வலம் செப்டம்பர் 2019 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.
Tag: வலம் செப்டம்பர் 2019
ஆவின் பால் விலையேற்றம் | பிரவீன் குமார்
நான்கு முதல் ஐந்து வருடங்களில் தண்ணீர்ப் பிரச்சினை காரணமாக நெல் பயிரிடும் பரப்பு
குறைந்துவிட்டது. இரண்டு போகம், அதாவது குறுவை மற்றும் சம்பா பருவத்தில், சம்பா பருவத்திற்கு
மட்டுமே தண்ணீர் கிடைப்பதால் அந்தக் காலங்களில் மட்டுமே பயிரிடப்படுவதால், வைக்கோலுக்கு
மூலமான நெல் பயிரிடும் பரப்பு குறைந்து வருகிறது. அதோடு அந்தப் பயிரினை எந்திரம் மூலமாக
அறுவடை செய்வதால், வைக்கோல் சரியாகக் கிடைப்பதில்லை, வைக்கோல் எல்லாம் கூலம் குப்பையாகப்
போகிறது. மாடு அதை விரும்பி உண்பதும் இல்லை. அதனால் வைக்கோல் பற்றாக்குறை மற்றும் பசுந்தீவனம்,
உலர் தீவனம், கலப்புத் தீவனம், தவிடு, புண்ணாக்கு விலைகள் எல்லாம் மிக அதிகமாக உயர்ந்துள்ளது.
நான்கு வருடத்திற்கு முன்னர் கோதுமைத் தவிடு விலை ரூ 700க்கு விற்றது. இன்றோ 1350 ரூபாய்க்கு
விற்கிறது. ரூ 24க்கு விற்ற கடலைப் புண்ணாக்கு ரூ 38க்கு விற்கிறது. தீவனம் ரூ 1650
ரூபாய்க்கு விற்கிறது. இப்படியான ஒரு சூழலில்தான் பால் கொள்முதல் விலையும், அதனால்
விற்பனை விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
முன்பு பால் கொள்முதல் விலை ரூ 17.25லிருந்து கடந்த 2011ம் ஆண்டு 6.25 ரூபாய் உயர்த்தப்பட்டு
ரூபாய் 24க்கும், அதன் பிறகு 2014ல் அது 26ஆகவும் உயர்த்தபட்டது. பின் 2 ரூபாய் உயர்த்தப்பட்டு
28 ஆகவும், எருமைப்பால் 35 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
முன்னர் 1 லிட்டர் பசும்பால் கொள்முதல் விலை 28 ரூபாய். ஆனால் மாடு வளர்ப்பவர்களான
எங்கள் கைக்குக் கிடைப்பது ரூபாய் 26 மட்டும்தான். எங்கள் பகுதியில் ஆவின் பால் கொள்முதல் மட்டுமே நடைபெறுகிறது.
தனியார் பால் கொள்முதல் எங்கள் பகுதியில் நடைபெறவில்லை. நிச்சயம் தனியார் கொள்முதல்
பால் விலை இதைவிடக் குறைவாகவே இருக்கும். ஒரு சில பெரும் பால் உற்பத்தியாளர்கள், ஆவின்
மற்றும் தனியார் நிறுவனங்களுக்கும் பால் விற்பதும் உண்டு.
எங்களுக்குரிய பால் கொள்முதல் பணத்தினை மாதத்தில் இரு தவணைகளாக 15 நாளுக்கு ஒருமுறை
சரியான நேரத்தில் தந்துவிடுகிறது. 15ம் நாள் மாலை 15 நாளுக்குரிய பணம் சரியாகப் பால்
உற்பத்தியாளர்களின் வங்கிக்கணக்கில் வந்துவிடும்.
தனியாரும் இரு தவணைகளில் செலுத்துகிறது. சில தனியார் நிறுவனங்கள் வாரம் ஒரு
முறை எனப் பணம் தருவதும் உண்டு.
தரவேண்டிய தீவனத்தை அரசு எங்களுக்கு ரூபாய் 1350க்குத் தருகிறது. (எடை 50 கிலோ.) தனியார்
தீவனம் ரூ 1650க்கு விற்கப்படுகிறது. (எடை 70கிலோ.) அரசு தரும் தீவனம் மாவட்டத் தலைமைப்
பால் நிலையத்திலிருந்து மட்டுமே வரும். அதற்கு மூட்டைகளை ஏற்றி இறக்க வண்டி வாடகையை
நாம்தான் தரவேண்டும். அதனால் தாமதம் ஏற்படுகிறது. உற்பத்தியாளர்கள் எல்லாம் சேர்ந்து
எடுத்து வர முயன்றாலும் தாமதம் ஆகிறது. அதனால் தீவனம் சரியான நேரத்துக்குக் கிடைப்பதில்லை.
போட வேண்டிய தடுப்பூசிகளை காலம் தவறாமல் சரியாக அரசு நடைமுறைபடுத்துகிறது. மாடுகளுக்கு
நோய்ப் பாதிப்பு உள்ளதா என அரசு கால்நடை மருத்துவர் மூலம் மாதம் ஒருமுறை சோதனை செய்கிறது.
சில தனியார் நிறுவனங்களும் இந்த மாதிரியான சோதனைகளைச் செய்கிறது. அதற்கென்றே மருத்துவர்களும்
இருக்கிறார்கள். இப்படிச் செய்யாத சில தனியார் நிறுவனங்களும் உண்டு. அவர்கள் பாலினை
மட்டுமே கொள்முதல் செய்து கொள்வார்கள்.
பாலை டீ கடைகளுக்கு அவ்வளவாக யாரும் வாங்குவது இல்லை. ஏனென்றால் அது தண்ணீர் கட்டாது.
அவர்கள் பாக்கெட் பால் மட்டுமே வாங்குவர். புதிதாகக் கடைவைக்கும் சிலர் பசும் பாலை
1 லிட்டர் ரூ 35 என மக்களைக் கவர வாங்குவர். ஆனால் அது தொடர்ந்து நீடிக்காது. அவர்களிடம்
இருந்து சரியாகப் பணமும் வருமா என்றால் நிச்சயமாகச் சொல்லமுடியாது. சில டீக்கடைகள்
மிகவும் குறைந்த விலையில் பாலைக் கொள்முதல் செய்வார்கள். வேறு வழியின்றி சிலர் இவர்களுக்குப்
பாலை விற்பதும் உண்டு.
அதன் விலையைப் பொருத்து காப்பீட்டில் அரசு மானியம் தருகிறது. வருடம் ஒருமுறை காப்பீட்டுப்
பணம் செலுத்துகிறோம். அதில் பாதிப் பணம் அரசு நமக்காகக் கட்டுகிறது. தொழிலுக்காக மாடு
வாங்கவும் அரசு கடன் உதவி செய்கிறது.
பசும்பால் விலை ரூ 28 லிருந்து 32 ஆகவும், எருமைப் பால் ரூ 36லிருந்து ரூ 41 ஆகவும்
நீண்ட நாள் கோரிக்கைக்குப் பின் அரசு தற்போது உயர்த்தித் தந்துள்ளது. மற்ற மாநிலங்களின்
பால்விலையோடு ஒப்பிடும்போது, தற்போது உயர்த்தப்பட்ட பிறகும்கூட, பெரிய வேறுபாடு இல்லை.
வளர்ப்புத் தொழிலுக்கு அரசு கான்க்ரீட் சுவருடன் மேல் தகரம் சீட் போட்டு, அதனுள் தண்ணீர்த்
தொட்டி, தவணையில் மின்விசிறி தந்து, கொட்டகை அமைத்துத் தந்துள்ளது. பால் கரப்பதற்கு
மிசின் தந்துள்ளது. ஆனால் அது எல்லா மாட்டிற்கும் இது ஒத்துவராது. மிசின் மூலம் பால்
கரப்பது சரிவராது. அதிக அழுத்தம் காரணமாக சில நேரங்களில் ரத்தம் கூட வந்துவிடும். இதெல்லாம்
அதிகம் பால் தரும் கிர், சாகிர் வாலா, காங்கிரஜ் போன்ற மாடுகளுக்கு மட்டுமே பொருந்தும்.
அதோடு ஒரு மாட்டிலிருந்து இன்னொரு மாட்டிற்கு மிசின் மாற்றும்போது தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது.
மிசின் பராமரிப்பு என்பது கொஞ்சம் கடினமானது. எங்கள் சங்கத்தில் உள்ள மிசின் யாரும்
பயன்படுத்தாமல் சும்மா கிடக்கிறது. அதையும் அரசு எடுத்துச் சென்று விட்டது. அதனால்
பெரும்பாலானவர்கள் கையால் மட்டுமே பால் கரக்கிறோம். அதற்கும் கிராமப் புறத்தில் இப்போதெல்லாம்
ஆள் கிடைப்பதில்லை. இந்தக் காரணத்தாலும் பலர்
மாடுகளை விற்கிறார்கள். தற்போது உள்ள சூழ்நிலையில், பால் கரக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே
மாடுகள் வைத்திருக்கும் நிலை உள்ளது.
எங்களிடம் பாலின் தரத்தைப் பொருத்தே கொள்முதல் செய்கிறது. தரத்தை லாக்டோ மீட்டர் மூலம்
சோதனை செய்து கொள்முதல் செய்கிறது. அதன் தரம் 27°முதல் 30°க்குள் இருக்க வேண்டும்.
இந்த டிகிரிக்குள் இருந்தால் மட்டுமே அரசு பாலினைக் கொள்முதல் செய்துகொள்ளும். மாடு
கன்று போட்டு பின் 5 நாளுக்கு அடுத்து, பால் தெளிந்து விட்டதா எனச் சோதனை செய்து, பின்பே
அரசு கொள்முதல் செய்கிறது. சில தனியார் நிறுவனங்கள் மேம்பட்ட கருவிகளை வைத்துள்ளன.
பாலை ஊற்றும்போதே அந்தக் கருவிகள் பாலின் தன்மை, அதில் உள்ள கொழுப்பின் அளவு, நீரின்
அளவு என எல்லாவற்றையும் துல்லியமாகக் காட்டிவிடும்.
வளர்ப்பவர்கள் சந்திக்கும் பல்வேறு வகைப்பட்ட பிரச்சினைகளைச் சொல்லி மாளாது. விடியற்காலை
முதல் இரவு வரை மாடுகளுக்குத் தண்ணீர் வைப்பது, வைக்கோல் போடுவது, தீவனம் வைப்பது,
குளிப்பாட்டுவது, பால் கரப்பது, சாணம் அள்ளுவது எனப் பணி ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ந்துகொண்டே
இருக்கும். மாடுகளைக் கவனிப்பதிலேயே நேரம் சென்றுவிடும். நிச்சயம் ஒரு ஆள் இருந்து
கொண்டே இருக்க வேண்டும். வெளியில் சுப விழா அல்லது ஏதோ தேவைகளுக்கு எங்கும் செல்ல முடியாது.
அப்படியே போனாலும் காலையில் போனால் மாலையில் வீட்டுக்கு வந்து விடும் தூரத்திற்கே வெளியில்
செல்ல முடியும்.
இப்படிப்பட்ட சூழ்நிலையில்தான்
பால் விற்பனையாளர்கள் இருக்கிறார்கள். ஒரு நாளைக்கு ஆவின் மூலம் தோராயமாக 25 லட்சம்
லிட்டர் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. மற்ற தனியார் நிறுவனங்களின் கணக்குகளையும்
சேர்த்துக்கொள்ளுங்கள். எத்தனை அவசியமான ஒரு உணவை நாங்கள் உற்பத்தி செய்கிறோம் என்பது
புரியும். இந்த நிலையில்தான் பால் விற்பனை உயர்வைப் பார்க்கவேண்டும். பால் விற்பனையின்
மூலம் ஒரு சில பெரும் விற்பனையாளர்களைத் தவிர மற்றவர்களுக்கு என்ன கிடைக்கும் என்பதை
சிந்தித்துப் பாருங்கள். அரசுக்கு பால் விற்பது மூலம் இவர்களுக்கு லாபமும் இல்லை நட்டமும்
இல்லை. தங்கள் வீட்டிலும் மாடு நிற்கிறதே என்ற ஒரு லாபம் மட்டும்தான். இதுதான் நிதர்சனம்.
அந்தமானிலிருந்து சாவர்க்கரின் கடிதங்கள் (பகுதி 4) | தமிழில்: VV பாலா
(புகைப்படம் நன்றி: savarkar.org)
9-3-1915.
போர்ட் ப்ளேயர்
அன்பிற்குரிய பால் (Bal).
கடிதம் கிடைத்து, ரிப்வான்வின்கிலைப் (Ripvanwincle) போலத் தூங்கி கொண்டிருந்த
நான், 7 – 8 மாதங்கள் கழித்து இப்போது பதில் எழுத முனைத்திருக்கிறேன். உன்னிடமிருந்து
கடிதம் வருவது உன்னைப் பார்ப்பதற்கு சமம். அதற்கு ஒரு காரணம், உன் கடிதங்களில் நீ கொடுக்கும்
சினிமா போன்ற விவரணைகள். மற்றொரு காரணம், சிறையில் இருப்பதனால் நாம் படிக்கும் விஷயங்கள்
நமக்குக் காதால் கேட்பது போன்ற ஒரு அனுபவம் ஏற்படுகிறது என்பதும். பிறவியிலேயே பார்வை
அற்றவர்கள், கேட்கும் விஷயங்களை கற்பனை செய்து கொள்வதைப் போல, சிறையின் தனிமை நமக்கு
அது போன்றதொரு அனுபவத்தைக் கொடுக்கிறது. நான் எப்போதெல்லாம் உன் கடிதத்தைப் படிக்கின்றேனோ
அப்போதெல்லாம் உன்னையும் கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள நம் வீட்டில் உள்ள மற்ற சொந்தங்களையும்
அங்கே நடந்த நிகழ்ச்சிகளையும் பார்ப்பது போல உணர்கிறேன். நீ நன்றாக ஆரோக்கியமாக இருப்பது,
நல்லபடியான வாழ்க்கை வாழ்வது எனக்கும் நம் அன்பு சகோதரர் பாபாவுக்கும் மகிழ்ச்சியைக்
கொடுக்கின்றது. எங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைப் பற்றிக் கவலை கொள்ள வேண்டாம்.
நீ சென்ற வருடம் அனுப்பிய புத்தகங்கள் மொத்தம் 16. இந்த வருடம் 13. அதில் அக்டோபரில்
இரண்டு, நவம்பரில் இரண்டு என்று நான்கு ஆங்கிலம், மற்றவை சம்ஸ்க்ரிதமும் மற்ற பிராந்திய
மொழிகளும். இந்த விவரம் சரியா என்பதை நீ எழுது. அடுத்த முறை நீ பார்சல் அனுப்பும்போது
உன் கைப்பட அதில் உள்ளவற்றைப் பட்டிலியலிட்டு அனுப்பு. இங்கே அவற்றைப் பெற்றுக்கொள்ளும்
போது சரிபார்க்க அது உதவும்.
