்.
 • ரயில் பாதைகளின் ஓரம் சூரிய
  ஒளித் தகடுகள் (சோலார் பேனல்கள்) அமைக்கப்படும்.
 • அடுத்த மூன்றாண்டுகளுக்குள்
  பிரிபெய்டு மீட்டர் அறிமுகப்படுத்தப்படும்.
 • புதுப்பிக்கத்தக்க ஆற்றல்
  துறைக்கு 20 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • நாடு முழுவதும் தகவல் மையம்
  அமைப்பதற்குத் தனியார் துறைக்கு அனுமதி வழங்கப்படும்.
 • தொழில் மற்றும் வர்த்தக
  மேம்பாட்டுத் துறைக்கு, 27,300 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • சென்னை – பெங்களூரு இடையே
  வர்த்தக வழித்தடம் கூடுதல் தேஜஸ் ரயில் இயக்கப்படும்.
 • ரயில் பாதைகளை மின்மயமாக்க,
  27 ஆயிரம் கோடி ரூபாய், போக்குவரத்துக் கட்டமைப்புக்கு 1.7 லட்சம் கோடி ரூபாய் நிதி
  ஒதுக்கீடு.
 • சத்துணவு தொடர்பான திட்டத்துக்கு,
  35,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க
  எரிசக்தி துறைக்கு, 22 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • பாரத் நெட் திட்டத்துக்கு
  6,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
 • தபால் நிலையம், மருத்துவமனை,
  காவல் நிலையம், பள்ளிகள் இணைக்கப்படும்.
 • ஒரு லட்சம் கிராமப் பஞ்சாயத்துகள்
  ஆப்டிக்கல் ஃபைபர் மூலம் இணைக்கப்படும்.
 • உடான் திட்டத்தின் கீழ்
  2026க்குள் 100 புதிய விமான நிலையம்.
 • பிற்படுத்தப்பட்டோர், எஸ்.சி.
  பிரிவு நலன் துறைக்கு 85 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • பழங்குடியினர் நலனுக்கு,
  53,700 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • முதியோர் நலனுக்கு,
  9,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • சுற்றுலாத் துறைக்கு,
  2,500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • கலாசாரத் துறைக்கு,
  3,150 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • 10 லட்சத்துக்கு மேற்பட்ட
  மக்கள் வசிக்கும் நகரங்களில் சுத்தமான காற்று நிலவுவதற்கு வழிவகை செய்யப்படும்.
 • காற்று மாசுபாட்டைத் தவிர்த்து,
  சுத்தமான காற்று திட்டத்துக்கு 4,400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • கெஸட் அல்லாத பதவிகளுக்கு
  ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு தேசிய ஆள்சேர்ப்பு மையம் அமைக்கப்படும்.
 • வங்கி டெபாசிட்தாரர்களுக்கான
  காப்பீடு 1 லட்சம் ரூபாயில் இருந்து 5 லட்சம் ரூபாயாக உயர்வு.
 • ஐந்து லட்சம் சிறு, குறு,
  நடுத்தர தொழில் நிறுவனங்கள், கடன் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
 • வரி என்ற பெயரில் மக்களைத்
  துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது.
 • தேசியத் தொழில் நுட்பம்
  டெக்ஸ்டைல் திட்டத்துக்கு 1,480 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
 • வெளிநாடு வாழ் இந்தியர்களும்
  அரசின் திட்டங்களில் முதலீடு செய்யலாம்.
 • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின்
  வாராக்கடனை வங்கிகள் வசூலிப்பதற்கான காலக்கெடு 2020 மார்ச்சில் இருந்து 2021 மார்ச்
  வரை நீட்டிக்க வேண்டுமன ரிசர்வ் வங்கியை மத்திய அரசு வலியுறுத்துகிறது.
 • சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களின்
  வியாபாரம் 5 கோடி ரூபாய் வரை தணிக்கை சமர்ப்பிக்கத் தேவையில்லை. முன்பு இது 1 கோடி
  ரூபாயாக இருந்தது.
 • நிதிப் பற்றாக்குறை,
  3.8 சதவீதமாக இருக்கும்.
 • 2020 – 21ல் நாட்டின் பொருளாதார
  வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும்.
 • காஷ்மீருக்கு 30,757 கோடி
  ரூபாய், லடாக் யூனியன் பிரதேசத்துக்கு 5958 கோடி ரூபாய் திட்டங்கள்.
 • எல்.ஐ.சி.,யில் உள்ள மத்திய
  அரசின் சிலபங்குகள் தனியாருக்கு விற்பனை செய்யப்படும்.
 • புதிய வருமான வரி விதிப்பு
  முறையால் ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் வருமானம் இழப்பு ஏற்படும்.
 • மின்சார உற்பத்தி நிறுவனங்களுக்கு
  15 சதவீதம் வருமான விலக்கு வழங்கப்படும்.
 • ஆதார் அடிப்படையில் உடனடி
  பான்கார்டு திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
 • துாத்துக்குடியின் ஆதிச்சநல்லுார்
  உட்பட ஐந்து இடங்களில் தொல்லியல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.
இந்த முறையும் நமது நிதி அமைச்சர் தமிழில் மேற்கோள் காட்டிப்பேசியதைப்
பாராட்டிவிட்டுத் தொடங்கலாம்.
இந்த
பட்ஜெட்டில் மிகுந்த எதிர்பார்ப்புக்கள் இருந்தன என்பதை மறுக்க முடியாது. ஏனென்றால்
நிலைமை அப்படி இருந்தது.
முக்கியமாக
மூன்று விஷயங்கள்:
மந்தமான
பொருளாதாரம், எதிர்பார்த்ததைவிடக்குறைவான முதலீடு மற்றும் கடுமையான அழுத்தங்களுடனான
நம் நிதி அமைப்பு
. இந்த
பட்ஜெட்டில் இவை அனைத்தும் கவனிக்கப்பட்டு சரியான முயற்சிகள் எடுக்கப்படவேண்டும். அப்போதுதான்
நமது குறிக்கோளான 5 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடையமுடியும் என்பது வெளிப்படை.
ஒரு
இடத்தில்கூட இந்த பட்ஜெட் பொருளாதார மந்தம் என்பதைச் சொல்லவில்லை. ஆனாலும், பட்ஜெட்டின்
மூலாதாரக் குறிக்கோளைப் பற்றி எந்தக் குறையும் சொல்ல முடியாது. வரும் நிதி ஆண்டில்
நிறைவேற்ற வேண்டிய குறிக்கோள்கள் பற்றி நிதி அமைச்சர் வெகு விரிவாகப் பேசினார். இன்றைய
பொருளாதாரத்தின் முக்கிய அம்சமான ‘தேவை அதிகரிப்பை
ச்
செய்ய (Demand Creation) அரசாங்கச் செலவுத்திட்டங்களைக் கூறினார். ஆனால் வருவாய் அளவையும்
அதன் சாத்தியங்களையும் பார்த்தால்தான் இந்தச் செலவுத்திட்டங்களும் அதன் மூலம் தேவை
அதிகரிப்பும் எவ்வாறு நிகழும் என்பது பற்றி நாம் முடிவுக்கு வரமுடியும்.
பட்ஜெட் என்றாலே எல்லோரும் முதலில்
கவனிப்பது நிதிப்பற்றாக்குறை (
Fiscal
Deficit). 2019-20ல் இந்த நிதிப்பற்றாக்குறை 3.8% ஆக இருந்தது. நிதி அமைச்சர் வரும்
ஆண்டுக்கான நிதிப்பற்றாக்குறை 3.5% தான் இருக்கும் என்று உறுதிபடக் கூறியிருக்கிறார்.
எந்தப் பற்றாக்குறை குறைப்பும் 0.5%க்கு மேல் இருந்தால் அது நடைமுறையில் அத்தனை சாத்தியமில்லை
என்பது வல்லுநர்களின் கருத்து. இந்த முறை பற்றாக்குறை வேறுபாடு 0.3%தான். எனவே இது
நடைமுறைக்கு வரக்கூடும் என்னும் நம்பிக்கையை உருவாக்கி இருக்கிறது.
வரும்
2020-21 ஆண்டில்
மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 6.0–6.5% இருக்கும் என்கிறது சமீபத்திய
பொருளாதார ஆய்வு. நிதிப்பற்றாக்குறை விகிதத்தின் (Ratio) தொகுதியான (Numerator) மொத்த
வருவாய் குறைந்துவிட்டாலும், அந்த விகிதத்தின் வகுக்கும் எண்ணிக்கையான (Denominator)
செலவும் குறைந்துவிடுவதால் விகிதம் 3.5% என்னும் கட்டுக்குள் வந்துவிடும் என்பது நம்பிக்கை.
வரும்
வருடத்துக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி 10% அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பு சரியானதுதான்.
வரி வருமானமும் 12% அதிகரிக்கும் என்பதும் ஒப்புக்கொள்ளக்கூடியதே. ஆனால் சென்ற ஆண்டு
இது நிகழவில்லை என்பதையும் கவனிக்கவேண்டும். ஆகவே, நிதிப்பற்றாக்குறை எகிறாதா என்னும்
விமரிசனத்தின் பின்னே காரணம் இல்லாமலில்லை.
