Posted on Leave a comment

ஜி எஸ் டி: புதிய தொடக்கம் – ஜெயராமன் ரகுநாதன்

ஆகஸ்டு பதினைந்து அளவுக்கு இல்லாவிட்டாலும் ஜூன் முப்பது இரவில் பன்னிரண்டு மணிக்கு உயிர்பெற்ற ஜிஎஸ்டி (GST) நிச்சயம் இந்தியப் பொருளாதார மற்றும் அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்த செயல்தான் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

“அப்படி என்ன பெரிசா இருக்கு ஜிஎஸ்டியில? மறுபடி மறுபடி சாமானிய மக்களுக்கு தொல்லைதானே? இதெல்லாம் வெறும் ஸ்டண்ட்!”

மிக உரக்கக்கேட்கும் இந்தப் புலம்பலில் உண்மை இல்லை. இப்படிப் புலம்புபவர்கள் ஒன்று அரசை எதிர்க்கும் மனநிலை கொண்டவர்கள் அல்லது இந்த ஜிஎஸ்டியின் முழுப்பரிமாணத்தை அறியாமல் மேம்போக்கான புரிதலுடன் விமரிசனம் செய்பவர்கள். இன்று நாம் பார்க்கும் ஜிஎஸ்டி நிச்சயம் மிகச்சரியான வரி சிஸ்டம் இல்லைதான். கச்சிதம் என்பது முதல் நாளிலேயே வந்துவிடாது. இது ஒரு மிக நல்ல தேவையான ஆரம்பம். இந்திய அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கான மைல்கல்.

இதற்கென இந்த பாஜக அரசைப் பாராட்ட வேண்டுமா?

நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்!

29 மாநிலங்கள் ஏழு யூனியன் பிரதேசங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தி, எண்ணற்ற தடைக்கற்களைச் சந்தித்து, ஈகோ பிரச்சனைகள், வருமான இழப்பு வாதங்கள், பல உரிமை இழப்புகள் பற்றிய சந்தேகங்கள், பயம் போன்ற கணக்கிலடங்கா விஷயங்களை விளக்க நூற்றுக்கணக்கான கூட்டங்களைக் கூட்டி, ஒருவித ஒற்றுமைக்குள் வரவழைத்து இந்த ஜிஎஸ்டியை தேச முழுமைக்கும் அர்ப்பணித்த இந்த அரசு பாராட்டுக்குரியதே. தனக்கோ தன் கட்சிக்கோ என்ன லாபம் என்று குறுகிய நோக்கிருந்தால் இந்த முயற்சி இந்த அளவுக்கு வந்திருக்காது. பிரதமர் மோடி அவர்களின் ஒருங்கிணைனத நாட்டுநலன் சார்ந்த செயல்களில் இந்த ஜிஎஸ்டி மிக முக்கியமானதுதான்.

எடுத்தவுடனேயே இந்த ஜிஎஸ்டி நன்மைகளைத் தந்துவிடுமா என்னும் சரியான கேள்விக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும். ஆரம்ப கஷ்டங்கள் இருக்கத்தான் செய்யும். சில தொழில்களும் நிறுவனங்களும் பாதிப்பைச் சந்திக்கும். சில பொருட்களின் விலை குறுகிய காலத்தில் உயரவும் வாய்ப்பு இருக்கிறது. பல இடங்களில் அரசு இயந்திரங்கள் குழப்பத்தை ஏற்படுத்தக்கூடும். அதிகாரிகள் முழுப்புரிதல் இல்லாமல் வர்த்தக நிறுவனங்களைப் பாடுபடுத்தக்கூடும். ஆனால் இவையெல்லாம் சில மாதங்களில் சரியாகி எண்ணெய் போட்ட சக்கரமாய் இந்த ஜிஎஸ்டி சுழல ஆரம்பிக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆரம்பகால சங்கடங்களைத் தவிர்க்க முடியாது. அரசும் அதிகாரிகளும் இதுபற்றி யோசித்து இவற்றைத் தாண்டி ஜிஎஸ்டி யை நல்ல முறையில் நிர்வகிக்கும் திட்டங்களைத் தயார்ப்படுத்தி இருப்பார்கள் என்று நிச்சயம் நம்பலாம்.

ஒருங்கிணைந்த உற்பத்திக் கேந்திரமாக உலக வரிசையில் இந்தியா முந்தி நிற்க வேண்டுமென்றால் இந்த ஜிஎஸ்டி மிக அவசியம். இதன் மூலம் வரி விதிப்பு மற்றும் வரி வசூலில் உண்டாகப்போகும் வெளிப்படைத்தன்மை நம் பொருளாதாரத்தை இன்னும் ஸ்திரமாக்கும். இந்தியாவின் பல மூலோபாய குறிக்கோள்களை (Straegic Objectives) நிறைவேற்ற ஜிஎஸ்டி போன்ற நிர்வாக முறைமை நமக்குத் தேவை.

ஜிஎஸ்டி வருவதற்கு முன்னர் சைனா மற்றும் தாய்லாந்திலிருந்து இறக்குமதி செய்து, எண்ணிக்கையைக் குறைத்துக் காண்பித்து, இந்தியாவில் விற்று, வரி ஏய்த்து லாபம் சம்பாதிக்கும் முறை பரவலாக நடந்து வருகின்றது. அதே பொருளை இந்தியாவில் தயாரிப்பவர்களால், இந்த வரி ஏய்ப்பு ஆசாமிகளின் விலையோடு போட்டி போட முடியவில்லை. ஏனென்றால் தயாரிப்பு வரியை அவ்வளவு சுலபத்தில் ஏய்க்க முடியாது.

“சுருக்கமா சொல்லுங்க, இந்த ஜி எஸ் டி எந்த விதத்துல வித்தியாசமானது?”

“உன் கேசையே எடுத்துக்கோ!”

“என் கேசா?”

“ஆமாம்ப்பா! முதல்ல உனக்கு நெறய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் இருந்தாங்களா? நீ பாட்டுக்கு எப்ப யார் வேணுமோ அவங்க கூட சுத்துவே! அது மாதிரிதான் ஜிஎஸ்டிக்கு முன்ன! அதாவது எக்ஸைஸ், கஸ்டம், VAT, சர்வீஸ் டாக்ஸ்ன்னு பல வரிகள்! ஆனா இப்ப? உனக்கு ஒரே ஒய்ஃப்! அது மாதிரி ஒரே ஜிஎஸ்டி!”

“நல்லா இருக்கே இந்த விளக்கம்!”

“இரு கேளு! முன்னல்லாம் நீ சுகந்தியோட சினிமாக்கு போனா உஷாட்ட சொல்ல வேண்டாம். ராகினியோட பீச்சுக்கு போனா நிர்மலாட்ட சொல்ல வேண்டாம். ஆனா இப்ப, மவனே எங்க போனாலும் ஒய்ஃப்ட்ட சொல்லிட்டுதாண்டா போகணும்! அதே மாதிரிதான்! இப்ப என்ன வித்தாலும் ஜிஎஸ்டி கட்டிதாண்டா ஆகணும்!”

ஜிஎஸ்டி வந்துவிட்டால் இந்தக் குறைபாடு முற்றிலும் ஒழிந்துவிடுமா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்லவேண்டும். முற்றிலுமாக அழிக்க முடியாவிட்டாலும் ஓரளவுக்குக் கட்டுப்படுத்தப்படும் என்பது உறுதி. குறுக்குப் புத்தியுடன் அரசை ஏமாற்றும் வீணர்கள் இருக்கத்தான் செய்வார்கள். ஆனால் அந்த வரி ஏய்ப்பினால் முன்பு கிடைத்த லாபம் இப்போது கிடைக்காது. ஏய்ப்பின் சங்கடங்கள் அதிகமாகும். ஜிஎஸ்டியால் ஒவ்வொரு பரிவர்த்தனையும் அதற்கு முன்பான பரிவர்த்தனையின்போது கட்டின வரியை மீட்டுக்கொள்ள முடியும் என்பதால் வரி ஏய்ப்பு விளையாட்டு கஷ்டமாகும்.

“அப்ப இந்த ஜிஎஸ்டி இந்தியாவைக்காக்க வந்த காவல் தெய்வமா?”

இல்லை, இன்னும் இல்லை. கூடிய விரைவில் ஆகிவிடக்கூடும். ‘ஒரு தேசம், ஒரு வரி’ என்பது இன்றே சாத்தியமல்ல. இன்னும் சில ஆண்டுகளில் கூடச் சாத்தியமல்ல. ஆனாலும் மிகக்குறைந்த வரி விகிதக் கட்டமைப்பு என்பது இந்தியப் பொருளாதாரத்திற்கு மிகப்பெரும் வரப்பிரசாதம்தான்.

அரசாங்கமும் நிர்வாகமும் இந்த ஜிஎஸ்டியை மெருகேற்றிக்கொண்டேதான் இருக்கவேண்டும். அனுபவங்களின் மூலம் கிடைக்கும் பாடங்கள் இந்த மெருகேற்றுதலைச் சிறப்பிக்கும். நடைமுறைச் சிக்கல்களை சந்தித்து அதன் சாதக பாதகங்களை அறிந்துகொள்ளும்போது ஜிஎஸ்டியை மேலும் மேலும் இறுக்கமான, குறையற்ற வரி அமைப்பாகப் பலப்படுத்தமுடியும்.

இந்த ஜிஎஸ்டியின் முக்கிய அம்சம், மூல அடிப்படையிலான வரி அமைப்பிலிருந்து (source based tax system) நுகர்வு அடிப்படையிலான வரி அமைப்பாக (destination based tax system) மாற்றியிருப்பதுதான். இது ஒரு மிக முக்கியமான மாற்றமாகும்.

”அப்ப இந்த ஜிஎஸ்டியில் குறைகளே இல்லியா?”

இருக்கிறது!

எந்த ஒரு மாற்றமுமே பல சிக்கல்களைச் சந்திக்கிறது. 1991ல் நரசிம்ம ராவ் ஆட்சியில் அப்போதைய நிதி அமைச்சர் மன்மோகன் சிங் கொண்டு வந்த மாற்றங்கள் மிகப்பெரியவை. நாட்டையே புரட்டிப்போட்டு முன்னேற்றப்பதையில் தள்ளியவை. ஆனால் அதிலும் கூட, முக்கியமான பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த துறைகள் முழுவதுமாக மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்தவைதான். வங்கித்துறை, பங்கு மார்க்கெட், மத்திய வரி அமைப்பு, தொழில்துறைக்கொள்கை போன்ற மத்திய அரசுத்துறைகளில் மாற்றங்களைச் சுலபமாகக்கொண்டு வர முடிந்தது. எப்போதெல்லாம் மாநில அரசுகளின் ஒப்புதலும் ஒத்துழைப்பும் தேவையோ அந்த மாற்றங்கள் பல தடங்கல்களைத் தாண்ட வேண்டியிருந்தன. இந்த ஜிஎஸ்டியும் அப்படிப்பட்ட ஒன்றுதான். இந்தியாவில் நாம் எடுத்துக்கொண்ட இதற்கான காலம் மிக அதிகம். வாஜ்பாயி அரசின் கீழ் யஷ்வந்த் சின்ஹாதான் இதற்கு முதன்முதலில் வித்திட்டார். கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக்குப் பிறகுதான் இது சாத்தியமாயிற்று! சில வல்லுநர்கள் இந்த ஜிஎஸ்டியும் குறைகள் கொண்டதே என்று சொல்வதற்கான முக்கிய அடிப்படை, இந்த ஜிஎஸ்டியில் இன்னுமே பல வரி விகித அமைப்புகள் இருப்பதுதான். ஒரு நல்ல வரி அமைப்பு என்பது, இந்தியா போன்ற பன்முகத்தன்மை கொண்ட தேசத்தில், மூன்றே மூன்று வரி விகித அமைப்புக்குள் இருக்க வேண்டும் என்கிறார்கள். சராசரி வரி விகிதம் (Mean Rate), தகுதி விகிதம் (Merit Rate) மற்றும் தகுதியின்மை விகிதம் (Demerit Rate) என்னும் மூன்றும் ஒரு நல்ல வரி அமைப்பில் இருந்தால் நாட்டின் வருவாய் மேலாண்மை சிறப்பாகச் செயல்பட முடியும் என்பது இவர்கள் வாதம். அதன்படிப் பார்த்தால் இந்த ஜிஎஸ்டி இன்னும் பல மைல் தூரம் போகவேண்டும்.

இன்னொரு முக்கிய அம்சம் இந்த வரி அமைப்பில் இன்னும் விருப்பக்குறைபாடு (discretion) இருக்கின்றது. உதாரணத்திற்கு தங்கத்திற்கு 3% ஆனால் நோட்டுப்புத்தகங்களுக்கு 12%. ஒரு நல்ல வரி அமைப்பு என்பது சம பங்கும் எளிமையுமாய் இருத்தல் அவசியம். இந்த விருப்பக்குறைபாடு எளிமை மற்றும் சமநிலைக்கு எதிராக இருப்பதை மறுக்க முடியாது.

மூன்றாவதாக நாட்டின் மிக அதிக வருவாய் ஈட்டும் துறைகளான பெட்ரோலியம், மின்சாரம் மற்றும் மது, இந்த ஜிஎஸ்டியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. இதன் அரசியல் நமக்குப் புரிந்தாலும் ஜிஎஸ்டியைப் பொருத்த வரையில் இது பெரிய குறைதான்!

இவை தவிர அரசு இன்னும் கவனிக்க வேண்டிய நடைமுறை விஷயங்களும் இதில் இருக்கின்றன.

இந்த ஜிஎஸ்டி நிர்வாகம் இப்போது மத்திய மற்றும் மாநில அரசுகளால் கவனிக்கப்படப்போகிறது. ஆக மத்திய மாநில அரசின் உறவுமுறைகள் மிக நுணுக்கமாகக் கையாளப்பட வேண்டிய அவசியம் இருக்கிறது.

‘என் ஏரியாவுக்குள்ள நீ நுழைஞ்சுட்ட’ போன்ற கூக்குரல்கள் அதிகம் எழும் வாய்ப்பு இருக்கிறது. பல மாநிலங்களின் வரி அமைப்புக்கள் இன்னும் பலப்படுத்தப்பட வேண்டும். தமிழ்நாடு, குஜராத், மகாராஷ்டிரா போன்ற தொழில்துறை மாநிலங்களில் வரி அமைப்புக்கள் எப்போதுமே ஸ்திரமானவை. ஆனால் பிஹார் மத்தியப்பிரதேச மாநிலங்களில் அவை அந்த அளவுக்குத் திறமையோ அனுபவமோ வாய்ந்தவை அல்ல. இந்த மாநிலங்கள் உற்பத்தி மாநிலங்கள் அல்ல. ஆனால் நுகர்வோர் நிறைந்த மாநிலங்கள். ஜிஎஸ்டி வரிவிகித அமைப்பு நுகர்வுக்கு மாறியிருப்பதால் பிஹார், மத்தியப் பிரதேசம் போன்ற மாநிலங்கள் தத்தம் வரி அமைப்புக்களைச் சிறப்பாக்க வேண்டும். ஜிஎஸ்டியின் வரி அமைப்பு நிர்வாகமே வருங்காலத்தில் முழுக்க முழுக்க மாநிலங்களின் கடமையாகப் போகக்கூடும். ஜிஎஸ்டி கவுன்சில் மற்றும் கொள்கை முடிவுகள் மட்டும் டெல்லியில் எடுக்கப்பட்டு, மற்ற எல்லா நிர்வாகச் செயல்களும் மாநிலங்களுக்கு மாறி விடக்கூடும். மாநில அளவில் ஐஏஎஸ் ஆஃபீசர்கள் நிர்வாகம் செய்ய, மத்தியில் ரெவென்யூ ஆஃபிசர்கள் (IRS) நிர்வகிக்க, பல முட்டல் மோதல்கள் எழ வாய்ப்பு உண்டு. இதற்கு ஒரு வழி என்னவென்றால் ரெவென்யூ சர்வீஸையும் ஐஏஎஸ்போல இந்திய அளவில் உயர்த்தி, மாநில ஜிஎஸ்டி நிர்வாகமும் இந்த ரெவென்யூ ஆஃபிசர்களாலேயே நிர்வகிக்கப்பட வேண்டும். இது ஒன்றும் நமக்குப்புதிதல்ல. சில வருடங்களுக்கு முன்னர் இந்திய ஃபாரஸ்ட் சர்வீஸும் இப்படித்தான் அகில இந்திய அளவிலான சர்வீசாக மாற்றப்பட்டு இப்போது திருப்திகரமாகச் செயல்படுகின்றது. கொஞ்ச காலமாகவே இந்த அதிகாரத்துவ மாற்றத்திற்கான குரல்களும் டெல்லியின் அரசுச் சுவர்களில் கேட்டுக்கொண்டுதான் இருக்கின்றன. ஒரு வேளை ஜிஎஸ்டிதான் அந்த மாற்றத்திற்கு வழி வகுக்கப்போகின்றதோ என்னவோ?