ரஹஸ்ய நாவல் நன்றாக இருந்தது. (ஏன் அதனை இரண்டு பிரதி அனுப்பி இருந்தாய்?) அது ஒரு
நல்ல புதினம். இன்னொரு விஷயம் – நம் சமுதாய அமைப்புக்களிலேயே இந்த சாதி அமைப்பு என்பது
நம் நாட்டின் மிக பெரிய சாபக்கேடு. இது இந்த மாபெரும் ஹிந்து சமுதாயத்தை அழித்து விடக்
கூடிய அபாயம் இருக்கின்றது. நாம் இதனை நான்கு சாதிகள் உள்ள அமைப்பாகக் குறைப்போம் என்ற
வாதம் எல்லாம் பயன் தராது. அது நடக்கவும் நடக்காது. இது வேரோடு பிடுங்கி களையப்பட வேண்டும்.
அதற்கான சிறந்த வழி, அதனை எதிர்த்து பிரசாரம் செய்வது. நம் இலக்கியங்கள், நாடகங்கள்,
புதினங்கள் என்று எல்லாவற்றிலும். ஒவ்வொரு தேசபக்தனும் இரட்டை நிலைப்பாடுகளை எடுக்காமல்
தன் மனதில் உள்ளதைத் தெளிவாக வெளிப்படுத்தவும் அதேபோல் அதனை செயலில் காட்டவும் வேண்டும்.
ஆனால் அதே நேரம் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தும்போது நாம் நம்முடைய சொந்தங்கள் இடையே
எந்த பிணக்கும் வந்து விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் நம்முடைய ஆட்கள் கேட்கும்
கேள்விகளுக்கு எல்லாம் திருப்திகரமாக பதில் அளிப்பது என்பது இயலாத காரியம். நான் அதற்காகத்தான்
‘சமாஜரகஸ்யம்’ போன்ற பல கதைகளை எழுத உள்ளேன். அவற்றில் இந்த சமுதாயத் தீமைகளைச் சாடுவேன்.
இவற்றால் ஒரு காலத்தில் நன்மை இருந்திருக்கலாம், ஆனால் இப்போது இது செத்து விட்டது.
அதனால் இதனை, நீ விரும்பினால் கண்ணீருடன், புதைக்க வேண்டிய காலம் வந்து விட்டது. என்னைப்
பார்க்க உனக்கு அரசு இந்த வருடம் அனுமதி அளிக்க போகிறது என்ற செய்தி எனக்கு மகிழ்ச்சியைத்
தந்தது. அதற்காக நான் அதிகாரிகளுக்கு நன்றி சொல்வேன். ஆனால் வாகினி இந்த வருடம் இந்தப்
பயணத்தை மேற்கொள்ள வேண்டாம் என்று நான் கருதுகிறேன். நீ தனியாக வா. இங்குள்ள வசதிகளை
எல்லாம் பார்த்துவிட்டு அடுத்த வருடம் வேண்டுமானால் அவளையும் அன்பிற்குரிய மாயி-யையும்
(Mai) அழைத்துக் கொண்டு வா. அவர்களைப் பார்க்க கூடிய பாக்கியத்தை இந்த வருடம் நான்
தியாகம் செய்வதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றுகிறது. அதுவும் அவர்களுடைய நன்மைக்காகத்தான்.
அதனால் இந்த வருடம் நீ தனியாக வரவும்.
படைகள் ஐரோப்பாவிற்குச் செல்ல அனுமதிக்கப்பட்டது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவர்கள் அங்கு சென்று உலகின் மிக சக்தி வாய்ந்த ராணுவத்திற்கு எதிராக தீரத்துடன் போர்
புரிந்து பெருமை பெற்றிருகின்றனர். இந்த மண்ணில் இன்னமும் ஆண்மை மடியவில்லை. அயல்நாட்டிற்குப்
பயணம் செய்வதை நாம் ஊக்குவித்து கொண்டிருந்தோம். வருடத்திற்கு பத்து பன்னிரண்டு பேர்
அயல்நாடுகளுக்கு சென்றாலே நாம் எதோ சாதித்து விட்டதைப் போல மகிழ்ச்சி அடைவோம். ஆனால்
நம்மால் செய்ய முடியாதது இப்போது கடவுள் அருளால் தானாக நடக்கிறது. பழமையில் ஊறி இருந்த
ஆயிரக்கணக்கான ஹிந்துக்கள் இப்போது சீக்கியர்கள் கூர்க்காக்கள் மற்றும் ராஜபுத்திரர்கள்
போல் தங்கள் நிலைகளில் இருந்து மாறி கடல் கடந்து அரசு செலவில் பயணிக்கிறார்கள். நம்
பண்டிட்கள் கடல் கடந்து போகலாமா கூடாதா என்று சாஸ்திரங்களைப் புரட்டி ஆராய்ச்சி செய்து
கொண்டிருக்கட்டும். அனுமதி உண்டோ இல்லையோ, ஹிந்துக்கள் கடல் கடந்து சென்று விட்டார்கள்.
அவர்கள் அதன் மூலம் ஒரு புதிய சகாப்தத்தையும் படைத்து விட்டார்கள். சிலுவைப் போர்கள்
மூலம் ஆசியாவின் மேம்பட்ட நாகரீத்தோடு தொடர்பு கொண்ட ஐரோப்பியர்களுக்கு என்ன நேர்ந்ததோ,
அது இப்போது நம் வீரர்களுடன் ஐரோப்பியர்கள் தொடர்பு கொள்வதால் இந்தியாவிற்கும் ஆசியாவிற்கும்
ஏற்படும்.
உள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனு அளித்த அவர்களது
கருணை மிக்க செயலுக்கு நாம் பாராட்டவேண்டியதில்லை. எங்களில் பலர் ஏற்கெனவே போர்முனைக்குச்
செல்ல முன்வந்துவிட்டோம் என்பது உனக்குத் தெரிந்திருக்கும். அரசாங்கமும் இது குறித்து
குறிப்பு ஒன்றை வெளிட்டு உள்ளது. ஆனால், அதற்கு இதுவரை பதில் எதுவும் வரவில்லை.
போல பார்லிமெண்டில் எதோ ஒரு உறுப்பினர் என்னைப் பற்றி அல்லது எங்களைப் பற்றிக் கேள்வி
எழுப்பியதாக வந்த வதந்தியைப் பற்றிக் கொஞ்சம் எழுது. அது உண்மையாக இருந்தால் அது குறித்து
மேற்கொண்டு தகவல்களைக் கூறு. குரு மற்றும் ரவி குறித்த கவிதைகள் உனக்குக் கிடைத்ததா?
கோகலே அவர்கள் இறந்துவிட்டார் என்ற செய்தி என்னை உலுக்கியது. அவர் ஒரு சிறந்த தேசபக்தர்.
ஒரு சில சமயம் அவர் அவசரத்தில் பதட்டத்தில் சில விஷயங்களைக் கூறுவார், செய்வார். பிறகு
சில மாதங்கள் கழித்து அது அவராகவே அது குறித்து வெட்கப்படுவார். ஆனால், அவருடைய வாழ்க்கை
தன்னலம் இன்றி தேசத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒன்றாகும். அவர் எப்போதும் நாட்டின்
நலனைக் குறித்தே சிந்தித்துக் கொண்டிருந்தார். அதில் துளிகூட சுயநலம் இருக்காது. வாழ்க்கை
முழுவதும் இந்தியாவுக்காகவும் அதன் நன்மைக்காகவுமே உழைத்தார். அவரை நேரில் சந்தித்து
லண்டனில் அவர் என்னிடம் கூறிய விஷயங்கள் குறித்து அவரோடு விவாதிக்க வேண்டும் என்று
நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அதற்குள் மரணம் எங்களைப் பிரித்துவிட்டது. எனக்கும்
அவருக்கும் சில விஷயங்களில் கருத்து ஒன்றிப் போகவில்லை, அதற்கு அப்போது அவர், “நல்லது
மிஸ்டர் சாவர்க்கர், நாம் ஆறு வருடங்கள் கழித்து சந்திப்போம். அப்போது இந்த குறிப்புகளை
நாம் ஒப்பிட்டுப் பார்ப்போம்” என்றார். மகாராஷ்டிரம் கவுன்சிலுக்கு அவரைப் போல சிறந்த
நபர் ஒருவரைப் பிரதிநிதியாக அனுப்பி வைக்க வேண்டும். அவர் சாதித்த அளவு ஒவ்வொரு இந்தியனும்
சாதித்தால் எப்படி இருக்கும்!
முறை நீ புத்தகங்கள் அனுப்பும்போது ஜன்மபூமி மற்றும் கௌதமன் போன்ற நாவல்களை அனுப்பு.
சகோதரர் அவற்றைப் படிக்க வேண்டும் என்று ஆவலோடு இருக்கிறார். பிரான்ஸ் நாட்டின் ஆக்கிரமிப்பால்
நீ மேடம் காமாவிடம் தொடர்பு கொள்ள இயலாமல் போய்விடுமே என்று நான் அஞ்சிகொண்டிருந்தேன்.
நான் இங்கு வந்த பிறகு அவர்தான் உனக்குத் தாய் போல வழிகாட்டிக் கொண்டிருந்தார். நம்முடைய
மிக கஷ்டமான நேரங்களில் நமக்கு உறுதுணையாக இருந்தவர் அவர். ஆனால் இத்தகைய சூழலிலும்
அவர் உனக்குக் கடிதங்கள் மூலம் தொடர்பில் இருந்தார் என்பதைக் கேட்டு நான் மகிழ்ச்சி
அடைந்தேன். நமக்கு நெருக்கமானவர்கள் இழிக்கும் துரோகத்தால் நிலைகுலைந்து போயிருக்கையில்
இவர்களைப் போன்ற தூய அன்பு கொண்டவர்களின் தொடர்பு நமக்கு மனிதநேயத்தைக் குறித்து நம்பிக்கை
கொள்ளச் செய்கிறது. அவருடைய தூய்மையான வாழ்வு குறித்தும் கஷ்டத்தில் இருக்கும் மற்றவர்களுக்கு
உதவும் அவருடைய பாங்கு குறித்தும் நான் எவ்வளவு மதிப்பு கொண்டிருக்கிறேன் என்பதை அவருக்கு
நேரடியாகக் கடிதம் மூலம் என்னால் தெரிவிக்க இயலவில்லை. நம் உறவினர்களிடம் நான் அவரைக்
குறித்து விசாரித்ததைத் தெரிவிக்கும் முன், நீ இவரிடம் என் அன்பையும் விசாரிப்பையும்
தெரிவித்து விடு. அவர்களைக் காட்டிலும் இவர் நம் மீது அதிக அக்கறை கொண்டிருக்கிறார்.
ஏன் அவர் நமக்கு இதைச் செய்கிறார் என்பது ஆச்சரியம். அதையும் அவர் மீண்டும் மீண்டும்
செய்கிறார் என்பது பெரிய ஆச்சரியம்.
அனுப்பிய புத்தகங்கள் மூலம், தெலுங்கு மாகாணங்களில் பரவி வரும் இயக்கம் இங்குள்ள பலரையும்
தொற்றிக்கொண்டுள்ளது. ஆந்திர சபா ஒரு பெரிய இயக்கம்தான். ஆனால் தமிழில் இருந்து பிரிந்து
போய் தனி மாகாணமாக ஆவது என்பது சரியான போக்கு அல்ல. இத்தகைய பிராந்திய வாதங்களின் எதிரொலியாக
தேசிய அளவில் ஆந்திர மாதாகி ஜெய் போன்ற கோஷங்கள் வருவது வருத்தத்திற்குரிய ஒன்று. இது
பிற்பாடு வரபோகும் ஆபத்தான பிரிவினை வாதங்களுக்குக் கட்டியம் கூறுவது போல உள்ளது. சுதேசி
என்ற மாபெரும் இயக்கத்திற்குக் கிடைத்துள்ள எதிர்வினை இது போன்ற நிலைப்பாடுகள். இவை
ஆரம்பத்திலேயே சரி செய்யப்பட வேண்டும். வங்க தேசத்தில் பிரிவினை ஏற்பட்டபோது அதற்கும்
சுதேசிக்கும் இருந்த சிறிய தொடர்பே இத்தகைய எதிர்வினைகளுக்கு காரணம். இப்போது ஒவ்வொரு
மாகாணமும் அது போலப் பிரிய வேண்டும் என்று ஆசைப்படுகிறது. ஆனால் தேசம் என்ற பாதுகாப்பு
இல்லாமல் இந்தப் பிராந்தியங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கும்? மகாராஷ்டிரா, பெங்கால்,
மெட்ராஸ் எல்லாமே செழித்து ஓங்கும், ஆனால் அது இந்தியா என்ற கட்டமைப்பிற்குள் இருக்கும்
வரைதான். எனவே, ஆந்திர மாதாகி ஜெய் என்று கோஷம் எழுப்புவதற்கு பதில் பாரத் மாதா கி
ஜெய் என்று கோஷம் எழுப்புவோம், ஆந்திரம் அதன் ஒரு பகுதிதான். அதே போல வங்க ஆபார் என்ற
கோஷத்திற்கு பதில் ஹிந்த் ஆபார் என்று கோஷம் எழுப்புவோம். ஒவ்வொரு மாகாணமும் பிரிவினை
என்ற எண்ணத்தை விட்டுவிட்டு ஒன்றாக இணைந்து மொழிகளால் ஏற்பட்டிருக்கும் குழப்பங்களையும்
தடைகளையும் நீக்க வேண்டும். சிறிய தேசங்கள் குறித்து சிந்திக்கும்போது பெல்ஜியத்தில்
நடந்தது நமக்கு எச்சரிக்கை அளிக்கட்டும். தன்னை அறியாமல் பிரிட்டிஷ் அரசாங்கம் நமக்கு
நன்மை ஒன்றைச் செய்திருக்கிறது என்றால், அது நம்மிடம் உள்ள பேதங்களை எல்லாம் மறந்து
நம்மை ஒன்றிணைத்திருப்பதுதான். இப்போது இந்த ஒற்றுமையை வலுப்படுத்தாமல், நாம் நமக்குக்
கிடைத்த இந்த வரப்பிரசாதத்தைப் பயன்படுத்தாமல், பிரிவினை பேசி கிடைத்த வரத்தை சாபமாக
மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
தோன்றியவற்றை எல்லாம் எழுதிவிட்டேன். உன் கடிதம் மற்றும் நீ அனுப்பிய புத்தகங்கள் பற்றியும்
கேட்டு விட்டேன். அடுத்த முறை நான் அனுப்பும் பட்டியலில் இருக்கும் புத்தகங்களை அனுப்பு.