தனியார்மயமாக்கலின்
மூலம் இந்த அரசாங்கத்துக்கு வரப்போகும் வருமானம் ரூ 2,10,000 கோடி என்று கணக்கிடப்பட்டிருக்கிறது.
“இதுவும்
தப்புங்க! போன வருஷமே தனியார் மயமாக்கலின் வருவாய் ரூ 1,05,000 கோடின்னு எதிர்பார்த்து,
ரூ 65,000 கோடிதானே வந்தது?
சரிதான்,
ஆனால் இந்த முறை அரசின் முழு முனைப்பும் செலுத்தப்படவிருக்கிறது. மேலும் இந்த எண்ணிகையை
அடைவதற்கான கால அவகாசம் அதிகம் என்பதால் சாத்தியம் அதிகமே. முக்கியமாக எல் ஐ ஸியின்
பங்கு விற்பனை மூலம் அரசுக்கு பெரும் வருமானம் வரும் என்பதும் ஒரு சாத்தியமே.
நிதி
அமைச்சகம் இந்த விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். வரவுகளைக் கவனமாகக் கண்காணித்து
அதற்கேற்றாற்போல செலவுகளைக் கட்டுப்படுத்தவேண்டும். அப்போதுதான் நிதிப்பற்றாக்குறை
எதிர்பார்த்த 3.5%ல் அடங்கும். என்னைக்கேட்டால் பட்ஜெட்டில் 3.5% இருந்தால் கூட, அரசாங்கம்
இதை 3% என்னும் கட்டுக்குள் வைக்க முயலுவதுதான் சரி.
வரி
சம்மந்தமாகவும் சில மாற்றங்கள் வந்திருக்கின்றன. போன முறை கார்ப்பரேட்டுகளின் வரிக்குறைப்பு
நிகழ்ந்தது. இந்த முறை தனிமனித வரிகளில் மாற்றம் வந்திருக்கின்றது. இந்த மாற்றம் மிகப்பெரும்
தாக்கத்தை உண்டாக்காது என்பது என் கருத்து.
இந்த
பட்ஜெட்டில் இன்னொரு புதுமை, வரி செலுத்துபவர்களுக்குக் கொடுக்கப்பட்ட தெரிவு செய்யும்
வாய்ப்பு. விலக்குகளோடு கூடிய அதிக வரியா அல்லது விலக்குகள் ஏதுமில்லாத குறைந்த வரியா
என்பதை அவரவர்களே தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். இதுவுமே விமரிசனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
இந்தத் தேர்வு வாய்ப்பால் எவ்விதப் பலனுமில்லை என்று சிலர் சொல்ல, கிட்டத்தட்ட 70%
பயனடைவார்கள் என எதிர்பார்ப்பதாக அரசாங்கம் சொல்கிறது. தனது உரையில் அமைச்சர் கிட்டத்தட்ட
90% வரி செலுத்துபவர்கள் ரூ 2 லட்சத்துக்கும் குறைவான வரிச்சலுகைகள் பெறுகிறார்கள்.
அவர்கள் இந்தத் தெரிவை எடுத்துக்கொண்டால் வரி குறைப்புக்காக செலவோ முதலீடோ செய்யத்தேவை
இருக்காது என்கிறார். எனவே அவர்களின் கையில் அதிகப்பணம் மிஞ்சும் என்பதே அரசின் வாதமாக
இருக்கிறது. இது உண்மையும் கூடத்தான். ஆனால் இதன் சரியான தாக்கம் அடுத்த வருடம்தான்
நமக்குத் தெரியக்கூடும்.
நிதி
அமைச்சர் தன் உரையில் தெரிவித்த இன்னொரு சுவாரஸ்யம் நம் வரிச்சட்டத்தில் கிட்டத்தட்ட
120 வரி விலக்குகள் இருந்தனவாம். வரி விதிப்பைச் சுலபமாக்கும் குறிக்கோளில் கடந்த சில
வருடங்களில் கிட்டத்தட்ட 70 சலுகைகள் வரை நீக்கப்பட்டு விட்டன. மேலும் வரிக்கான பிரிவு
இப்போது ஐந்து பிரிவுகளாக (slab) உள்ளன. இன்னும் ஓரிரு ஆண்டில், வரி செலுத்துபவர்கள்
எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது பற்றிய புள்ளிவிவரம் உறுதியாகத் தெரியவரும்போது
வரி விதிப்பு பிரிவுகளும் குறைக்கப்பட்டு வரிவிகிதமும் குறைவதற்கான சாத்தியம் அதிகம்.
இன்றைய
பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு செலவழிக்கவேண்டிய சமூக மற்றும் தொழில் கட்டுமானங்கள்
(Social and physical infrastructure) ஏராளமாக இருக்கின்றன. இந்நிலையில் மேலும் மேலும்
வரிச்சலுகைகளை எதிர்பார்ப்பது சரியானதல்ல. இது போன்ற புதுமையான முறைகளால்தான் வரிக்குறைப்பைக்
கொண்டு வர முடியும். மேலும் நீண்ட காலத்தில் குறைவான பிரிவுகள் (slabs), சுலபமான வரி
விதிப்பு, குறைவான விலக்குகள் (few slabs, simpler tax structure and fewer
exemptions) என்று மாற்றினால்தான், வரிச்சட்டம் எளிமையானதாகும். மேலும், வரிக்கான சர்ச்சைகள்
நீதிமன்றம் வழக்குகள்  என்றெல்லாம் பண மற்றும்
நேர விரயங்கள் குறையும்.
“வரி
என்ற பெயரில் மக்களைத் துன்புறுத்துதல் என்பதை இந்த அரசு சகித்துக்கொள்ளாது. வரி செலுத்துபவர்கள்
இந்நாட்டின் மதிப்பு மிக்கவர்கள்
என்று நிதி அமைச்சர் சொல்லியிருப்பது உவப்பாக
இருக்கிறது.
வெளி
நாட்டு முதலீட்டை ஈர்க்கும் பல விஷயங்கள் இந்த பட்ஜெட்டில் இருப்பது வரவேற்கத்தக்கது.
Disribution dividend வரியை அகற்றியிருப்பதும் கவர்மெண்ட் பேப்பர் எனப்படும் பத்திரங்களில்
இந்தியாவில் வசிக்காதவர் (non resident) முதலீடு செய்வதற்கான முறைகள் புகுத்தப்பட்டிருப்பதும்
நிச்சயம் முதலீட்டை அதிகரிக்கும். அதே சமயம் இந்த முறைகளின் மூலம் அதிகக்கடன் சுமை
ஏறாமல் அரசாங்கம் கவனிக்க வேண்டியதும் அவசியம்.
நிதி
அமைச்சர் தன் உரையில் ஒவ்வொரு துறைக்குமான முதலீடுகள் பற்றி விரிவாகப் பேசினார். மேம்போக்காகப்
பார்த்தால் இவை ஒன்றும் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துவிடும் என்னும் நம்பிக்கையை
அளிக்கவில்லை. இந்தத் திட்டங்களின் சாதகபாதகங்கள் பற்றி அந்த அந்தத் துறை விற்பன்னர்கள்
தீவிரமாக ஆய்வுசெய்து சொன்னால்தான் மேற்கொண்டு விவாதிக்க முடியும். ஆனால் நம் கவலை
இந்தத்திட்டங்கள் சரியான முறையில் அமல்படுத்தப்பட வேண்டும் என்பதே. மொத்த செலவினங்கள்
12% உயர்ந்திருக்க மூலதனச் செலவுகள் மட்டுமே 18% அதிகரிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆனால் மொத்தத்தில் இந்தச் செலவினங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% என்று இருக்கிறது.
இந்த 1.8% என்பது பல ஆண்டுகளாகவே அதே நிலை என்பதால், இப்போது திட்டமிடப்பட்டுள்ள உயர்வு
இருக்குமா என்பதில் ஒரு சின்ன கேள்விக்குறி எழுகிறது!
வரி
என்று வரும்போது எல்லோரும் ஒரே குரலில் ஆட்சேபிப்பது ஜி.எஸ்.டி நிர்வாகம் பற்றின சங்கடங்கள்.
இந்த பட்ஜெட்டில் பல சலுகைகள் எதிர்பார்த்துக் கிடைக்காமல் பட்ஜெட்டைக் குறை கூறுபவர்கள்
அதிகம். ஒன்றைப் புரிந்து கொள்ளலாம். ஜி.எஸ்.டி என்பது அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில்
இல்லை. ஜிஎஸ்டிஎன் என்னும் மாநில அரசுகளும் ஒருங்கிணைந்த குழுவின் கட்டுப்பாட்டில்தான்
இருக்கிறது. எந்த முடிவுமே ஜிஎஸ்டிஎன்-னின் மூலமாகத்தான் எடுக்க முடியும். ரசீது
(bill) வேண்டும் என உறுதியாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்குப் பணப்பரிசு, எலக்ட்ரானிக்
பில், ஆதார் சார்ந்த சரிபார்ப்பு மற்றும் இன்னும் சுலபமாக்கப்படவேண்டிய முறைகள் எல்லாமே
ஜிஎஸ்டிஎன்னால்தான் நிகழ்த்தப்படவேண்டுமே அன்றி நிதி அமைச்சகத்தாலோ அல்லது நிதி அமைச்சராலோ
அல்ல.
