Posted on Leave a comment

வலம் ஆகஸ்ட் 2020 இதழ்

வலம் ஆகஸ்ட் 2020 இதழை இங்கே வாசிக்கலாம்..

தபன் கோஷ்: வங்கத்தின் இந்து வாழ்வுரிமைப் போராளி | ஜடாயு

கருப்பர் கூட்டமும் தமிழ்நாட்டுக் கட்சிகளும் | ஓகை நடராஜன்

வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

ஸ்யாமா பிரசாத் முகர்ஜீ: ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

மகத்தான வெற்றி (Blockbuster) பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா

Posted on Leave a comment

அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா 

ஹாலில் டெலிபோன் மணி ஒலித்தது. நடேசன் எடுத்து “ஹலோ” என்றார்.

“அங்கிள், நான் பாசு பேசறேன்.” உடைந்த குரலே காட்டிக் கொடுத்து விட்டது.

“சொல்லுப்பா.”

“பத்து நிமிஷத்துக்கு மின்னே பெரியப்பா தவறிட்டார். டாக்டர் மோகன் வந்து பாத்துட்டு கன்ஃபர்ம் பண்ணினார்.” Continue reading அடுத்த தடவை (சிறுகதை) | ஸிந்துஜா 

Posted on Leave a comment

மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

(பொறுப்புத் துறப்பு: இந்த விஷயத்தில் பல்வேறு இடங்களில் கேள்விப்பட்ட, படித்த, பார்த்து அனுபவித்த விஷயங்களை மட்டுமே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். மற்றபடி நான் ஒன்றும் ஒரு தில்லாலங்கடி எழுத்தாளர் இல்லை. இன்னும் ஆகவில்லை என்று தன்னாகத்தோடு சொல்லிக்கொள்கிறேன்.) Continue reading மகத்தான வெற்றி பெறும் புத்தகத்தை எழுதுவது எப்படி? | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

ஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

(இந்திரப்பிரஸ்தா விஷ்வ சம்வாத் கேந்திரத்தின் சி.இ.ஓ அருண் ஆனந்த், ஆர்எஸ்எஸ் பற்றிய இரண்டு நூல்களை எழுதி உள்ளார். அவர் எழுதி ‘தி ப்ரிண்ட்’ இதழில் வெளியான இக்கட்டுரையின் தமிழாக்கம் இங்கே அவரது அனுமதியுடன் வெளியிடப்படுகிறது.) Continue reading ஸ்யாமா பிரசாத் முகர்ஜீயின் சத்தியாகிரகம் – ஜம்மு காஷ்மிர் விவகாரம் | அருண் ஆனந்த், தமிழில்: ஜனனி ரமேஷ்

Posted on Leave a comment

பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

இன்றைய கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் கல்வித்துறையைக் கையாள அரசும் அதைச் சார்ந்த சிலரும் தவறான ஆலோசனைகளை வழங்கி வருகிறார்கள். இது துரதிர்ஷ்டவசமானது, ஏனென்றால், மாணவர்களின் சுகாதாரத்தையும் அவர்களின் மனநிலையையும் இவர்கள் முற்றிலும் புரிந்துகொள்ளவில்லை என்பது பலவகையில் அவர்களின் அணுகுமுறையில் தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்தக் கொடும் நோய்த்தொற்றுக் காலத்தில் கல்வி அரசியலாக்கப்படுவது நல்லதல்ல. கல்வி மாணவர்களின் வாழ்க்கையோடு தொடர்புடையது. எனவே அதை அறிவார்ந்த வகையில் முறைப்படுத்துவது அவசியம். இந்த தவறான அணுகுமுறைக்கு, கல்வி சார்ந்து அரசின் அதிகாரப் பகிர்ந்தளித்தல் இல்லாமலிருப்பதும் ஒரு காரணம். Continue reading பேராசிரியர் எஸ்.வி.சிட்டிபாபு (1920-2020) – நவீன கல்வித்துறையின் முதுபெரும் அறிஞர் | பா.சந்திரசேகரன்

Posted on 1 Comment

இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

(Lectures on Ramayana by Rt. Hon’ble V. S. Srinivasa Sastri; Raamaayana Peruraigal, (Tamil translation by Smt. K. Savithri Ammal Both pub. By The Samskrita Academy, 84, Thiru Vi Ka Road, Mylapore, Chennai-600004)