நரேந்திர மோடியின் அரசு இந்த ஜிஎஸ்டியைக் கொண்டுவந்ததற்கான கிரீடத்தைச் சூட்டிக்கொள்ளலாமா?

ஜிஎஸ்டியைக் கொண்டுவருவதற்கும், மாநிலங்களுக்குச் சேவை வரி விதிக்கும் உரிமையைப் பெற்றுத் தந்ததற்குமான அரசியலமைப்புத் திருத்தம் கொண்டுவந்ததே மோடியின் மிகப்பெரிய சாதனைதான். எனவே அந்தக் கிரீடத்தை நமது பிரதமர் நிச்சயம் சூடிக்கொள்ளலாம்.

மற்றபடி வெற்று வார்த்தைகளால் இந்த ஜிஎஸ்டியைக் குறை கூறுபவர்களைப் பசித்த புலி தின்னட்டும்!

Posted on Leave a comment

பயங்கரவாதத்தை எதிர்க்கத் தயாராகும் கார்ப்பரேட் நிறுவனங்கள் – ஜெயராமன் ரகுநாதன்

மேஜர் சந்தீப் நாராயணனையும் இன்னும் பல உயிர்களையும் இழந்து, இந்தியாவையே
ஒன்றிரண்டு நாட்களுக்கு டென்ஷனில் உட்கார வைத்த
26/11ல் நடந்த பயங்கரம், இந்த நவம்பரில்
ஒன்பதாவது வருட சோக நினைவாகப் போகிறது
. என்னதான் கடுமையான
சோதனைகள் வைத்தாலும் தன் உயிரை மாய்த்துக்கொள்ளத் தயங்காத பைத்தியக்காரத் தீவிரவாதியை
எப்படித் தடுக்க முடியும்
. செப்டம்பர் பதினொன்று சோகத்தைக் கண்ட
அமெரிக்கா பல ஆயிரம் பில்லியன் டாலர்கள் செலவழித்துக் கடும் சோதனைகளை ஏற்படுத்தியிருக்கிறது
. இருந்தும் தீவிரவாதத்தின்
அரக்கக்கைகள் எங்கு எப்போது நீண்டு அப்பாவி உயிர்களைக் கொல்லுமோ என்னும் பயம் அடிநாதமாக
ஓடிக்கொண்டுதான் இருக்கிறது
. சமீபத்தில்தான் மான்செஸ்டரில் குண்டு
வெடித்து
19 பேரைக் கொன்று தன்னையும் அழித்துக்கொண்டான்
ஒரு தீவிரவாதி
.


இந்த இழப்பில் நாம் கற்ற பல பாடங்களில் ஒன்று, முழுக்க முழுக்க
அரசையும் காவல்துறையையும் மட்டுமே நம்பி இனி இந்த உலகத்தில் வாழ்வது போதாது
. ஒவ்வொரு தனி
மனிதரும் சரி
, நிறுவனமும் சரி, ஆரம்பகட்டத்திலாவது
தம்மைத்தாமே காத்துக்கொள்ள
, பல முயற்சிகள் எடுத்தாக வேண்டிய கட்டாயம்
ஏற்பட்டுவிட்டது
. அமெரிக்காவில் பல ஊர்களில் ஒவ்வொரு இடம் சார்ந்த
மக்கள் குழுக்களாகப் பிரிந்து தத்தம் ஏரியாவுக்குள் கண்காணிப்பு ஏற்பாடுகளைச் செய்துகொள்ள
ஆரம்பித்துவிட்டனர்
. ஒரு தாக்குதல் நடந்தால் போலீஸும் கமாண்டோக்களும்
வருவதற்குள் என்னென்ன முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்பது பற்றிய பயிற்சி கொடுக்கப்படுகிறது
.
என்ன ராமசாமி! உம்ம தெருவுல
நேத்து புதுசா ஒரு ஆள் நடமாட்டமாமே
?”
அதொண்ணுமில்லீங்க! என் மச்சான்தான், கானாடுகாத்தான்லேர்ந்து
வந்திருக்கான்
.”
ஓ உன் மச்சான்தானா! சரி சரி. நா வர்ரேன். வயலுக்கு போவணும்.”
பழங்காலக் கிராமங்களின் சூதானம் இப்போது விஞ்ஞானபூர்வமாகச் செயல்படுத்தப்பட
வேண்டிய அவசியம்
. நம் சுற்றுப்புறத்தில் நடக்கும் விஷயங்களைக்
கவனித்து
, செய்திகள் பரிமாறி, அனாவசிய ரகசியங்களுக்கு
இடம் கொடாமல் பாதுகாத்துக்கொள்ள ஆரம்பித்து விட்டார்கள்
.
26/11 நடந்தபோதுதான் நம் பாதுகாப்பு எவ்வளவு பலவீனமாக
இருந்திருக்கிறது என்று புரிந்தது
. பயங்கரவாத எதிர்ப்புத் தயார் நிலை என்பது
நம் ராணுவத்தில் மேலானதாக இருந்தபோதும் பதான்கோட்டில் ராணுவ வளாகத்துக்குள்ளேயே நுழைந்திருக்கிறார்கள்
. அப்படி இருக்க
நகரங்களில்
, அதுவும் அதிக நடமாட்டம் இருக்கும் இடங்களில், பாதுகாப்பு ஓரளவுக்குத்தான்
இருக்க முடியும்
. இன்னொரு 26/11ஐ நம்மால் தாங்க
முடியுமா
? தாஜ் மஹால் ஹோட்டலைப் போன்ற இன்னொரு நிறுவனச் சேதமும் உயிர்
இழப்பும் கடுமையானதாக இருக்கும்
. அதனாலேயே பல முன்னணி நிறுவனங்கள் தங்களுக்கான
பாதுகாப்பை ஓரளவுக்குத் தாமே கவனித்துக்கொள்ள முடிவு செய்து அதைச் செயல்படுத்தியும்
வருகின்றன
. உலகம் முழுவதிலும் புதிது புதிதாகச் சித்தாந்தங்கள் உருவாகி
ஒவ்வொரு சித்தாந்தத்துக்கும் ஒரு பயங்கரவாதம் முன்னணியாகும் அவலம் நிகழ்ந்துகொண்டுதான்
இருக்கிறது
. அந்தப் பயங்கரவாதிகளின் கையில் தொழில்நுட்பம் சிக்கி சேதங்களுக்குத்
துணைபோகும் அபாயமும் அதிகரிக்க
, இந்தப் பயங்கரத்தைக் கட்டுப்படுத்த வேண்டியவர்கள், இன்னும் இன்னுமே
அதிக கவனத்துடனும்
, திட்டமிடுதலுடனும் அதீதத் தொழில்நுட்பங்களுடன்
பயங்கரவாதத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
. இன்றைய இந்தியாவில்
கார்ப்பரேட் நிறுவனங்கள் சுயப்பாதுகாப்பே முதல் வரிசைப் பாதுகாப்பு என்பதை உணர்ந்து
அதைச் செயல்படுத்தவும் தொடங்கிவிட்டன
.
மாபெரும் இணைய வர்த்தக நிறுவனமான ஃப்ளிப்கார்ட்டின் பாதுகாப்புத்துறை
இயக்குநர் தனது பணியாளர்களில் பலரைப் பயங்கரவாத எதிர்ப்புச் சிறப்புச்சான்றிதழ் பயிற்சிக்கு
(Certified
Anti Terror Specialists Training Programme – CATS)
அனுப்பித் தயார்ப்படுத்தியிருக்கிறார். இந்தத் தயார்ப்படுத்துதல்
மிக முக்கியமும் அவசியமானதும் என்கின்றார்கள் விற்பன்னர்கள்
. இந்த பயிற்சிக்குப்
பிறகு தீவிரவாதச் செயல்களை முன்னெச்செரிக்கையாகத் தடுக்கும் விதமும் அது பற்றிய முன்னேற்பாடான
சிந்தனைகளும் அதிகரித்திருக்கின்றன என்கிறார் இன்னொரு பாதுகாப்பு எக்ஸ்பர்ட் மேஜர்
ராஹுல் சூதன்
. ஃப்ளிப்கார்ட் தவிர, ரிசர்வ் பேங்க், ரிலயன்ஸ், தாமஸ் குக், பாரத் பெட்ரோலியம்
போன்ற மேலும் பல பெரும் நிறுவனங்களும் இந்தப் பயிற்சியைத் தம் பணியாளர்களுக்கு வழங்க
ஆரம்பித்துவிட்டன
.
காப்டன் முகேஷ் செயினி என்னும் காட்ரெஜின் பாதுகாப்புத் தலைவர்
தாமே இந்தச் சான்றிதழ்ப் பயிற்சியை எடுத்துக்கொண்டிருக்கிறார்
.
ஒரு தீவிரவாதச் செயலை நம்மால் முழுவதும் தடுத்துவிட முடியாது. ஆனால் இந்த பயிற்சிக்குப்
பிறகு அவனைக் கூடுமானவரைச் செயலிழக்கச் செய்ய முடியும்
. எங்களுடைய உயிர்களையும்
சொத்துக்களையும் பாதுகாக்க முடியும்
. இதில் மனவியலே
உடலியலை விட முக்கியம்
என்கிறார் செயினி.
அமெரிக்காவின் 9/11, இந்தியாவின் 26/11க்குப்பிறகு
ஒவ்வொரு நிறுவனமும் தீவிரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதன் அடிப்படைகளைத் தெரிந்துகொண்டேயாக
வேண்டும்
. அமெரிக்காவின் இரட்டைக்கோபுரத் தாக்குதலின்போது அதன் தீவிரத்திலும்
நம்பமுடியாத அதிர்ச்சியிலும்
, அரசாலும் பாதுகாப்பு விற்பன்னர்களாலும்
உடனடியாகச் செயல் படமுடியவில்லை
. இப்படியெல்லாம் கூடத் தாக்குதல் வருமா
என்னும் அதிர்ச்சியே மேலோங்கி ஸ்தம்பிக்க வைத்தது
. இந்தியாவிலும்
நவம்பர்
26 தாக்குதலின்போது தீவிரவாதிகளின் துணிச்சல் அதிர்ச்சி
அடையவைத்துவிட்டது
. இனி இது போன்ற தாக்குதல்களை முன்பே கண்டுபிடிப்பதும்
அந்தத் தாக்குதல்களின் தீவிரத்தை ஒடுக்க முனைவதும் மிக முக்கியம்
.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தீவிரவாதம் என்பதன் இன்னொரு பரிமாணத்தையும்
எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது
. அந்தப்பரிமாணம் Cyber
attack
என்னும் இணைய ஊடுருவல் மற்றும் தகவல் திருட்டு அல்லது அழிப்பு. ஆகவே பயிற்சி
என்பது இம்மாதிரியான இணையத்தாக்குதலையும் சமாளித்து வெற்றிகொள்ளத்தக்கதாக இருக்க வேண்டும்
.
ஒரு நிறுவனம் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகுமானால் முதலில்
அதை எதிர்கொள்வது அந்த நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரிகள்தான்
. எனவே அவர்கள்
புதுமையாகச் சிந்தித்து
, தீவிரவாதிகளைவிட ஒருபடி மேலாகச் செயல்பட்டேயாக
வேண்டும்
. இல்லையென்றால் உயிர் இழப்பும் அழிவும் தவிர்க்க முடியாததாகிவிடும்.
தொழில்நுட்பம் வளர வளர, அது நல்ல வளர்ச்சியை
மட்டும் கொண்டு வருவதில்லை
. வர்த்தகத்தில் Drone என்னும் தானியங்கிகள்
எவ்வளவோ உதவியாக இருந்தாலும் அவை தீவிரவாதிகளுக்கும் வரமாகவே இருக்கின்றன
. நிறுவனங்கள்
இந்த மாதிரியான தாக்குதலுக்கு எதிராக முன்னேற்பாடாக இருக்க வேண்டும்
.
நான் மேலே சொன்ன CATS பயிற்சி மிகப்
பயனுள்ளது எனப் பல நிறுவனங்களின் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்
. இந்த CATS பயிற்சியில்
சில முக்கியமான விஷயங்கள் சொல்லித் தரப்படுகின்றன
.
     ஒரு அவசர நிகழ்வில் எப்படி உடனடியாக செயல்படுவது
     உயிர்களையும் சொத்துக்களையும் நெருங்காமல்
தீவிரவாதிகளை எப்படி கால தாமதம் செய்வது
     நேரம் கடத்தி பாதுகப்பை இறுக்குவது
     உடனடியாக உதவி கேட்பது
     முதலுதவி மற்றும்
     மனிதர்களைப் பாதுகாப்பாக எப்படி அந்த
இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது
சிங்கப்பூரின் Chartered
International Institute of Security and Crisis Management
என்னும் சர்வதேச
நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் இந்தப் பயிற்சியை முடித்த சிலர்
, தங்களின் தன்னம்பிக்கையும்
தீவிரவாதத் தாக்குதலை எதிர்கொள்ளத் தேவையான துணிவும் அதிகரித்திருப்பதாகச் சொல்லியிருக்கின்றனர்
. புதிதாக முளைத்துள்ள
தாக்குதல் முறைகள்
, தொழில்நுட்பங்கள் மற்றும் Best
Practices
என்னும்சிறந்த செயல்பாடுகள்போன்றவை கற்பிக்கப்பட்டு, முந்தையத் தாக்குதல்களையும்
அதனை எதிர்கொண்ட செயல்பாடுகளின் நல்ல மற்றும் தோல்வியடைந்த செயல்பாடுகளையும் அலசி ஆராய்ந்து
, எதிர்கால முன்னேற்பாட்டைப்
பலப்படுத்தும் வழி முறைகளும் விவாதிக்கப்படுகின்றன
. ஒரு தாக்குதல்
தொடங்கிவிட்டால் அதை உடனடியாக எப்படி எதிர்கொள்வது
, சந்தேகத்துக்குரிய
பேர்வழியை எப்படித் துப்புத்துலக்குவது
, ஒருவருடைய பின்புலத்தை
எப்படி அலசுவது பற்றியும் இணையத் தாக்குதலின் பல்வேறு பரிமாணங்கள் பற்றியும் பாடங்கள்
எடுக்கப்படுகின்றன
. ஒருவரைப் பற்றிய Profiling என்னும் விவரமிடுதல்
இயலும் விலாவரியாகச் சொல்லித்தரப்படுகிறது
.
ஆண்களின் உடைமாற்றுமிடம் தீவிரவாதிகள்
சுலபமாக நழுவி உள்ளே வரும் இடம் என்பதை ஆராய்ந்து ஃப்ளிப்கார்ட் அலுவலகத்தில் அந்த
இடத்தை செக்யூரிட்டிக்கு அருகில் மாற்றிவிட்டது ஒரு முக்கியமான தடுப்புச்செயல் என்கிறார்
மேஜர் ராஹுல் சூதன்
.
அதெல்லாம் சரி, இந்த ட்ரெயினிங்க்குக்கு
என்ன செலவாகும்
?”
அதுதான் சிக்கல்! ஒருவருக்கு ட்ரெயினிங்
தர
, எக்ஸ்பர்ட்டுகள் கிட்டத்தட்ட 80,000 ரூ முதல் ஒரு
லட்சம் வரை கேட்கிறார்கள்
!”
இதுதான் கொஞ்சம் கவலை தரும் விஷயமாக இருக்கிறது. இந்தச் செலவுக்குப்
பயந்து பல நிறுவனங்கள் தயங்குகின்றன
. ஒரு தாக்குதல்
நடக்கும்போதுதான் அந்தத் தயக்கத்தின் அருமை புரியும்
. ஆனாலும் செலவு
அதிகம்தான் என்பதில் சந்தேகமில்லை
. ஆனால் இந்தப் பயிற்சியைத் தரும் நிறுவனமான
நேட்ரிகா
(Netrika) இன்னொரு கோணத்தை முன்வைக்கிறார்கள்.
இந்தப் பயிற்சியில்
இதுவரை எங்களுக்கு லாபம் ஏதுமில்லை
. ஏனென்றால் பயிற்சி தரும் விற்பன்னர்களை
நாங்கள் அமெரிக்கா அல்லது பிரிட்டனிலிருந்துதான் வரவழைக்கிறோம்
. அவர்கள் ஒரு
நாளைக்கு
3,000 டாலர் (கிட்டத்தட்ட
இரண்டு லட்ச ரூபாய்
) வரை கேட்கிறார்கள். இதனால் சில நிறுவனங்கள்
தங்கள் கம்பெனியிலிருந்து நன்கைந்து பேரை இந்தப் பயிற்சிக்கு அனுப்புகிறார்கள்
. இந்த நாலைந்துபேர்
பயிற்சியை முடித்து தத்தம் கம்பெனியில் மற்ற பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதே பயிற்சி
(Train the
Trainer)
தந்துவிடுகிறார்கள்.”