அவற்றை பார்சலாக அனுப்பாமல் செப்டம்பர் ஒன்றாம் தேதி நீ வரும்போது கொண்டு வந்தாலும்
போதும். அது முடியவில்லை என்றால் பார்சல் அனுப்பு. நம் நண்பர்களிடம் தொடர்பு கொண்ட
பிறகு இந்தக் கடிதத்திற்குப் பதில் போடு. நீ கடிதத்தில் குறிப்பிட்ட அந்த நல்ல மனிதரை
நீ சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. ஒரே சிந்தனை கொண்டவர்கள் ஆதலால் உங்கள் இருவருக்கும்
ஒருவர் மீது ஒருவருக்கு ஈர்ப்பு ஏற்படும் என்பது எனக்குத் தெரியும். அவரிடம் நான் விசாரித்ததாகக்
கூறவும். அவரை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன். நம் பேராசிரியர் எப்படி இருக்கிறார்?
மிகுந்த போராட்டங்களை சந்தித்த பின் ஒரு பறவை இப்போது கூட்டிற்குத் திரும்பி இருக்கும்
என்ற எண்ணம் எனக்கு மகிழ்ச்சியை தருகின்றது. அவர் விடுதலையானது நானே விடுதலை ஆனது போல
சந்தோஷத்தை எனக்கு அளிக்கின்றது. சாகாராமும் இப்போது அங்கிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.
கொண்ட கொள்கைக்காக மரணம் எய்தினான் என்றாலும் அது முட்டாள்தனமான முடிவு. இப்போது அதை
நினைத்தாலும் மனது வலிக்கின்றது.
பற்றி நீ வருத்தம் கொள்ள வேண்டாம். தண்டனை பெற்ற நிறைய கைதிகள் இங்கு விடுதலை பெற்று
வருகிறார்கள். எங்களைப் போல ஆயுள் தண்டனை பெற்றவர்கள் மட்டும்தான் இப்போது இங்கே இருக்கின்றோம்.
போர் நடந்து கொண்டிருக்கும் வரை அதிகாரிகளை சங்கடபடுத்தும் வகையில் எதையும் கேட்க வேண்டாம்
என்று நான் தீர்மானித்திருக்கிறேன். தற்போது எங்கள் இருவருடைய உடல் ஆரோக்கியமும் நல்ல
நிலையில் இருக்கிறது. இப்போது சிறை நிர்வாகத்தை காப்டன் மேஜர் மர்ரே என்பவர்தான் பார்த்துக்
கொண்டிருக்கிறார். அவர் இங்கு இருக்கும் வரை விதிகளை மீறி எங்களுக்கு எந்த விதமான தீங்கும்
இழைக்கப்படாது என்பதில் நீ உறுதியாய் இருக்கலாம். நீ அனுப்பும் ஒவ்வொரு கடிதமும் ஒவ்வொரு
புத்தகமும் எனக்கு ஒழுங்காக வந்து சேர்ந்து விடும். எங்களுடைய தினப்படி வாழ்க்கை சென்ற
வருடத்தைப் போலவே சென்று கொண்டிருக்கிறது. இங்கு சிறையில் முதல் நாள் என்ன நடக்கின்றதோ
அதுவே தொடர்ந்து நடக்கும். இது சிறை ஒழுங்கின் சிறப்பு. அருங்காட்சியகத்தில் உள்ள பொருட்களைப்
போலவே ஒவ்வொருவருக்கும் நம்பர் தரப்பட்டு ஒரு கூண்டில் அடைக்கப்பட்டிருக்கிறோம். நான்
கடந்த வருடங்களில் உனக்கு எழுதி அனுப்பிய வழிகாட்டி புத்தகம், நான் இங்கு இருக்கும்
வரையில் எங்கள் சிறை வாழ்கையை சித்தரிப்பதாக இருக்கும். நாங்கள் சீக்கிரம் எழுந்து,
கடுமையாக உழைத்து நேரா நேரத்திற்குச் சாப்பிடுகிறோம். எல்லாம் அதே நேரத்தில் அதே இடத்தில
நடக்கும். ஒரே மாதிரியான உணவே இங்கு தயாரிக்கப்படும். அதே போலத்தான் மருத்துவ வசதிகளும்.
நான் வேலை முடிந்த பிறகும் சில நாட்கள் மாலையிலும் படிக்கின்றேன். சில சமயங்களில் பெயர்
தெரியாத பூக்களைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டு அப்படியே தூங்கிப்போவேன். இங்கு சிறையைப்
பற்றி ஒன்று கூறியாக வேண்டும். இங்குள்ள கைதிகளுக்கு தாங்கள் நினைத்ததைச் செய்யவும்
சொல்லவும் சுதந்திரம் கிடையாதே தவிர, அவர்கள் கனவு காண எந்தத் தடையும் இல்லை. இந்தச்
சலுகையை நான் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறேன். ஒவ்வொரு நாளும் இரவில் நான் சிறையிலிருந்து
தப்பித்து வெளியே சென்று உன்னைப் போன்ற எனக்கு நெருக்கமானவர்களைச் சந்தித்து வருகிறேன்.
ஒவ்வொரு இரவும் இதனை நான் செய்கிறேன். ஆனால் கருணை கொண்ட சிறை அதிகாரிகள் இதனைக் கண்டுகொள்வதில்லை.
நீ விழித்து எழும்போது சிறையில் கண் விழித்தால் போதும் என்பதே அவர்கள் சொல்வது.
முடிந்ததும் எங்கள் எல்லோரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று பொது மனு ஒன்றினை நீ
அனுப்பு. இந்தியாவில் மட்டுமல்ல, சுயாட்சி நடக்கும் எந்தவொரு நாட்டிலும் மக்களின் விருப்பதிற்கு
மாறாக அரசியல் கைதிகளைச் சிறையில் வைத்திருக்க இயலாது. மக்களுடைய கோரிக்கை இன்றி எந்த
அரசாலும் கைதிகளுக்குப் பொது மன்னிப்பு வழங்க இயலாது. போர் முடிந்த பிறகு இந்தியர்களிடம்
அத்தகைய மனு ஒன்று அனுப்பப்படுமேயானால் நாங்கள் விடுதலை செய்யப்படலாம். இல்லையேல் எங்களை
விடுதலை செய்ய அரசாங்கத்தால் இயலாது. மக்கள் எங்களுக்காகக் குரல் கொடுக்கவில்லையென்றால்
நாங்கள் விடுதலை பெறுவதிலும் அர்த்தம் இல்லை. போர்ட் ப்ளேயர் எங்களை இங்கேயே வைத்துக்
கொண்டிருக்கும். எப்படி இருந்தாலும் நீ எங்களுடைய விடுதலைக்காக மனுவினை அனுப்பு. இங்கு
கூடுதல் சிறைத் தண்டனை பெற்றவர்கள் எல்லாம் கூட தங்கள் குடும்பத்தை இங்கே கொண்டு வந்து
குடி அமர்த்திக்கொள்ள அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். நாம் சிறை விதிகளின்படி நமக்குக்
கிடைக்க கூடிய சலுகைகளைத்தான் கேட்கிறோம். கூடுதலாக வேறெதையும் அல்ல. இதற்காகத் தொடர்ந்து
நீங்களும் நாங்களும் மனு கொடுத்துக்கொண்டிருந்தால் நமக்கு இதில் வெற்றி கிடைக்கும்.
வருடம் நம்முடைய அன்பிற்குரிய வாகினி எழுதிய கடிதத்தில் நமது குட்டி தோண்டி எப்படி
இருக்கிறாள் என்பதைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை. அவளுக்குத் திருமணம் ஆகிவிட்டதா?
அன்பிற்குரிய யமுனாவிடம் நான் விசாரித்ததாகக் கூறவும். அவளுடைய உடல்நலம் எப்படி இருக்கின்றது?
அவள் படிக்கின்றாளா? பல்வந்த் ராவ் இப்போது எந்தக் கல்லூரியில் எந்த வகுப்பு படித்துக்
கொண்டிருக்கிறான்? மற்ற குழந்தைகள் எப்படி இருக்கிறார்கள்? மதிப்பிற்குரிய அண்ணியிடம்
என் வந்தனங்களைக் கூறவும். எந்தத் தவறும் செய்யாத அவர் செய்திருக்கும் தியாகம் மிகப்
பெரியது. சென்ற வருடம் வந்த மாயியின் கடிதத்தின் மூலம், வாகினி என்னைப் பற்றி நினைவில்
வைத்திருக்கிறாள் என்பதை அறிந்துகொண்டேன். நான் அவர்களையும் மற்றும் நம் நண்பர்கள்
எல்லோரையும் தினமும் நினைத்துக்கொள்வேன். என் மனம் எங்கெங்கோ அலைந்து கொண்டிருந்தாலும்,
அவ்வப்போது இவர்களைப் பற்றிய நினைவு வந்து மகிழ்ச்சியும் துக்கமும் ஒருசேரக் கலந்த
ஒரு உணர்வில் அது ஆழ்ந்துவிடும். அவர்கள் என்னை எப்போதும் மறவாதிருக்க வேண்டும் என்பதே
என் பிரார்த்தனை. என்பால் நேசம் கொண்டவர்களும் என்னை நேசிக்க அனுமதித்தவர்களும் என்
மனக்கோவிலில் எப்போதும் குடி கொண்டிருக்கிறார்கள்.
சகோதரா, உன் மருத்துவப் படிப்பு உனக்கு நல்ல பயன் தரும் என்று எண்ணுகிறேன். படிப்பிற்காக
உடல் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொள்ள வேண்டாம். உனது உடல் எடை என்ன என்பதைக் கூறவும்.
அன்பிற்குரிய பால், உனக்கும், வசந்திற்கும், நம் சகோதரி மாயிக்கும் என் அன்பும் ஆசிர்வாதங்களும்.
விடை பெறுகிறேன்.
உன் சகோதரன்
தாத்யா.
ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) – லாலா லஜ்பத் ராய் (பகுதி 5) | தமிழில்: கிருஷ்ணன் சுப்பிரமணியன்
மிகவும் முக்கியமானவையாகவும் பொருத்தமானவையாகவும் இருப்பதால், அவற்றிற்கு அதிக முக்கியத்துவம்
கொடுத்ததற்காக நான் வருத்தம் தெரிவிக்க மாட்டேன். (அ) வெவ்வேறு மதங்களை, அவர்கள் ஒப்புக்
கொள்ளும் விஷயங்களை வலியுறுத்துவதன் மூலமும், அத்தியாவசியமற்றவற்றை நீக்குவதன் மூலமும்,
அவற்றிற்கிடையேயான வேறுபாடுகளை குறுகிய வரம்புகளுக்குள் கட்டுப்படுத்துவதன் மூலமும்
முடிந்தவரை ஒருங்கிணைப்பது. (ஆ) எவருடைய நம்பிக்கையின் ஆணிவேரையும் அசைக்காத வகையில்
சமூகங்களுக்கிடையேயான தொடர்புகளை மேம்படுத்த ஏதுவாக அனைத்துத் தடைகளையும் நீக்குதல்
ஆகிய இரண்டையும் சாத்தியமாக்க ஒவ்வொரு முயற்சியும் மேற்கொள்ளப்பட வேண்டும்
அதற்கான எந்த அங்கீகாரத்தையும் நான் காணவில்லை. வரலாற்றில் அதைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை.
தீண்டத்தகாதவர்களைப் பொருத்த விஷயத்தில், மிகவும் விவேகமான ஹிந்துக்கள், குறைந்தபட்சம்
அது புத்தியில்லாத, மனிதாபிமானமற்ற, சகித்துக்கொள்ள முடியாத விஷயம் என்று ஒப்புக் கொள்கிறார்கள்,
ஏனெனில் அவர்கள் ஒரே மதத்தைப் பின்பற்றுபவர்களாகவும், உயர் சாதிகள் என்று அழைக்கப்படுபவர்களைக்
கொண்ட அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள். ஆர்ய சமாஜத்தைப் போன்ற சில
மேம்பட்ட சீர்திருத்தவாதிகள், அவர்களுக்குப் பூணூல் அணிவிப்பதன் மூலமும், சமபந்தி போஜனங்கள்
நடத்துவதன் மூலமும், அவர்களுடன் திருமண உறவுகளைச் செய்துகொள்வதன் மூலமும் சமூகத்தில்
அவர்களை உயர்த்துவதற்குத் தயாராக உள்ளனர். மிகவும் பழமைவாதிகளாக இருப்பவர்கள் கூட பல
சந்தர்ப்பங்களில் தங்கள் வீட்டுத் தரையில் அவர்களை (நடக்க) அனுமதிக்கவும், பொதுப்பள்ளிகளில்
அவர்களை அனுமதிக்கவும், மற்றும் தொடுதலின் மூலம் மாசுபடுதல் ஏற்படுகிறது போன்ற கருத்துகளையும்
அகற்றத் தயாராக உள்ளனர். அவர்கள் விஷயத்தில் குறைந்தபட்சம், தீண்டாமை அழிந்துவிட்டது
என்றும் மிகக் குறுகிய காலத்தில் மறைந்துவிடும் என்றும் நான் நம்புகிறேன்.
இதை எதிர்ப்பார்கள், கோபம் கொள்ளுவார்கள், ஆத்திரமடைவார்கள். இங்கேயும் அங்கேயுமாக
அவர்கள் சீர்திருத்தவாதிகளை சமூகத்திலிருந்து விலக்கி வைத்து அவர்களுடனான சமூக உறவுகளை
முறித்துக் கொள்வார்கள். ஆனால் சீர்திருத்தவாதிகளின் எண்ணிக்கை ஏற்கெனவே மிகப் பெரியது,
அது ஒரு கட்டத்தில் பழமைவாதிகளை ஒன்றுமில்லாமல் செய்யும் அளவிற்கு நாளுக்கு நாள் பெரியதாக
வளர்ந்து வருகிறது. மகாத்மா காந்தி அல்லது சேத் ஜம்னாலால் பஜாஜ் அல்லது சுவாமி ஷ்ரதானந்த்
அல்லது லாலா ஹன்ஸ் ராஜ் ஆகியோரின் விஷயத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மரபுவழி ஹிந்து
சமூகத்திற்கு அவர்களை வெளியேற்றுவதற்கும், ஹிந்து மதத்திலிருந்து ஒதுக்கி வைப்பதற்கும்
விருப்பமும் சக்தியும் உள்ளதா? அந்த வேகத்தை அதிகப்படுத்துவதற்கும், மரபுவழிகளின் உணர்ச்சிகளைக்
காயப்படுத்துவதற்கும் நான் ஆதரவாக இல்லை. ஆனால் இந்த விஷயத்தில் குறைந்தபட்சம் மரபுவழி
அழிந்துகொண்டிருக்கிறது என்பதை நான் அறிவேன். அதன் நாட்கள் உண்மையில் எண்ணப்பட்டு வருகின்றன.