சென்ற ஆண்டு சென்னை மயிலாப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரி வளாகத்தில் எனது சொற்பொழிவு ஒன்று நிகழ்ந்தது. பேசி முடித்த பிறகு உரையாடிக் கொண்டே நண்பர்களோடு அரங்கத்தை விட்டு வெளியே வந்தோம். வளாக வெளிப்பரப்பில் கிளைபரப்பி ஒரு பெரிய மாமரம் இருந்தது. Continue reading இந்தியா புத்தகங்கள் – பகுதி 3 | முனைவர் வ.வே.சு.

Posted on Leave a comment

புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

இந்த கட்டுரை காந்தி மற்றும் அவரது பஞ்சதளபதிகளைப் பற்றியதே. இந்திய சுதந்திரம் என்பது காந்தி எனும் தனிநபர் சாதனையல்ல என்பது மறுக்க இயலாத கூற்றே. இந்திய சுதந்திரத்திற்காகப் பாடுபட்ட பிற தலைவர்களின் தேசப்பற்றைக் கொச்சைப்படுத்துவது இக்கட்டுரையின் நோக்கமல்ல. அதற்காக நேதாஜியின் படையைக் கண்டு அச்சமுற்ற ஆங்கிலேயன் கௌரவத்தைக் காப்பாற்றிக் கொள்ளவே சுதந்திரம் அளிக்கப்பட்டது என்றும், உண்மையான போராளிகள் செக்கிழுத்தும், கல்லுடைத்தும் பாடுபட்டுக் கொண்டிருந்த போது காந்தி போன்ற போலிப் போராளிகள் சிறைகளில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தார்கள் என்றும் சொல்லி காந்தியின் பங்களிப்பைச் சிறுமைப்படுத்துவதும் சரியல்ல. Continue reading புரிந்து கொள்வோம் நம் தேசப்பிதாக்களை | சுசீந்திரன்

Posted on Leave a comment

வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

வீர் சாவர்க்கர் நம் எல்லோருக்கும் ஒரு சுதந்திரப் போராட்ட வீரராக அறிமுகமானவர். நம்நாட்டின் விடுதலைக்கான போராட்டத்தில் அவருடைய பங்கு குறித்து நம்மில் பலருக்கு தெரியும். ஆனால் சாவர்க்கரின் பங்களிப்பு வெறும் தேசத்திற்கான விடுதலைப் போராட்டத்துடன் முடிந்துவிடவில்லை. அவருடைய சமுதாயப் பங்களிப்பு மிகவும் உன்னதமானது, அதே நேரம் பலருக்கும் தெரியாதது. Continue reading வீர் சாவர்க்கரின் சமுதாயப் பங்களிப்பு | VV பாலா

Posted on Leave a comment

மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

விலக்கப்பட்ட வேள்வி

மே மாத இதழில் நம்முடைய ஐந்தாவது கேள்வியாகப் பின் வருவதை எழுப்பியிருந்தோம்: ‘பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில்—அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், Continue reading மகாபாரதம் தொடர் – பகுதி 6 | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு

(Listopad – A Memory of the Velvet Revolution)

செக்கொஸ்லொவேகியாவில் 1989ம் ஆண்டு நடைபெற்ற மென்பட்டுப் புரட்சி என்று அறியப்படும் Velvet Revolution சமயத்தில் நடைபெற்ற சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படம் லிஸ்டொபாத். ஏறத்தாழ ஒரு மாதம் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் மாணவர்கள் அதிரடிப்படைப் போலிஸின் அச்சுறுத்தல்களுக்கிடையே, அமைதிப் போராட்டங்கள், ஊர்வலங்கள் நடத்தி, தேசிய கீதம் பாடி, ‘ரஷ்யாவே வெளியேறு’ என்று கோஷமிட்டு, விடுதலை வேண்டிப் போராடினார்கள். அந்தச் சமயத்தில் செக்கோஸ்லோவேக்கியாவில் ஆட்சி எப்படி இருந்தது, மக்கள் எப்படி நடத்தப்பட்டார்கள் என்று பேசுகிறது திரைப்படம். Continue reading வெண்பட்டுப் புரட்சி | அருண் பிரபு