நம்மைச் சுற்றி இன்று பரவி வரும் தீவிரவாதக்
கலாசாரம் எத்தனையோ பரிமாணங்களைப் பெற்றுவிட்டது
. அதன் ஆக்டோபஸ்
கைகள் பலவிதங்களில் ஒரு நாட்டையும் மக்களையும் நிறுவனங்களையும் அழிக்க முற்படுகிறது
. உள்நாட்டு வெளி
நாட்டுத் தீவிரவாதம்
, தீவிரவாதத்தின் தோன்றலும் வளர்ச்சியும், வெடிகுண்டைக்கண்டறிதல், மேம்படுத்தாப்பட்ட
வெடிச்சாதனங்கள்
, முக்கியமாக வாகங்களில் பயன்படும் வெடிச்சாதனங்கள், ஒரு தாக்குதலின்
சுழற்சி
, தற்கொலைப்படையின் சித்தாந்தங்கள், தீவிரவாதிகளின்
நடத்தை மற்றும் மன ஓட்டம் என்று பல்வேறு விதப் பாடத்திட்டங்களில் கொடுக்கப்படும் இந்தப்
பயிற்சிகளினால் நாமும் நம் உலகமும் இன்னும் இன்னும் பாதுகப்பான இடமாக மாற வேண்டும்
என்று நாம் விரும்பினாலும்
, தீவிரவாதிகளின் குறுக்குப்புத்தியானது
நம்மைவிட இரண்டடி முன்னேறி விடுகிறது
. தொடர்ந்து அரசும், நிறுவனங்களும்
சாதாரண மக்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் தீவிரவாதிகளைத் தன்னம்பிக்கையுடன்
எதிர்கொண்டு அழித்து உயிர்களையும் நாட்டையும் காப்பாற்ற முடியும்
.
Posted on Leave a comment

உரையாடும் ரோபோ: சாட்பாட் (Chatbot) – ஜெயராமன் ரகுநாதன்

“உங்களின் பிறந்த நாள் என்னவென்று சொல்ல முடியுமா?”

“……………….”

“அட! அடுத்த வாரமா! உங்களுக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்! சரி, இப்போது நான் என்ன செய்யவேண்டும்?”

“எனக்கு ஒரு ரீபோக் ஷூ வாங்க வேண்டும்?”

“ஆஹா! மிக நல்ல முடிவு! உங்களின் கால் சைஸ் என்ன என்று சொல்லமுடியுமா?”

“நம்பர் எட்டு! எனக்கு வெண்மையும் கிரேவும் கலந்த ஸ்போர்ட்ஸ் ஷூதான் வேண்டும்!”

“அப்படியே! இப்போது உங்கள் ஸ்க்ரீனில் மூன்று மாடல்கள் காண்பிக்கிறேன்! எது வேண்டுமோ அதை செலக்ட் செய்து கிரெடிட் கார்ட் விவரங்களைப் பூர்த்தி செய்யுங்கள்! நான் அதுவரை காத்திருக்கிறேன்!”

“செய்துவிட்டேன்! டெலிவரி எப்போது?”

“இன்றிலிருந்து நான்காம் நாள் வீட்டுக்கு டெலிவரி ஆகிவிடும். உங்கள் பிறந்த நாள் அன்று நீங்கள் எங்கள் ஷூக்களை அணியலாம்!”

“ரொம்ப நன்றி மேடம்! உங்கள் பெயர் என்ன?”

“எனக்கா? பெயரே கிடையாதே! வரட்டுமா? குட் டே!”

திகைக்க வேண்டாம்.

நம் ரீபாக் ஷூ ஆசாமியுடன் பேசியது ஒரு மனிதப்பிறவியே இல்லை! அது ஒரு ரோபோ!

மெஸேஜிங் என்னும் எழுத்து மூலமாக உங்களுடன் பேசி கஸ்டமர் சர்வீஸ் செய்யும் ரோபோ. தகவல் தொழில் விற்பன்னர்கள் இதை சாட்பாட் (Chatbot) என்பார்கள். நாம் தமிழில் இதை ‘உரையாடும் ரோபோ’ என்று சொல்லலாமா?

முதன்முதலில் Joseph Weizenbaum என்பவர் ELIZA என்று ஒரு புரோகிராம் வெளியிட்டார். அது ஒரு உரையாடும் கம்ப்யூட்டர் புரோகிராம். அந்தப் பக்கம் உரையாடுபவர்களால் எளிதில் அறியமுடியாமல் அதை ஒரு மனிதராகவே நினைத்துக்கொண்டிருக்க நம் வெய்சென்பாம் நக்கலாகச் சிரித்துக்கொண்டிருந்தார். ஆனால் ஆசாமி நல்லவர். விரைவில் அவரே இந்த எலிசாவின் சுயரூபத்தை வெளியிட்டு அது இப்படித்தான் வேலை செய்கிறது என்று சொன்னபோது ஏமாந்த பல விற்பன்னர்கள் அசட்டுச்சிரிப்புடன் நகர்ந்துவிட்டதாகக் கேள்வி.

இந்த எலிசா அப்படி ஒன்றும் புத்திசாலித்தனமான புரோகிராம் இல்லைதான். நாம் கம்ப்யூட்டரில் இடும் வார்த்தை அல்லது வாக்கியங்களில் உள்ள சில cue வார்த்தைகளைக்கொண்டு நம்பகத்தன்மையான ஒரு சின்ன உரையாடலை நடத்திய அளவில்தான் எலிசாவின் புத்திசாலித்தனம் அமைக்கப்பட்டிருந்தது. இந்த முறை இப்போதும் உரையாடும் ரோபோக்களில் பயன்பட்டு வருகிறது.

சாதாரணமாகவே நாம் கம்ப்யூட்டரில் சாட் என்னும் உரையாடலில் எதிர் தரப்பில் இருப்பது ஆளில்லாத கம்ப்யூட்டராக இருந்தாலும் எளிதான கேள்வி பதில்களை ஒரு மனிதரிடம் பேசுவதாகவே உணர்வோம். இது வகைப்பொருத்துதல் (Pattern Matching) என்னும், 80களிலேயே பிரபலமான எளிதான தொழில்நுட்பமாகும். இப்போதெல்லாம் interactive என்னும் ஊடாடும் உரையாடலில் மிக அதிகமாக இந்த சாட்பாட்டுக்கள் பயன்படுகின்றன. நம் தேவை சிக்கலாகி அதிக யோசிப்பும் உணர்வும் தேவைப்படும்போது இந்த சாட்பாட்டுகள் உரையாடலை ஒரு மனிதரிடம் ஒப்புவித்துவிட்டு அடுத்த ருட்டீன் கஸ்டமரைக் கவனிக்கப்போய்விடும்.

பின்னாளில் Natural Language Processing Capabilities என்னும் இயற்கை மொழிச்செயலாக்க நுட்பத்தைப் பயன்படுத்தி சாட்பாட்டுகள் உருவாக்கப்பட்டன. அவைகூட தமக்கே உரித்தான மொழியையே பயன்படுத்தியதால் அப்படி ஒன்றும் சிலாக்கியமான தொழில்நுட்பம் இல்லை என்று இந்த இயலின் உஸ்தாதுகளால் சொல்லப்பட்டது. ALICE என்னும் சாட்பாட்டானது இயற்கை மொழிச்செயலாக்க முறையில் எழுதப்பட்டதென்றாலும், இதுவுமே நாம் மேலே சொன்ன வகைப்பொருத்துதல் இயலிலேயே அடங்கிவிட்டது.

இப்போதெல்லாம் முகநூல், டுவிட்டர், ஸ்னாப்சாட், கிக் போன்ற சமூக வலைத்தளங்கள் தொழில்நுட்பத்தில் முன்னேறிய சாட்பாட்டுகளை உபயோகிக்க ஆரம்பித்துவிட்டனர். நீங்கள் கம்ப்யூட்டர் அல்லது மொபைல் ஃபோன் மூலம் கீ போர்டில் தட்டித்தட்டி இந்த உரையாடும் ரோபோக்களுடன் அளவளாவலாம்!

நமக்கு ஒரு கம்பெனி அல்லது பிராண்ட் பற்றிய விவரங்கள் தேவையெனில் அந்த கம்பெனியின் இணையப் பக்கங்களுக்குப் போனால் இதுபோன்ற உரையாடும் ரோபோக்கள் உங்களிடம் கேள்வி கேட்டு உங்களுக்கு வேண்டிய தகவல்களைத் தந்துவிடும். மனிதத்தொடர்பே தேவையில்லாத இந்த உரையாடும் ரோபோக்கள் செயற்கை புத்திசாலித்தன (Artificial Intelligence, Neuro linguistic Programming) புரோகிராம்கள் மூலம் உருவாக்கப்பட்டவை. இவற்றிற்கு உருவம் கிடையாது! கம்ப்யூட்டர் புரோகிராம்களாக உலவி அவை மனிதர்கள் செய்ய வேண்டிய, வாடிக்கையாளர் தொடர்பான பல வேலைகளை, சும்மா இல்லை, மனிதரை விடப் பல மடங்கு வேகத்தில் செய்துவிடக்கூடியவை. இந்த உரையாடும் ரோபோக்கள் தன்னைத்தானே புத்திசாலியாக்கிக் கொள்ளக்கூடிய வல்லமை படைத்த self learning புரோகிராம்கள்.

இந்த உரையாடலைப் பாருங்கள்:

“எனக்கு ஆயுள் காப்பீடு பற்றித் தகவல் வேண்டும்?”

“சொல்லுங்கள்.”

“நான் அடுத்த வருடம் ரிட்டையர் ஆகப்போகிறேன். எனக்குத் தோதான ஆயுள் காப்பீடு எது என்று சொல்ல முடியுமா?”

உரையாடும் ரோபொ சரியான தகவலை சரேலென்று தன் டேட்டாபேஸிலிருந்து உருவி கேள்வி கேட்பவரிடம் கொடுத்துவிடும். ஆனால் நம் கேள்வி ஆசாமி ஒரு படி மேலே போனால்?

“அடச்சீ! இது எனக்குத் தெரியாதா? நான் ரிட்டையர் ஆன பிறகு பென்ஷனும் சேர்ந்து கிடைக்கும்படியான ஆயுள் காப்பீடு இருக்கா, அதச்சொல்லு?”

“பென்ஷனோடா? உரையாடும் ரோபோவின் டேட்டாபேஸில் இது இல்லை என்றால்?

ரோபோ ஞே என்று விழிக்காது. உடனே அருகில் உட்கார்ந்து அடுத்த சீட் பெண்ணிடம் கடலை போட்டுக்கொண்டிருக்கும் மனித ஆஃபீசரிடம் தள்ளிவிட்டுவிடும்.

“த பாரு! ஒரு கிராக்கி என்னென்னமோ கேக்கறான்! என்னாண்ட தகவல் இல்லை! நீயே பேசிக்க!”

உடனே ஆஃபீசர் உரையாடலைத் தொடருவார். நம் ரோபோ இருக்கிறதே, அது சும்மா பராக்குப் பார்த்துக்கொண்டிருக்காது. ஆஃபீசரின் உரையாடலைக் கவனித்து, தன் டேட்டாபேஸில் சேர்த்துக்கொண்டு அடுத்தமுறை இதே கேள்வி வந்தால் சொல்லுவதற்குத் தயாராகத் தன்னை மேம்படுத்திக்கொண்டு விடும்!

ஆனால் இந்நிமிடம் வரை நாம் பேசினது பூச்சி பூச்சியாய் புரோகிராம் எழுதப்பட்ட ஒரு உரையாடும் ரோபோவிடம்தான், நடுவில் மனித வ்யக்தி வந்து சேர்ந்துகொண்டிருக்கிறான் என்பதையெல்லாம் நம்மால் தெரிந்து கொள்ளவே முடியாது.

பிட்சா ஹட், டிஸ்னி போன்ற கம்பெனிகள் தங்களின் தயாரிப்புகள் பற்றிய விவரங்களை நுகர்வோரிடம் கொண்டுசேர்க்க மிக நல்ல வழியாக இந்த மாதிரியான சாட்பாட்டுகளைப் பயன்படுத்தி வெற்றி கண்டு வருகின்றன. இன்றைய பரபரப்பான இயலான எங்கும் இணையம் என்னும் Internet of Things (IOT) இந்த சாட்பாட்டுக்களை உபயோகிக்கிறது. மிகப்பெரும் கம்பெனிகளான ரெனால்ட், சிட்ரன், ராயல் பாங்க் ஆஃப் ஸ்காட்லாந்து போன்றவை கால் சென்ட்டரை அறவே எடுத்துவிட்டு இந்த மாதிரியான சாட்பாட்டுகளைப் பயன்படுத்தி மிக நல்ல பயன்களைக் கண்டு வருகின்றன.

கஸ்டமர் இண்டர்ஃபேஸ் எனப்படும் நுகர்வோருடனான உரையாடல்களில் இந்த உரையாடும் ரோபோக்கள் ஏராளமாகப் புழங்க ஆரமித்துவிட்டன. இந்தியாவில் முக்கியமாக நிதி சம்பந்தப்பட்ட வெப்சைட்டுகள், Bankbazaar,com, Policybazar.com, creditbazar,com, Easypolicy.com போன்றவை இந்த உரையாடும் ரோபோக்களை அதிக அளவில் பயன்படுத்தி கஸ்டமர் சேவையை மிக நல்ல முறையில் வளப்படுத்திக்கொண்டு வருகின்றனர்.

ஒரு வெப் சைட்டுடன் இணைந்த கால் சென்ட்டரை எடுத்துக்கொண்டால், முதலில் நம் ரோபோதான் பேச்சுக்கு வரும். சும்மா பொழுதுபோகாமல் வெப் சைட்டை நோண்டும் ஆசாமிகளை இந்த உரையாடும் ரோபோவே அடையாளம் கண்டு ஒரு சின்ன உரையாடலுக்குப்பின் நைசாக கழட்டிவிட்டுவிடும். இதனால் சம்பளம் கொடுத்து வேலைக்கு வைக்கப்பட்ட மனித ஆஃபீசர்கள் முக்கியமான மற்றும் சீரியஸான கஸ்டமர்களோடு மட்டுமே உரையாடி தங்களின் வேலைத்திறனைச் செயல்படுத்த முடிகிறது. நேர மிச்சம், செலவு மிச்சம்.

ஒரு வெப் சைட்டில் நுழைபவரை அந்த கம்பெனி கஸ்டமராக்கும் முயற்சியில் இந்த உரையாடும் ரோபோக்களின் பங்கு மிக முக்கியமானது. இந்த உரையாடும் ரோபோக்களின் மூலம் Policybazar.com தங்களின் எதிர்கால கஸ்டமர் அடையாளங்களைக் கண்டுகொள்ளும் குறியீடுகளை மூன்று மடங்கு அதிகரித்துக்கொள்ள முடிந்ததாம். அதேபோல புதிய கஸ்டமர்களின் சேர்க்கை 35% அதிகரித்துள்ளதாம்.

Easypolicy.com நிறுவனராகிய நீரஜ் அகர்வாலா, “இந்த உரையாடும் ரோபோக்களால் எங்கள் வெப்சைட்டுக்கு வரும் விஸிட்டர்களுக்கு மிகத் துல்லியமாக உதவ முடிகிறது. அதோடு, கஸ்டமரோடு ஒரு மனித ஆஃபீசருக்கு ஏற்படும் ஈகோ விரிசல்கள் நிகழ்வதே இல்லை. இது எங்களின் இமேஜைப் பெரிதும் உயர்த்துகிறது” என்கிறார்.