வேறு வடிவத்தை எடுக்கும். அவர்கள் விஷயத்தில், தொடுவதன் மூலம் மாசுபாடும் விஷயம் அங்கே
அங்கீகரிக்கப்படவில்லை. ஆனால், அவர்கள் தொட்ட உணவை உண்ணவோ அல்லது தண்ணீரை அருந்தவோ
அனுமதி இல்லை. இந்த நடைமுறையும் அழிந்து வருகிறது. நான் கூறியது போல, ஹிந்து சாஸ்திரங்களில்
அதற்கான எந்த அங்கீகாரத்தையும் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. மாட்டிறைச்சி சாப்பிடுபவர்களாக
இருந்த வெளிநாட்டு ஆட்சியாளர்களுடன் ஒத்துழைக்காத யோசனையின் அடிப்படையில் இது இருக்கலாம்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மக்களின் எதிரிகளாகவோ அல்லது அவர்களை வென்றவர்களாகவோ இருந்தவரை
இது நல்லதாகவும் பயனுள்ளதாகவும் இருந்தது. மேலும் ஹிந்துக்கள் ஒரு ஹிந்து ராஜ்யம் அமைப்பார்கள்
என்ற எதிர்பார்ப்பு இருந்த வரை இதற்கான தேவை இருந்தது. இது இனி சாத்தியமில்லை. 8 முதல்
16 ஆம் நூற்றாண்டுகளின் எதிரிகள் இன்று இந்திய மக்களில் ஒரு முக்கியமான, ஒருங்கிணைந்த
பகுதியாக உள்ளனர். அவர்கள் வெளிநாட்டவர்கள் அல்லது ஆட்சியாளர்கள் அல்ல. இனரீதியாக அவர்கள்
நம் எலும்பின் ஒரு பகுதி, சதையின் ஒரு அங்கம்.
குடித்த அல்லது சாப்பிட்ட ஒரு ஹிந்து உடனடியாக ஹிந்து மதத்திடமிருந்து விலகிப்போனார்.
மீண்டும் அதனிடம் திரும்ப இயலாத அளவுக்கு அவர் விலக்கப்பட்டார். ஆனால் இப்போது அது
நல்லவேளையாக வழக்கொழிந்துவிட்டது. அதற்காக குரு கோவிந்த் சிங், சுவாமி தயானந்த் மற்றும்
பிற சீர்திருத்தவாதிகளுக்கு நன்றி தெரிவிக்கவேண்டும். பிறப்பால் இஸ்லாமியாரன ஒருவர்
கூட இப்போது ஹிந்து சமுதாயத்தில் இணையலாம். இந்தச் சூழ்நிலைகளில் இந்தத் தப்பெண்ணத்தைத்
தொடர அல்லது நிலைத்திருக்கச் செய்ய இப்போது எந்தவிதமான காரணமும் இல்லை. ஆனால் இது போன்ற
தப்பெண்ணங்கள் அழிந்துபோக சிறிது காலம் ஆகும். அது அழிய வேண்டும் எனும்போது நம்முடைய
முயற்சிகளால் அதை அழிக்க ஏன் அவசரப்படக்கூடாது? சில பிரபலமான ஹிந்துக்கள் எனது கூற்றுக்கு
விதிவிலக்காக இருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும், அவர்கள் இதற்காக என்னைக் கண்டிக்கக்கூடும்.
ஆனால் உண்மையை மட்டுமே, நான் முழு உண்மை என்று நான் நம்புவதை மட்டுமே, பேசுவதற்கு நான்
வந்துள்ளேன்.
ஐக்கிய இந்தியாவை உருவாக்குவதற்கும், தற்போதுள்ள சார்புநிலைகளை விட்டுவிட வேண்டும்
என்பது முற்றிலும் அவசியம். சமூக உறவுகள் விஷயத்தில் இத்தகைய தடைகள் அங்கீகரிக்கப்பட்டு
நடைமுறைப்படுத்தப்படும் நிலையில் ஒரு ஐக்கியப்பட்ட தேசத்தை நீங்கள் உருவாக்க முடியாது.
மேலும், மோசமான நடைமுறைகளை ஒழிப்பது மற்றொரு வழியில் ஹிந்து மதத்திற்கு பயனுள்ளதாக
இருக்கும். ஒரு ஹிந்து, குடிநீரை அருந்துவதன் மூலம் அல்லது ஒரு முஸ்லிம் தொட்ட உணவை
சாப்பிடுவதன் மூலம் கட்டாயமாக மதமாற்றம் செய்யப்படுகிறார் என்ற அச்சத்தையும் இது நீக்கிவிடும்.
ஒரு தடையாக இருக்கும் கட்டுப்பாடுகளை அகற்ற இதை நான் பரிந்துரைக்கிறேனே அன்றி, சமபந்தி
உணவருந்துவதை நான் அறிமுகப்படுத்துவதாக நீங்கள் இதை எடுத்துக்கொள்ளக்கூடாது.
பார்வையில் ஹிந்துக்கள் அனைவரும் காஃபிர்கள் என்று ஒரு காலம் இருந்தது. தவிர, ஒரு காஃபிரின்
சொத்து மற்றும் பெண்கள் ஒரு முஸ்லிமுக்கு சட்டபூர்வமான போர்ப் பரிசுகள் என்று மறைமுகமாக
நம்பப்பட்டது. காலங்கள் இப்போது மாற்றமடைந்துள்ளன, அதனுடன் காஃபிர் என்ற கருத்தாக்கமும்
மாற்றப்பட வேண்டும். . ஒவ்வொரு முஸ்லிம் அல்லாதவரும் ஒரு காஃபிர் என்று வரையறை செய்யப்பட்டால்
ஒழிய ஒரு கடவுளை நம்பி வணங்கும் எந்த ஹிந்துவும், எந்த மொழியினாலும் காஃபிர் என்று
அழைக்கப் படக்கூடாது. ஏராளமான முஸ்லிம்களின் பார்வையில் பிந்தையது ஒரு காஃபிரின் சரியான
வரையறை; உலேமாக்களின் கூற்றுப்படி, அல்லாஹ்வையும் அவருடைய தூதரையும் நம்புகிறார்கள்
என்றாலும், இஸ்லாத்தின் பிற கொள்கைகளை புரிந்துகொண்டு பின்பற்றாத முஸ்லிம்களும் காஃபிர்கள்தான்.
என்று அவர்கள் கூறினர். மேலும் அவர்கள் கடியனின் மிர்ஸாவைப் பின்பற்றுபவர்களையும் காஃபிர்கள்
என்று கண்டிக்கிறார்கள். அவர்கள் சொல்வது சரி என்றால், எச்.எச்.ஆகா கான் மிகப்பெரிய
காஃபிர். அதே போல் காசி முஸ்தபா கமல் பாஷா மற்றும் ஜாக்லுல் பாஷா ஆகியோரும் கூட. ஒரு
காஃபிர் குறித்த அவர்களின் வரையறை சரியாக இருந்தால், அவர்களுக்கும் உலகின் பிற பகுதிகளுக்கும்
இடையில் சமாதானம் இருக்கவே முடியாது. அவ்வாறான நிலையில், ஹிந்து-முஸ்லிம் ஒற்றுமையைப்
பற்றிய பேச்சு அனைத்தும் மேலோட்டமான, அபத்தமான, பாசாங்குத்தனமானதாகும். ஒத்துழையாமை
பிரசாரத்தின் போது, சில உலேமாக்கள் குர்ஆனின் குறிப்பிட்ட ‘அயதிகளை’ (பிரிவுகளை) மேற்கோள்
காட்டினர். அதன்படி முஸ்லிம்கள், அவர்களோடு நட்பாக இருப்பவர்கள், அவர்களிடம் விரோத
பாவம் காட்டுபவர்கள், நெருப்பையும் வாளையும் அவர்கள் வீட்டிற்குள் கொண்டு வந்தவர்கள்
அல்லது அவர்களைக் காயப்படுத்தியவர்கள் போன்ற முஸ்லிம்கள் அல்லாதவர்களுடன் சட்டபூர்வமான
உடன்படிக்கை செய்துகொள்ளலாம். வெளிப்படையாகச் சொல்வதானால், இந்த வகையான சிறப்புச் சலுகைகள்
என் மனதைக் கவரவில்லை. இது போன்ற இயந்திரத்தனமான ஒற்றுமை நம்மை ஒரு தேசமாக உருவாக்காது.
நமக்குத் தேவைப்படுவது ஒரு உணர்வுபூர்வமான ஒன்றியம். ஹிந்துக்கள் ‘காஃபிர்கள்’ ஆக இருந்தால்,
ஹிந்துக்களுக்கும் முசல்மான்களுக்கும் இடையிலான ஒற்றுமை பற்றிய பேச்சு அனைத்தும் அபத்தமானது.
அவர்களது அமைப்புகளுக்கும் மற்ற முஸ்லிம்களைப் பிணைக்க எந்தவொரு சட்டபூர்வமான உரிமையோ
அதிகாரமோ இல்லை. தலைவர்கள் வருவார்கள், போவார்கள்; ஆனால் ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தின்
தரப்பில் பேசக்கூடிய யாரும் இந்தியாவில் கிடையாது. லக்னோவின் உடன்படிக்கை அரசாங்கத்தால்
ஏற்றுக்கொள்ளப்பட்டு சட்டமாக்கப்பட்டாலொழிய அதற்கு எந்த மதிப்பும் கட்டுப்படுத்தக்கூடிய
சக்தியும் இல்லை. காங்கிரஸ் அல்லது கிலாபத்தின் கூட்டத்தில் செய்யப்பட்ட எந்த ஒப்பந்தமும்
சட்டபூர்வமானதில்லை. தற்போதைய தலைவர்கள் அல்லது ஜாமியத்-உல்-உலேமா ஆகியோரால் ஒப்புக்
கொள்ளப்பட்ட எதையும் வேறு எந்த முஸ்லிமும், அடுத்தடுத்த தலைமுறையினரும் இன்னும் அதிக
சக்தியுடன் கேள்வி கேட்க முடியும். சட்டபூர்வமான ஒரு ஒப்பந்தம் அல்லது உரிமைகள் அறிக்கையின்
ஒரு பகுதியை ஏற்படுத்துவது கூட ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் எதிர்காலத் தலைமுறையினரைக்
கட்டுப்படுத்தாது. சட்டங்களை உருவாக்குபவர்களோடு சட்டங்கள் மாறுபாடடைகின்றன. இன்று
உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்திற்கு ஐம்பது ஆண்டுகளுக்குப் பின் எந்த மதிப்பும் இல்லாமல்
போகலாம். இப்பேற்பட்ட சூழ்நிலைகளில், ஒப்பந்தங்கள் நம்மைப் போதுமான தூரம் அழைத்துச்
செல்லாது. தேவைப்படுவது ‘மன் மாற்றம்’. தற்போதைய தலைமுறையின் முஸ்லிம் தலைவர்களின்
அனைத்து முயற்சிகளும் ஹிந்துக்கள் காஃபிர்கள் என்ற கருத்தை மறுபரிசீலனை செய்ய வைப்பதாக
இருக்கவேண்டும்.
ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்களின் உறவுகள் மிகவும் சுமுகமானவை. தற்போதைய பதற்றம் கடந்த
ஐம்பது ஆண்டுகளில் ஏற்பட்டதாகும். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளில் நடந்தது என்பது எல்லா
‘சாதனைகளையும்’ முறியடித்தது. இந்தியா ஸ்வாராஜ்யத்திற்கு தகுதியற்றது என்பதை நிரூபிக்க
சிறப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றும், அரசியல் சீர்திருத்தங்கள் விஷயத்தில்
மேலும் எந்த முன்னேற்றமும் பாதுகாப்பானது இல்லை என்றும் சிலர் கருதுகின்றனர். சில பிரிவுகளில்
முழுப் பொறுப்பையும் வெளிநாட்டு அரசாங்கத்தின் அதிகாரிகள் மீது வீசும் போக்கு உள்ளது.
அவர்களுக்கு அதில் ஒரு பங்கு உண்டு என்பதை மறுக்க முடியாது என்ற போதிலும் முஸ்லிம்
மௌல்விக்கள், மௌலானாக்கள், அமைப்புகள் ஆகியவற்றின் பங்கு மிகப் பெரியது என்பதை இங்கு
நினைவுகூரவேண்டும். இப்படிச்சொல்வதால் ஹிந்துக்கள் மிகவும் அப்பாவிகள் என்றும் முடிவு
செய்ய முடியாது.
எங்கெல்லாம் கலவரம் நடந்தாலும், பிந்தையவர்கள் முந்தையவர்களைக் கொள்ளையடித்து, அவர்கள்
கோயில்களை இழிவுபடுத்தி, அவர்கள் வீட்டுப் பெண்களைத் தாக்கியுள்ளனர், ஹிந்துக்கள்
‘காஃபிர்கள்’ என்ற கருத்தின் தாக்கத்தை அவர்கள் இப்படிக் காட்டிக்கொடுக்கின்றனர். அதாவது
முஸ்லிம்கள் ஹிந்துக்களுடனான ஒரு போரில் உள்ளனர், அவர்களுடைய சொத்துகளும் பெண்களும்
முஸ்லிம்களுக்கு ஹலால் ஆகும் என்ற கருத்தாக்கத்தை வெளிப்படுத்துகின்றனர். சிலர், இதைச்
சமூக விரோதிகளின் செயல் என்று கூறுகின்றனர். நான் இல்லை என்று மறுக்கிறேன். இந்தக்
கலவரங்கள் சமூக விரோதிகளை விட புத்திசாலித்தனமானவர்களால் செயல்படுத்தப்படுகிறன. முக்கியமான
நபர்களால் இவை ஆதரிக்கப்பட்டு, ஊக்குவிக்கப்படுகின்றன. இதை களத்தில் நிகழ்த்துவர்கள்
மட்டுமே சமூக விரோதிகள், மதவெறியர்கள், வறியவர்கள்.
பணக்காரர்கள், முஸ்லிம்கள் ஏழைகள் என்ற கோட்பாட்டை முன்வைத்து அது இந்தக் கலவரங்களை
விளக்குகிறது என்கிறார். இந்த விளக்கம் சரியானது என்று நாம் கருதினால், ஏழை முஸ்லிம்கள்
தங்கள் சக மதத்தைச் சேர்ந்த பணக்காரர்களை ஏன் கொள்ளையடிக்கவில்லை என்ற உண்மையை எப்படி
விளக்குவது? உண்மையான விளக்கம் என்னவென்றால், ஒரு சாரர் முஸ்லிம்கள் என்பதும் ஹிந்துக்கள்
காஃபிர்கள் என்பதும்தான். இந்த கருத்து வெகுஜன மற்றும் முஸ்லிம் நடுத்தர வர்க்கங்களின்
மனதில், புத்திசாலித்தனமான பிரசாரகர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க தலைவர்களால் நன்கு
விதைக்கப்பட்டுள்ளது. இந்த கருத்தை அழிப்பதும்,, ஹிந்துக்கள் காஃபிர்கள் அல்ல என்ற
உண்மையை அவர்களின் சக மதவாதிகளின் மனதில் நிலைநிறுத்துவதும் கௌரவம் மிக்க முஸ்லிம்
தேசியவாதத் தலைவர்களின் கடமையாகும், சண்டைகள் நேரும் சந்தர்ப்பத்தில் கூட, ஹிந்துக்களின்
கோயில்கள், பெண்கள் மற்றும் அவர்களின் சொத்துக்கள் மதிப்பில்லாதவை, தாக்குதல்களுக்கு
அப்பாற்பட்டவை.
