Posted on Leave a comment

இந்திரா காந்தி மீது தாக்குதல்

 

இது குறித்து பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ஃபேஸ்புக்கில் எழுதி இருக்கும் பதிவு:

கதை கேளு… கதை கேளு கழகத்தின் கதை கேளு!
15. தி.மு.க. காங்கிரசின் சந்தர்ப்பவாதக் கூட்டணியும், அதிமுகவின் தோல்வியும்!

அரசியலில் நிரந்தர நண்பரும் இல்லை, பகைவரும் இல்லை என்பதற்கு நிரந்தர உதாரணமாக அமைந்த தேர்தல் 1980-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல் தான். அதேபோல், எம்.ஜி.ஆர் தலைமையிலான கோமாளிக்கூத்து ஆட்சிக்கு பாடம் புகட்டியதும் அந்த தேர்தல் தான்.

1979-ஆம் ஆண்டு தமிழகத்தில் பொருளாதார அடிப்படையிலான இட ஒதுக்கீட்டு முறையை எம்.ஜி.ஆர் அரசு கொண்டு வந்தது குறித்தும், அதைத் தொடர்ந்து அதிமுக-திமுகவை இணைக்க நடந்த முயற்சிகள் தோல்வியில் முடிந்தது குறித்தும் கடந்த அத்தியாயத்தில் விரிவாக விளக்கியிருந்தேன். இட ஒதுக்கீடு குறித்த எம்.ஜி.ஆரின் முடிவு தான் 1980-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அவருக்கு தோல்வியை வாங்கித் தந்தது. அதுபற்றி விரிவாகப் பார்ப்பதற்கு முன், 1977-ஆம் ஆண்டில் நடைபெற்ற மிகப்பெரிய அரசியல் வன்முறைத் தாக்குதல் குறித்து குறிப்பிட்டாக வேண்டும்.

இந்திராவுக்கு கருப்புக்கொடி

1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனதாக் கட்சி வெற்றி பெற்று ஆட்சியமைத்த 2 மாதங்களில், காங்கிரஸ் தலைவர் இந்திரா காந்தி தமிழகத்தில் சுறுப்பயணம் மேற்கொண்டார். இந்திரா காந்தியின் நெருக்கடி நிலை காரணமாக ஆட்சியை இழந்ததுடன், அடக்குமுறைக்கும் ஆளான திமுக, அதற்காக இந்திரா காந்திக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 29.10.1977 அன்று மதுரை வரும் இந்திரா காந்திக்கு கருப்புக்கொடி காட்டப்போவதாக அறிவித்திருந்தது.

திமுகவின் இந்த போராட்ட அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுக மீது சர்க்காரியா ஆணைய விசாரணை உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் பாய்ந்ததால், அதிலிருந்து தப்புவதற்காக மொரார்ஜி தேசாய் அரசை குஷிப்படுத்தும் வகையில் இந்திரா காந்தி மீது தாக்குதல் நடத்த திமுக சதித்திட்டம் தீட்டியிருப்பதாகவும் செய்திகள் பரவின. இதையடுத்து சென்னையில் இந்திரா காந்தி செல்லும் இடங்களில் எல்லாம் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. ஆனாலும், அதையும் தாண்டி இந்திரா காந்தி மீது மிகப்பெரிய கொலைவெறித் தாக்குதலை திமுகவினர் நடத்தினார்கள்.

அந்த தாக்குதல் குறித்து அதில் காயம்பட்டவரான, அப்போதைய தமிழக காங்கிரஸ் பொதுச்செயலாளரும், இப்போதைய தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவருமான நெடுமாறன் விளக்குகிறார்….

கொலைவெறித் தாக்குதல்

‘‘ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த சில மாதங்களில் இந்திரா மதுரைக்கு வருகை தந்தார். அவசர நிலை முறைகேடுகளுக்காக அவருக்குச் செல்லுமிடங்களிலெல்லாம் கறுப்புக்கொடி காட்டப் போவதாக தி.மு.க. அறிவித்தது. ஆனால் உண்மையான காரணம், இந்திரா காந்திக்கு கறுப்புக் கொடி காட்டுவதன் மூலம் பிரதமர் மொரார்ஜியை திருப்திப்படுத்தி சர்க்காரியா கமிசன் விசாரணை பின்விளைவுகளிலிருந்து தப்பிப்பதுதான்.