மேலும் Bankbazaar,comஐச் சேர்ந்த சசிதர் வாவிலா, “என் கால் செண்டரில் இருக்கும் ஒரு பையனோ பெண்ணொ ஒரு விஷயத்தைத் தேடி எடுத்து கஸ்டமருக்குக் கொடுக்க இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் ஆகிறது. ஆனால் உரையாடும் ரோபோகள் இந்த விவரங்களை ஒன்றிரண்டு வினாடிகளிலேயே கொடுத்து விடுகின்றன” என்று சிலிர்க்கிறார்.

வானிலை, மளிகை, தனிமனித நிதிநிலைத் திட்டம், உலகச் செய்திகள், காப்பீடு, வங்கிச்சேவை என ஒவ்வொரு விஷயத்துக்கும் ஸ்பெஷலாக உரையாடும் ரோபோக்கள் உபயோகத்துக்கு வந்துவிட்டன.

இப்போதெல்லாம் மக்கள் மெஸேஜ் எனப்படும் உரையாடல்கள் மிக அதிகமாக உபயோகிக்கிறார்கள். இந்த உரையாடும் ரோபோக்களும் இதே போன்ற மெஸேஜ் என்பதால் இதன் வீச்சும் மிகப்பரவலாக அதிக வாய்ப்புண்டு. எல்லாப் பெரிய கம்பெனிகளும் இந்த உரையாடும் ரோபோக்களை வாங்கிப்போடுவதில் முதலீடு செய்கிறார்கள். தொழில்நுட்பத்தின் அடுத்த பெரிய மாற்றம் இந்த உரையாடும் ரோபோ என்பது நிபுணர்களின் கருத்து.

“அப்ப இந்த உரையாடும் ரோபோக்கள் பெரிய வரமா?” இல்லை!

வாடிக்கையாளர்களின் கேள்விகளைக் கொண்டு மட்டும் ஒரு விற்பனையை நடத்திவிட முடியாது. சில சமயம் வாடிக்கையாளர்களின் பேச்சைக் கவனித்து சந்தர்ப்பத்திற்குத் தகுந்தாற்போல் விற்பனை விவரங்களைப் பேச வேண்டும். ஏனென்றால் எல்லா வாடிக்கையாளர்களும் ஒரே மாதிரி இல்லை. இந்த சந்தர்ப்பம்-சார்ந்த, dynamic and contextual என்று சொல்லக்கூடிய விஷயங்களை, முன்பே புரோகிராம் செய்யப்பட்ட இந்த உரையாடும் ரோபோக்களால் சமாளிக்க இயலாது.

இரண்டு விதமான உரையாடும் ரோபோக்கள் இருக்கின்றன. ஒன்று மிகக்குறுகிய, ஒரு விஷயம் சம்பந்தப்பட்ட ரோபோ. இவை அந்த சப்ஜெக்டில் மட்டும், ஏற்கெனவே தயாரித்து வைக்கப்பட்ட கேள்விகளுக்கு, ஏற்கெனவே கொடுக்கப்பட்டிருக்கும் பதில்களை, கிளிப்பிள்ளை போலச் சொல்லிக்கொண்டிருக்கும். இன்னொரு வகை, தம்மைத்தாமே கற்பித்துக்கொள்ளும் முன்னேறிய ரோபோக்கள். இவை முன்பே சொன்னபடி செயற்கை புத்திசாலித்தனம் கொண்டு புரோகிராம் எழுதப்பட்ட, ஆனால் செயல்படுத்த கொஞ்சம் சிக்கலான ரோபோக்கள்.

இங்கிலாந்தில் உள்ள அமேலியா என்னும் உரையாடும் ரோபோ ரியல் எஸ்டேட் விஷயங்களைப் பற்றி உரையாடி வாடிக்கையாளர்களுக்கு வேண்டிய தகவல்களைத் தருகிறது.

இந்த உரையாடும் ரோபோக்களைச் செயல்படுத்துவது என்பது டெக்னிகல் சமாசாரம் மட்டும் இல்லை.

வாடிக்கையாளர் ஒருவர் ஒரு நிறுவனத்துடன் உரையாடும்போது என்ன அனுபவத்தைப் பெறுகிறார் என்பதில்தான் வெற்றி இருக்கிறது. அப்படிப்பட்ட வாடிக்கையாளர் அனுபவத்தை மிகச்சிறப்பாக்கத்தான் எல்லா நிறுவனங்களும் நாளும் முயலுகின்றன. சில வாடிக்கையாளர்கள் ரோபோவுடன் உரையாடுவதை விரும்புவது இல்லை. கேட்கும் குரலை வைத்து அனுமானம் செய்யமுடியாதாகையால் அவர்கள் சாமர்த்தியமாக சில கேள்விகள் கேட்டு அது ரோபோவா இல்லை மனிதரா என்று அறிந்துகொள்கிறார்கள்.

உரையாடிக்கொண்டே இருக்கும்போது குறுக்கிடுகிறார்கள்.

“ஆமா நேத்து நீ என்ன கனவு கண்டே? உன் கனவில் சமந்தா வருவாளா?”

ரோபோ முழிக்கிறது!

அவ்வளவுதான், நம் வாடிக்கையாளர் பட்டென்று அணைத்துவிட்டுப் போய்விடுகிறார்.

ஆக இந்த ரோபோக்களை புரோகிராம் செய்வதுதான் மிகப்பெரிய சவால். நாள்தோறும் ஏற்படும் மாறுதல்களினால் தினமும் கம்பெனியுடன் உரையாடலுக்கு வருபவர்களின் அனுபவத்தை எப்படி மேம்படச் செய்யவேண்டும் என்பதில்தான் நிறுவனத்தின் முழு கவனமும் இருக்கவேண்டும். அதற்கேற்றாற்போல இந்த ரோபோக்களும் வடிவமைக்கப்பட்டுச் செயல்படுத்தப்படவேண்டும்.

இன்றைய தேதியில் உரையாடும் ரோபோக்கள் மெஸேஜ் மூலமாக எழுத்து வடிவில் நம்முடன் அளவளாவுகின்றன. எதிர்காலத்தில் வாய் வழியே உரையாடும் ரோபோக்கள் நம்முடன் பேச ஆரம்பித்துவிடும். அதற்கான ஆராய்ச்சிகள் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கின்றன.

ஜெர்மனியில் என் மகன் கூகிள் உதவி (Google Assistant) என்று ஒன்றை வாங்கி வைத்திருப்பதைப் பார்த்தேன். அதற்கு Alexa என்று பெயர்.

“அலெக்ஸா! இன்று என்ன வானிலை? என்று கேட்டால், இனிய குரலில் “மேக மூட்டம். 12 டிகிரி” என்கிறது.

ஒரு பாட்டுப் பாடேன், இன்னிக்கு டீவில என்ன சினிமா, வடக்கு ம்யூனிக்கில் என்ன இந்திய ரெஸ்டாரண்ட் இருக்கிறது, அங்கே இன்னி சாயங்காலம் ஒரு டேபிள் ரிசர்வ் பண்ணு போன்ற எல்லாவித ஏவல்களையும் வாய் வார்த்தையாகவும் ஈமெயில் மூலமாகவும் செய்துவிட்டு நீலக்கலரில் விளக்குப்போட்டுக் காண்பித்து மகிழ்கிறது!

இப்பொதெல்லாம் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களிலும் சாட்பாட்டுகள் வந்துவிட்டன. ஹல்லோ பார்பீ என்னும் மிகப்பிரபலமான பார்பி பொம்மை இப்போது சாட்பாட்டுடன் வருகிறது. குழந்தையுடன் பேசி கதைகள் சொல்லி விளையாடி மகிழ்விக்கிறது. ஐ பி எமின் வாட்ஸன் என்னும் புத்திசாலி சாட்பாட் படிப்பறிவிக்கும் விளையாட்டுப் பொருள்களில் பொருத்தப்பட்டு குழந்தைக்கு விளையாட்டோடு கல்வி போதிக்கிறது.

அதேசமயம் போலிகளும் உலாவுகின்றன. விஷமிகள் கிறுக்குத்தனமான சாட்பாட்டுகளை உருவாகி அவற்றை யாஹூ, கூகிள், போன்ற பெரும் நிறுவனங்களின் மெசெஞ்சர்களில் ஊடுருவிக் குழப்பத்தை உண்டு பண்ணிவிட்ட கதைகளும் உண்டு.

இப்போது இந்த சாட்பாட் துறையைப்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்.

எதிர்கால தொழில்நுட்பங்களைக் கூர்ந்து கவனித்து அடுத்த பத்து வருடங்கள் எப்படி இருக்கப்போகின்றன என்று கணிக்கும் visionary என்னும் தொலைநோக்காளர்கள், இந்த சாட்பாட் துறை எங்கேயோ போகப்போவதாகப் பேசுகிறார்கள். அதற்கான முஸ்தீபுகளை நாம் இப்போதே பார்க்க முடிகிறது. சாட்பாட் தயாரிக்கும் கம்பெனிகளில் முதலீடு செய்வதற்கான ஆர்வம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. சமீபத்தில் வெளிவந்த ஒரு தகவல்படி கிட்டத்தட்ட 180 சாட்பாட் நிறுவனங்கள் 24 பில்லியன் டாலர் (1,56,000 கோடி ரூபாய்) முதலீட்டைப் பெற்றிருக்கின்றனவாம். இதில் முகநூல் மட்டுமே 18 பில்லியன் டாலரைப் பெற்றுவிட்டிருக்கிறது! மற்ற கம்பெனிகள் வருமாறு1:

Slack $540 million
Twilio $484 million
Stripe $440 million
MZ   $390 million
Foursquare $207 million
Interactions $135 million
Kik   $121 million
Skype   $77 million).

இந்த எதிர்கால வளர்ச்சியைப் புரிந்துகொள்ள இதோ இந்த கதையைக் கேளுங்கள்.

மேலே சொன்ன MZ என்னும் நிறுவனம் Game of War என்னும் ஒரு மொபைல் விளையாட்டை அறிமுகப்படுத்த, அது விற்பனையில் தறிகெட்டு ஓடிக்கொண்டிருக்கிறதாம். அதோடு மட்டுமில்லாது இந்த நிறுவனத்தின் இன்னொரு பாட் நுட்பம் நியூசிலாந்தின் போக்குவரத்தை முழுவதுமாக நிர்வாகம் செய்யக்கூடியதாம்!

Cifuentes என்னும் ஆராய்ச்சியாளர் சொல்வது, “எவ்வளவுதான் மிக அதிகமான சாட்பாட்டுகள் தயாரிப்புக்கள் வந்தாலும், போட்ட முதலை எடுக்கக்கூடிய அளவு திறமையுள்ள பாட் தயாரிப்பவர்கள்தான் நிலைப்பார்கள். மற்றவர்கள் வழியில் செத்து மடிவது நிச்சயம். அதேசமயம் மிக அதிகமான விவாதங்களும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு, ஒரு பக்கம் செயற்கை புத்திசாலித்தனத்தை கம்ப்யூட்டரில் அதிகரிக்கச் செய்யும் முயற்சிகள் முன்னேற முன்னேற, இந்த சாட் பாட் இயலும் முன்னேறிக்கொண்டேதான் இருக்கும்!”

ஆக, தகவல் தொழில்நுட்பம் நாலு கால் பாய்ச்சலில் ஓடிக்கொண்டிருக்கிறது. நிறுவனங்கள் இந்தத் தொழில்நுட்பத்தை எப்படியெல்லாம் தம் விற்பனைக்கும் பிராண்ட் மேம்படுத்தலுக்கும் உபயோகிக்க முடியும் என்று சிண்டைப் பிய்த்துக்கொள்கிறார்கள். இப்போது வேடிக்கை மட்டும் பார்க்கும் சாதாரணர்களாகிய நாமும் கூடிய சீக்கிரம் தினசரி வாழ்க்கையிலேயே இந்த சாட்பாட்டுக்களை சர்வ சாதாரணமாகப் பயன்படுத்த ஆரம்பித்து இந்த ஜோதியில் கலக்கப்போகிறோம்.

கலந்துதான் ஆகவேண்டும் என்கின்றன விஞ்ஞானமும் வர்த்தகமும்.

***********

1 : Source: All of the figures mentioned are part of the VB Profiles data; subscription is required to access full data set. – https://venturebeat.com/2017/03/27/bots-shift-towards-ai-and-garner-24-billion-of-investment/

Posted on Leave a comment

ISRO: திசை கண்டேன், வான் கண்டேன் – ஜெயராமன் ரகுநாதன்

வாயிலும் வயிற்றிலும் அடித்துக்கொள்ளும் பண்பாடு அமெரிக்காவிலும் இருக்கிறது என்பதை ISRO ஃபிப்ரவரி மாதம் ஒரே ராக்கெட்டில் 104 சாடிலட்டுகளை வானில் செலுத்திய நிகழ்ச்சியின்போது தெரியவந்தது.

“நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன்” என்று ஒப்புக்கொண்ட அமெரிக்கப் பாதுகாப்பு இயக்குநர்ம டான் கோட்ஸ் (Dan Coats) அவசரமாக, “ அமெரிக்கா இந்த விஷயத்தில் பின்தங்கிவிடக்கூடாது” என்னும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்.1

பொழுதுபோகாமல் கபடி, கில்லி ஆட்டத்துக்கெல்லாம் போராட்டம் நடத்தும் தமிழர்களின் மனதில் இந்த நிகழ்ச்சிக்கு அதிகம் இடம் இல்லை. “ஒரே ராக்கெட்டுல 104 செயற்கைக்கோள்களை விண்ணுல செலுத்தியிருக்காங்கப்பா நம்ம வானிலை ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிங்க!” “ஓ அப்படீங்களா! சரி, அந்த தனுஷ் கேஸ் என்னாச்சி?”

இந்த ரீதியில் வம்பு விசாரிக்கக் கிளம்பிவிட, ஊடகங்களும் ‘ஆமாம் வாஸ்தவம்தான்’ என்று முடித்துக்கொண்டு ஜெ தீபா பேரவை நிகழ்ச்சிகளை நொடிக்குநொடி விறுவிறுப்புக் குறையாமல் காண்பிக்க, வண்டிகளையும் நிருபர்களையும் அனுப்பிவிட்டனர்.

உலக விஞ்ஞான நிகழ்வுகளில் ISROவின் இந்த சாதனை ஒரு மைல்கல். இதற்கு முன்னால் ரஷ்யா ஒரே ராக்கெட்டில் 37 செயற்கைக்கோள்களையும் அமெரிக்கா 28 செயற்கைக்கோள்களையும் மட்டுமே அனுப்பியிருக்கின்றன. உலகமே இப்போது ஆச்சரியமாக இந்தியாவின் விண்வெளி விஞ்ஞானிகளைத் திரும்பிப்பார்க்கிறது என்பது நிச்சயம் நாம் பெருமைப்படவேண்டிய விஷயம்.

சமீப காலமாகவே விண்வெளி சமாசாரம் என்பது பல விதங்களில் முக்கியத்துவம் பெற்றுக்கொண்டிருக்கிறது. இது வெறும் வானிலை ஆராய்ச்சி விஷயமோ அல்லது தொலைக்காட்சி ஒளிபரப்போ இல்லை. அதையெல்லாம் மீறி, தேசியப் பாதுகாப்பு சம்மந்தப்பட்ட விஷயங்களும் இன்னும் பல முக்கியமான காரணிகளும் இதில் இருக்கின்றன. முக்கியமாக, மனிதனை வான்வெளிக்கு அனுப்பிய நிகழ்ச்சிகள் உலகத்தையே வியப்புடன் பார்க்க வைத்த நாட்கள் உண்டு. அப்போலொ பதினொன்றில் ஆர்ம்ஸ்டிராங் நிலவில் காலடி வைத்த சம்பவம் மனித இனத்தையே முழுவதுமாய்த் திளைக்க வைத்தது. சாலெஞ்சரும் பின்னாளில் கொலம்பியாவும் வெடித்துச் சிதறியபோது, 10 லட்சம் காலன் எரிபொருளுடன் பயணம் செய்வதும் கிட்டத்தட்ட மணிக்கு 1800 மைல் வேகத்தில் பூமியின் ஈர்ப்புக்குள் நுழையும் பயங்கரமும் மனித இழப்பின் சோகமும் உலகத்தையே ஆட்டிவைத்தன. ஆனாலும் மனிதனில்லா ராக்கெட்டுகளின் விண்வெளி முயற்சிகள் நம் கவனத்தை அவ்வளவாக ஈர்க்கவில்லை. மீடியாக்களுக்கான மசாலா அதில் இல்லை. டிஸ்கவரி சானலின்  When we left the Earth போன்ற டாகுமெண்டரிக்களும் ஸ்டீவன் ஸ்பீல்பர்க்கின் ஸ்டார் வார்ஸும் விண்வெளியின் மர்மங்களுக்காகவும் சாகசங்களுக்காகவுமே நம்மை ஈர்க்கின்றனவேயன்றி மற்றபடி அதிக ஈடுபாடு இருப்பதாகத் தெரியவில்லை.