(தொடரும்…)
சில பயணங்கள் சில பதிவுகள் – 22 | சுப்பு
இந்திரா காங்கிரஸும் அதிமுகவும் வலது கம்யூனிஸ்டும் கூட்டணி வைத்துப் போட்டியிட்டு
பெரும் வெற்றி பெற்றன (36/40).
ஜனதா கட்சியின் சாயம் வெளுத்துவிட்டது. சரண் சிங் ஒரு பக்கமும் ஜகஜீவன்ராம் ஒரு பக்கமும்
இழுத்த இழுப்பில் மொரார்ஜியின் ஆட்சி ஆட்டம் கண்டது.
சட்டமன்றத்துக்கான தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டுகளோடு கூட்டணி அமைத்து, அதிமுக
வெற்றிபெற்று எம்.ஜி.ஆர் முதலமைச்சராகப் பதவியேற்றார் (30-06-1977).
பிரச்சினையில் சிக்கிக்கொண்டு சங்கப் பணியில் ஈடுபடாமல் இருந்த எனக்கு மீண்டும் ஒரு
நல்ல வாய்ப்பு கிடைத்தது. தமிழறிஞர்களின் கூட்டமைப்பாக ‘தேசிய சிந்தனைக் கழகம்’ உருவாக்கப்பட்டது.
நீதிபதி கிருஷ்ணசாமி ரெட்டியார் தலைவராக இருந்தார். வழிகாட்டும் குழுவில் கோபால்ஜீயும்
துக்ளக் ஆசிரியர் சோ.ராமசாமியும் பங்கெடுத்தனர். இந்த ஐந்து நாள் விழாவிற்கு (1978
ஜனவரி) முழுப் பொறுப்பும் சண்முகநாதன்ஜீயினுடையது. நான் அவருக்கு உதவியாக இருந்தேன்.
டாக்டர்.ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள ஏ.வி.எம் ராஜேஸ்வரி திருமண மண்டபத்தில் நடந்த
நிகழ்ச்சிகளைக் கர்நாடக இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலட்சுமி குத்துவிளக்கேற்றித் துவக்கிவைத்தார்.
அதற்கடுத்து சுப்புவின் கவிதை – சண்முகநாதன்ஜீ எனக்குக் கொடுத்த சலுகை.
பக்கமாகப் போய்க்கொண்டிருந்த என் வாழ்க்கை பெசன்ட் நகர் தொடர்புகளால் நிலைபெற்றது.
முதலில் ரமணன் பிறகு ராகவன். அந்தக் காலகட்டத்தில் இதற்குச் சாட்சியாக இருந்தவர்கள்
இருவர். ஒருவர் கௌரி சங்கர் என்ற நண்பர். இன்னொருவர் சிவன் கோவில் அர்ச்சகர் சந்துரு.
வைதீகமான குடும்பத்தைச் சார்ந்தவன். காஞ்சிபுரத்திலுள்ள வேத பாடசாலையில் படித்து முடித்துவிட்டு
வந்து பெசன்ட் நகரிலுள்ள சிவன் கோவிலில் அராளகேசி சந்நிதியில் அர்ச்சகராக இருந்தான்.
உலகமே அறியாத சந்துரு என்னிடம் ஓயாமல் இரண்டு விஷயங்களைப் பற்றி சொல்லிக்கொண்டிருப்பான்.
ஒன்று காஞ்சி மகாசுவாமிகளின் பெருமை. இன்னொன்று எம்.ஜி.ஆரின் பெருமை.
நடந்த அதிமுக பொதுக்கூட்டத்திற்கு எம்.ஜி.ஆர் வந்திருக்கிறார். கட்டுக்கடங்காதக் கூட்டம்.
மேடைக்கு அருகிலுள்ள பகுதியில் சந்துருவும் மற்ற வேத பாடசாலை பசங்களும் இடம்பிடித்துவிட்டார்கள்.
ஆனால் கூட்டத்தில் சிக்கிய சிறுவர்களை யாரோ துன்புறுத்திக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக
சந்துருவை. குடுமியைப் பிடித்து இழுத்தார்கள். வலி தாங்காமல் சந்துரு திரும்பிப் பார்த்தால்
யார் இழுத்தது என்பது தெரியாது.
இருந்த எம்.ஜி.ஆர் இந்தக் காட்சியைக் கவனித்துவிட்டார். ஒரு தொண்டரை அனுப்பி சந்துருவையும்
அவனுடைய கூட்டாளிகளையும் அழைத்துவந்து மேடையிலிருக்கும்படி செய்துவிட்டார். எனவே சந்துருவைப்
பொருத்தவரை மகாசுவாமிகளுக்கு அடுத்த இடம் எம்.ஜி.ஆருக்குத்தான்.
வீட்டில் தங்கியிருந்தாலும் நான் அங்கே அதிகம் இருப்பதில்லை. நானும் கௌரியும் சவுக்குத்
தோப்பில் பேசிக் கொண்டிருப்போம். திருவான்மியூர் யோகியைப் பார்க்கப் போவோம். அவர் கஞ்சி
ஊற்றுவார். எத்தனையோ நாள் அந்தக் கஞ்சியைக் குடித்தே என் ஜீவனம் நடந்திருக்கிறது. திருவான்மியூரில்
உள்ள ஸ்ரீ மருந்தீஸ்வரர் கோயிலுக்குப் போவோம். சில சமயங்களில் மாங்காடு காமாக்ஷி அம்மன்
கோயிலுக்குப் போவதும் உண்டு. கௌரிசங்கர் கனிந்த உள்ளம் படைத்தவன். தெருவில் போகும்போது
அடிபட்டுக் கிடந்த காக்காயை ப்ளூ கிராஸில் சேர்த்தால்தான் ‘அவனால் அடுத்த வேலை செய்ய
முடியும்’. நோயுற்ற தாய் தந்தையருக்குப் பணிவிடைகள் செய்வான். வீட்டில் சமைப்பதும்
அவன்தான். செய்தித்தாளில் வரும் கொலை, தற்கொலை, விபத்து பற்றிப் படித்துவிட்டு மனவாட்டத்தோடு
இருப்பான். கௌரிசங்கர் எப்போதும் மகான்களைப் பற்றியே பேசுவான். சேஷாத்ரி சுவாமிகளைப்
பற்றியும் பூண்டி மகானைப் பற்றியும் சொல்வான். இந்த நேரத்தில் பரணீதரன் எழுதிய ‘அருணாசல
மகிமை’ எங்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தது. கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டு
சேஷாத்திரி சுவாமிகளை அவருடைய சிற்றப்பா, வைதீக கர்மங்கள் செய்வதற்காக இழுத்துவரும்
காட்சியை மீண்டும் மீண்டும் கற்பனை செய்து பார்ப்போம். நித்தமும் பராசக்தியோடு பழகுபவருக்கு
நீத்தார் கடன் அவசியமில்லை என்பது எங்கள் தீர்மானம்.
வெள்ளிக்கிழமையன்று அராளகேசி அம்மனுக்கு என்ன அலங்காரம் செய்யலாம் என்று சந்துரு எங்களோடு
ஆலோசனை செய்வான். அலங்காரம் செய்யும்வரை அதையே கற்பனை செய்வோம். செய்த பிறகு கண்கொட்டாமல்
அம்பாளையே பார்த்துக் கொண்டிருப்போம். மின் விளக்குகள் இல்லாமல் குத்து விளக்குகளின்
குறைந்த வெளிச்சத்தில் அம்பாளைப் பார்ப்பது எங்களுடைய ப்ரத்யேகமான விருப்பம். அதற்காகவே
மின்சாரத்தடை ஏற்படாதா என்று ஏக்கத்துடன் இருப்போம். நாங்கள் கோயிலில் இருக்கும்போது
மின்சாரத்தடை ஏற்பட்டுவிட்டால் நான் அவனையோ அவன் என்னையோ கூவி அழைத்துக் கொண்டு இருட்டில்
ஓடுவோம். மின்சாரம் வருவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்ற அவசரம். ஓடும்போது யார்
மீதாவது இடித்துவிட, அவர்கள் எங்களைச் சபிப்பார்கள். சமயத்தில் கோயிலை மூடுவதற்கு முன்னால்
எங்களுக்காக சந்துரு சந்நிதியில் மின்விளக்கை அணைத்துக் காட்டுவான்.
பெஸன்ட் நகர் மாமிகளெல்லாம் பார்க்கும்படியாக இவளை ஒருநாள் ஆளுக்கொரு பக்கம் கையைப்
பிடித்து அழைத்துப் போய்விடவேண்டும் என்று பேசிக் கொள்வோம்.
நகர் அருகில் உள்ள பாம்பன் ஸ்வாமிகள் சமாதிக்கு நாங்கள் அடிக்கடி போவோம். ஒருமுறை அங்கிருந்த
பெரியவர் ஒருவரிடம் பேச்சுக் கொடுத்தோம். கட்டையான உருவமும் வெண்தாடியும் கொண்ட அவருடைய
வார்த்தைகள் மிகத் தெளிவாக இருந்தன. இவ்வளவு நன்றாகச் சொல்கிறாரே என்று அவர் என்ன படித்திருக்கிறார்
என்று விசாரித்தேன். அவர் சொன்னது:
எழுதப்படிக்கத் தெரியாது. பாம்பன் சாமிகள் சமாதியானவுடன் அவரை இந்த இடத்திற்குக் கொண்டு
வந்து அடக்கம் செய்தார்கள். நான் இங்கே ஆடு மேய்த்துக் கொண்டிருந்தேன். சுவாமிகளின்
பக்தர்களுக்கு இங்கே கட்டடம் கட்டும் அளவிற்கு வசதி இல்லை. வெறும் மேடை மட்டும் இருந்தது.
இந்த இடத்தை யாரும் அசுத்தம் செய்யாமல் பார்த்துக் கொள்ளுமாறு அவர்கள் என்னிடம் சொன்னார்கள்.
நானும் அப்படியே செய்தேன். அதற்காக விசேஷ நாட்களில் அவர்கள் வரும்போது எனக்குச் சில்லறை
கொடுப்பார்கள். மற்றபடி எதுவும் எனக்குத் தெரியாது. இந்த சிமெண்ட் தரையில்தான் (சமாதி)
நான் தூங்குவேன். அதுதான் நான் படித்த பாடம்” என்றார் அவர்…
கடன்காரராக ராகவன் வீட்டுக்கு விஜயம் செய்தார்கள். கேட்ட கேள்வியையே அவர்கள் மீண்டும்
கேட்டுக் கொண்டிருந்தார்கள். என்னை அதிகமாக அவர்கள் திட்டவில்லை. என்றாலும், இவர்களுடைய
கடனை எப்படி அடைப்பது என்பது எனக்குப் பிரச்சினையாயிருந்தது. யாருக்கும் பயன்படாமல்
பாரமாகிவிடுவோமோ என்ற கவலை ஏற்பட்டது. யோசித்துப் பார்த்து தற்கொலை செய்து கொள்ள வேண்டும்
என்று முடிவு செய்தேன். தற்கொலைதான் முடிவு என்று ஆனவுடன் அதற்கான நாளையும் குறித்துவிட்டேன்.
ஆனால் ராமானுஜம் என்ற நண்பன் இதை எப்படியோ யூகித்துவிட்டான். இந்த சமயத்தில் இரண்டு
நாட்களாக என் கூடவே இருந்து இது நிறைவேறாமல் செய்தான்.
ஒரு நாள் குறித்தேன். இந்தமுறை ராஜேந்திரன் என்னிடம் தற்கொலை முயற்சி எவ்வளவு தவறானது
என்பதுபற்றி ஒரு மணி நேரம் பேசினான். “நீ ஏன் இதையே பேசிக் கொண்டிருக்கிறாய்” என்று
கேட்டதற்கு “ஏதோ, என் மனதில் பட்டதைச் சொல்கிறேன்” என்றான். அவனை விட்டுவிட்டு பெஸன்ட்
நகர் சிவன் கோயிலுக்குப் போனேன்.
சந்துரு வேத கிளாஸ் நடத்துவான். நான் வேதம் கற்றுக்கொள்ள வேண்டுமென்பது சந்துருவின்
விருப்பம். எனக்கும் ஆசைதான். ஆனால் பூணூல் போட்டுக்கொள்ளாமல் வேதம் படிக்க முடியாது.
எனக்கு உபநயனம் நடந்தது என்றாலும் பாரதியாரால் ஏற்பட்ட தாக்கத்தினால், நான் பூணூல்
அணிவதில்லை. சட்டை போட்டுக்கொண்டுவிட்டால், உள்ளே பூணூல் இல்லை என்பது தெரியாது என்ற
யோசனை சொல்லப்பட்டது. இப்படி ஏமாற்றி, வேதம் படிப்பது எனக்குப் பிடிக்கவில்லை. மறுத்துவிட்டேன்.
என்னைத் தனியாகக் கூப்பிட்டு “செவ்வாய்க்கிழமை அம்பாளுக்கு விசேஷ அலங்காரமிருக்கிறது.
நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்றான். நானோ ஞாயிற்றுக்கிழமைக்கு நாள் குறித்திருக்கிறேன்.
சரி இரண்டு நாள் தள்ளிப் போடுவோம் என்று நினைத்துக்கொண்டேன். ஞாயிற்றுக் கிழமையன்று
வீட்டுக்குப் போனேன். இப்போது நயினா, அம்மா, தம்பிகளோடு சென்னையின் தெற்குப்பகுதியான
சிட்லபாக்கத்தில் குடியிருந்தார்கள். நயினாவுக்கு ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் சென்னையிலேயே
வேலை. தம்பி ரவீந்திரனும் சம்பாதிக்கத் தொடங்கியிருந்தான். வீடு இருக்கும் தெருவின்
தொடக்கத்தில் முத்தாலம்மன் கோவில். நான் போயிருந்த நேரத்தில் கோவிலிலிருந்து ஒரு நோட்டீஸ்
கொடுத்தார்கள். அதில் ‘நாயகி நான்முகி நாராயணி’ எனத் தொடங்கும் பாடல் அச்சிடப்பட்டிருந்தது.
அம்மாவிடம் இதைக் காட்டிப் பொருளை விளக்கச் சொன்னேன். அம்மா ‘இது அபிராமி அந்தாதி’
என்று சொல்லிப் பாடலை விளக்கினார். வீட்டிலிருந்த அபிராமி அந்தாதி புத்தகத்தையும் எடுத்துக்
கொடுத்தார். புத்தகத்தோடு பெஸன்ட் நகர் வந்தேன்.