ஆனாலும்
‘ஜிஎஸ்டி எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி, நாட்டை ஒருங்கிணைத்துள்ளது. ஜிஎஸ்டியால்
சாமானிய மக்களின் மாதாந்திர வருமானம், 4 சதவீதம் உயர்ந்துள்ளது. ஜிஎஸ்டி மூலம் மாதம்
1 லட்சம் கோடி ரூபாய் வருமானம் ஈட்டப்படுகிறது. வரும் ஏப்ரல் முதல் எளிமைப்படுத்தப்பட்ட
ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும். புதிதாக 16 லட்சம் வரி செலுத்துபவர்கள் உருவாக்கப்பட்டுள்ளனர்.
மற்றும் கடந்த நிதியாண்டில், 40 கோடி ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யப்பட்டுள்ளது

என்னும் அறிவிப்புக்களும் கவனிக்கப்படவேண்டியவையே.
கஸ்டம்ஸ்
விதிகளிலும் சில நல்ல மாற்றங்கள் வந்திருக்கின்றன. புதுமையாக மக்களின் பங்களிப்பின்
பேரில் (Crowd sourcing) சில கஸ்டம்ஸ் வரி விலக்கு அளிப்பது, வெளிநாட்டுப் பொருட்களுக்கெதிரான
பாதுகாப்பு, anti-dumping பற்றிய சில மாற்றங்கள் என நல்ல மாறுதல்கள் வந்திருக்கின்றன.
சில பொருட்களின் மீதான இறக்குமதி வரி உயர்வு மற்றும் இறக்குமதி பதிலீட்டுக்கொள்கை
(Import substitution) எந்த அளவுக்குப் பயனளிக்கும் என்பது கேள்விக்குறியே. ஒரு பக்கம்
உள் நாட்டுத் தொழில்களைக் காக்கும் முயற்சிகளைச் செய்துவிட்டு, கூடவே வெளிநாட்டு முதலீட்டைப்பெருக்க
வேண்டும் என்பது முரணாக இருப்பது கண்கூடு.
நாட்டில்
வேலை வாய்ப்புக்கள் குறைந்துவிட்டன என்பது இந்த அரசுக்குப் பெரிய சவாலாகவே இருக்கிறது.
இதுவே எதிர்க்கட்சிகளின் முக்கிய ஏவுகணையாகவும் இருப்பதால் இந்த பட்ஜெட்டில் இதற்கு
முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான். அதற்கேற்றாற்போல இந்த
பட்ஜெட்டில், படித்து முடித்த பட்டதாரிகளுக்கு நகர உள்ளாட்சிகளில் ஒரு வருட இண்டெர்ன்ஷிப்
பயிற்சிக்கு வழி வகுக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஒரு வருடம் சம்பாதிக்கும் வாய்ப்போடு
பட்டதாரி இளைஞர்கள் தங்களின் வேலைத்திறனை அதிகரித்துக்கொள்ளவும் உந்துதலாய் அமையும்.
நமது
நிதி அமைப்பில் (Financial system) பல முன்னேற்றங்கள் தேவை என்பதும் அதனாலேயே இந்தத்
துறை தனிக்கவனம் பெற்றிருக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. வங்கித்துறை மாற்றங்கள்
மிக அவசியமானவை என்பதில் மாற்றுக்கருத்து இருக்க முடியாது. வங்கிகளை ஒன்றோடு ஒன்று
இணைப்பது என்பதைவிட ஒட்டு மொத்தமாக வங்கித்துறையின் கட்டுப்பாடு எந்த அளவுக்கு அரசு
சார்ந்து இருக்க வேண்டும் என்பது விவாதப்பொருளாகும். ஐடிபிஐ வங்கியின் பங்குகளை அரசு
தனியாருக்கு விற்றுவிடத் தீர்மானித்திருப்பது இந்தக் கொள்கை பற்றிய ஒரு ஊகத்தை நமக்கு
அளித்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் தெளிவு வேண்டும் என்பது வல்லுநர்களின் கருத்தாக
இருக்கிறது. பொதுத்துறை வங்கிகளின் மேலாண்மையில் அரசுக்கட்டுப்பாடு கையளவு நீளத்திலிருக்க
(Arm
s length) வேண்டும் என்னும் கோட்பாடு நல்லதுதான்
என்றாலும் செயல் திறமை என்பதும் தொழில் நுட்பம் என்பதும் மேலாண்மையிலிருந்து வேறு பட்டவை
என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். மூன்றும் சேர்ந்திசைந்தால்தான் நல்ல முன்னேற்றத்தைக்
காண முடியும்.
ஓரளவுக்குத்
தரப்பட்ட கிரெடிட் திட்டம் வரவேற்கப்பட்டது என்றாலும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள்
(NBFC) எதிர்பார்த்த பெரிய சலுகைகள் இல்லாததால் அவர்கள் இந்த பட்ஜெட்டினால் அதிகம்
பயன் பெறவில்லை. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் அமெரிக்காவில் செய்தது போல
Troubled Asset Relief Programme (TARP) திட்டம் வரும் என்று எதிர்பார்த்ததால் ஒரு
அளவுக்குத் தரப்பட்ட கிரெடிட் காரண்டி சலுகையுமே அவர்களைக் கவரவில்லை.
மக்களின்
டெபாசிட் இன்ஷூரன்ஸ் காப்பு ஒரு லட்சத்திலிருந்து ஐந்து லட்சத்திற்கு உயர்த்தப்பட்டிருப்பது
நல்ல சலுகை என்றாலும் பல கோஆப்பேரேடிவ் வங்கிகள் இத்திட்டத்துக்குள் வராது என்பதால்,
முக்கியமாக சமீபத்திய பஞ்சாப் அண்ட் மஹாராஷ்டிரா கோ ஆப்ரேடிவ் வங்கியின் வீழ்ச்சியால்
ஏற்பட்ட பாதிப்பின் விளைவினால் இது ஒரு குறையாகவே பார்க்கப்படுகிறது.
கூர்ந்து
கவனித்தால் பிரதமர் மோடியின் முதல் அரசின் பட்ஜெட்டிலிருந்து இந்த 2020-21 பட்ஜெட்
வரை ஒரே கொள்கை நோக்கம் இருப்பதை உணர முடியும். இந்த பட்ஜெட்டின் மிக நல்ல அம்சம் அரசின்
கொள்கையான வெளிப்பட்ட தன்மை (Transparency) நன்றாகத் தெரிவதுதான். மேலும் இந்த அரசு
இப்போதைய பொருளாதார மந்த நிலை ஒரு சுழற்சியின் (Cyclical) தாக்கமே தவிர அடிப்படையானது
(Structural) அல்ல என்பதைத்தான் நம்புகிறது என்பதைத்தான் பட்ஜெட்டின் பல அம்சங்கள்
புலப்படுத்துகின்றன. இது சரிதான் என்றும் தவறு என்றும் இரு பக்கமுமே வாதப்பிரதிவாதங்கள்
எழுந்திருக்கின்றன.
அதிகரிக்கும்
முதலீடுதான் இன்றைய மிக மிக முக்கியத்தேவை. இந்த பட்ஜெட் அந்த முதலீட்டைப் பெற்றுத்தரக்கூடியதா
என்பதே கேள்வி. இதற்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.

Posted on Leave a comment

வி.ஜி.சித்தார்த்தா – வளர்ந்தாரா வளைந்தாரா…? | ஜெயராமன் ரகுநாதன்சென்ற
மாதம் ஒவ்வொரு இந்தியனும் அதிர்ச்சியுடன் கவனித்த விஷயம் கஃபே காஃபி டே (Caf
é Coffee Day) வி.ஜி.சித்தார்த்தாவின்
தற்கொலை. எத்தனையோ இளைஞர்களின் நட்பை உறுதிப்படுத்தும் இடமாக இருந்த அந்த நிறுவனத்தின்
மூலகர்த்தா இப்படி ஒரு முடிவைச் சந்திக்கவேண்டுமா என்னும் வருத்தம் இந்தியாவுக்கே இருந்தது
என்றெல்லாம் பரபரப்பையும் உணர்ச்சிகளையும் தூண்டிய வாக்கியங்களைப் பல பத்திரிகைகளிலும்
தொலைக்காட்சி செய்திகளிலும் கண்டோம். மேலும் ஒரு பத்திரிகை இந்த சாமானியனின் அபார வளர்ச்சியைக்கண்டு
சாதாரண இந்தியன் நெஞ்சு விம்மிப் பெருமிதம் கொண்டான் என்றுகூட எழுதியது.
சித்தார்த்தாவின்
மறைவு மிகவும் வருத்தமான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் அவர் ஒன்றும்
மீடியாக்களில் பரவியது போல சாமானியர் அல்லர். அவரின் தொடர்புகள் அளப்பரியன. அவரின்
கரங்கள் மிக நீண்டே இருந்தன. இதோ இந்த படத்தைப் பாருங்கள்:
அகாலத்
தற்கொலை பற்றி இப்போது எல்லோரும் பேசுவது ஒரு துர்மரணத்தினால் உண்டாகும் பரிதாப வார்த்தைகளையே.