“இந்த விண்வெளி ஆராய்ச்சியெல்லாம் சுத்த பாஷ்! நேரம் பண விரயம்! அதுக்கு பதிலா அந்தப் பணத்த இங்க உபயோகமா செலவழிக்கலாம்!”

இப்படி அலுத்துக்கொள்ளும் கும்பல் ஒவ்வொரு நாட்டிலும் உண்டு! ஆனாலும் விண்வெளி ஆய்வுகள் இன்றைய நிலையில் அண்டவெளியின் ரகசியத்தை அறியும் ஆவல் என்பதைத் தாண்டி, நாம் வாழும் இந்த பூமியின் எதிர்காலத்துக்காகவுமே ஒவ்வொரு நாட்டுக்கும் மிகவும் தேவையானதுதான் என்பதில் சந்தேகமில்லை. அப்போலோ 11 சந்திரனில் இறங்கிய நிகழ்ச்சியினால் தூண்டப்பட்டு அமெரிக்காவில் ஒரு தலைமுறையே விண்வெளி பற்றியும் விஞ்ஞானம் பற்றியும் படிக்க ஆவலாகி விண்வெளி இயலைத் தேர்ந்தெடுத்ததாகப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஏன், இங்கேயே சந்திரயான் ஒன்றுக்குப்பிறகு விண்வெளி இயல் பற்றிய பேச்சும் விளக்கங்களும் அதிகமாகி “நானும் ஸ்பேஸ் சயன்ஸ் படிக்கப்போகிறேன்” என்று கிளம்பும் இளைய சமுதாயம் உருவாகியிருக்கிறது. விண்வெளி வணிகத்தில் ஈடுபட பல புதிய வணிக முயற்சிகள் (start ups) இளைஞர்களால் தொடங்கப்பட்டிருக்கின்றன. கடந்த சில வருடங்களாக நம் ISRO நிகழித்தி வரும் அடுத்தடுத்த சாதனைகள், இவர்களை இன்னும் இன்னும் அறிவியல் மற்றும் விண்வெளி ஆய்வுப் பக்கமும், ஏன் விண்வெளி வணிகத்தின் பக்கமும் திருப்பிவிடக்கூடும்.

இந்த ISROவின் ஆரம்பகாலம் என்பது விக்ரம் சாராபாயின் வாழ்க்கையோடு ஒட்டியே இருந்தது. அவர், இந்த நிறுவனமே தன் வாழ்க்கை என்பதாகப் பணிபுரிந்த கதைகளை நாம் அறிவோம். ஒரு சிறிய கட்டடத்தில் அதிக வசதிகள் ஏதுமின்றிப் புறாக்களின் ‘பக்பக்’குக்கு இடையில் ராக்கெட் ஆராய்ச்சிகளைச் செய்த ஏராளமான விஞ்ஞானிகளை நாம் இன்று நினைத்துப் பார்க்கவேண்டும். ஏன், நமது அப்துல் கலாமே இந்த ISROவின் மீது ஒருவித மாறாக் காதலுடனேயே பணிபுரிந்திருக்கிறார். ஆரம்பகால விஞ்ஞானிகள் குழு அமெரிக்கா ஃபிரான்ஸ் என்று ஒவ்வொரு ஊராகப் போய் அவர்கள் ஏலத்துக்கு விடும் பழைய ராக்கெட் தொழில்நுட்பங்களை வாங்கி வந்து, படித்து, முயற்சிகள் செய்து உருவாக்கிய ISRO இன்று உலக சாதனை புரிந்திருப்பது ஆச்சரியமே இல்லை.

லட்சக்கணக்கான லிட்டர் பெட்ரோலை எரித்து ராக்கெட் விடும் ISROவுக்கு என்ன சுற்றுச்சூழல் அக்கறை இருக்கமுடியும் என்று கேட்கலாம். ஆனால் இதே ISROவும் இன்னும் சில அமைப்புகளும், அரசுத்துறைகளிலும் பல்கலைக்கழகங்களிலும் சுற்றுச்சூழல், காற்றுத்தன்மை, பூமி வெப்பமயமாதல், மாற்று எரிசக்தி, படிம எரிபொருள் மற்றும் பூமியை நெருங்கும் விண் பொருள்கள் பற்றியெல்லாம் தீவிர ஆராய்ச்சிகள் செய்து வருகின்றன. நமது பூமியைக் காப்பாற்ற இந்த ஆராய்ச்சிகள் மிகவும் தேவையானவையே.

உலக மக்கள்தொகை இப்போதே ஏழரை பில்லியனைத் தொட்டிருக்கிறது. இயற்கை அன்னை இந்தக் கனத்தை இப்போதே தாங்க முடியாமல் தவிப்பது வெளிப்படை. இதே ரீதியில் போனால் நாமும் நூற்று எழுபதாவது மாடியில் வசித்து, காற்றைச் சேதப்படுத்தி,  (“அப்பா! நீங்க ஸ்கூல் படிக்கறப்போ இந்த மாதிரி மாஸ்கெல்லாம் மாட்டிக்க வாணாமா?”), மரஞ்செடிகொடிகளை அழித்து, (“எங்க தாத்தா சொல்றார், அடையார் பக்கத்துல பெரிய பார்க் இருக்குமாம்!”), விலங்கினங்கள் இல்லாமல் போய் (“அப்பல்லாம் தெருவிலேயே நாயெல்லாம் ஓடுமாமே!”) உயிர் வாழ்தலே பெரிய சாதனையாகப் போய்விடும் அபாயம் இருக்கிறது. இந்த அபாயத்திலிருந்து காப்பாற்றுவதற்கான வழிமுறைகளைக் கண்டறிய நிச்சயம் விண்வெளி ஆராய்ச்சிகள் அவசியம். சந்திரனிலும் செவ்வாயிலும் மனிதனைக் குடிபுக வைக்க முடியுமா என்னும் ஆராய்ச்சி சீரியஸாக நடக்கப்போகும் நாள் வெகுதூரத்தில் இல்லை.

இந்த விதமான மக்கள்தொகைப் பெருக்கத்தினால் நாம் இயற்கை வளங்களைக் காலியாக்கிக்கொண்டு வருகிறோம். தண்ணீருக்குக் காசு கொடுக்கும் காலம் வந்தது போலவே காற்றுக்கும் காசு கொடுக்க வேண்டி வரும். ஆனால் விண்வெளியில் இயற்கை வளங்கள் அளவில்லாமல் கொட்டிக்கிடப்பது ஆராய்ச்சிகளின் மூலம் தெரிய வருகிறது. நம் பூமித்தாயைக் காப்பாற்றவேண்டுமானால் அந்த இயற்கைச் செல்வங்களை பூமிக்குக் கொண்டுவரும் முயற்சிகளையும் எடுத்தாக வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுவோம். அதற்கான முன்னேற்பாட்டு ஆராய்ச்சிகள் இப்போதே துவங்கினாலன்றி அவற்றுக்கான தேவை வரும்போது திண்டாடித் திக்கிழந்து போவோம்.

நம் வீட்டை எவ்வளவு கவனத்துடன் பார்த்துக்கொள்கிறோம். ஒரு வார்தா புயல் வந்து வீட்டில் ஒழுகினால் அடுத்த வாரமே கொலுத்துக்காரரைக்கூட்டி வந்து சிமெண்ட் அடைத்து, பெயிண்ட் அடித்து…

ஆனால் நாம் வாழும் பூமியை முடிந்த அளவு நாசப்படுத்தி வருகிறோம். மணல் கொள்ளையிலிருந்து கனிமம் எடுப்பதிலிருந்து சூழலை மாசு படுத்துவதிலிருந்து ஆற்று நீரைக் கணக்கின்றிச் செலவழிப்பதிலிருந்து பூமியிலிருந்து நீரை உறிஞ்சி நிலத்தடி நீரைச் சூறையாடி, கண்டகண்ட கழிவுகளை ஆற்று நீரில் கலந்து, நல்ல நீரோடைகளைச் சாக்கடையாக்கி…  நமக்கென்னவோ இயற்கையெல்லாம் சாசுவதம் போல வாழ்ந்துகொண்டிருக்கிறோம். கொஞ்சம் வான்வெளியில் பறந்து விண்வெளிக்குப் போனால் நாமும் இந்த பூமியும் எத்தனை சிறிய துகள் என்பது புரியும். அனாமத்தாக சுற்றிக்கொண்டிருக்கும் நம் பூமியானது அண்ட சராசரங்களினிடையே ஒரு கடுகுப்பொட்டு அளவு கூட இல்லை என்பது விளங்கும். இயற்கை ஒருமுறை மூச்சை இழுத்துவிட்டால் கவண் கல்லைப்போல பூமி கோடிக்கணக்கான காத தூரம் போய் காணாமல் போய்விடும். இந்த நிலையற்ற தன்மை நமக்கு ஒழுங்காகப் புரிந்து, நாம் எப்படியெல்லாம் பூமியைக் காப்பாற்ற வேண்டும் என்னும் அவசரம் தெரிய வேண்டுமானால், அண்டங்கள் பற்றி நாம் இன்னும் இன்னும் நிறையத் தெரிந்துகொண்டாக வேண்டும். அதற்கு இந்த விண்வெளி ஆராய்ச்சிகள் மிக மிக அவசியம்.

சேர்மன் திரு கிரண் குமார் சொல்லுவதுபோல ISROவின் ஆராய்ச்சிகள் ஏதோ செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்புவது மட்டுமில்லை. மிகத் துல்லியமாக சீதோஷ்ண நிலைமைகளையும் வரப்போகும் புயல் எச்சரிக்கைகளையும் முன்கூட்டியே அறிந்துகொள்வதும்தான். இப்படி முன்கூட்டியே தேவையான தகவல்களை அறிந்துகொண்டு, அவற்றை வானிலை மையங்களுக்குத் தெரியப்படுத்தி, அவர்களால், மீனவர்களைத் தக்க சமயத்தில் உஷார்ப்படுத்த முடிந்திருக்கிறது. அடுத்த நூறு வருடங்களுக்குத் தேவையான விஷயங்களின் முதற்கட்ட ஆராய்ச்சிகளை இப்போதிலிருந்தே தொடங்குவதற்கான அளவில் திட்டங்கள் போடப்படுகின்றன. சென்ற வருடம் செலுத்தப்பட்ட சந்திரயான் ஒன்றின் வெற்றிப்பயணம்,  உலகத்தையே நம்மைப் பார்க்கச்செய்திருக்கிறது. சந்திரயான் II  அடுத்த நிலாப் பயணத்துக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. 2018ல் அந்தப் பயணம் தொடங்கத் திட்டமிடப்பட்டிருப்பதாக கிரண் குமார் தெரிவிக்கிறார்.

விண்வெளி ஆராய்ச்சியில் ISROவின் சரித்திரம் பொன்னேட்டில்… ஆம் அதேதான்! இருபது வருடங்களுக்கு முன்பு முதன்முதலில் புவி நோக்கு செயற்கைக்கோள் (Earth-observation satellite) IRS – 1A அனுப்பப்பட்டது. அதன்பிறகு இது வரை 10 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுவிட்டன. அவற்றில் ஆறு இன்னும் திருப்திகரமாகச் செயல்பட்டு நமக்கு வேண்டிய விண்வெளித் தகவல்களை அனுப்பிக் கொண்டிருக்கிறன.

ஒரு காலத்தில் இந்த ISROவே அமெரிக்க மற்றும் ஃபிரான்ஸ் நாட்டின் செயற்கைக்கோள்கள் அனுப்பிய தகவல்களைக் கொண்டே ஆராய்ச்சிகள் செய்து வந்த நிலை மாறி, இன்று இந்தியாவே பல வெளிநாடுகளுக்கு விண்வெளித்தகவல்கள் தரும் அளவுக்கு முன்னேற்றம் கண்டிருப்பது நிச்சயம் ISROவின் மறுக்க முடியாத சாதனையே. இது அவ்வளவு சுலபமாகக்கிடைத்த வெற்றியல்ல. பல வருடங்களாக இந்த ISROவின் அலுவலர்கள் அரசாங்கத்தின் ஒவ்வொரு கிளையிலும் பேசி கூட்டம் போட்டு அவர்களுக்கு வேண்டிய தகவல்கள் என்னென்ன என்று பெரிய பட்டியல் எடுத்து… பேயாய் உழைத்திருக்கிறார்கள். ISRO செயற்கைக்கோள் அனுப்பத் தயாராகியவுடன் அதிலிருந்து கிடைக்கப்போகும் தகவல்களை எடுத்துக்கொள்ள இந்த அரசுக் கிளைகள் தயாராகப் போட்டிபோட்டுக்கொண்டு வர, அப்புறம் என்ன, வெற்றிதான்.

இந்தச் செயற்கைக்கோள்களின் உறங்கா விழிகள் நமக்குத் தரும் தகவல்களின் விஸ்தீரணமும் பயன்பாடுகளும் அடர்த்தியும் சொல்லி மாளாது.

துல்லியமான பயிர் வளர்ப்பு ஏக்கரா, சாகுபடி அளவு, வறட்சி அல்லது வெள்ளத்தின் நஷ்டக் கண்டுபிடிப்பு, சுற்றுச்சூழல் கண்காணிப்பு, பல்லுயிர்க் கண்காணிப்பு, நீர் மேலாண்மை, பனிப்பாறை ஆய்வு, தாது மற்றும் உலோக ஆய்வு, கடலியல் ஆராய்ச்சி என்று செயற்கைக்கோள் தரும் தகவல்களின் பயன்பாடுகள், ஒரு நாட்டின் வாழ்வாதாரத்துக்கே மிக அத்தியாவசியமானதாகப் போய்விட்டன.

Cartosat 2A என்னும் செயற்கைக்கோளை 2007இல் செலுத்தினார்கள். இதில் பல நிறங்களையும் தனித்தனியாகப் பகுத்துணரும் (Panchromatic) காமராவைப் பொருத்தியதால் பூமியின் சின்னச்சின்ன வித்தியாசங்களையும் துல்லியமாகக் கண்டறியமுடியும். ஏன், தெருவில் போகும் ஒவ்வொரு வாகனத்தைக்கூடக் கவனிக்க முடியும்! இப்படிப்பட்ட காமிராவினால் நகர்ப்புறத் திட்டமிடுதல் மற்றும் போக்குவரத்து நடவடிக்கைகளைக் கூர்மையாகக் கண்காணித்து, திட்டமிட்டுச் செயல்படுத்தமுடியும். இதற்குமுன் செலுத்தப்பட்ட Cartosat ஒன்றுடன் சேர்ந்து இவை இரண்டும் இன்னும் அதிக நிலப்பரப்பைக் கண்காணிக்க இயலும். Cartosat 2E வரை செலுத்திவிட்டோம். இனி 2F வருடக்கடைசியில் போகப்போகிறது. கிட்டத்தட்ட 600 கிமீ உயரத்தில் சுற்றிக்கொண்டிருக்கும் இந்தச் செயற்கைக்கோள்கள் மூலம் நாம் அறியக்கூடிய தகவல்களின் முக்கியத்துவம் மிக அதிகம்.