அபிராமி அந்தாதியைப் படிக்க வேண்டுமென்று முயன்றபோது ராகவன் வீட்டில் சூழ்நிலை சரியில்லை.
தோளில் ஒரு ஜோல்னாப்பையை மாட்டிக்கொண்டு காந்தி மண்டபத்திற்கு நடந்தேன். காந்தி மண்டபத்திற்குப்
பின்னால் உள்ள சிறுவர் பூங்காவிற்கு வந்த பிறகுதான் நான் செய்தது முட்டாள்தனம் என்று
தெரிந்தது. அன்று காணும் பொங்கல், 1978, ஜனவரி, சென்னை நகரத்தின் மக்கட்தொகையில் பாதிப்பேர்
அங்கே கூடியிருந்தார்கள். சிறுவர் பூங்காவிற்குப் பக்கத்தில் கவர்னர் மாளிகைக்குப்
போவதற்கு ஒரு வழியுண்டு. அந்த வழியில் யாரும் போகாமலிருப்பதற்காக அங்கே ஒரு போலிஸ்
ஏட்டு நின்று கொண்டிருந்தார். ஏட்டை அணுகி, “ஐயா, நான் கொஞ்சம் படிக்க வேண்டும். இங்கே
உட்கார்ந்து கொள்ளலாமா?” என்று கேட்டேன். ஏட்டு ஒரேடியாக உற்சாகமாகிவிட்டார். “இந்த
மெட்ராஸில இன்னிக்கு படிக்கணும்னு சொல்றவன் நீதாம்பா” என்று சொல்லி என்னை அங்கே மரத்தடியில்
உட்கார வைத்தார். நான் எவ்வளவோ மறுத்தும் கேட்காமல் தன் செலவில் எனக்குப் பால் வாங்கிக்
கொடுத்தார். போலிஸ்காரர்களால் தாக்கப்பட்டுத்தான் நமக்குப் பழக்கம். முதன்முதலாக ஒரு
போலிஸ்காரரால் கௌரவிக்கப்பட்டேன். பராசக்தியின் அருட்பார்வை நம்மீது படுவதற்கு இது
நல்ல அறிகுறி என்று மகிழ்ந்து அபிராமி அந்தாதியைப் படிக்கத் தொடங்கினேன்.
முடித்தப்பிறகு எனக்குப் புதுத்தெம்பு வந்தது. அபிராமி அந்தாதியை நூற்றியெட்டு நாட்கள்
பாராயணம் செய்ய முடிவு செய்தேன். அதற்குள் என் பிரச்சினைகள் தீர்வதற்கு பராசக்தி ஏற்பாடு
செய்ய வேண்டுமென்று அவளோடு ஒரு மானசீக ஒப்பந்தம் செய்து கொண்டேன். மறுநாள் காலையில்
எழுந்து, குளித்துவிட்டு, அபிராமி அந்தாதியுடன் பெசன்ட் நகர் மகாலட்சுமி கோவிலுக்குப்
போனேன். அங்கே வசதிப்படவில்லை. வெளியே வந்தபோது எதிரே கௌரிசங்கர். சவுக்குத் தோப்பில்
உட்கார்ந்துகொண்டு அபிராமி அந்தாதி படிக்கப் போகிறதாகக் கூறி அவனையும் அழைத்தேன். அவனும்கூட
வந்தான். சவுக்குத் தோப்பில் படிப்பதைவிட திருவான்மியூர் யோகியின் முன் படிக்கலாம்
என்றான். எனக்கு அதில் இஷ்டமில்லை.
மௌனமாயிருப்பவர். மௌன விரதம் இருப்பவர்முன் சத்தம் போட்டுப் படிப்பது எனக்கு அநாகரிகமாகத்
தெரிந்தது. கௌரிசங்கர் விடாப்பிடியாக வற்புறுத்தினான். “சரி அங்கே போகலாம். ஆனால் அவரை
ஒரு வார்த்தை நீ கேட்டுவிடு” என்றேன்.
கடற்கரைக் குப்பத்தில் அருகில் ஒரு குளம். குளத்தங்கரையில் சிறிய சிவன் கோயில். கோயில்
என்றால் சிவலிங்கம் இருக்கும். அறையும் முன்பகுதியும்தான். கோயிலின் உள்ளிருந்து கோயிலைத்
துளைத்துக் கொண்டு ஒரு அரசமரம். அதோடு பிணைந்த வேம்பு. இந்த கோயிலுக்குள்ளே இருந்து
வருகிறார் யோகி. நானும் கௌரியும் கருவறையின் வெளியே. யோகி உள்ளே. தன்னுடைய நண்பன் அபிராமி
அந்தாதி படிக்க விரும்புவதாகக் கௌரி தெரிவித்தான். அவர் என்ன சொன்னார் என்று எனக்குத்
தெரியவில்லை. கௌரி என்னைப் பார்த்துத் தலையசைத்தான். நான் படிக்க ஆரம்பித்தேன். ஒரு
தாளக்கட்டு தானே உருவாயிற்று.
திடீரென்று உடலில் ஒரு மின்சார அதிர்வு ஏற்பட்டது. இது கழுத்துக்குக் கீழே இரண்டு கைகளிலும்
மார்பிலும் பரவியது. வாய் படித்துக்கொண்டேயிருந்தாலும் சுயநினைவு நழுவத் தொடங்கியது.
ஒரு ஒளி வட்டம் உருவாகி எதிரில் இருந்த சுவரோடு என்னையும் சேர்த்து இழுத்துக்கொண்டு
சுற்றியது. அடடா நமக்குச் சமாதி கிட்டிவிட்டது என்று நினைத்தேன். அதற்கு நான் தயாராகவில்லை.
எதிர்ச்சுவற்றில் ஒரு பழைய காலண்டரில் பார்வதி, பரமேஸ்வரன். “அம்மா, எனக்குச் சமாதி
வேண்டாம். இந்த நிலையில் நான் சமாதியானால் கடனுக்குப் பயந்து சாமியார் ஆகிவிட்டான்
என்பார்கள். என்னை விட்டுவிடு” என்று பார்வதியிடம் வேண்டிக் கொண்டேன். இதை நினைத்த
உடனே சுற்றல் நின்று போயிற்று. உணர்வும் சரியாயிற்று. தொடர்ந்து அந்தாதியைப் படித்து
முடித்தேன்.
வந்தவுடன் கௌரியிடம் விஷயத்தைச் சொன்னேன். இது யோகியின் அருளால்தான் நடந்திருக்க வேண்டும்
என்று அவன் சொன்னான். மறுநாள் முதல் தினமும் காலையில் எழுந்து குளித்துவிட்டு மகாலக்ஷ்மி
கோயிலுக்குப் போக ஆரம்பித்தேன். மகாலக்ஷ்மி கோயிலிலிருந்து சிவன் கோயில் – அராளகேசி
சமேத ஸ்ரீ ரத்னகிரீஸ்வரர் கோயில். அங்கே மங்கள துர்க்கை சந்நிதியில் அபிராமி அந்தாதி.
அந்தாதி என்பது என்னைப் பொறுத்தவரை தோத்திரமாக இல்லை. அவளோடு நடத்தும் சம்பாஷணையாகவே
இருந்தது.
நேரங்களை அடையாரில் ராமானுஜம் வீட்டில் செலவழிப்பேன். ராமானுஜம் விஷ்ணுவின் மாமன் மகன்.
இவனும் இவன் சுற்றத்தாரும் எனக்கு செய்த உதவிகளை நான் ஈடு செய்ய முடியாது. ராமானுஜத்திற்கு
எப்போதும் திருப்பாவை ஸ்மரணைதான். அது இல்லாமல் அவனால் சிந்திக்க முடியாது. அவனுக்கு
பெரம்பூரில் வேலை. “இங்கேயிருந்து பெரம்பூருக்குப் பஸ்ஸில் போனால் எவ்வளவு நேரம் ஆகும்?”
என்று கேட்டால் “இருபது தடவை திருப்பாவை சொல்வதற்குள் போய்விடலாம்” என்பான். எந்த ஊரைப்பற்றிச்
சொல்வதென்றாலும் முதலில் அதற்கு அருகிலுள்ள வைணவஸ்தலத்தைப் பற்றிச் சொல்லி விட்டுத்தான்,
அந்த ஊரைப்பற்றிச் சொல்வான். திருப்பாவை பாராயணம்தான் இவனுடைய மூச்சு. ராமானுஜத்தின்
திருமணத்தில் கலந்து கொள்வதற்காக நான் பெங்களூர் போனேன். அங்கே எனக்குப் பல அதிசயங்கள்
காத்திருந்தன.
… தொடரும்
மனுச எந்திரங்கள் (சிறுகதை) | ஐ. கிருத்திகா
பச்சை பசேலென்று நின்றிருந்தது. இளம்பச்சையிலும், செம்பழுப்பிலுமான துளிர்கள் நுனியில்
அசைந்தாடின. தலை நிறைய பூ தைத்துவிட்டது போல அரை வெள்ளையில் நட்சத்திர நட்சத்திரமாய்ப்
பூக்கள். மரம் நின்ற இடத்துக்கு கீழே பத்துபேர் தாராளமாய் அமரக்கூடிய அளவிற்கு நிழல்.
அந்த நிழலில் இளைப்பாறிக்கிடந்தன உதிர்ந்த பூக்கள். ஒரு காற்று அடித்தால் மரத்திலிருந்த
அத்தனை பூக்களும் விர்விர்ரென தரை நோக்கி சரிந்தன.
அவ்வளவு ரம்மியமாயிருந்தது. அப்படியே பார்த்துக்கொண்டே இருந்துவிடலாம் போலிருந்தது.
எங்கு சுகம் கிடைக்கிறதோ அங்கேயே ஒட்டிக்கொண்டு விடவேண்டுமென்கிற துடிப்பு மனசுக்கு.
அதுவும்கூட ஒருவித சுயநலம்தான் என்று குமாரசாமிக்குத் தோன்றிற்று. மறுநொடியே அது அப்படியல்ல
என்று அவர் தனக்குள் சொல்லிக்கொண்டார். இரைச்சல்களும், சத்தங்களும் நிறைந்துகிடக்கிற
இடத்தில் ஒற்றை நிசப்தம் சுகம்தானே. அதை சுயநலம் என்று சொல்வதற்கில்லை என்று தன்னைத்தானே
சமாதானப்படுத்திக்கொண்டார்.
சில்லென்று உடலைத் தழுவியது. மூச்சுமுட்ட அணைக்கும் முரட்டு தழுவல்ல அது. தோளில் கைபோட்டு
மெல்ல அணைத்துக் கொள்ளும் இதமான தழுவல். குமாரசாமிக்குக் கண்களை சொக்கிற்று. ஈஸிசேரில்
அமர்ந்தபடியே கண்ணயர்ந்தவர் திடீரென காதைப்பிளந்த தொலைக்காட்சி சத்தத்தில் திடுக்கிட்டுக்
கண்விழித்தார். சித்ரா வேலைகளை முடித்துவிட்டு தொலைக்காட்சி முன் அமர்ந்துவிட்டாள்
என்பது புரிந்தது. காலை பத்து மணிக்கு ஆரம்பித்தால் ஒருமணிவரை தொலைகாட்சி ஓய்வில்லாமல்
ஓடிக்கொண்டேயிருக்கும். திரும்பவும் மாலை ஆறு மணியிலிருந்து பத்துமணிவரை அதற்கு வேலை.
பாத்தாலும் டிவி முன்னாடியே ஒக்காந்திருக்கியே. கொஞ்சநேரம் வாசல்ல வந்து ஒக்காரேன்.
காத்து அருமையா வீசுது. மயிலுங்க இங்கிட்டும் அங்கிட்டும் போறதும் வர்றதுமா இருக்குதுவோ.
கூடு திரும்புற பறவைங்க எல்லாம் கலியாணத்துக்கு வரிசைத்தட்டு கொண்டுட்டு போற பொம்பளைவோ
மாதிரி போவுதுங்க. நெலா மறையறதும் தெரியறதுமா வெளையாட்டு காட்டுது. மேகமெல்லாம் இங்க்குல
நனஞ்ச பஞ்சாட்டம் மெதந்து போவுது…”
சிலாகித்துப் பாராட்டிக் கொண்டிருந்தவரை சித்ரா இடுப்பில் கைவைத்து முறைத்துப் பார்த்தபடி
நின்றிருந்தாள். அவளுக்கும் ரசனைக்கும் வெகுதூரம். அது புரிந்தும் அப்படிப் பேசியது
தன் தவறுதான் என்றுணர்ந்த குமாரசாமி பேச்சை நிறுத்தினார்.
ஒளர்றத என்னிக்குதான் நிறுத்தப்போறீங்களோ. கருமம்டா சாமி.” அவள் தலையிலடித்துக்கொண்டு
உள்ளே செல்ல, அன்றிலிருந்து அவளிடம் அப்படிப் பேசக்கூடாது என்று குமாரசாமி திடமாக முடிவெடுத்தார்.
ஒன்னளவுக்கு ரசனை கெடையாதுப்பா. நீ எதையாவது சிலாகிச்சு சொன்னேன்னா அது புரியாத பாஷை
பேசுறமாதிரி மூஞ்சை வச்சிகிட்டு கேக்கும். இத்தினி வருசத்துல இதுகூட ஒனக்கு தெரியலியே…”
கவிதா கிண்டலடிப்பாள். அவள் இருந்தவரை வீடு கலகலப்பாயிருந்தது. குமாரசாமிக்கு மகள்
மிகப்பெரிய ஆறுதல். தான் பார்த்ததை, படித்ததை, ரசித்ததை அவளிடம்தான் சொல்லுவார்.
மகளும் சதா தொணதொணன்னு பேசிகிட்டேயிருந்தா வசனம் காதுல வுழ மாட்டேங்குது. ரெண்டு பேரும்
கொஞ்சம் அந்தாண்ட போயி பேசுங்க…” சித்ரா சுள்ளென்று விழுந்துவிட்டு டிவியின் சத்தத்தைக்
கூட்டுவாள். குமாரசாமி வாசல் திண்ணையில் ஈஸிசேரைப் போட்டு அமர்ந்துவிடுவார். கவிதா
படிக்கட்டில் அமர்ந்து கொள்ளுவாள். இருவரும் நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.
கவிதை படிச்சேன். ஒங்கிட்ட சொல்லணும்னு தோணுச்சு” என்று தான் படித்ததை குமாரசாமி சொல்வார்.
அவர் சொல்லி சொல்லி கவிதாவுக்கும் கவிதைகள் பிடிக்க ஆரம்பித்துவிட்டன.
எனக்கும் கவிதை புடிக்க ஆரம்பிச்சிடுச்சுப்பா. ஒனக்கு எப்புடிப்பா இந்தமாதிரி ஒரு ரசனை.
எட்டாவதுகூட நீ தாண்டல. ஆனா ரொம்ப அறிவார்த்தமா எல்லாத்தையும் ரசிக்கிற. ஆச்சர்யமா
இருக்குப்பா.”