எந்த ஒரு மனிதனுமே குடும்பம், பிள்ளைகளை நிர்க்கதியாக்கிவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்வது
பரிதாபத்துக்குரிய விஷயம்தான். என்றாலும், அதன் மற்றைய பரிமாணங்கள் என்ன என்று பார்க்கும்போது
வெளிப்படும் உண்மைகள் வேறு ஒரு பார்வையையும் அதன் மூலம் சில பாடங்களையும் தரலாம்.
நேத்ராவதி
ஆற்றிலிருந்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்டபோது பல சங்கடமான கேள்விகள் எழத்தான் செய்தன.
அவரது தற்கொலைக் கடிதத்தில், தொழில் தொடர்பான சிக்கல்களாலும் ஒரு வருமான வரி அதிகாரி
மற்றும் ஒரு தனிப்பட்ட முதலீட்டாளர் ஆகிய இருவராலும் தான் மிகவும் மன உளைச்சலுக்கு
ஆளானதாலும்தான் இந்த முடிவைத் தேடிக்கொண்டேன் என்று எழுதியிருக்கிறார். மேலும் தான்
சில மாதங்களாக ஈடுபட்டிருந்த நிதி நிர்வாக விஷயங்களை தம் குடும்பத்தாருக்கோ அல்லது
தன் நிறுவன நிர்வாகிக்களுக்கோ கூடத் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
 *                      சுலப வர்த்தகம் (Ease of doing business) என்பது வெற்று வாக்கியம்தானா?
*                       
*                     வருமான வரி அதிகாரிகள் எல்லை மீறுகின்றனரா?
*                       
*                     Private Equity Investor என்னும் தனிப்பட்ட முதலீட்டாளர்களின்
வழக்கங்கள் அரக்கத்தனமானவையா?
                      
இந்தக்
கேள்விகள் தவிர, கர்நாடகா அரசியலின் திரைமறைவுக் காட்சிகளும் இவரின் மரணத்துக்குத்
துணை போயிற்றா என்னும் கேள்வியும் எழுகிறது.
மிகச்சாமர்த்தியமான
புத்திசாலியான ஒரு பிஸினஸ் புள்ளி தன் சாதுரியத்தினாலும் தொடர்புகளினாலும் ஒரு மிகப்பெரிய
பிஸினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும், அதீத பேராசையினாலும் சில மறைமுக நடவடிக்கைகளாலும்
அரசை ஏமாற்ற முயன்றதாலும் வெளி வரமுடியாத சிக்கல்களில் உழன்று போய் இந்த சோக முடிவைத்
தேடிக்கொண்டு விட்டாரா? உண்மை என்பது வெளி வந்தாலும் அது முழுமையான உண்மையா என்பது
எவருக்கும் தெரியப்போவதில்லை.
கடந்த
சில மாதங்களாகவே சித்தார்த்தாவின் பெயர் அடிபட்டுக்கொண்டிருந்ததன் காரணம் தனிப்பட்ட
மிகப்பெரும் கடன் சுமையினால் அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளே. கஃபே காபி டேவின் மதிப்பு
கிட்டத்தட்ட ரூ 4200 கோடி. சித்தார்த்தாவும் அவரின் சில நண்பர்களும்கூட அவரது கடன்
சுமையை விட இந்த மதிப்பு அதிகம் என்றே சொல்கின்றனர். இருப்பினும் சித்தார்த்தா தன்
முடிவைத் தேடிக்கொண்டதன் காரணம் என்ன என்பது இன்று வரை சந்தேகமறத் தெளிவாகவில்லை. விசாரணைக்குப்
பின்னும் உண்மையான காரணம் தெரிய வருமா என்பது உறுதியில்லை.
சில
வாரங்களுக்கு முன்புதான் சித்தார்த்தா தன் மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனப் பங்குகளை
(20.3%) L&Tக்கு விற்றிருந்தார். அந்த விற்பனையே மைண்ட் ட்ரீ கம்பெனியின் நிர்வாகிகளுக்கும்
சித்தார்த்தாவுக்கும் சலசலப்பை உண்டு பண்ணி, இதில் எல்.அண்ட்.டி குளிர் காய்கிறது என்றெல்லாம்
விமரிசனங்கள் வைக்கப்பட்டன. என்றாலும், அந்த விற்பனை என்னவோ நிகழ்ந்தே விட்டது. இந்த
விற்பனையின் சித்தார்த்தாவுக்கு எல்.அண்ட்.டி வழங்கிய மதிப்பு ரூ 3269 கோடி. இந்தத்
தொகை சித்தார்த்தாவின் கடனை முழுமையாக அடைக்கப் போதுமானதில்லையா என்னும் கேள்வி எழுகிறது.
அப்படியானால் தொழில் நிறுவனப் புத்தகங்களில் காட்டப்பட்ட கடனைவிட வேறு என்ன கடன் எங்கெங்கு
என்பது இன்னும் தெரியவில்லை.
கம்பெனிப்
புத்தகங்களில் அவரின் கடன் சுமை ரூ 6500 கோடிவரை இருப்பதாகவும் அது தவிர தனிப்பட்டு
அவர் ஏராளமான தொகைகளைக் கடனாக வாங்கியிருந்தார் (கிட்டத்தட்ட ரூ 2000 கோடி வரை) என்றும்
உறுதி செய்யப்படாத தகவல்கள் சொல்கின்றன. சமீபத்தில் இன்னும் ரூ 1600 கோடி கடன் வாங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது.
சித்தார்த்தாவுக்கு
கஃபே காபி டேவைத்தவிர தகவல் தொழில், ரியல் எஸ்டேட், நிதிச்சேவை, லாஜிஸ்டிக்ஸ் எனப்படும்
சரக்குப்போக்குவரத்து ஆகிய தொழில் துறைகளில் முதலீடு இருந்தது. இவை தவிர அவர் தென்
அமெரிக்காவில் 1.85 மில்லியன் ஹெக்டேர் வனப்பிரதேசக் காடுகளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார்.
தன் காபித் தோட்டங்களின் மதிப்பு மற்றும் சில்வர் ஓக் மரங்களின் மதிப்பை அவர் கிட்டத்தட்ட
ரூ 3000 கோடி என்று சொல்லியிருந்தார். ஆனால் விவரமறிந்த விற்பன்னர்கள் சிலர் இந்த மதிப்பை
ஒப்புக்கொள்ளவில்லை. அந்தச் சொத்துக்கள் அவர் கடனை அடைக்கப் போதுமானதில்லை என்றே கூறுகின்றனர்.
சித்தார்த்தாவின்
மரணத்தின் காரணம் அவர் கடிதத்தின்படி அவரால் கடன் சுமையைக் கையாள முடியவில்லை என்பதே.
மேலும் அவர் வாங்கியிருந்த பல கடன்கள் தனிப்பட்ட முறையில் பெற்றவை என்றும், அவை பற்றி
நிறுவனத்துக்கோ அதன் நிர்வாகிகளுக்கோ, ஏன் குடும்பத்தாருக்கோகூடத் தெரியாது. எல்லாவற்றுக்கும்
தானே பொறுப்பு என்னும் ரீதியிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
ஒரு
தனி முதலிட்டாளரின் நெருக்கடியையும் ஒரு வருமானவரி அதிகாரியின் கிடுக்கிப்பிடியையும்
தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று கடிதத்தில் சொல்லியிருப்பது கேள்விக்கு உரியதாகிறது.
இந்தச் செயல்கள் தற்கொலைக்குத் தூண்டும் செயல்கள் என்று பார்க்கப்படுமா என்பது சட்ட
வல்லுனர்கள் கணிக்க வேண்டியதானாலும், இவை விசாரணைக்குட்படுத்தப் படவேண்டியவை என்பதில்
சந்தேகமே இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்.
சரி,
இதையே இன்னொரு கோணத்தில் பார்ப்போமா?
வருமானவரி
அதிகாரி நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்கு சித்தார்த்தா ஏன் பயப்படவேண்டும்
என்பதும் கேள்விக்குரியவையே! அவரின் வருமான வரிச்சிக்கல் சுருக்கமாக இதோ:
அரசியல்
தொடர்புகள் அவருக்கு இருந்தாலும் அவை எதுவும் அவரைக் காப்பாற்றவில்லை. டி.கே.சிவகுமாரின்
நெருக்கம் அவருக்கு நெருக்கடியைத் தந்தது. சிவகுமார் வீட்டில் நடந்த ரெய்டின் பாதிப்பில்
கிடைத்த விஷயங்கள்தாம் சித்தார்த்தாவின் வீட்டு ரெய்டுக்கும் காரணம் என்று சிலர் சொல்லுகின்றனர்.
மாமனார் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அரசியல் பலமோ அவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் உண்டான
தொடர்பினாலோ கூட சித்தார்த்தாவைக் காப்பாற்ற இயலாமல் போனது.