ISROவின் இன்னொரு தொழில்நுட்ப வெற்றி இந்தச் செயற்கைக்கோள்களின் மினியேச்சர் வடிவமான Indian Mini Satellite-1 (IMS-1), அல்லது Third World Satellite (TWSAT). முன்பு சொன்ன Cartosat போல 690 கிலோகிராம் அல்லாமல் வெறும் 80 கிலோகிராம் எடையேயுள்ள இந்த மினியேச்சர் செயற்கைக்கோளானது, அந்த அளவிற்குத் தொழில்நுட்பம் இல்லாமல் அதே சமயம் பலவித் தகவல்களைத் திரட்டித்தரும் திறமை வாய்ந்திருப்பதால், சிறிய நாடுகள் இந்த வகைச் செயற்கைக்கோள்களை வானில் செலுத்த இந்தியாவின் ISROவை நாடுகிறார்கள். நம் ISRO இந்த மினியேச்சர்கள் செலுத்துவதிலும் கரைகண்டுவிட்டிருப்பது நமக்குப் பெருமையான விஷயம் மட்டுமில்லாது, நம் ISROவிற்கு வருமானம் ஈட்டித்தரும் தொழில்நுட்பமுமாகும். இந்த IMS செயற்கைக்கோள் லேசுப்பட்ட சமாசாரம் அல்ல. இதனுள் இருக்கும் Hyperspectral காமரா கிட்டத்தட்ட 64 வகை நிறங்களில் வித்தியாசம் காட்டிப் படம் எடுக்கும் தன்மை வாய்ந்தது. இந்த வகை காமராக்கள் ஆஸ்திரேலியாவில் கனிம வள ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுபவை. இவற்றின் நுண்ணிய சக்தியால் தாவரங்களின் இலைகளில் ஏற்படும் உருவ, ஊட்டச்சத்து மற்றும் நீர் வள மாறுதல்களைக்கூடக் கண்டறிய முடியும். இவ்வகை காமராக்கள் மிக நுட்பமான கடலாராய்ச்சியிலும் உதவக்கூடும்.

Megha-Tropiques என்னும் ஒப்பந்தத்தின்படி இந்தியாவும் ஃபிரான்ஸும் இணைந்து செயல்பட்டு அனுப்பும் செயற்கைக்கோள் மிகப்பயனுள்ள ஆராய்ச்சிக்கான தகவல்கள் பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தச் செயற்கைக்கோளின் Geo Stationery தன்மை ஒரு வித்தியாசமான அமசம். மற்ற செயற்கைக்கோள்களைப்போலப் பூமியைச் சுற்றாமல் பூமியின் சுழற்சிக்கேற்ப இதுவும் சுழலுவதால் பூமியின் ஒரே சில இடங்களைக் கண்காணித்துத் தகவல்கள் தந்து ஆராய உதவும். இந்தத் தகவல்கள் இயற்கை வள ஆராய்ச்சிக்கு மட்டுமன்றிப் பேரிடர்களை முன்கூட்டியே கணிக்கும் வல்லமை கொண்ட தகவல்களைப் பெறவும் பயன்படும்.

இன்றைய விஞ்ஞான முன்னேற்ற காலகட்டத்தில் ஒவ்வொரு நாடும் விண்வெளி ஆராய்ச்சியின் மூலம் தங்கள் நாட்டின் வளங்களைப் பற்றி நுட்பமாக ஆராய்ந்து அதன்மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் வழிவகை செய்யமுடியும் என்பதைக் கையில் எடுத்துவிட்டன. சாதாரண சிறிய நாடுகள்கூடத் தங்கள் பட்ஜெட்டில் இந்த விண்வெளி ஆராய்ச்சிக்கென கணிசமான தொகையை ஒதுக்கி வைக்கின்றன. ஆனால் அந்தச் சிறிய நாடுகளால் செயற்கைக்கோள்கள் செலுத்தும் தொழில்நுட்பத்திலோ அல்லது அதற்கான முதலீடுகளிலோ தாக்குப்பிடிக்க இயலாது. ஆகவே அவை அமெரிக்கா, இந்தியா போன்ற செயற்கைக்கோள் இயலில் மிக முன்னேறிவிட்ட நாடுகளிடம் காசு கொடுத்து தங்கள் நாட்டுக்கான செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தும் வேலையைத் தருகின்றன. இது நம் நாட்டுக்கும் ISROவுக்கும் மிகப்பெரிய வருமானம் ஈட்டும் சேவையாகும்.

கடந்த ஃபிப்ரவரி மாதம் 15ம் தேதி நாம் நிகழ்த்தியது நம் காலரைத் தூக்கிவிட்டுக் கொள்ளக்கூடிய சாதனை என்பதில் சந்தேகமே இல்லை. உலக சாதனையாக ஒரே ராக்கெட்டில் 104 செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்பி உலகத்தையே வாயைப்பிளக்க வைத்துவிட்டனர் நமது விஞ்ஞானிகள். இவற்றில் 101 செயற்கைக்கோள்கள் வேற்று நாடுகளைச் சேர்ந்தவை. அந்த நாடுகள் இந்தியாவின் விண்வெளி இயல் நிபுணத்துவத்தின் மேன்மையை உணர்ந்து தங்களுக்காக இந்தச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தித்தருமாறு ISROவைக் கேட்டுக்கொண்டு அதற்கான கட்டணமாக மிக அதிகப் பணமும் கொடுத்திருக்கின்றன. அமெரிக்கா ஃபிரான்ஸ் போன்ற நாடுகளும் மற்ற நாடுகளுக்காகச் செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தித்தருவது உண்டு. ஆனாலும் நம் ISROவின் கட்டணம் இந்த நாடுகளின் கட்டணத்தோடு ஒப்பிட்டால் குறைவு. அதேசமயம் தரத்திலோ சேவையின் உன்னதத்திலோ எந்தவித மாறுதலும் இல்லை. இதனால் பல நாடுகள் நம்மிடமே இந்தச் சேவையைக் கொடுக்க முன்வந்தன. இந்த 104இல் 101 செயற்கைக்கோள்கள் ஹாலந்து, கஜகஸ்தான், அராபிய எமிரேட்ஸ், இஸ்ரேல், ஸ்விட்சர்லாந்து மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட வேற்று நாடுகளுடையவை! அவர்களே அவற்றை நம்மிடம் கொடுத்து மேலே அனுப்பச்சொல்லி அதற்கான கணிசமான கட்டணமும் கொடுத்திருக்கின்றனர்.

PSLV – C37 என்னும் இந்த ராக்கெட் 650 கிலோ எடையுள்ள செயற்கைக்கோள்களை ஒரே நேரத்தில் எடுத்துச்சென்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியிருக்கிறது.

உலக விண்வெளி வர்த்தகத்தில் நம் ISROவின் திறமையும் நம்பகத்தன்மையும் பல மடங்கு உயர்ந்திருக்கிறது. இனி வரும் விண்வெளி வர்த்தக வருமானத்தில் கணிசமான பங்கை இந்தியாவுக்குக் கொண்டு வருவதில் ISRO அரும்பணி ஆற்றப்போகிறது.

உலகமெங்கும் விண்வெளி என்பது ஆராய்ச்சியைத் தாண்டி வர்த்தகத்தினுள் நுழைய ஆரம்பித்துவிட்டது. விண்வெளி வர்த்தகம் என்பது இன்று கிட்டத்தட்ட 300 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டிருக்கிறது என்கிறார்கள் வல்லுநர்கள். கடந்த சில வருடங்களில் ஏகப்பட்ட தனியார் நிறுவனங்களும் இந்த விண்வெளி இயல் வர்த்தகத்தில் உருவாகிச் செயல்பட்டுக்கொண்டிருக்கின்றன. மிகப்பெரிய வென்ச்சர் ஃபண்ட் (Venture fund) என்னும் துணிகர நிதி நிறுவனங்கள் இந்த மாதிரியான விண்வெளி வர்த்தகம் தொடங்கும் நிறுவனங்களுக்கு (Space Business start ups) முதலீடுகள் கொடுத்து ஊக்கப்படுத்தி வருவது, இந்த விண்வெளி வர்த்தகம் இன்னும் இன்னும் விரிவடையப்போவதின் முன்னோட்டமே. ஏன் இந்தியாவிலேயே இன்று பல விண்வெளி வர்த்தக நிறுவனங்கள் உருவாகிச் செயல்பட்டு வருவதைப் பார்க்கிறோம். Earth 2 Orbit, Team Indus, Nopo Nano technologies, Dhruva Space போன்ற நிறுவனங்கள் இந்த விண்வெளி வர்த்தகத்தில் முன்னேற்றம் கண்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் தாத்தாவாகிய ISRO உலகளாவிய அளவில் மிக உயர்ந்து நின்று பல நாடுகளின் விண்வெளி ஆராய்ச்சிக்கு உதவுவதோடு மட்டுமின்றி வர்த்தக ரீதியாகவும் சம்பாதித்து வருகிறது. விண்வெளி இயலில் மட்டுமின்றி விண்வெளி வர்த்தகத்திலும் ISROவின் பங்கு கணிசமானது.

தனியார் மயமாக்குதலின் நல்ல அம்சங்களில் ஒன்று சாதாரண மனிதனும் செல்வந்தனாக முடிவதே. பங்குச்சந்தைகளின் வளர்ச்சியினால் மத்தியதர வகுப்பினர் பலர் கோடீஸ்வரர்காளான கதைகள் நமக்குத்தெரியும்.

“என்னப்பா, ஒரு மாசமா ஆளையே காணலை?”

“அதா, ஒரு டிரிப் ஸ்விட்சர்லாந்துக்கு போயிருந்தேன் குடும்பத்தோட!”

“ என்னது ஸ்விட்சர்லாந்தா…?”

“வாயைப் பொளக்காத! போன வருஷம் ISRO ஷேர் வாங்கியிருந்தேன். இப்ப மார்க்கெட் விலை எங்கியோ போயிடுச்சே! அதான் 100 ஷேர்களை வித்து வந்த லாபத்துல ஃபாரின் டூர்! இன்னொரு 100 வித்து பொண்ணு கல்யாணத்தையும் முடிச்சுடலாம்னு பாக்கறேன்!”

பாரத ரத்தினங்கள் என்று வெற்றிகரமான அரசு நிறுவனங்களின் பங்குகளை நாட்டு மக்களுக்கு விற்கும் நாள் வந்துவிட்ட நிலையில், கூடிய விரைவில் இந்த உரையாடல்களையும் நாம் கேட்க முடியும்!

**********

இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா மங்கல்யானை விண்ணில் செலுத்தியபோது, நியு யார்க் டைம்ஸ் கிண்டலாக ஒரு கார்ட்டூன் வெளியிட்டது. அமெரிக்கர்கள் கோலோச்சும் விண்வெளி இயல் க்ளப்புக்குள் நுழைய, மாடுகளுடன் இந்தியர்கள் அந்த க்ளப்பின் வாசலைத் தட்டுவது போன்ற கார்ட்டூன் அது. இந்தியாவின் இஸ்ரோ 104 செயற்கைக்கோள்களை விண்வெளியில் செலுத்தி சாதனை செய்ததும், இந்தக் கார்ட்டூனுக்குப் பதிலடியாக, டைம்ஸ் ஆஃப் இண்டியா இப்படி ஒரு கார்ட்டூனை வெளியிட்டது. 


 

அடிக்குறிப்பு:

1. http://timesofindia.indiatimes.com/world/us/donald-trumps-spy-pick-shocked-by-india-launching-104-satellites/articleshow/57411884.cms

Posted on Leave a comment

பட்ஜெட் 2017 – ஜெ. ரகுநாதன்


“பாதையைக்கண்டு பயமேன்!
உம்முன் நாங்கள் நடக்கிறோம்
வாருங்கள்!
வந்து சேர்ந்துகொள்ளுங்கள்…!”

பாராளுமன்றத்தில் அருண் ஜெயிட்லி கவிதை சொல்லி, புன்னகை செய்து, சக பாராளுமன்றத் தோழர்களை இந்தப்பொருளாதார ‘புதிய சாதாரண’ப் பாதையில் (The New Normal) தன்னுடன் நடந்து வருமாறு விளித்து, தன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார். அவரின் பேச்சில் தன்னம்பிக்கையும் சாதனையின் வெற்றிப் புன்சிரிப்பும் கலந்திருந்து, இரண்டரை மணி நேரத்தை தொய்வின்றிக்கடக்க உதவியது! முந்திய நிதி அமைச்சர்களான ப.சிதம்பரம், மன்மோகன் சிங், பிரணாப் முகர்ஜி ஆகியோரும் கவிதைகளையும் புகழ்பெற்ற வாசகங்களையும் எடுத்துச்சொல்லுவது உண்டு. ஆனால் அவர்கள் போல் இல்லாமல் அருண் ஜெயிட்லி தன் கவிதை வரிகளை எங்கிருந்து எடுத்தார் என்பதைச்சொல்லாமலே ரகசியம் காத்துவிட்டார். அவரின் பட்ஜெட் முடிவுகளும் திட்டங்களும் அதன் உள் விவகாரங்களும் அவற்றின் தோற்றம் தெரியாமல் ‘எடுக்கப்பட்டதா, கோக்கப்பட்டதா’ என்பது ரகசியமாகவே இருந்தது!

“என்னது, டெலிகாம் துறையில் 1,72,000 கோடி ஊழலா?”

“நிலக்கரி சுரங்க ஊழலில் 1.86 லட்சம் கோடிக்கு மேலா?”

இந்த விஷயங்கள் மாறிப்போய்விட்டதால், கடந்த இரு வருடங்களாக மக்களின் பேச்சில் தட்டுப்படும் விஷயங்களும் மாறித்தான் இருக்கின்றன.

“ஹெலிகாப்டர் ஊழல் கண்டு பிடிக்கப்பட்டாச்சா?”

“அட! 11 லட்சம் கோடி ரூபாய் பாங்குகளுக்குத் திரும்ப வந்திருக்கா?”

எந்த ஊழலில் எத்தனை கோடி இழந்திருக்கிறோம் என்னும் செய்திகளை விட்டு, எத்தனை கோடி கண்டுபிடித்திருக்கிறோம் என்று மக்கள் பேசுவது எத்தனை பெரிய மாற்றம்!

நம் பிரதமர் பேசினதில் உண்மையும், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நாட்டின் அரசியல் சூழலில் மக்களின் மன உணர்வு மாற்றமும் இருக்கிறது என்பது கண்கூடு.

பிரதமரின் டிசம்பர் 31ம் தேதி உரையில் உரத்துச்சொல்லப்பட்ட விஷயமான ஊழலின் ஊற்றுக்கண்ணைத்தாக்கி அழிக்க வேண்டும் என்னும் வீரியத்தையும் அதற்கான செயல்பாடுகளின் முனைப்பையும் இந்த பட்ஜெட்டில் பார்க்க முடிகிறது. அரசியக் கட்சிகளுக்குத் தரப்படும் ரொக்கம், அதாவது காசு, பணம், துட்டு, ரூபாய் இரண்டாயிரத்துக்கு மேல் அனுமதிக்கப்படக்கூடாது என்னும் தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று அறிவித்திருக்கிறார்கள். பிரதமரின் வார்த்தைகளான “அரசியல்வாதிகளான நாம் எப்போதும் மக்களின் குரலை மறந்துவிடலாகாது” என்பதை வலியுறுத்துகிறது இந்த அறிவிப்பு. அதோடு கட்சிகளுக்கு நிதி தர விழைவோர் ரிசர்வ் வங்கியில் தேர்தல் பத்திரங்கள் வாங்கி அளிக்கலாம் என்னும் புதிய வழிமுறையையும் புகுத்தி, முடிந்த வரையில் அரசியல்வாதிகளுக்கும் அரசியல் கட்சிகளுக்குமான நம்பகத்தன்மையை ஏற்படுத்தும் நல்ல செய்கையை நம் நிதி அமைச்சர் செய்திருக்கிறார். இன்று இந்தியா வேகமாக முன்னேறும் பொருளாதாரத்தை முன்னிறுத்திச் செயல்படும்போது இந்த நிழல் பொருளாதாரம் (Shadow Economy) ஒரு தடையாக இருக்கக்கூடாது என்பதின் வெளிப்பாடு இந்த மாற்றம். செயல் வடிவில் இது பயனளிக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

பணமதிப்பிழப்புச் செயல்பாட்டினால் உண்டான அல்லல்களுக்கு நடுவில் கோடிக்கணகான பழைய நோட்டுகள் வங்கிகளுக்கு திரும்ப வந்ததில் வெற்றிதான் என்று அரசும், தோல்விதான் என்று எதிர்க்கட்சிகளும் முழங்கினாலும் ‘நடந்தது என்னமோ நல்லதுக்குத்தான்’ என்னும் பரவலான எண்ணம் நாட்டு மக்களிடையே ஓடுவது தெரிகிறது. மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிவித்த பொருளாதார மற்றும் நாணயக் கொள்கையின் தொடர்ச்சியாக இந்த அரசின் நிலையான பொருளாதாரப் போக்கை தொடர்ந்திருப்பதும், லஞ்ச ஒழிப்பு, தீவிரவாதத் தடுப்பு, கறுப்புப்பண இணைப்பொருளாதாரச் சிதைப்பு என்னும் முனைப்பின் இன்னொரு வெளிப்பாடாகவும் இந்த வருட பட்ஜெட் அமைந்திருக்கிறது என்பதை மறுக்க முடியாது. கூடவே பணமதிப்பிழப்புச் செயல்பாட்டினால் உண்டான இன்னல்களுக்குப் பஞ்சு ஒத்தடம் கொடுக்கும் முயற்சியும் இந்த பட்ஜெட்டில் தெரிகிறது. அடித்தட்டு மற்றும் கிராமப்புற மக்களுக்காகவும் சிறிய தொழில்களுக்காகவும் இந்த பட்ஜெட் மிக அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் பெரும் கம்பெனிகளுக்கும் முதலாளிகளுக்கும் கடுப்பு உண்டாக்கும் பட்ஜெட்டாகவே அமைந்திருக்கிறது.