கவிதா சொன்னபோது குமாரசாமி சிரித்தார்.
புடிப்புக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா… புடிச்சு ரசிக்கிறதத்தான் சொல்றேன். சுத்தி
வயக்காடு. நடுவுல கூரக்கட்டு வூடு. ராத்திரி நரி ஊளையிடும், சுவர்க்கோழி கத்தும். வாய்க்கா
தண்ணியில நண்டு, தவக்களைன்னு ஏகப்பட்ட சீவனுங்க. காத்துல பயிருங்களோட பச்சை வாசம்,
மழை பேஞ்சா வழுக்கியடிக்கிற சேறு. இந்த மாதிரி சூழல்ல வளந்தவன் நான். எல்லாத்தையும்
இடைஞ்சல்ன்னு நெனைக்கமா ரசிக்க பழகிகிட்டேன். ஒரு விசயத்துக்கு மனசு பழகிடுச்சின்னா
சாவுற வரைக்கும் அது மாறாது. எத்தனையோ பிரச்சினைங்க வந்தாலும் இந்தமாதிரி ரசிக்கிற
மனசுதான் என்னைய உயிர்ப்போட வச்சிருக்கு.”
பாவம்ப்பா. அம்மா ஒனக்கு சரியான ஜோடி கெடையாது. ஒனக்கேத்த ஜோடி கெடைச்சிருந்தா உன்
வாழ்க்கை இன்னும் நல்லா இருந்திருக்கும்.”
கவிதா வருத்தப்பட்டு சொன்னபோது குமாரசாமி தலையாட்டி மறுத்தார்.
பேரும் ஒரே ரசனையோட இருந்தா வாழ்க்கை நல்லாயிருக்கும்னு யாரு சொன்னது? பிரச்சினை இல்லாம
இருந்தாதான் வாழ்க்கை வண்டி நல்லா ஓடும். ஒங்கம்மா எந்த பிரச்சினையும் என்னைய அண்ட
விடறதில்ல. அதனாலதான் நான் என் தொழிலை பாத்துகிட்டு சுத்துப்புறத்தை ரசிச்சிகிட்டு
கெடக்கேன்” என்றார்.
தொழில் நசிந்து போனபோது முதலில் கொஞ்சம் தடுமாறத்தான் செய்தார். டயர் ரிட்ரேடிங் கடை
வைத்திருந்தார். அவருடைய தீவிர உழைப்பின் அடையாளம் அது. ஓரளவு நன்றாகத்தான் போய்க்கொண்டிருந்தது.
சொந்தமாக ஒரு வீடு கட்டவும், கவிதா கல்யாணத்தைக் கடன் வாங்காமல் நடத்தவும் முடிந்ததென்றால்
அதற்கு அதுதான் காரணம். எந்தத் தொழிலிலும் அம்புக்குறி மேல்நோக்கியே போய்க் கொண்டிருப்பதில்லை.
சிலசமயம் அது கீழ் நோக்கியும் திரும்பும். பதினைந்து வருட காலம் கைகொடுத்த தொழில் சட்டெனப்
படுத்து கொண்டது. காரணம் புரியவில்லை. சித்ரா அழுது ஒரு வழி பண்ணிவிட்டாள்.
மூடிட்டு என்னாங்க பண்றது. வருமானத்துக்கு வழியில்லாம காலத்த எப்புடி கடத்தறது. நாளைக்கு
நோவு சீக்குன்னு வந்துட்டா யாரு நம்மள பாப்பா…?” கேள்வி மேல் கேள்வி கேட்டுத் துளைத்துவிட்டாள்.
நான் பாத்துக்கறேன்” என்ற குமாரசாமிக்கு முதலில் இருந்த பதைபதைப்பு வெகுவாகக் குறைந்து
போயிருந்தது. மழை பெய்யும்போது மின்னல் வெட்டும், மேகங்கள் ஒன்றோடொன்று மோதி இடியோசை
உண்டாக்கும். மழைவிட்டபின் வானம் துடைத்துவிட்ட நீலக்காகிதம் போலத் தெளிவாகியிருக்கும்.
குமாரசாமிக்கும் மனசு தெளிவாகிவிட்டது.
படுத்தபோது தோன்றிய கவலைகள், பதைபதைப்பு எல்லாம் அடங்கி மெல்ல மெல்ல நிதானம் வந்திருந்தது.
பச்சைக்கல் பதக்கத்தில் ஒற்றை வைரத்தைப் பதித்தது போன்ற அழகான நிதானம். ஆனால் கவிதாவுக்குதான்
மனங்கொள்ளாக் கவலை. மும்பையிலிருந்து அடிக்கடி பேசினாள்.
தொழில்ல நஷ்டம் வர்றது சகஜந்தான். அத நெனச்சு ஒடைஞ்சு போயிடாத. ஒனக்கு இப்ப எந்த பொறுப்புமில்ல.
என்னைய படிக்க வச்சு, கல்யாணம் கட்டி குடுத்துட்ட. நச்சு நச்சுன்னு கேட்டு புடுங்குற
மாப்ளயும் இல்ல. உன் மாப்ள அந்த விஷயத்துல தங்கம். அதனால பேங்க்குல போட்டு வச்சிருக்குற
பணத்தை கொண்டு காலத்த ஓட்டிரலாம். என்னாப்பா பேசமாட்டேங்குற…”
கவலையோடு கேட்டபோது குமாரசாமி சிரித்தார்.
கவிதா புள்ளைக்கு இவ்ளோ பேச யாரு கத்து குடுத்தான்னு யோசிக்கிறேன்.”
எல்லாம் ஒங்கிட்ட கத்துகிட்டதுதான். ஒனக்கு ஏதாவது தேவைன்னா கேளுப்பா. மாமனாருகிட்ட
நேரடியா சொல்ல அவருக்கு சங்கடமா இருக்காம். எங்கிட்ட தூது விட்டுருக்காரு.”
சந்தோசம்மா. நீங்க இப்புடி கேட்டதே எனக்கு போதும். தேவைன்னு இனிமே ஏதாவது வந்தாத்தான்
உண்டு அல்லது உருவாக்கிக்கிட்டாதான் உண்டு. அதனால மாப்ளக்கி என் சார்புல ஒரு நன்றிய
சொல்லிடு. வழக்கம்போல லீவுக்கு புள்ளைங்களை கூட்டிகிட்டு இங்கே வந்துடு. ஒங்கம்மாவும்
புள்ளைங்களை பாக்கணும்னு சொல்லிகிட்டேயிருக்கா” என்றவர் ஈஸிசேரில் சாய்ந்து கண்களை
மூடிக்கொண்டார்.
அங்கொன்றும், இங்கொன்றுமாக முளைத்துக் கிடந்தன. எங்கோ ஒரு நாய் அழுதது. அதற்கு இணையாக
உள்ளே தொலைக்காட்சியில் ஒரு பெண் ஓவென்று அழுது கொண்டிருந்தாள். தலைமேல் இடியே விழுந்தாலும்
சித்ரா சீரியல் பார்ப்பதை நிறுத்தமாட்டாள். ‘இப்ப இருக்க நெலமைக்கு எனக்கு பைத்தியம்
புடிக்காம இருக்குன்னா அதுக்கு டிவிதான் காரணம்’ என்கிற சப்பைக்கட்டு வேறு.
மின்சாரம் தடைபட்டுப் போனது. கோடைக்காலத்தில் மின்சாரம் போவதும் வருவதும் சகஜம்தானே.
தொலைக்காட்சி முன் தேமே என்று அமர்ந்திருப்பவர்கள் மின்சாரம் போய்விட்டால் வாசலை நோக்கிப்
படையெடுப்பர். ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நாலைந்து தலைகள் தென்படும். சித்ரா சலிப்போடு
எழுந்து வெளியே வந்தாள்.
சீனு போயிகிட்டிருந்துச்சு. எழவெடுத்த கரண்ட்டு நின்னு போச்சு” என்றபடியே படியில் அமர்ந்தவள்,
“என்னா தூங்கிட்டீங்களா…?” என்று சத்தமாகக் கேட்க, குமாரசாமி தலையாட்டினார். “பலத்த
யோசனையில இருக்கமாதிரி இருக்கு.”
ஒன்னுமில்ல” என்றவர் கைகளை உயரே தூக்கி நெட்டி முறித்தார்.
இழுத்து மூடி ஒரு மாதத்துக்கு மேலாகிவிட்டது. வேலை பார்த்த நாலு பேருக்கும் ஏதோ ஒருவழி
செய்தாகிவிட்டது. கடையை விற்றுக் கடனையும் அடைத்தாகிவிட்டது. ஆரம்பத்தில் துவண்ட மனசு
உடனே நிமிர்ந்துவிட்டது. முதுகில் மூட்டை சுமந்து நடக்கிறவன் மூட்டையை இறக்கிவைத்துவிட்டு
ஆசுவாசப்படுத்திக் கொள்வானே. அப்படிப்பட்ட மனநிலைதான் அவருக்கும். ஆனால் சித்ராவுக்குதான்
பொறுக்கவில்லை.
இல்லாம ஒக்காந்திருக்கீங்களே…. ஒங்க மனசுல என்னாதான் நெனப்பிருக்கு. மாசமானா சொளையா
பத்தாயிரம் தேவைப்படுது. பேங்க்குலேருந்து வர்ற வட்டிப்பணம் பத்து தேதிக்கு கூட காணாது”
என்று அடிக்கடி புலம்பித் தீர்த்தாள்.
ரெண்டுநாள் மாமிசம் சாப்புடுறத கொறைச்சு மாசத்துக்கு ரெண்டு நாளாக்கிடுவோம். மூணுவேளை
காப்பிய ஒருவேளையா கொறைச்சிக்குவோம். இப்புடி ஒவ்வொன்னா கொறைச்சா போதும். நல்லா வாழ்ந்துடலாம்.”
சொல்லிப்பார்த்தார். சித்ரா ஒத்துக்கொள்ளவில்லை.
கட்டி வாழணும்னு நமக்கென்ன தலையெழுத்தா… இந்தமாதிரி குருட்டாம்போக்குல யோசிக்கிறத
வுட்டுட்டு உபயோகமா ஏதாவது யோசிங்க” என்றவள் விருட்டென எழுந்து உள்ளே சென்றாள். அந்நேரம்
கவிதா இருந்தால் தேவலாமென்றிருந்தது அவருக்கு.
வேலைக்குக் கிளம்பிவிட்டார். புதிதாக ஆரம்பிக்கப்பட்டிருந்த அந்த சூப்பர் மார்க்கெட்டில்
பில்லிங் கவுண்டரில் வேலை. மாதம் ஏழாயிரம் சம்பளம். சித்ராவுக்குத் தலைகால் புரியவில்லை.
இப்பதான் ஞானோதயம் வந்திருக்கு. தொழிலு போச்சே, என்னா செய்யிறது அப்புடிங்குற கவலை
இல்ல மனுசனுக்கு. தேவைய கொறைச்சிகிட்டு நிம்மதியா வாழலாமுன்னு தத்துவம் பேசுனா கோவம்
வருமா வராதா…”
மகளிடம் போனில் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாள். கவிதாவுக்கு உள்ளே வலித்தது.
பொறந்தா வானத்த அளக்கலாம். சிங்கமா பொறந்தா காட்டை ஆளலாம். அட, ஒரு வெதையாப் பொறந்தா
பூ, பழம், காய், நெழல் குடுத்து ஒதவலாம். ஆனா மனுசனாப் பொறந்தா…” என்று ஒருமுறை குமாரசாமி
சொல்லி நிறுத்தியபோது கவிதாவுக்கு ஆர்வம் அதிகரித்தது.
பொறந்த என்னாப்பா…?” ஆவலோடு கேட்டாள்.
வாழலாம்… பாரு, அவனவனுக்கு ஆயிரம் தேவைங்க. அத பூர்த்தி செய்ய பாடுபட்டே காலம் ஓடிடுது.
இயற்கைய ரசிச்சு, இயற்கையோட இணைஞ்சு வாழுற பக்குவம் இங்க யாருக்கு இருக்கு சொல்லு.
கடவுள் படைப்புல வீணாப்போன படைப்புன்னா அது மனுசன்தான்.” குமாரசாமி அடித்துச் சொன்னது
கவிதாவுக்கு அது இப்போது ஞாபகத்துக்கு வந்தது.
மிகப்பெரிய குளிரூட்டப்பட்ட சூப்பர் மார்க்கெட்டில் குமாரசாமி பில் கவுண்டரில் அமர்ந்திருந்தார்.
பில்லுக்குரிய பணத்தைப் பெற்று பில்லில் பெய்டு முத்திரை குத்திக் கொடுக்கவேண்டும்.
இதுதான் அவருடைய வேலை. காலை ஒன்பதிலிருந்து இரவு ஒன்பது வரை வேலை. தொடர்ந்து உட்கார்ந்திருந்ததில்
முதுகு வலித்தது. வீட்டிற்கு வந்ததும் படுத்துக்கொள்ள உடம்பு கெஞ்சியது. வந்தவுடன்
கைகால் கழுவி முடித்து சாப்பிட்டுவிட்டு உடனே சென்று படுத்துவிடுவார். உறக்கம் சடுதியில்
தழுவிக்கொள்ளும். சித்ரா வழக்கம்போல தொலைக்காட்சியில் ஆழ்ந்துவிடுவாள்.
யாரையோ எதிர்பார்த்து வேக வேகமாகக் கிளைகளை அசைத்தது. சுவரில் சாய்த்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த
ஈஸிசேருக்கு கால்கள் வலித்தன.
திராவிட மாயை: எண்பது வருடங்களின் காத்திருப்பு | வெங்கட்குமார்
காந்தி என்பவர் வர்க்கப் போராட்டத்தின் எதிரி, ஏகாதிபத்தியத்தின் ஏவலாள், முரண்பாடுகளின்
மொத்த உருவம் என்றெல்லாம் இன்றைய இந்திய அரசியலிலும் குறிப்பாக தமிழகத்திலும் இடதுசாரிகளால்
லஜ்ஜையில்லாமல் பேசப்படுகிறது, எழுதப்படுகிறது. மகாத்மாவை விமர்சிப்பதும் அவரை வெறும்
பழைய பஞ்சாங்கமாக சித்தரிப்பதும் இடதுசாரிகளிடையே சகஜம். ஆனால் இந்திய அரசியல் வெளியில்
பெரும்பகுதி மகாத்மாவின் ஆளுமைக்கு உட்பட்டிருந்தபோது இடதுசாரிகளின் இடம் மற்றும் படிநிலை
என்ன ஆராய்ந்து பார்க்கும் பொழுது அதிர்ச்சியாக இருக்கிறது. மகாத்மாவின் முன்பு இவர்கள்
மண்டியிடாத குறைதான். இதை உறுதிப்படுத்த அவர்கள் தரப்பு ஆவணங்களே போதும்.