எந்த
விதத்திலும் சித்தார்த்தாவின் மரணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. அவரின் மரணத்துக்கு
காரணமாக இருந்த எவருமே சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நமக்கு ஏற்படும்
எண்ணம் இந்தச் சம்பவத்தைக்கொண்டு வேறொரு அஜெண்டாவை முன்வைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன
என்பதே.
பிஜேபி
அரசு பதவிக்கு வந்த 2014 முதலே சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. மோடி அரசாங்கம்
ஊழலுக்கு எதிரானது என்று முழங்கியே ஆட்சிக்கு வந்த காரணத்தால் அவரின் அமைச்சர்கள் தத்தம்
துறைகளில் களை எடுத்த முயற்சிகளில் பல பின் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன. பண மதிப்பிழப்பு,
ஜிஎஸ்டி, வருமான வரி கிடுக்கிப்பிடிகள் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அரசை
எதிர்க்கும் வியூகத்தை வகுத்து மீடியாக்கள் மூலமாக தம் பிஜேபி தாக்குதலைத் தொடர்ந்த
சங்கதிகளை நாமறிவோம். தேச விரோத சக்திகளும் இந்த மறைமுகத் தாக்குதாலை வைத்துத் தம்
நோக்கங்களை முன்னிறுத்த ஆரம்பித்தன.
மிகக்கடுமையாக
மோடி வெறுப்பு தூவப்பட்டு பல நிலைகளில் அந்த எதிர்ப்புகள் வலுப்பெற ஆரம்பித்தன. முக்கியமாக
தென் மாநிலங்களில், அதுவும் தமிழகத்தில் இந்த எதிர்ப்பு பலம் பெற்றதும், அதனால்
2019 தேர்தலில் இவ்விடங்களில் பிஜேபி அதிகம் வெற்றி பெறமுடியாமல் போனதும் சரித்திரம்.
ஆனால் வட மாநிலங்களில் பிஜேபி இந்த அளவு மக்கள் ஆதரவைச் சம்பாதித்து மாபெரும் வெற்றியடைந்து
விடும் என்பதை இந்த எதிர்ப்பாளர்கள் எதிரே பார்க்கவில்லை. இந்த மாபெரும் வெற்றி பிஜேபியினருக்கே
தங்களின் முயற்சிகளின் மீது பெரும் நம்பிக்கையைத் தோற்றுவிக்க, புதிய அரசு ஊழல் களையெடுக்கும்
செயல்களில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. நிர்மலா சீதாராமன் பதவி ஏற்ற கையோடு வருமான
வரி மற்றும் பல அரசு இயந்திரங்களில் மேல் நிலை அதிகாரிகளின் மாற்றம் தொடங்கிவிட்டதைப்
பார்த்தோம்.
மோடி
அரசின் கடந்த ஐந்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட, சட்டத்தின் முன் கேள்விக்குரிய செயல்களைச்செய்த
நேர்மையல்லாத தொழில் நிறுவனங்கள் கொண்டிருந்த ‘இந்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது’ என்ற
நம்பிக்கை பொய்த்துப்போகவே அவர்கள் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். மேலும்
ஏற்கெனவே எடுக்கப்பட்ட விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு எதிரான செயல்பாடுகள் சர்வதேச
அளவிலேயே அவர்களுக்கு எதிராகப் போய்விட்ட நிலையில் இங்கு அதுபோன்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கும் பெரிய மனிதர்களின் தப்பித்தல் கனவு வலுவிழந்து போய்விட்டது.
சித்தார்த்தாவின்
மரணத்துக்கான காரணம் தனக்கு ஏற்பட்ட அதீத மன உளைச்சல் என்று அவரால் எழுதப்பட்ட கடிதம்
மூலம் தெரிய வர, இந்த மோடி எதிர்ப்பு சக்திகள் இதையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத்
தொடங்கிவிட்டதைக் காண்கிறோம்.
“வருமான
வரித்துறை சித்தார்த்தாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது!” (Tax Terrorism
என்ற சொல்லைப்பயன் படுத்துகின்றனர்.)
“கடன்
கொடுத்த வங்கிகள் அவரைத் தற்கொலைக்குச் செல்லும்படி அழுத்தம் கொடுத்துவிட்டன!”
இதில்
ஓரளவுக்கு உண்மை இருக்கக்கூடும்.
ஏனெனில்
கடன் கொடுத்தவன் நெருக்கத்தான் செய்வான். மல்லையா விஷயத்திலும் நீரவ் மோடி விஷயத்திலும்
அரசு என்ன செய்து கொண்டிருந்தது, வங்கிகள் அவர் ஊரை விட்டுக் கிளம்பும் வரை வேடிக்கை
பார்த்தனவா என்று கேட்ட அதே நபர்கள்தான் இப்போது நெருக்கடி கொடுத்ததைக் குறை கூறுகின்றார்கள்.
இந்த
நிருபிக்கப்படாத சந்தேகங்கள், அரசியல் மறைமுக நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு
வெறும் தொழில் என்ற அளவில் பார்த்தால் ஓரளவு தெளிவு கிடைக்கலாம்.
ஒரு
மிகப்பெரும் தொழில் நிறுவனர் பலதரப்பட்ட வகை தொழில் நிறுவனங்களை ஒரே குடையின் கீழ்
நிர்வகிக்கும்போது சில தவிர்க்கமுடியாத நிர்வாகட் செயல்பாடுகளைச் செய்துவிடுகிறார்
என்பது உலகமெங்கும் நாம் பார்த்த ஒரு வழக்கம். பல நிறுவனங்கள் இயங்கும்போது, சில நல்ல
லாபகரமாக இயங்க, சில நிறுவனங்கள் தடுமாறும் அல்லது நொண்டியடிக்கும். அப்போது லாபகர
நிறுவனத்தில் இருக்கும் பணப்புழக்கத்தைச் சட்டென்று இன்னொன்றில் செலுத்தி நிலமையைச்
சமாளிப்பது வழக்கம்தான். ஆனாலும் இன்றைய கடுமையான வர்த்தகச் சட்டங்களுக்குட்பட்டு அதைச்செய்ய
முடியாது. எனவே பல சமயங்களில் சட்டங்கள் மீறப்படுகின்றன. நொண்டியடிக்கும் நிறுவனங்கள்
சீரடையாமல் நஷ்டத்திலேயே இயங்குமானால் இந்தக் குளறுபடி நிதி மேலாண்மை ஒரு கட்டுக்குள்
அடங்காமல் போய், சட்ட விதி மீறல், நேர்மையற்ற நிதிக்கணக்குகள், பெரும் கடன் சுமை என்று
முடிந்துவிடும். விதிகளை மீறிக் கடன் கொடுக்கும் வங்கிகளும் முதலீட்டாளர்களும் நிலைமை
நெருக்கடியாகும்போது தம் முதலீட்டையோ கடன் தொகையையோ காத்துக்கொள்ள நிறுவன அதிபரை நெருக்கத்தான்
செய்வார்கள். அவர் அதைச் சமாளிக்க இயலாமல் ஒன்று இன்சால்வென்ஸி கொடுத்துவிடுவார், இல்லை
ஓடி ஒளிந்துகொள்வார், அல்லது வேறென்ன, ஆற்றில் குதித்துவிடுவார்!
சித்தார்த்தின்
நிறுவனச் சங்கிலியைப்பாருங்கள்.
வி.ஜி.சித்தார்த்துக்கும்
இதுவே நிகழ்ந்திருக்கலாம் என்று நம்மால் யூகிக்கத்தான் முடியும்.
எத்தனையோ
பேருக்கு தம் நட்பையும் தொடர்புகளையும் வளர்த்துக்கொள்ள அருமையான இடம் கொடுத்த கஃபே
காஃபி டேவின் அதிபருக்கு, அவர் வாழ இந்த உலகத்தில் இடமில்லாமல் போய்விட்டது என்பதை
வாழ்க்கையின் அபத்தங்களுள் ஒன்றாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
(Charts From: VG Siddhartha:
The death of an entrepreneur By Indulekha Aravind, Suman Layak, ET Online, 4th
August 2019)

Posted on Leave a comment

பீஷ்ம நாரயண் சிங்கின் ஆலிங்கனம் | ஜெயராமன் ரகுநாதன்

உத்திரப்பிரதேசத்தின் ஈட்டா மாவட்டத்தில் ஆள் கடத்தல், அதற்குப்பணம்
பறிப்பது தொடர்ந்து நடை பெறுவதாகச் செய்திகள் சொல்லுகின்றன. போன மாதம் கூட டெல்லியில்
கடத்தப்பட்ட டாக்டரும் கம்பவுண்டரும் இதே ஈட்டா மாவட்டத்தில்தான் மீட்டெடுக்கப்பட்டனர்.
1983ல் நான் ஹிந்துஸ்தான் லீவரில் மானேஜராக வேலை செய்த சமயம்
இந்த ஈட்டாவில் இரண்டு மாதம் ஒரு குக்கிராமத்தில் கழித்தேன். அப்போதே ஆள் கடத்தல் என்பது
அவர்களின் வாழ்க்கையில் சரளமாகிப்போன அவலத்தைக் கண்டு அதிர்ந்தேன்.