“என்னா பட்ஜெட்டுப்பா! நேரா அரிசி வெல குறைஞ்சிடும்!”

“டீவீ மேல இருந்த வரிய நீக்கிட்டாங்களாமே! இப்ப என்ன ஏழாயிரம் ரூபாய்க்கே கெடச்சுடுமா?”

“இங்கேர்ந்து கும்மோணத்துக்கு டிக்கட் அறுபது ரூவா கம்மியாய்டுச்சா! பேஷ்!”

மேலே சொன்னது போன்ற சாதாரண மக்களின் கைதட்டல் விசில்களுக்கேற்ப, அதுவும் ஐந்து மாநிலங்களில் வரப்போகும் தேர்தலை மனதில் கொண்டு, அருண் ஜெட்லி மிகச்சுலபமாக அதிகச்சலுகைகளை அள்ளி வீசியிருக்க முடியும். நிதிப்பற்றாக்குறை விகிதத்தையும் கொஞ்சம் தளர்த்திக்கொண்டு அதிகக்கடன் உள்ள பட்ஜெட்டைக் கொடுத்திருந்தாலும் பெரிய எதிர்ப்பு எழுந்திருக்காது. ஆனாலும், அந்த மலின வித்தைகள் எதுவும் செய்யாமல் நடுவாக நின்று இந்தியப்பொருளாதாரத்தின் இன்றைய நிலமையை மனதில் கொண்டு ஓரளவுக்கு நேர்மையாக இந்த பட்ஜெட்டைக் கொடுத்திருக்கிறார்.

இன்று உலகப்பொருளாதரம் ஒரு குழப்ப நிலையில் தடுமாறிக்கொண்டிருக்கிறது. ஐரோப்பிய யூனியன் நாடுகள் சோபையிழந்து நொண்டிக்கொண்டிருக்க, சைனா காற்றில் ஆடும் விளக்குத் திரியாகத் துடித்துக்கொண்டிருக்க, அமெரிக்கா டிரம்ப்பின் தலைமையில் கதவுகளைச் சாத்திக்கொண்டிருக்கிறது.

“அதெல்லாம் முடியாது! எங்க கம்பெனிகளை உள்ள அனுமதிச்சுத்தான் ஆகணும்!”

“கோக் பெப்ஸியெல்லாம் இல்லாம உங்க மக்கள் எப்படி உயிர் வாழலாம்!”

“உலக மயமாக்கினால்தான் எங்க ஆதரவு உண்டு. இல்லேன்னா உலக வங்கி கடன் கிடையாது. அதோட, பாகிஸ்தானுக்கு ஆயுதம் தருவோம்!”

தன் வியாபார மற்றும் ஆயுத முதன்மை, டாலரின் உயர் நிலையை வைத்துக்கொண்டு நம்மைப்போன்ற ஆசிய நாடுகளை உங்கள் தொழில்களுக்கு மட்டும் சலுகை கொடுப்பது தகாது. ஆகவே பொருளாதாரக் கொள்கைகளை இலகுவாக்க வேண்டும் என்று மிரட்டிக்கொண்டு தங்கள் நாட்டுத் தொழில்களை இந்தியாவுக்குள்ளும் மற்ற முன்னேறும் நாடுகளுக்குள்ளும் புகுத்தி அமெரிக்கா லாபம் சம்பாதித்த காலம் இருந்ததை போன மாசக்குழந்தை கூட அறியும். ஆனால் இப்போது நேர்மாறாக டிரம்ப், ‘தனக்கு வந்தால் தெரியும் தலை வலியும் திருகு வலியும்’ என்பது போல அமெரிக்காவின் தொழில்களைப் பாதுகாக்க வேண்டும் என்று வெளிநாட்டு தொழில் நிறுவனங்களுக்கான சட்டதிட்டங்களை கடுமையாக்கிக்கொண்டு வருகிறார். விஸா நிலமையோ இன்னும் ரகளை! நம்ம ராமசுப்ரமணியன்களும் ராகவேந்திர ராவ்களும் கேதார்நாத் கௌடாக்களும் எப்படா ப்ளேன் ஏத்தி திருப்பி அனுப்பிடப்போகிறான் என்ற பீதியுடன் ஒவொரு முறை டெலிஃபோன் மணி அடிக்கும்போதும் திடுக்கிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்தக்  காலகட்டத்தில் இந்தியப் பொருளாதாரம் ஜொலித்தே ஆகவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறோம். இத்தனைக்கும் “இந்த உலகளாவியp பொருளாதார இருளில் இந்தியா ஒரு ஒளிரும் விளக்கு” என்று சர்வதேச நாணய நிதியம் பாராட்டியிருந்தாலும், இந்தியாவுக்குள் வந்த அந்நிய முதலீட்டில் கிட்டத்தட்ட பத்து பில்லியன் டாலர்கள் போன மூன்று மாதங்களில் வெளியேறியிருக்கின்றது. கூடவே கடந்த இரண்டு வருடங்களில் நம் மாநிலங்களின் நிதி நிலைமை தடுமாற்றத்தில்தான் தத்தளித்துக்கொண்டிருக்கின்றது. இத்தகைய சூழலில் மிகக்கடுமையான நிதி நிலை மேலாண்மையைச்செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் மத்திய அரசின் சோதனைகளை இந்த பட்ஜெட்டின் மூலம் நிதி அமைச்சர் சரியாகவே லகானைப்பிடித்திருக்கிறார்.
நமது பொருளாதாரத்தின் இன்னொரு பெரிய சவால் பொது முதலீட்டை அதிகரிச்செய்யவேண்டிய வலுக்கட்டாயம். போன பட்ஜெட்டில் இந்தப்பொது முதலீட்டைத் திட்டமிடும்போது நாம் கோட்டை விட்டுவிட்டோம். திட்டமிட்ட பொது முதலீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 1.6% ஆக இருந்தாலும், நல்ல வேளை, செயலாற்றும்போது இந்த அரசு பொது முதலீட்டை 1.9% வரை உயர்த்தி விட்டிருந்தது. இந்த பட்ஜெட்டிலும் அதே அளவு பொது முதலீடு செய்வதற்கான வரையறை செய்யப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இதோடு கூடவே செலவினங்களையும் இந்த அரசு கட்டுப்படுத்தியிருப்பதால் (போன வருடத்தை விட இந்தவருடம் 6% மட்டுமே அதிகம்), இந்த இரட்டைச் செலவினங்களின் மொத்தத் தாக்கம் கட்டுக்குள் வைக்கப்பட்டு, பொருளாதாரக் காரணிகள் (Macroeconomic management) ஆரோக்கியமாக நிர்வாகம் செய்யக்கூடிய நிலையில் உள்ளது.

சீர்திருத்தங்கள் என்னும் நெடுங்கால குறிக்கோளையும் இந்த பட்ஜெட் கைவிடவில்லை. Foreign Investment Promotion Board (FIPB) என்னும் அந்நிய முதலீட்டை மேம்படுத்தும் வாரியத்தை இழுத்து மூடிவிடும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. கூடவே வெளிநாட்டு முதலீட்டில் உள்ள சில விதிகளையும் சுலபமாக்கும் முயற்சிகளும் எடுக்கப்படும் என்று அறிவித்திருப்பதன் மூலம், நாம் அந்நிய முதலீட்டை வரவேற்கிறோம் என்ற சைகையைக் கொடுத்திருக்கிறோம். Make in India என்னும் பிரதமரின் கோஷத்திற்கு அந்நிய முதலீடு அவசியம் என்பதோடு, அந்நிய முதலீட்டினுடன் அதிக வேலை வாய்ப்பும், உயர்ந்த, நிரூபிக்கப்பட்ட தயாரிப்பு முறைகளும், புதுமைகளும் நீண்டகால மேலாண்மைச் சூட்சுமங்களும் நம் நாட்டுக்குள் வரும் வாய்ப்பு ஏற்படுகின்றது.

பொது நிறுவனங்களில் உள்ள அரசின் பங்குகளை சந்தையில் விற்பதன் மூலம் அரசு கிட்டத்தட்ட 72,000 கோடி ரூபாய்களைப் பெறும் திட்டத்தில் இருக்கிறது. இந்த வரவேற்கத்தக்க முடிவு அரசுக்குப் பெரும் வருவாய் தருவதோடு மந்தமாகச் செயல்பட்டு நாட்டின் வளங்களைச் சரியாகப் பயன்படுத்தாத பொது நிறுவனங்கள் தனியார் மேலாண்மையின் கீழ் இன்னும் வேகத்துடனும் சுறுசுறுப்புடனும் செயல்பட உதவும்.  

பணமதிப்பிழப்பினால் நடுத்தர, கீழ்த்தர மக்களுக்குப் பல இன்னல்கள் ஏற்பட்டதை முன்னிறுத்திச் சுலபமாக ‘சகலகலாவல்லவன்’ ரேஞ்சுக்கு ஜனரஞ்சக பட்ஜெட் அளித்திருக்கலாம். ஆனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் கொடுத்த வாக்குறுதியை விடாது பற்றி, நிதிப்பற்றாக்குறையைக் கட்டுக்குள் வைத்திருக்கும் கடுமையான முயற்சியாக பட்ஜெட் 2017 இருப்பது நமது பொருளாதாரத்திற்கு நல்லதே. பற்றாக்குறை 3.5% வரை இருந்திருந்தால் கூட அப்படி ஒன்றும் பொருளாதார வல்லுநர்களும் புலம்பியிருக்க மாட்டார்கள். ஆனாலும் அதை 3.2%க்குள் கட்டுப்படுத்தி, மேலும் அடுத்த இரு வருடங்களில் பற்றாக்குறை 3%க்குள் வரவேண்டும் என்னும் கண்டிப்பையும் காட்டியிருக்கிறார் நிதி அமைச்சர்.

இந்த பட்ஜெட்டில் வளர்ச்சிக்கும் சமத்துவத்திற்குமான சரி சம முக்கியத்துவம் இருக்கிறது என்று, நான் மட்டுமில்லை, மிகப்பெரிய தொழிலதிபரான குமார மங்களம் பிர்லாவே சொல்லுகிறார்.

விவசாயத்திற்கு முக்கியத்துவம், அடுத்த ஐந்து வருடங்களில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்கும் முனைப்பு என்பவையும் வரவேற்கத் தக்கவையாகும். பயிர்க் காப்பீடு, நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களின் சந்தைப்படுத்துதலுக்குத் தரப்பட்ட ஒதுக்கீடும் மகிழ்ச்சி அளிக்கிறது. விவசாயத்திற்கு ஒதுக்கப்பட்ட பங்கு 51,026 கோடி ரூபாய்கள், போன வருடத்தை விட 6% அதிகம். பயிர்க் காப்பீட்டின் விஸ்தீரணம் இந்த முறை 40% ஆக உயர்ந்திருக்கிறது (போன வருடம் 30%). மேலும் NABARD மூலம் ஒதுக்கீடுகள் அளிக்கப்பட்டு நீர்ப்பாசனம் மற்றும் விளைபொருட்களை விற்பனை செய்யும் சந்தைகளையும் 250இலிருந்து 585ஆக உயர்த்தும் திட்டமும் உள்ளது. இவற்றைச்செயல்படுத்தினால் விவசாயத்துறைக்கு நல்ல ஊக்கம் கிடைக்க வாய்ப்புள்ளது. பருவ மழை பொய்க்காது போனால் இந்தத்துறையின் வளர்ச்சி ஆரோக்கியமான 4.1% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இன்னொரு நல்ல விஷயம் கிராமப்புற நடவடிக்கைகளுக்கான இவ்வருட ஒதுக்கீடு போன வருடத்தை விட 24% அதிகரிக்கப்பட்டுள்ளது.

“அதெல்லாம் சரி! திட்டம் போடும்போது நல்லா யோசிச்சுத்தான் போடறாய்ங்க! செயல்படுத்தும்போது கோட்டை விட்டுடறாங்களே!”

பயிர்க்காப்பீட்டில் அதிகம் பயனடைந்தவர்கள் இன்ஷூரன்ஸ் கம்பெனிகள்தாம் என்றும், காப்பீட்டுத்தொகை அதிகமாகிக்கொண்டே போகிறது என்றும் குற்றச்சாட்டுகள் நம் காதில் விழாமலில்லை.

இந்த பட்ஜெட் இளைய சமுதாயத்திற்கும் வேண்டிய அளவு கவனத்தை வழங்கியிருக்கிறது. முக்கியமாக இரண்டாம்நிலைக் கல்வித்தரத்தை உயர்த்தும் பணிகளில் முனைப்புக் காட்டியிருக்கிறது. மிக அதிகமான இளைய சமுதாயம் மொபைல் மற்றும் இணையத்தளத்தில் ஈடுபாடு கொண்டிருப்பதை மனதில் கொண்டு இந்த பட்ஜெட் தகவல் தொழில்தொடர்பு சம்மந்தப்பட்ட விஷயங்களில் அதீத முனைப்புக் காட்டியிருக்கிப்பதை பாராட்டத்தான் வேண்டும். ஸ்வயம் என்னும் பெயரில் 350 இணையப் பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவிருப்பது இளைய சமுதாயத்திற்கு, குறிப்பாக வேலை செய்துகொண்டே படிக்க விரும்பும் சாரருக்கு பெரிய வரமாகும். இதற்கான அஸ்திவாரமாக ஒண்ணரை லட்சம் கிராமப் பஞ்சாயத்துக்கள் இணையத்தில் கொண்டு வரும் திட்டமும் ஆப்டிக் ஃபைபர் கேபிள் விரிவாக்கப்படும் திட்டமும் சரியான  கிரியா ஊக்கிகள்.

ஐம்பது கோடி ரூபாய்க்குக்குறைவாக விற்பனை செய்யும் மிகச்சிறிய மற்றும் சிறிய வியாபார நிறுவனங்களின் வருமானவரி 30% இலிருந்து 25%ஆகக் குறைக்கப்பட்டிருக்கின்றது. இந்தச் சலுகை ஏற்கெனவே தடுமாறிக்கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு ஒரு வரம் என்று சிலர் சொன்னாலும் மாற்றுக்குரலும் கேட்கிறது.

“இது வெறும் ஜுஜூபி! இந்த நிறுவனங்கள் பாதிக்கு மேல் லாபமே ஈட்டுவதில்லை. மேலும் நாட்டின் மொத்த வியாபாரத்தில் பார்த்தால் இந்த வகைக் கம்பெனிகளின் வியாபாரம் 1%க்கும் கீழ்தான். அதனால் இந்தச் சலுகையால் சொல்லக்கூடிய முன்னேற்றம் ஏற்படப்போவதில்லை!”

மிகப்பெரிய ரிகார்டாக இந்த முறை 48,000 கோடி ரூபாயை மஹாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்புத்திட்டத்திற்கு (MGNREGA) ஒதுக்கியிருப்பது மிகுந்த வரவேற்பைப் பெறுகிறது.

“இல்லீங்களா பின்ன, உ.பி தேர்தல் வருதில்ல” என்னும் குரல்களில் உண்மை இல்லாமல் இல்லை. ஆனாலும் இந்த ஒதுக்கீடு மிகப்பெரும் பயனைத் தரவல்லது என்பதை மறுக்க முடியாது.

குறைந்த வருமான மக்களின் சந்தோஷத்தை உயர்த்தும் வகையில் நமது நிதியமைச்சர் 10% இலிருந்து 5% வருமான வரி குறைப்பு மற்றும் சில ஒத்தடங்கள் கொடுத்திருப்பதில் பணப்புழக்கம் கொஞ்சம் அதிகரித்து விலை குறைந்த பொருட்களின் தேவையை அதிகரிக்கக் கூடும்.இதன் எதிரொலியாக FMCG கம்பெனிகளின் (இந்துஸ்தான் யூனிலீவர், காட்ரெஜ், பதஞ்சலி, ஐ டி சி) பங்குகள் பட்ஜெட் தினத்தன்றே விலையேற்றம் கண்டன.