இந்திரா அன்று மதுரை ரேஸ்கோர்ஸ் திடலில் பேசுவதாக இருந்தது. தி.மு.க.வினர் கறுப்புக்கொடி காட்ட மிக “பலமான’ ஏற்பாடுகளைச் செய்திருந்தார்கள். நகரமே கொந்தளிப்பாக இருந்தது. விமான நிலையத்துக்கு இந்திராவை வரவேற்கப்போனபோதே, நான் நிலைமையின் தீவிரத்தை உணர்ந்தேன். அவரை வரவேற்று திறந்த காரில் பின்சீட்டுக்குப் பின்னால் உள்ள இடைவெளியில் தலையணைகளைப் போட்டு, இந்திராவை அமர வைத்தோம். காரில் நான், மரகதம் சந்திரசேகர், ஆர்.வி. சுவாமிநாதன், சித்தன் ஆகியோர் இருந்தோம். வழியெங்கும் மக்களைப் பார்த்துக் கையாட்டிக்கொண்டே வந்தார் இந்திரா. கார், தெற்கு வெளி வீதிக்குள் திரும்பியது.

காயமின்றி தப்பினார்

திடீரென்று, நாங்கள் வைத்திருந்த வரவேற்பு வளைவு கீழே தள்ளப்பட்டது. கார் மேலே போக முடியாமல் நின்றது. கறுப்புக் கொடி களுடன் திரண்டிருந்த தி.மு.க.வினர் இந்திராவைத் தாக்குவதற்குப் பாய்ந்தார்கள். ஆபத்தை உணர்ந்த நான் சில நொடிகளுக்குள் இந்திராவை பின்சீட்டில் படுக்க வைத்து அவர் மீது தலையணைகளை அமுக்கி, மேலே நான் படுத்துக் கொண்டேன். தடிகளுடன் பாய்ந்து வந்த தி.மு.க.வினர், தாக்கத் தொடங்கினர். தலையணைகளுக்கு அடியில் இருந்த இந்திரா மீது ஒரு அடி கூட விழாமல் அனைத்தையும் நான் வாங்கிக் கொண்டேன்.

காவல் துறையினர் கூட காப்பாற்ற நெருங்க முடியாத வகையில், தி.மு.க.வினர் காரைச் சுற்றிச் சூழ்ந்துகொண்டனர். பல நிமிடங்கள் என்மீது தாக்குதல் நீடித்தது. முதலில் திகைத்துப்போன ஓட்டுநர் ஜான், அப்புறம் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, அந்த ஆபத்தான சூழலிலும், காரை நடைமேடை மீது ஏற்றி, தி.மு.க.வினருக்கு இடையில் காரை விரைவாகச் செலுத்தி, சம்பவ இடத்திலிருந்து, புத்திசாலித்தனமாக வெளியே வந்தார்.

ஆபத்தில்லாத இடத்துக்கு கார் வந்த பிறகு, ‘‘இந்திராவுக்கு என்ன ஆயிற்று?’’ என்று பார்க்க தலையணைகளை நீக்கி விட்டு அவரை எழுந்து உட்காரச் சொன்னேன். அவரது புடைவையில் ஒரே ரத்தம். இவ்வளவு பாதுகாப்புக் கொடுத்தும் அவருக்குப் பாதிப்பு ஏற்பட்டுவிட்டதே என்ற பதைபதைப்பு எனக்கு ஏற்பட்டு விட்டது. ஆனால், இந்திராவுக்கு அடி எதுவும் படவில்லை. எனது தலையில்தான் பலத்த தாக்குதல் நடந்திருக்கிறது. அதிலிருந்து வழிந்த ரத்தமே இந்திராவின் புடைவையை நனைத்திருந்தது.

எனக்கு அடிபட்டிருக்கிறது என்பதைப் பார்த்ததும் இந்திரா மிகவும் கவலைப்பட்டுப் போய்விட்டார்.