1982ல் பஸ்ஸில் ஃப்ளோரா ஃபௌண்டனில் சீட் கிடைத்தது பூர்வ
ஜென்ம புண்ணியம். அதுவும் மாலை ஏழு மணிக்கு. எனக்கென்னவோ இதெல்லாம் ஒரு பொருட்டாகவே
தெரியவில்லை. அன்று மும்பை நகரமே அலம்பிவிட்டாற்போலச் சுத்தமாக இருந்தது. எல்லோரும்
நல்லவராகத் தெரிந்தார்கள். என் கையில் ஹிந்துஸ்தான் லீவரின் அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர்.
என் ஆதர்ஸ கம்பெனி ‘நீ தேர்ந்தேடுக்கப்பட்டுவிட்டாய்’ என்று சொன்ன அந்தக்கணம் மறுபடி
மறுபடி ரீவைண்ட் ஆகி ஒரு வித சுஷுப்தி அவஸ்தையிலேயே செம்பூர் வந்து சேர்ந்தேன்.
அடுத்த பதினாலு மாதங்கள் ஹிந்துஸ்தான் லீவரில் நான் நாயடி
பேயடி பட்டு வேலை கற்றுக்கொண்டது பற்றியோ, கிட்டத்தட்ட ஒரு மாதம் இரவு எட்டு மணிக்கு
வந்து அடுத்த நாள் காலை ஆறு மணி வரை வேலை செய்துவிட்டு, மறுபடி ஒன்பது மணிக்கு ஆபீஸ்
வந்தது பற்றியோ, கடுமையான ஆடிட்டுக்கு நடுவில், தென்றலாய் ஃபெர்க்யூஸன் கம்பெனியிலிருந்து
வந்த காதம்பரி பற்றியோ இங்கே எழுதப்போவது இல்லை.
பதினெட்டு மாத டிரெயினிங்கில் இரண்டு மாதம் ஈட்டா மாவட்டத்தில்
உள்ள ஒரு குக்கிராமத்தில் நான் குப்பை கொட்டிய சாகசமே இந்தக் கட்டுரை. கிராமத்தில்
எதேச்சையாக தென்பட்ட, வளைவுகள் நிறைந்த பதினாறு வயதுப் புயல் பற்றி இருக்கும் என்ற
சம்சயத்துடன் இதைப் படிப்பவர்கள் இப்போதே விலகலாம். வாழ்க்கை எப்போதாவதுதான் அப்படிப்பட்ட
சுவாரஸ்யங்களை ஜாதக விசேஷம் உள்ளவர்களுக்கு அளிக்கிறது.
ஈட்டாவில் கம்பெனியின் ஃபாக்டரி கெஸ்ட் ஹவுஸில் டாக்டர் சில
பல ஊசிகள் போட்டார்.
“அங்கெல்லாம் ஈசியா இன்ஃபெக்ஷன் வரும்! ரெண்டு நாளுக்கு மேல்
ஜுரம் நீடித்தால் ஈட்டா ஆஸ்பத்ரியில் சேர்த்துவிடச் சொல்!”
அன்று மாலை நாலு மணிக்கு பக்கெட், ஒரு மெல்லிசான படுக்கை,
ஹரிக்கேன் விளக்கு அப்புறம் ஒரு லோட்டா கொடுத்து ஜீப்பில் ஏற்றி ‘……….’ என்கிற
அத்வானத்துக்குக் கொண்டு விட்டார்கள். எனக்கு அளித்த சாமக்கிரியைகளின் காரணத்தை விளக்குவது
இப்போது அவசியம்.
பக்கெட் – வெட்டவெளிக்குளியலுக்காம்.
படுக்கை – கயிற்றுக்கட்டிலில் மூட்டைப்பூச்சி அதிகம்.
ஹரிக்கேன் விளக்கு – அந்தப் பேட்டைக்கே மின்சாரம் கிடையாது.
லோட்டா – வேறெதற்கு, வயல் வெளியில் ஒதுங்கத்தான்!
ஈட்டா மாவட்டத்தில் எங்கள் கம்பெனி நூற்றைம்பது கிராமங்களைத்
தத்தெடுத்து இருந்தார்கள். ஒவ்வொரு பயிற்சியாளரும் இரண்டு மாதம் ஒரு கிராமத்தில் தங்கி
அதன் முன்னேற்றத்திற்காக எதாவது செய்ய வேண்டியதுதான் எங்கள் முக்கியமான ப்ராஜெக்ட்.
இது பின்னால் வேலை நிரந்தரமாவதற்கு மிக ஆதாரமானது.
தங்குவதற்கு கிராமத்திலேயே கொஞ்சம் வசதியான விவசாயியின் வீட்டில்
ஏற்பாடு. இரண்டு மாதங்களுக்குப் பின் காசு கொடுத்தால் மரியாதைப்படாது என்பதால் அவர்
வீட்டிற்குத் தேவையான சாமான்கள் ஏதாவது வாங்கிக்கொடுப்பது வழக்கமாக இருந்தது.
எனக்குத் தஞ்சமளித்த விவசாயி பீஷ்ம நாராயண் சிங். ஒல்லியான
மீசை வைத்த பஞ்சகச்சம் கட்டின ஆசாமி. அவருக்கு பதினாறில் ஆரம்பித்து இருவத்திரெண்டு
வரை ஐந்து பெண்கள். ஒன்றுக்கும் கல்யாணம் ஆகவில்லை. எனவே என்னை வீட்டுக்குள் வைத்துக்கொள்ள
முடியாது என்று வாசலில் வானம் பார்த்த ஒரு கயிற்றுக்கட்டிலில் தள்ளி விட்டார்.
அக்டோபர் மாதம் என்பதால் கொஞ்சம் குளிர். அதிக வெளிச்சமில்லாத
காலை. கண் விழித்தபோது எனக்குப் பத்து அடியில் கிராமமே உட்கார்ந்து என்னை கண் கொட்டாமல்
பார்த்துக்கொண்டிருந்தது. இப்பவே எனக்கு அரைகுறை இந்திதான். அப்போது சுத்தமான திராவிடனாக
இருந்தமையால் சைகையில்தான் பேச்சுவார்த்தை. அவர்கள் இந்தியில் பேசுவார்கள். டீ வந்தது
(மூன்றாவது பெண்). குடித்துவிட்டு என்ன பண்ணுவது என்று தெரியாமல் பேந்த பேந்த விழித்துக்கொண்டு
இருந்தேன். அப்போதுதான் அந்த சரித்திரப் பிரசித்திபெற்ற உரையாடல் நிகழ்ந்தது.
“மானேஜர் சாப்! நஹி ஜா ரஹேஹோ?”
“கஹான்?”
“நை, ஆப் நஹி ஜா ரஹே ஹோ.”
எனக்கு புரியவில்லை. உதவிக்கு வந்தான் ஒரு பையன்.
“வோ பூச் ரஹா ஹய், ஆப் டட்டி நஹி ஜா ரஹே ஹோ!”
சுருக்கமாகச்சொன்னால் அவனுக்கு நான் ஏன் இன்னும் காலைக்கடனுக்குப்
போகவில்லை என்ற கவலை!
ஒரு வழியாகக் கிளம்பி வெட்கத்தினால் வெகு தூரம் போய்த் தனியான
இடம் பார்த்து உட்காரப்போகும்போது வெகு அருகில் கணீர்க்குரல்.
“ஜெய் ராம் ஜி கி, மானேஜர் சாப்!”
திடுக்கிட்டுப் பார்த்தால் ஐந்தடி தூரத்தில் இன்னொரு புதருக்கருகில்
ஒரு சக ஆள்!
ஒரு வழியாகக் காலைக்கடன் பஞ்சாயத்து முடிந்து நான் கிணற்றடிக்குக்
குளிக்கப் போனால் கூடவே முப்பது பேர் வேடிக்கை பார்க்க. ராம் தேரி கங்கா மைலி ஹீரோயின்
போல உணர்ந்தேன்.
இதெல்லாம் முதல் ஓரிரண்டு நாட்களுக்குத்தான். வெட்ட வெளியில்
காலைக்கடன், பொதுக்கிணற்றில் குளியல் எல்லாம் பின்னாள் பம்பாய் வாழ்க்கையில் கிடைக்காதா
என்று ஏங்க வைத்த அனுபவமாக மாறிப்போனது.
வ வே சு அய்யர் கதைகளில் போல இரண்டு மாதங்கள் “உருண்டோடின”!
கடைசி நாட்களில் பீஷ்ம நாராயண் சிங் என்னை வீட்டுக்குள் அனுமதித்ததும்,
அவர் தம் பெண்களை விட்டே எனக்கு உணவு பரிமாற வைத்ததும் என் நேர்மையை விட அவரின் வெள்ளை
மனசு காரணமாகத்தான் என்பதை ஒத்துக்கொள்ள எனக்குத் தயக்கமே இல்லை.
புறப்படும் அன்று பீஷ்ம நாராயன் சிங்கும் அவர் மனைவியும்
பெண்களும் கண்ணீர் விட்டபோது பாழாய்ப்போன அந்த என்னுடைய போலித்தனம் அழவிடாமல் வீரமாகப்
பேச வைத்தது.