உள்கட்டுமானத் தொழிலுக்கு இந்த பட்ஜெட்டில் மிகப்பெரிய ஊக்கம் கிடைத்திருக்கிறது. அதிக ஒதுக்கீடு, மலிவு விலை வீடுகள் கட்டும் தொழில் உள்கட்டமைப்பின் (Infrastructure Projects) கீழ் கொண்டு வந்தது, மற்றும் ரயில்வே துறைக்கான அதிக ஒதுக்கீடு போன்றவை இங்கு அதிக முதலீடு வரப்போவதைக் கட்டியம் கூறுகின்றன. இந்தத் துறைக்கு அரசு ஒதுக்கியிருப்பது 3.9 லட்சம் கோடி ரூபாய்கள் (போன வருடம் 3.4 லட்சம் கோடி). இதில் கிட்ட்த்தட்ட 2.4 லட்சம் கோடி போகுவரத்துத் துறைக்கு போவது (தரை, ராயில் மற்றும் நீர் வழி) மிகவும் வரவேற்க்கத்தக்கதாகும். கட்டுமான கம்பெனிகளுக்கு இந்த வருடம் நல்ல வியாபரம் ஆகுமென்பதால் லார்சன் அண்ட் டூப்ரோ, ஏஸி ஸி, ஜி எம் ஆர் இன்ஃப்ரா, ஏஷியன் பெயிண்ட் போன்ற கம்பெனிகளின் பங்குச்சந்தை விலை ஏறியதைப் பார்த்தோம். அதுபோலவே ஸ்டீல் தொழிலும் நல்ல வளத்தைப் பெறக்கூடிய வாய்ப்பை இந்த பட்ஜெட் தந்திருக்கிறது. உள்கட்டமைப்புதான் எந்த ஒரு தேசத்துக்குமான முன்னேற்றத்தின் முதல் படி. வாஜ்பேயி காலத்திய தங்க நாற்கரத்தால் நாம் அடைந்த முன்னேற்றம் கண்கூடு. அதுபோல உள்கட்டமைப்பின் பெருக்கம் நீண்ட கால இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கு மிக முக்கிய உரமாகும் என்ற வகையில் இது இந்த பட்ஜெட்டின் மிக நல்ல அம்சம். ஆனால் இதைச்செயல்படுத்தும் முறை அதைவிட மிக முக்கியமானதாகும். சிங்கப்பூர் தென்கொரியா நாடுகளில் அரசாங்கம் தனியார் துறையுடன் கைகோர்த்து இந்த உள்கட்டமைப்பைப் பெருக்கி முன்னேற்றம் கண்டது வரலாறு. இதில் இரு பக்கத்தினருக்கும் சமத்தொலைநோக்குடன் இருப்பது மிக அவசியமான  ஒன்றாகும். இதன் மூலம் உள்கட்டமைப்பு பெருகுவதுடன் வேலை வாய்ப்பு அதிகரிக்கும் சாத்தியங்களும் உண்டு.

சென்ற சில பட்ஜெட்டுகளில் இல்லாத ஒன்று இந்த பட்ஜெட்டில் இடம் பிடித்திருக்கிறது. சமூக நலச்செயல்பாடுகள் பலவற்றை டிஜிட்டல் வரையறைக்குள் கொண்டு வரும் முயற்சி நல்ல முக்கியத்துவத்தைப்பெற்றிருக்கிறது. முதன்மை விவசாயக்கடன் சொசைடிக்களை இணைப்பதற்கு ரூபாய் 1900 கோடி, ஸ்வயம் என்னும் இணையக் கல்வித் திட்டங்கள், சீனியர் குடிமக்களின் உடல் நல விஷயங்களை உள்ளடக்கிய, ஆதாருடன் இணைக்கப்பெற்ற ஸ்மார்ட் அட்டை, முழுக்க முழுக்க இணையம் மூலமே கொடுக்கப்படும் ராணுவ பென்ஷன், கிராமப்புறங்களை இணையம் மூலம் தொடர்பு படுத்தும் ‘டிஜி கிராமம்’, அதிவேக ஆப்டிக் ஃபைபர் மூலம் ஒண்ணரை லட்சக் கிராமங்களை இணையத்தில் கொண்டு வரும் திட்டம் எனப் பல தகவல் தொழில்தொடர்புத் திட்டங்கள் இந்தியாவை மேலும் மேலும் டிஜிட்டல் முறைக்கு எடுத்துச் செல்லக்கூடியவை. எல்லோருக்கும் இணைய மருத்துவம், இணையக்கல்வி மற்றும் தொழிற்கல்வி அளிக்க இந்த இந்த டிஜிட்டல் கிராமத் திட்டத்தின் மூலம் வழி வகை செய்யப்படும் என்று அறிவித்திருப்பதும் இன்னொரு பாராட்டத்தக்க முயற்சியே. வரும் காலத்தில் எங்கும் இணையம் எதிலும் இணையம் என்னும் டிஜிட்டல் கட்டுமானம்  கிராமப்புறமெங்கும் விரவி இந்தியப் பொருளாதாரத்தைக் கணிசமாக உயர்த்தும் என்பதில் சந்தேகமில்லை.

ரியல் எஸ்டேட் தொழிலுக்கு இந்த பட்ஜெட்டினால் நல்ல ஊக்கம் கிடைத்திருக்கிறது. முன்னமேயே சொன்னபடி மலிவு விலை வீடுகள் கட்டும் தொழில் இப்போது உள்கட்டமைப்பு என்னும் தகுதி பெற்றவையாகின்றன. அதனால் இவைகளுக்கு நிதி கிடைக்கும் வாய்ப்பு அதிகமாவதோடு, உள்கட்டமைப்பு நிறுவனங்களுக்கு கிடைக்கும் அரசு மானியங்களும் சலுகைகளும் இவற்றுக்கு இனிமேல் கிடைக்கும். மலிவு விலை வீடுகளாகக் கருதப்படுவதற்கான சில விதி முறைகளின் தளர்ப்பு, வருமானவரிச்சலுகைகள், நீண்டகால மூலதன லாப (Long Term Capital Gains) வரிக் குறைப்புக்கான மாற்றங்கள் போன்றவை ஒரளவுக்கு ரியல் எஸ்டேட் தொழிற்துறையை வளரவைக்கும் ஊக்கிகள்.

“அப்ப இந்த பட்ஜெட்டில் குறையான அம்சங்கள் ஏதுமே இல்லியா” என்று எதிர்க்கட்சிகள் போலக் கேட்கலாம்.

நிச்சயம் குறைகள் இருக்கின்றன.

கார்ப்பரேட் செக்டார் எனப்படும் தனியார்த் துறை, முக்கியமாகப் பெரிய கம்பெனிகள் ஒரு பாட்டம் அழுகின்றன. ஆட்சிக்கு வந்த போதே நிதி அமைச்சர் படிப்படியாக கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து 25% க்கு கொண்டு வந்துவிடுவோம் என்று சொன்னார். ஆனால் இப்போதும் அவை 29% இல் இருந்து குறையவே இல்லை. கார்ப்பரேட் வரிகளைக் குறைத்து அவற்றை இன்னும் லாபகரமாக்கினால்தான் அவற்றால் மேல்நாட்டுத் தொழில் நிறுவங்களுடன் போட்டி போட முடியும். அமெரிக்காவே தம் உள்நாட்டு கம்பெனிகளுக்குச் சலுகைகள் தரும்போது இங்கும் தந்திருக்க வேண்டும் என்று ஒரு புலம்பல் கேட்பதை ஒதுக்கிவிட முடியாது.

நம் பொருளாதாரத்தில் வளர்ச்சி இருந்தாலும் அது பூஞ்சையான வளர்ச்சிதான் என்று ஒரு சாரார் வாதாடுகின்றனர். நம் நாட்டின் வளர்ச்சியில் சேவைத்துறை மிக அதிகமாக வளர்ந்துகொண்டிருக்க, உற்பத்தித் துறையும் விவசாயமும் அவளரவில்லை. இது நீண்ட கால நோக்கில் அபாயகரமானது. உற்பத்தித் துறையில் பல இடங்களில் அதிகமாக பயன்படாத்திறன் விரயமாகிக்கொண்டிருக்கிறது. இந்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டிருக்கும் பொது முதலீடு எங்கெல்லாம் பாயப்போகிறது என்பது மிக முக்கியம். இந்த உற்பத்தித் துறைக்கு பயன்படாத எந்த முதலீடும் பிற்கால இந்தியாவுக்கு கேடு விளைவிக்கும். கடந்த இரண்டு வருடங்களில் விவசாயம் 2% க்கு மேல் வளரவேயில்லை. பருவ மழை பொய்த்துப் போனது முக்கியக் காரணமாக இருந்தாலும் இந்த குறுகிய வளர்ச்சி நம்மைப் பாதித்திருப்பதென்னவோ உண்மை. ஆகவே இந்த பட்ஜெட்டில் சும்மா 24% அதிக ஒதுக்கீடு என்று சொல்லியிருப்பது திருப்தி அளிக்கவில்லை. எப்படியெல்லாம் இந்த ஒதுக்கீடு செலவிடப்படும் என்பதில்தான் வெற்றியோ தோல்வியோ இருக்கிறது.

MGNREGA வுக்கு 48,000கோடி ஒதுக்கப்பட்டிருப்பது மிகப்பெரிய நன்மையாக இருந்தாலும் இதன் பயன்பாடு பெரிய கேள்விக்குறிதான். இதை செயல்படுத்தப் போவதென்னவோ மாநில அரசுகள்தாம். இந்த விஷயத்தில் அவை மெத்தனமாக நடந்து வருவதை நாம் கடந்த இரு வருடங்களாகப் பார்த்துவருகிறோம். மத்திய அரசு முன்முனைப்போடு மாநில அரசுகளை விரட்டினால்தான் முழுப்பயன்பாடும் கிடைக்கும். ஆனால் இந்த மத்திய அரசுக்குப் பல மாநில அரசுகளுடன் சுமுகமான உறவும் இல்லாத நிலையில் இந்த ஒதுக்கீட்டின் முழுப்பயன் மக்களைச் சென்றடையுமா என்பது சந்தேகத்து இடம் அளிக்கிறது.

இன்னொரு மிக முக்கியமான விஷயம், வேலை வாய்ப்புப் பெருக்கம். விவசாயம் 4% அளவில் உயர்ந்தால்தான் அங்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும். அதற்குப் பருவ மழையை நம்பியிருக்கிறோம். ஆக உண்மையான வேலை வாய்ப்பு பெருக உற்பத்தித் துறையில்தான் கவனம் வேண்டும். இந்த MGNREGA வால் வேலை வாய்ப்பு உண்டாகும் என்பது உண்மைதான். ஆனால் அந்த வேலைகள் நிரந்தர வேலைகள் இல்லை. அவற்றின் மூலம் குளங்கள் வெட்டலாம். ஆனால் குளங்கள் வெட்டுவது மட்டும் வேலை வாய்ப்பு இல்லையே. வருடம் முழுவதும் குளம் வெட்டிக்கொண்டிருக்க முடியாது. நிரந்தர வேலைவாய்ப்புப் பெருக வேண்டுமானால் உற்பத்தித் துறையில்தான் வேலை வாய்ப்பு பெருக வேண்டும். இந்தத் துறையில் வருடாவருடம் 2% வேலை வாய்ப்புகள் பெருகும் அளவுக்கு முனைய வேண்டும். நடக்கக் கூடியதுதான், ஏனென்றால் போன இருபது வருடங்களாக குஜராத்தில் மட்டும் உற்பத்தித்துறையின் வளர்ச்சி 15%, வருடா வருடம்! இந்தியாவிலும், முனைந்தால் முடியும்!

இதிலும் ஓரிரு ஒப்பாரிகள் கேட்கலாம்.

“கிட்டத்தட்ட 45% கூலிப்பணம் இன்னும் விநியோகிக்கப்படவே இல்லை. அதனால் 231கோடி ரூபாய்கள் வேலை செய்தவர்களுக்கு வரவேண்டியிருக்கிறது! இந்த அழகில் இன்னும் ஒதுக்கீடு கொடுப்பதால் நிலைமை முன்னேறும் என்ற நம்பிக்கை இல்லை” என்கிறார் மஸ்தூர் கிசான் சங்காதனத்தைச்சேர்ந்த அருணா ராய்!

வங்கிகளின் நிலைமை, முக்கியமாகப் பொதுத்துறை வங்கிகளின் நிலைமை ஆட்டம் கண்டிருக்கும் காலம் இது. வாராக்கடன்களின் அளவு மிக உயர்ந்து வங்கிகளின் ஸ்திரத்தன்மையையே அசைத்துப்பார்க்கும் அளவிற்கு அவை வலுவாகப் பயமுறுத்திக் கொண்டிருக்கின்றன. ஒரு மல்லையாவைப் பற்றி நாம் பேசுகிறோம். ஆனால் இந்த வங்கிகளின் வாராக்கடன் பட்டியலில் இன்னும் எத்தனையோ மல்லையாக்கள் ஒளிந்து கிடக்கிறார்கள். இந்த நிலை இன்னும் ஓராண்டு நீடித்தால் சில பொதுத்துறை வங்கிகள் திவாலாகிவிடும் அபாயமே இருப்பதாகக் காற்றில் செய்திகள் கசிகின்றன. இந்த பட்ஜெட்டில் பத்தாயிரம் கோடி ரூபாய் வங்கிகளின் முதலாக அரசே கொடுக்கப் போவதாக பட்ஜெட் சொல்கிறது. இது ஓரளவுக்கு சில வங்கிகளின் நிதி நிலைமையை அண்டைக் கொடுத்தாலும், மொத்த வாராக்கடன்களின் தொகையை வைத்துப்பார்க்கும்போது இந்த பத்தாயிரம் கோடி போதவே போதாது என்கிறார்கள் விற்பன்னர்கள். தேவையென்றால் இன்னும் கூட அரசு வங்கிகளுக்கு நிதி உதவி தர இயலும் என்று அருண் ஜெயிட்லி உத்தரவாதம் அளித்திருக்கிறார். ஆனால் இந்த ஒதுக்கீடு மட்டுமே வங்கிகளின் நிலமையைச் சீர் செய்யப் போதாது. தனியார் வங்கிகள் மிகச்சீராய்ச் செயல்படும்போது பொதுத்துறை வங்கிகள் மட்டும் இப்படி ஆட்டம் கண்டிருப்பது அவற்றின் மேலாண்மைக் குறைபாடுதான். வங்கிக்கடன் அளிக்கும் வகைமுறைகளை முழுமையாகச் சீர் செய்து, வங்கியின் நிதி மேலாண்மையைப் பல மடங்கு மேம்படுத்துதல் அத்தியாவசியமாகும்.

ஆக நிதியமைச்சர் ஒரு விதமாகப் பல நல்ல மாற்றங்களைத் தந்து நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் சரியான கட்டமைப்பில் எடுத்துச்செல்லும் வழிமுறைகளை இந்த பட்ஜெட்டில் கொண்டு வந்திருந்தாலும், சில குறைகளும், விடுபட்டுப்போன முக்கிய நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டின் வீரியத்தை மட்டுப்படுத்தவே செய்கின்றன.

“இது அடாஸான பட்ஜெட்! ஒண்ணுத்துக்கு பிரயோஜனமில்லை” என்று ராஹுல் காந்தி, சீதாரம் யெச்சூரி , நிட்டிஷ் குமார் போன்றவர்கள் சொல்ல ,
“அருமையான கம்பி மேல் நடக்கும் வித்தை! இந்தியாவுக்கு இன்றைய காலகட்டத்தின் மிகத்தேவையான எல்லாவற்றையும் உள்ளடக்கிய அற்புதமான பட்ஜெட்” என்று பிரதமர் மோடி, அமித் ஷா மற்றும் நிர்மலா சீதாராமன் தெரிவிக்கிறார்கள். இந்த இரண்டு கருத்துக்கும் நடுவில்தான் எங்கோ இந்த பட்ஜெட்டின் உண்மையான நிலைமை இருக்கவேண்டும் என்பதாகத்தான் நமக்குப் புலப்படுகிறது!