‘‘ஆஸ்பத்திரிக்குப் போங்க’’ என்று ஓட்டுநருக்குக் கட்டளையிட்டார். ஆனால் இந்திராவை வைத்துக்கொண்டு மேலும் தெருக்களில் பயணம் போவது ஆபத்து என்பதால், ‘‘நீ சர்க்கியூட் ஹவுஸ் போப்பா’’ என்று ஓட்டுநரிடம் கண்டிப்பாகச் சொன்னேன். இந்திராவை சர்க்கியூட் ஹவுசில் பத்திரமாகச் சேர்த்துவிட்டு மருத்துவமனைக்குப் போய் கட்டுப்போட்டுக்கொண்டு மீண்டும் அவரைச் சந்தித்து கூட்டத்தில் அவருடன் கலந்து கொண்டேன்’’ என்று பழ. நெடுமாறன் விளக்கினார்.
இது 1977-ஆம் ஆண்டில் நடந்த முன்கதை சுருக்கம். அதன்பின்னர் இரு ஆண்டுகளில் மத்தியில் ஜனதாக் கட்சி அரசு கவிழ்ந்து விட, மக்களவைக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். யார், யாருடன் கூட்டணி சேருவார் என்று யூகிப்பதே கடினமாக இருந்தது. அந்த வேளையில் 1979-ஆம் ஆண்டு செப்டம்பர் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் அதிமுக, திமுக இணைப்பு குறித்து பேசப்பட்டிருந்ததால், செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளில் அது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்று தான் அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், நடந்ததோ வேறு….

திமுக- காங்கிரஸ் கூட்டணி

இரு ஆண்டுகளுக்கு முன் எந்த இந்திரா காந்தியை பழிவாங்க வேண்டும் என்ற உணர்வுடன் தாக்குதலை கட்டவிழ்த்து விட்டாரோ, அந்த இந்திரா காந்தியின் வீட்டில் கலைஞர் அமர்ந்திருந்தார். இருவரும் பேச்சு நடத்தில் கூட்டணியை அறிவித்தனர். இந்தக் கூட்டணியை ஏற்றுக் கொள்ள மக்கள் தயாராக இல்லை.
ஆனால், மத்தியில் இரு ஆண்டுகள் நடைபெற்ற ஜனதாக் கட்சி ஆட்சியில் நடைபெற்ற அவலங்களும், எம்.ஜி.ஆர் ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட கூத்துக்களும் ஜனதாக் கட்சி மீதும், அதிமுக மீதும் மக்களிடையே வெறுப்பை விதைத்திருந்தன. இதையெல்லாம் உணராத எம்.ஜி.ஆர் ஜனதாக் கட்சியுடன் கூட்டணி அமைத்தார்.
நேருவின் மகளே வருக… நிலையான ஆட்சி தருக!

Posted on Leave a comment

எழுத்தாளர் அழகிய பெரியவன் தமிழ்த் திசையை எரித்தார்

அதிமுக விளம்பரத்தால் கொதித்துப் போயிருக்கும் இலக்கியவாதிகளில் ஒருவரின் செயல் இது. அழகிய பெரியவன் ஒரு அரசுப்பள்ளியில் ஆசிரியர்! (திருப்பத்தூர் மாவட்டம், பேர்ணாம்பட்டு.) அரசுப் பள்ளி ஆசிரியர்களின் நடுநிலை இதுதான்.

இவரது கவிதை ஒன்று பதினோராம் வகுப்புப் பாடத்திலும் இடம்பெற்றிருக்கிறது.

Posted on Leave a comment

தயாநிதிமாறன் ஆபாசப் பேச்சு

திமுக நாகரிகமாக வாக்கு சேகரிக்கும் முறை.

//அமைச்சர் ராஜேந்திரபாலாஜி, ஜெயலலிதா எங்களுக்கு அம்மா, மோடி எங்கள் அப்பா என்கிறார். என்ன உறவுமுறை பாருங்கள். இதை நாம் சொன்னால் தவறு என்பார்கள். இவ்வாறு தயாநிதிமாறன் பேசினார்.//

(மேலே உள்ள பக்கத்தை தமிழ் தி ஹிந்து தனது தளத்தில் இருந்து நீக்கிவிட்டது)