மண் வாசனையும் வேர்க்கடலை வறுபடும் நெடியும் கொஞ்சம் அழுக்கும்
வியர்வையும் கலந்த பீஷ்ம நாராயன் சிங்கின் அந்த ஆலிங்கனம்!
அப்புறம் என்ன, கம்பெனியின் ஓட்டத்தில் நானும் ஓடினேன். சண்டிகர்,
கல்கத்தா, ஜம்மு என்று இடம் இடமாக மாற்றம். 1989ல் சீனியர் மானேஜராகப் பதவி உயர்ந்து
ஈட்டா ஃபாக்டரியின் ரிவ்யுக்குப் போகும் சந்தர்ப்பம் ஏற்பட்டது. நான் இருந்த கிராமத்தைக்
காட்டுவதற்காக மனைவியையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு போயிருந்தேன்.
அந்த சனிக்கிழமை ஜீப் எடுத்துக்கொண்டு கிராமத்துக்குப் போனோம்.
வெட்கமின்றி அழ வைத்த நெகிழ்ச்சியான வரவேற்பு.
என்னமோ என் பிறந்த ஊருக்கு வந்தாற்போல வாழ்த்தும் விஜாரிப்புமாய்
இருந்தது. ஒவ்வொரு வீட்டிலும் பாலும், ஜிலேபியும் அடைத்தார்கள். என் மனைவிக்கு “இங்கதான்
குளிப்பாரு, இங்கதான் வாலி பால் ஆடுவாரு, இந்தக் கிணறு இவர் அரசாங்கத்தில் சொல்லிப்
போட்டதுதான்” என்றெல்லாம் சுற்றுலா வேலை செய்தார்கள்.
பீஷ்ம நாராயண் சிங்கைத் தேடினேன்.
இரண்டு வீடு தள்ளி இருக்கும் ராம் சிங்தான் இருந்தார்.
“அவரைக் கடத்தி விட்டார்கள். மாசக் கடைசிக்குள் முப்பதாயிரம்
கேட்டிருக்கிறார்கள். இதோ இவர்தான் அவரின் முதல் மாப்பிள்ளை. பணம் சேகரித்துக் கொண்டிருக்கிறார்.
ஒன்றும் பயமில்லை, வந்துவிடுவார்!”
இந்த சமாச்சாரத்தை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை.
மாப்பிள்ளை கீழ்ப் பார்வை பார்த்துக்கொண்டு ஒரு வித அலட்சியத்துடன்
இருப்பதுபோல எனக்குத் தோன்றியது. வீட்டில் அவரின் மனைவி, “வோ ஆயேகா” என்று என்னமோ விதை
நெல் வாங்க டவுனுக்குப் போயிருப்பதுபோல சொன்னார்கள்.
“ஜாக்கிரதை, ஜாக்கிரதை” என்று சொல்லி விடை பெற்று வந்துவிட்டோம்.
இரண்டு வாரம் கழித்து ஒரு நாள் பாம்பேயில் ஆஃபீஸ் காரிடாரில்
லிஃப்டுக்காகக் காத்திருந்தபோது ராமநாதன் வருவதைப் பார்த்தேன். அவர் ஈட்டா ஃபாக்டரி
மானேஜர்.
“ரகு! நீ “…………” லதானே இருந்தே? அந்த பீஷ்ம நாராயண்
சிங் செத்துட்டான்”!
“ஐயோ என்ன ஆச்சு?”
“முப்பதாயிரம் குடுக்க முடியலை. கரும்பு காட்டுல குத்துயிரும்
கொலை உயிருமா ஆள போட்டிருந்தாங்க. மூணு நாள் காஸ்கஞ்ஜ் ஆஸ்பத்திரில கஷ்டப்பட்டு செத்துப்போயிட்டான்.
நம்ம டாக்டரை விட்டு கூட பாக்கச் சொன்னேன். பிரயோஜனமில்லாம போய்டுத்து!”
உறைந்து போயிருந்தேன். உடனே மனசில் தோன்றியது அந்தப் பெண்கள்தான்.
யார் அவர்களைக் கரையேற்றுவார்கள். அவ்வளவு அன்புடன் சக மனிதனை நேசித்த பீஷம் ஏன் இப்படி
கோரமாய்ச் சாக வேண்டும். அந்த குடும்பம் எப்படி அலை பாயுமோ?
“ச்சே ச்சே! கிராமங்கள் பாம்பே டெல்லி போல விட்டேத்தியாய்
இருக்காது. கூட இருப்பவர்கள் அந்தப் பெண்களுக்கு ஏதேனும் நல்ல வழி காட்டுவார்கள். முதல்
மாப்பிளை சொந்த பிள்ளை போலக் குடும்பத்தை காப்பாற்றுவான்!”
சும்மாவா சொல்லியிருக்கார் மகாத்மா காந்தி, “இந்தியாவின்
உயிர் நாடி கிராமங்களில்தான் இருக்கிறது.”
என்னை நானே தேற்றிக்கொண்டேன்.
இன்றும்கூட எப்பவாவது சில இரவுகளில் அந்த பீஷ்ம நாராயண் சிங்கின்
ஆலிங்கனமும் அந்த வாடையும் என்னை எழுப்பி மீதி இரவில் தூங்க விடாமல் செய்து விடுவதுண்டு.
36 வருடங்களுக்குப் பின்னரும் நிலைமை அதிகம் மாறாததுதான்,
நாம் இந்த நாட்டின் ஜனநாயகத்துக்குக் கொடுக்கும் விலை என்று தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.

Posted on Leave a comment

ஜெட் ஏர்வேஸ்: அபார உயர்வும் அசுரச் சரிவும் | ஜெயராமன் ரகுநாதன்“எக்ஸ்க்யூஸ்
மீ! மணி ஏழாச்சே! இன்னுமா போர்டிங் ஆகலை?

“இல்லை. கிளம்ப
அரை மணி ஆகும்!
“லேட்டா? நீங்க
அனௌன்ஸ்மெண்ட் பண்ணலியே?
“அதான் இப்ப
சொல்றோமே, போதாதா?
இது ஒரு வகை
அனுபவம்.
“ப்ளீஸ்! ஒரு
கிளாஸ் தண்ணீர்!
“இப்ப முடியாது!
இந்த சர்வீஸ் முடிந்தவுடன் தருகிறேன்!
“மிஸ்! நான்
குடிக்க தண்ணீர் கேட்டேனே?
“சாரி! இன்னும்
அரை மணியில லேண்டிங்! அதனால முடியாது!
எழுபதுகளில்
இந்தியன் ஏர்லைன்ஸில் பிரயாணம் செய்த துரதிஷ்டசாலிகளைக் கேட்டால் ஒரு பாட்டம் அழுவார்கள்.
வேற கதி இல்லாமல் எல்லாவித சித்திரவதைகளை அனுபவித்துக்கொண்டும் இந்திய ஏர்லைன்சில்தான்
பயணம் பண்ன வேண்டிய ஒரு காலத்தில், வாராது வந்த மாமணிதான் ஜெட் ஏர்வேஸ்.
புத்தம் புது
விமானங்கள், சிக்கென்று உடை உடுத்திய நடுவானக் கன்னிகள், அபார பணிவு கலந்த சேவை, சுவையான
உணவு, சிரித்த முகத்துடன் பதில் என்று விமானப் பயண அனுபவத்தையே தலைகீழாக மாற்றிப்போட்ட
ஜெட் ஏர்வேஸ். சரியான நேரத்துக்குக் கிளம்பி சரியான நேர்த்தில் சென்றடைந்து விமானப்
பயணத்துக்கென தனி அளவுகோலையே ஏற்படுத்தினார்கள்.
1992ல் ஆரம்பித்த
ஜெட் ஏர்வேஸ் அடுத்த வருடத்திலேயே 6.6% சந்தைப்பங்கைப் பிடித்ததோடு அன்றி, அதற்கடுத்த
வருடத்திலேயே அதை 42%க்கு உயர்த்தியது. ஆரம்பித்த முதல் வருடத்திலேயே ஜெட் ஏர்வேஸில்
பயணித்தவர்களின் எண்ணிக்கை 730,000 பேர்கள்! முழுக்க முழுக்க வாடிக்கையாளர் சேவையையே
மையமாக வைத்து இயங்கியதாலேயே இந்த அசுர வளர்ச்சி அடையமுடிந்தது. இவ்வளவு தரமான சேவை
அளித்தும் ஜெட் ஏர்வேஸினால் லாபம் சம்பாதிக்க முடிந்ததன் காரணம், அவர்களின் செலவுக்கட்டுப்பாட்டு
முறைமை. அப்போது இந்தியன் ஏர்லைன்ஸின் வேலை செய்பவர்களின் எண்ணிக்கை விகிதம் ஒரு விமானத்துக்கு
397ஆக இருக்க, அதே விகிதம் ஜெட் ஏர்வேஸில் 163 மட்டுமே! வெகு விரைவிலேயே வெளிநாட்டுக்கும்
சேவை ஆரம்பித்துவிட்ட ஜெட் ஏர்வேஸின் தலைவர் நரேஷ் கோயல் 2004-2006ம் வருடம் பன்னாட்டு
விமானப்பயணச் சங்கத்தின் தலைவராகவும் நியமிக்கப்படும் அளவுக்குப் பாராட்டப்படுபவரானார்.
