வலம் ஏப்ரல் 2021 – முழுமையான இதழ்

வலம் ஏப்ரல் 2021 இதழின் உள்ளடக்கம்:

ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு

இந்து மதத்தில் பெண்கள் | சுதாகர் கஸ்தூரி

கம்பனில் குலமும் சாதியும் | ஜடாயு

இந்தியா புத்தகங்கள் – 11 | முனைவர் வவேசு

சில பயணங்கள் சில பதிவுகள் 36 | சுப்பு

எங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

மாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்

மகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்

லும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்

 

லும்பன் பக்கங்கள் – 5 | அரவிந்தன் நீலகண்டன்

ஆனால் ராகுலை கவனியுங்கள். குஜராத்தில் சிவ பக்தன் வேஷம். தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் தன் உண்மையான கத்தோலிக்க சந்தோஷம். கோவில்களில் ராகுலின் உடல் மொழியைக் கவனியுங்கள். ஒரு கட்டாயமும் ஒவ்வாமையும் தெரியும். வேறுவழியில்லை இங்கே நிற்க வேண்டியிருக்கிறது. ஆனால் அதே ராகுலை கத்தோலிக்க தேவாலயங்களிலோ அல்லது கிறிஸ்தவ பாதிரிகளுடனோ பாருங்கள். இது தன்னிடம், இவர் நம்மவர் என்கிற உடல் மொழி தெரியும்.

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

மகாபாரதம் கேள்வி பதில் – 13 | ஹரி கிருஷ்ணன்

‘உறங்கிக் கொண்டிருந்த பாண்டவர்களை எரித்துக் கொல்வதற்காக வாரணாவதத்தின் அரக்கு வீட்டுக்கு நீங்கள் நெருப்பிட்டீர்களே, ஓ! ராதையின் மகனே {கர்ணா}, அப்போது, உனது அறம் எங்கே சென்றது?’

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

மாற்று யதார்த்தம் | ராம் ஸ்ரீதர்

ஆங்கிலப் புத்தகங்கள் / டிவி தொடர்கள் / திரைப்படங்கள், பரீட்சார்த்தம் என்ற பெயரில் விதவிதமாக, மிக விநோதமாகச் சிந்திக்கின்றன. நடந்து முடிந்த ஒரு வரலாற்று உண்மையை மாற்றி, அதற்குப் பதில் ‘இப்படி நடந்திருந்தால் (What If?)’ என்று வித்தியாசமாகச் சிந்திப்பதுதான் Alternate Reality எனப்படும் மாற்று யதார்த்தம். இந்தியாவில் நடந்த ஒரு நிகழ்வை வைத்து, மாற்று யதார்த்தம் ஒன்றை யோசிக்கலாமா?

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

எங்கும் பரந்து பல்லாண்டொலி (சிறுகதை) | கிரி பிரசாத் கண்ணன்

‘அப்பா, இந்த மண்டபம்தான நீங்க சொன்னது. ராஜா வந்தது, பாட்டு கேட்டது எல்லாம்?’ என்றான் சுந்தரத்தோளன்.

‘ஆம். இங்கதான். அதோ அந்தத் தூண்தான்’ என்று ஒரு தூணைச் சுட்டிக்காட்டினார் திருமலை. அந்தத்தூணின் மேல் பெரியாழ்வார் கைகளில் தாளத்தோடு இருந்தார். தூணின் பக்கவாட்டில் பாதி மறைந்து கல்வெட்டு இருந்தது. சிறுவன் வார்த்தை வார்த்தையாகப் படித்துக் கொண்டிருந்தான்.

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

சில பயணங்கள் சில பதிவுகள் 36 | சுப்பு

தமிழக முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் சிகிச்சைக்காக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்ற காலைநேரச் செய்தி தமிழகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கியது (அக் 5, 1984). முதலமைச்சரின் உடல்நிலை குறித்து அரசுத் தரப்பிலும் அப்போலோ மருத்துவமனை தலைமை டாக்டர் பிரதாப் சி ரெட்டி அறிக்கையிலும் ‘டயாலிசிஸ்’ சிகிச்சை செய்ததாகச் சொல்லப்பட்டிருந்தது. எம்ஜிஆர் உடல்நிலை தேறி வருகிறார் என்ற நம்பிக்கை வலுப்பெறும் நேரத்தில் அடுத்த அதிர்ச்சி. அவரது வலது பக்க கை கால்களை அசைக்க இயலவில்லை, மூளையில் ரத்த உறைவு உள்ளது என்பது தெரிய வந்தது..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

இந்தியா புத்தகங்கள் – 11 | முனைவர் வவேசு

மனிதகுல நல்வாழ்வுக்கு இந்தியாவின் பங்களிப்பு என்ன, இந்து மதத்தின் பார்வையில் கலை அழகியல் ஆகியவற்றின் வரலாறு, பல கரங்கள் கொண்ட இந்துமத தெய்வ வடிவங்கள், இந்திய இசை, இந்தியப் பெண்களின் நிலைமை, இளைய இந்தியா, புத்தமத அடிப்படைத் தத்துவங்கள், சிவ நடனம் போன்ற பதினான்கு கட்டுரைகளைக் கொண்ட தொகுப்பு இந்த நூல். நூற்று எழுபத்தைந்து பக்கங்களைக் கொண்ட பொக்கிஷம்; புரட்டும் பக்கமெல்லாம் வைர மணிகளாய்ச் சுடரும் ஒளிமிகுந்த கருத்துகள். இந்திய நாட்டுக் கலைகளின் மகோன்னதத்தை அகிலமே உணரும் படி எழுதப்பட்டுள்ள படைப்பு இது. இந்தியப் பள்ளிகளில் இதைக் கட்டாயப் பாடமாக்க வேண்டும். அந்த அளவுக்கு முக்கியமான புத்தகம்..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

இந்து மதத்தில் பெண்கள் | சுதாகர் கஸ்தூரி

நாடகங்கள் என்ற ஊடகமும், பாராயணம் என்ற சமூகத் தொடர்பு ஊடகமும் ஒரு சேரப் பெண்கள் மீது செய்யக்கூடாதவற்றை ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் சொல்லி வருவது, அன்றையப் பெண்கள் நிலையிலொரு அக்கறை சமூகத்தில் இருந்தது என்பதைச் சுட்டிக்காட்டுகிறது. இது 1960களின் துவக்கம் வரைத் தமிழகத்தில் இருந்து வந்ததை அறியலாம்.

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.

ரஷ்ய உளவாளிகள் | அருண் பிரபு

களத்தில் இருக்கும் படையினர் ‘பெரிய ஆபீசர் வருவார் என்று பார்த்தால் கர்னல் வருகிறார், ஆனால் அவர் ஸ்டாலினிடம் நேரடியாகப் பேசக்கூடிய செல்வாக்குள்ளவராம்’ என்று பேசியபடி தேடுதல் வேட்டை நடத்துகிறார்கள்..

தொடர்ந்து வாசிக்க சந்தா செலுத்தவும்.