கிட்டத்தட்ட இந்தப் பொறுப்பில் அவர் 2016 வரை இருந்தார் என்பது விசேஷச்செய்தி!
2007ல் ஏர் சஹாரா
என்னும் சின்ன விமான நிறுவனத்தை 507 மில்லியன் டாலர் (ரூ 3500 கோடி) கொடுத்து வாங்கிய
ஜெட் ஏர்வேஸ், அதற்கு ஜெட் லைட் என்று பெயர் மாற்றி இயக்க ஆரம்பித்தது.
2013ல் ஜெட்
ஏர்வேஸின் வளர்ச்சிக்கு உதவ தலைவர் நரேஷ் கோயல் அபுதாபியைச் சேர்ந்த எடிஹாத் ஏர்வேஸுக்கு
(Etihad Airlines) தன் 24% பங்குகளை அளித்து 379 மில்லியன் டாலர்களைப் பெற்றார். அன்றைய
தேதியில் ஜெட் ஏர்வேஸிடம் 55 விமானங்கள் ஓட, ஒரு கோடி பேர் பயணம் செய்திருந்தனர். அதன்
வரவு 9800 கோடி ரூபாயாக உயர்ந்து லாபகரமான விமான நிறுவனமாகத் திகழ்ந்தது.
ஆனால் கடந்த
சில வருடங்களாக ஜெட் ஏர்வேஸின் நிதி நிலைமை படிப்படியாக வலுவிழந்து இன்று மொத்தமாக
மூடப்படும் அளவுக்குப் போய்விட்டிருக்கிறது. 2018ம் ஆண்டு ஜெட்டுக்கு இருந்த சந்தைப்பங்கு
16.6%. ஆனால் ஒரே வருடத்தில் இந்த ஜனவரியில் அது 13.3% ஆகக் குறைந்துவிட்டது. போட்டி
நிறுவனங்களான இண்டிகோ, ஸ்பைஸ் ஜெட் விஸ்தாரா போன்றவை படிப்படியாக முன்னேற, ஜெட் மட்டும்
இறங்குமுகமாகவே நழுவிக்கொண்டிருக்கிறது.
கடுமையான பணத்தட்டுப்பாடும் விஷமாய் ஏறும்
கடன் சுமையுமே முக்கிய காரணங்கள் என்கிறார்கள் விற்பன்னர்கள். சமீப காலங்களில் பெரும்
சரிவைச்சந்தித்த விஜய் மல்லையாவின் கிங் ஃபிஷர் ஏர்லைன்ஸைவிட ஜெட் ஏர்வேஸின் சரிவு
மிகப்பெரியது. ஜெட்டின் கடன் சுமை போன வருடம் ரூ 8411 கோடி கிங்ஃபிஷருடைய கடன் சுமை
அதுவும் ஏறும் வட்டியினால், ரூ 7524 கோடி. ஜெட்டின் பணியாளர்கள் எண்ணிக்கை 16000. ஆனால்
கிங்ஃபிஷரிலோ 5700 பேர்தான். மேலும் கிங்ஃபிஷரிடம் 69 விமானங்கள் இருக்க ஒரு நாளைக்கு
370 விமானச்சேவைகள் செய்து வந்தது. ஆனால் ஜெட்டிடம் 119 விமானங்கள் இருக்க, ஒரு நாளைக்கு
600 விமானச்சேவைகள் செய்து வந்தது. இதனாலேயே ஜெட்டின் வீழ்ச்சி படு வேகமாக நிகழ ஆரம்பித்தது.
இந்த வீழ்ச்சிக்கு
முக்கியக் காரணமாக விற்பன்னர்கள் சொல்லுவது நரேஷ் கோயலின் நிர்வாக பாணிதான். அவர் கடுமையான
நிர்வாக முறைகளையும் தான் சொல்லுவதுதான் செய்யப்படவேண்டும் என்னும் சர்வாதிகாரப்போக்கும்
ஜெட்டில் மேலாண்மையைப் பாதித்தது. அவருடன் கூடப் பணிபுரிந்த பல மிக நல்ல நிர்வாகிகள்
இந்தப் பாணி பிடிக்காமல் விலகிவிட்டனர்.
கோயலின் இந்த
மேலாண்மை ஒரு காலத்தில் இந்தியன் ஏர்லைன்ஸ் மட்டுமே போட்டியாக இருந்தபோது செல்லுபடியாயிற்று.
ஆனால் பல தனியார் விமானச்சேவைகள் வந்துவிட்ட பிறகு மாறிவிட்டிருக்கும் சூழலில் நரேஷ்
கோயலால் தன் நிறுவனத்தை முன்போல லாபகரமாகச் செயல்பட வைக்க முடியவில்லை.
ஸ்பைஸ் ஜெட்
கூட சில வருடங்களுக்கு முன்பு கடுமையான சோதனைகளைச் சந்தித்தது. ஆனால் அதன் தலைவர் அஜய்
சிங் நிறுவனத்தை விரைவிலேயே நல்ல நிலைமைக்கு கொண்டு வந்து விட்டார். காரணம் ஸ்பைஸ்
ஜெட்டிடம் இரண்டே வகையான விமானங்கள் இருந்தன. குறைவான பன்னாட்டுப் பயணங்கள் மற்றும்
உள்நாட்டிலும் அதிகச் சிக்கல்கள் இல்லாத போக்குவரத்து. எனவே ரூ 1500 கோடி ரூபாய் அதிக
முதல் செலுத்தி நிர்வாகத்தைச் சீரமைத்து ஸ்பைஸ் ஜெட் விரைவிலேயே லாபகரமாக இயங்க ஆரம்பித்துவிட்டது.
ஆனால் ஜெட் ஏர்வேஸால் அவ்வளவு சுலபமாக நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வருவது சாத்தியமில்லை
என்பது வல்லுநர்களின் கருத்து.
ஏற்கெனவே இந்திய
விமானச்சேவை சஹாரா, ஏர் இண்டியா மற்றும் ஸ்பைஸ் ஜெட்டின் வீழ்ச்சிகளைப் பார்த்துவிட்டது.
இப்போது ஜெட்டும் வீழுமானால் அது எல்லோருக்குமே – வங்கிகள். அரசு, பயணிகள் மற்றும்
ஜெட் ஏர்வேஸுக்கு பெரும் இழப்புதான்.
சமீபத்தில் சில
வங்கிகளும் அரசும் முனைந்து ஜெட் ஏர்வேஸின் நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வர பல முயற்சிகள்
செய்து வருகிறார்கள். கோயல் தலைமைப்பீடத்திலிருந்து இறக்கப்படலாம். புது நிர்வாகிகள்
சேர்க்கப்பட்டு, வீண் செலவுகள் குறைக்கப்பட்டு, விமானங்கள் குறைக்கப்பட்டு சீராக இயங்கினால்
ஜெட் ஏர்வேஸ் மீண்டுவிடலாம் என்கிறார்கள். இதன் ஆரம்பமாக போன வருடத்தில் எடுக்கப்பட்ட
முயற்சிகளால் ரூ 500 கோடி வரை செலவினங்கள் குறைக்கப்பட்டுவிட்டதாகச் செய்திகள் வருகின்றன.
இதற்கு நடுவில் ஜெட் ஏர்வேஸின் பணியாளர்கள் ஜெட் ஏர்வேஸ் மீண்டு வர வாய்ப்புத்தர வேண்டும்,
ஜெட் ஏர்வேஸின் விமான லைசென்ஸை ரத்து செய்யக்கூடாது என்றெல்லாம் கோரிக்கை வைத்துப்
போராட்டம் செய்வதோடு நீதிமன்றத்துக்கும் போயிருக்கின்றனர்.
மிக நன்றாகச்
செயல்பட்டு வந்த விமான நிறுவனம் நிர்வாகச் சீர்கேடால் மூடப்படுவது இந்தியாவின் வர்த்தக
நிலைமைக்கு நல்ல செய்தி அல்ல. உலகெங்குமே பல விமான நிறுவனங்கள் கடும் சங்கடங்களைச்
சந்தித்து வருகின்றன. ஆனால் அவற்றைச் சீராக்குவதில் வங்கிகளும் அரசும் முக்கியப் பங்கு
வகிக்கவேண்டும். ஜெட் மீண்டு வந்து விமானச் சேவையைத் தொடர்வது விமான நிறுவனங்களின்
ஆரோக்கியமான போட்டிக்கு வழி வகுத்து இந்திய விமானப்பயணத்தின் விஸ்தீரணத்தை, முக்கியமாகப்
பன்னாட்டு விமானச் சேவையைப் பலப்படுத்தி, பொருளாதார நன்மைகளைப் பெருக்கக்கூடும்.
அந்த நீல வண்ண
கம்பீர விமானங்களும் மாறாத புன்னகையுடன் சுடச்சுட அருமையான உணவுத்தட்டை உங்கள் கையில்
வைத்து ‘எஞ்சாய் யுவர் மீல்
என்னும் மென்மையான சேவையும் மீண்டும் தொடர ஜெட் ஏர்வேஸை வாழ்த்துவோம்.