– ஜோஷி கடிதப் போக்குவரத்து’ என்கிற புத்தகம் முதலில் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டு
பிறகு தமிழில் தோழர் இராமமூர்த்தியால் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டது (1945).
கட்சியினுடைய வரவு செலவுக் கணக்குகள் தணிக்கைக்கு உட்பட்டவையா? அப்படியாயின் நான் அதைப்
பார்க்கலாமா” என்பது மகாத்மாவின் கேள்வி. அதற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்
செயலாளர் பி.சி.ஜோஷியின் பதில் இப்படியிருந்தது.
கணக்குகளைப் போன்றில்லாமல் இருக்கலாம். ஆயினும், பல வருஷங்களாக சட்ட விரோதமாக இருந்த
காலத்தில் கணக்குகளை வைத்துக்கொள்வதே மிகப் பெரிய குற்றம் என்ற பரம்பரையில் வந்துள்ள
நாங்கள், இப்பொழுதுதான் கணக்கு வைத்துக்கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறோம் என்பதை ஞாபகப்படுத்த
விரும்புகிறேன். எனினும் உங்கள் பரிட்சையில் நாங்கள் தேர்ந்துவிடுவோம்; எங்களுக்கு
நீங்கள் பாஸ் போட்டுவிடுவீர்கள் என்பதில் எனக்குச் சந்தேகம் இல்லை.”
கௌரவிக்கப்பட்ட நம்முடைய தேசிய இயக்கத்தின் மூத்தோர்களின் முன்னே விசாரணைக்குத் தங்களை
நிறுத்திக்கொள்வது பெருமை என்பதுதான் அன்றைய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு.
தொடங்கிய இந்தக் கடிதப் பரிமாற்றம் 1945 மே மாதத்தில் நிறைவடைந்திருக்கிறது. இந்திய
அரசியல் வரலாற்றில் காந்தியவாதிகளுக்கும் பொதுவுடைமைகாரர்களுக்கும் இருந்த சிறப்பம்சங்களை
குறிக்கும் ஆவணமாக இதைக் கொள்ளலாம்.
திசைகளிலும் மாசுபட்டிருக்கும் இன்றைய பொதுவெளியில் இந்தக் கடிதப் போக்குவரத்தும் அதன்
பின்னால் உள்ள இரு தரப்பின் கருத்தாக்கங்களும் ரசிக்கும்படியாக இருக்கின்றன. ரசிக்க
முடியாத ஒரு கடிதத்தைப் பற்றியும் சொல்கிறேன்.
கடிதம் முதலில் ஈ.வெ.ராவின் ‘குடியரசு’ இதழில் வெளியிடப்பட்டது (02-03-1930). ஆனைமுத்து
தொகுத்துள்ள ‘ஈ.வெ.ரா சிந்தனைகள்’ நூலிலும் இந்தக் கடிதம் இடம்பெற்றுள்ளது. ஒரு அரை
நூற்றாண்டுக் காலமாக திராவிடர் கழகத் தலைவர் கி.விரமணியும் இது குறித்துப் பேசியுள்ளார்,
எழுதியுள்ளார்.
சிருங்கேரி சங்கராச்சாரியார் ஈ.வெ.ராவுக்கு கடிதம் மூலம் அழைப்பு விடுத்ததாகவும் அதற்கு
ஈ.வெ.ரா பதில் எழுதியதாகவும் சொல்லப்படுகிறது.
எங்கள் அபிப்ராயங்களையும் உங்களுக்குச் சொல்லி நல்ல சகாயம் செய்து அனுக்கிரகிக்க வேண்டும்
என்று தேவதா பிரேரணை உண்டாக்கியிருப்பதால் விவேகியாகிய நீரும் உங்கள் தர்ம பத்தினியும்
இந்த சமஸ்தானத்துக்கு வந்து ஶ்ரீ சாரதா சந்திரமௌளீதர ஸ்வாமிகள் பிரசாத அனுக்கிரஹம்
பெற்று இப்போதிலும் அதிகமான சிரேயஸை அடைவீர்கள் என்று நம்பி இந்த ஶ்ரீமுகம் எழுதி வைத்து
அனுப்பலாயிற்று” என்கிறது இந்தக் கடிதம்.
தொடர்ந்து கௌரவமான முறையில் அழைப்பை ஏற்க மறுத்து ஈ.வெ.ரா எழுதிய கடிதமும் வெளியிடப்பட்டுள்ளது.
இதையெல்லாம் படிக்கும்போது பொதுவுடைமைக்காரர்கள் போலவே பகுத்தறிவுக்காரர்கள் மீதும்
ஒரு மரியாதை உண்டாகுகிறதல்லவா.
இடத்தில் தலையிட்டுப் பிரச்சினையை கலப்புகிறார் பத்திரிக்கையாளர் சுப்பு. இவர் எழுதிய
‘திராவிட மாயை – ஒரு பார்வை’ முதல் பகுதி புத்தகம். இந்தக் கடிதப் போக்குவரத்தின் உண்மை
நிலையை உரித்துக்காட்டுகிறது.
சங்கராச்சாரியாராக இருந்தவர் ஶ்ரீசந்திரசேகர பாரதி சுவாமிகள். ஆனால் குடியரசு வெளியிட்டுள்ள
கடிதத்தில் ஶ்ரீபிரஸ்தா வித்யானந்த நாத பாரத சுவாமிகள் என்ற பெயர் இருக்கிறது. இவர்
யார்? இவர் சிருங்கேரி பீடாதிபதியா?”
கேட்கிறார் சுப்பு.
சிருங்கேரி” என்ற வார்த்தையும் சந்தேகத்தை அதிகப்படுத்துகிறது. சிருங்கேரி மடத்தின்
ஶ்ரீமுகத்தில் “நிஜ சிருங்கேரி” என்று எழுதும் வழக்கம் இல்லை”
போட்டுடைக்கிறார் சுப்பு.
என்னை ஆச்சரியப்படுத்திய விஷயம். 1930ல் வெளியிடப்பட்ட இக்கடிதம் பற்றி 2014 வரை யாரும்
அக்கறை கொள்ளவில்லை, ஆய்வு செய்யவில்லை. தமிழ்ச் சமுதாயம் எண்பது வருடங்களாக சுப்புவிற்காகக்
காத்திருந்திருக்கிறது.
மாயை ஒரு பார்வை’ புத்தகங்களின் முதல் பகுதி 1917 முதல் 1944 வரையிலான காலகட்டம். இரண்டாம்
பகுதி 1944 முதல் 1967 வரை. மூன்றாம் பகுதி 1967 முதல் 1981 வரை.
வருடங்களுக்கு மேற்பட்ட தமிழக அரசியல் வரலாற்றின் பகுதியைப் பற்றி புதிய கேள்விகளைக்
கேட்டதற்காக சுப்புவை அவசியம் பாராட்ட வேண்டும். புதிய தகவல்களையும் இவர் நிறையவே சேகரித்திருக்கிறார்.
இருந்த ராஜாஜியை (1952) காங்கிரஸ்காரர்கள் எதிர்த்ததற்குக் காரணம் குலக் கல்வி திட்டம்
அல்ல, ஒன்றாக இருந்த மாநிலம் ஆந்திரா, மதராஸ் என்று பிரிக்கப்பட்டப் பிறகு தமிழ்நாட்டுக்
காங்கிரஸ்காரர்களுக்கு ராஜாஜியின் தயவு தேவைப்படவில்லை என்பதுதான் காரணம்”
சுப்பு.
வகுப்பினருக்கும் இலவசக் கல்வி தருவதுதான் சமூகநீதி”
முதல்வர் சி. என். அண்ணாதுரை சட்டமன்றத்தில் பேசியதை சுப்பு பதிவு செய்துள்ளார்.
குற்றச்சாட்டுகளுக்கு உட்படாத காவல்துறை அதிகாரிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு வசதி
செய்துகொடுத்தார் முதலமைச்சர் எம்.ஜி.ஆர் என்கிற செய்தி மூன்றாம் பகுதியில் சொல்லப்படுகிறது.
ஆண்டுகள் முயன்று உழைத்ததின் பலனாகத்தான் இந்தத் தொகுப்பு உருவாகியிருக்கிறது என்றாலும்
இது கால வரிசைப்படி இல்லை என்பது ஒரு குறை. அத்தியாயங்களின் நகர்வு நேர்க்கோட்டில்
இல்லை. நூலில் அங்கங்கே திராவிட இயக்கத்தவரின் பாஷா பிரயோகத்தை எள்ளி நகையாடும் சுப்பு
தானும் அந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்பது இன்னொரு குறை. அதைத் தவிர்த்திருக்கலாம்.
மாயை – ஒரு பார்வை, (மூன்று பகுதிகள்), சுப்பு, ரூ 400, RARE PUBLICATIONS
PADMAVATHI NIVAS, 2ND FLOOR, #2/9 Dr. SADASIVAM STREET, CHENNAI – 600017, MOBILE:
70100 68836.
– ஜோஷி கடிதப் போக்குவரத்து, மொழிபெயர்ப்பு: பி. ராமமூர்த்தி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
பிரைவேட் லிமிடெட், 41-B, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், சென்னை – 600098
வி.ஜி.சித்தார்த்தா – வளர்ந்தாரா வளைந்தாரா…? | ஜெயராமன் ரகுநாதன்
மாதம் ஒவ்வொரு இந்தியனும் அதிர்ச்சியுடன் கவனித்த விஷயம் கஃபே காஃபி டே (Café Coffee Day) வி.ஜி.சித்தார்த்தாவின்
தற்கொலை. எத்தனையோ இளைஞர்களின் நட்பை உறுதிப்படுத்தும் இடமாக இருந்த அந்த நிறுவனத்தின்
மூலகர்த்தா இப்படி ஒரு முடிவைச் சந்திக்கவேண்டுமா என்னும் வருத்தம் இந்தியாவுக்கே இருந்தது
என்றெல்லாம் பரபரப்பையும் உணர்ச்சிகளையும் தூண்டிய வாக்கியங்களைப் பல பத்திரிகைகளிலும்
தொலைக்காட்சி செய்திகளிலும் கண்டோம். மேலும் ஒரு பத்திரிகை இந்த சாமானியனின் அபார வளர்ச்சியைக்கண்டு
சாதாரண இந்தியன் நெஞ்சு விம்மிப் பெருமிதம் கொண்டான் என்றுகூட எழுதியது.
மறைவு மிகவும் வருத்தமான செய்திதான். அதில் மாற்றுக் கருத்தில்லை. என்றாலும் அவர் ஒன்றும்
மீடியாக்களில் பரவியது போல சாமானியர் அல்லர். அவரின் தொடர்புகள் அளப்பரியன. அவரின்
கரங்கள் மிக நீண்டே இருந்தன. இதோ இந்த படத்தைப் பாருங்கள்:
தற்கொலை பற்றி இப்போது எல்லோரும் பேசுவது ஒரு துர்மரணத்தினால் உண்டாகும் பரிதாப வார்த்தைகளையே.
எந்த ஒரு மனிதனுமே குடும்பம், பிள்ளைகளை நிர்க்கதியாக்கிவிட்டு தன் உயிரை மாய்த்துக்கொள்வது
பரிதாபத்துக்குரிய விஷயம்தான். என்றாலும், அதன் மற்றைய பரிமாணங்கள் என்ன என்று பார்க்கும்போது
வெளிப்படும் உண்மைகள் வேறு ஒரு பார்வையையும் அதன் மூலம் சில பாடங்களையும் தரலாம்.
ஆற்றிலிருந்து அவர் உடல் கண்டெடுக்கப்பட்டபோது பல சங்கடமான கேள்விகள் எழத்தான் செய்தன.
அவரது தற்கொலைக் கடிதத்தில், தொழில் தொடர்பான சிக்கல்களாலும் ஒரு வருமான வரி அதிகாரி
மற்றும் ஒரு தனிப்பட்ட முதலீட்டாளர் ஆகிய இருவராலும் தான் மிகவும் மன உளைச்சலுக்கு
ஆளானதாலும்தான் இந்த முடிவைத் தேடிக்கொண்டேன் என்று எழுதியிருக்கிறார். மேலும் தான்
சில மாதங்களாக ஈடுபட்டிருந்த நிதி நிர்வாக விஷயங்களை தம் குடும்பத்தாருக்கோ அல்லது
தன் நிறுவன நிர்வாகிக்களுக்கோ கூடத் தெரிவிக்கவில்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
வழக்கங்கள் அரக்கத்தனமானவையா?
கேள்விகள் தவிர, கர்நாடகா அரசியலின் திரைமறைவுக் காட்சிகளும் இவரின் மரணத்துக்குத்
துணை போயிற்றா என்னும் கேள்வியும் எழுகிறது.
புத்திசாலியான ஒரு பிஸினஸ் புள்ளி தன் சாதுரியத்தினாலும் தொடர்புகளினாலும் ஒரு மிகப்பெரிய
பிஸினஸ் சாம்ராஜ்யத்தை உருவாக்கினாலும், அதீத பேராசையினாலும் சில மறைமுக நடவடிக்கைகளாலும்
அரசை ஏமாற்ற முயன்றதாலும் வெளி வரமுடியாத சிக்கல்களில் உழன்று போய் இந்த சோக முடிவைத்
தேடிக்கொண்டு விட்டாரா? உண்மை என்பது வெளி வந்தாலும் அது முழுமையான உண்மையா என்பது
எவருக்கும் தெரியப்போவதில்லை.
சில மாதங்களாகவே சித்தார்த்தாவின் பெயர் அடிபட்டுக்கொண்டிருந்ததன் காரணம் தனிப்பட்ட
மிகப்பெரும் கடன் சுமையினால் அவர் மேற்கொண்ட சில நடவடிக்கைகளே. கஃபே காபி டேவின் மதிப்பு
கிட்டத்தட்ட ரூ 4200 கோடி. சித்தார்த்தாவும் அவரின் சில நண்பர்களும்கூட அவரது கடன்
சுமையை விட இந்த மதிப்பு அதிகம் என்றே சொல்கின்றனர். இருப்பினும் சித்தார்த்தா தன்
முடிவைத் தேடிக்கொண்டதன் காரணம் என்ன என்பது இன்று வரை சந்தேகமறத் தெளிவாகவில்லை. விசாரணைக்குப்
பின்னும் உண்மையான காரணம் தெரிய வருமா என்பது உறுதியில்லை.
வாரங்களுக்கு முன்புதான் சித்தார்த்தா தன் மைண்ட் ட்ரீ (Mind Tree) நிறுவனப் பங்குகளை
(20.3%) L&Tக்கு விற்றிருந்தார். அந்த விற்பனையே மைண்ட் ட்ரீ கம்பெனியின் நிர்வாகிகளுக்கும்
சித்தார்த்தாவுக்கும் சலசலப்பை உண்டு பண்ணி, இதில் எல்.அண்ட்.டி குளிர் காய்கிறது என்றெல்லாம்
விமரிசனங்கள் வைக்கப்பட்டன. என்றாலும், அந்த விற்பனை என்னவோ நிகழ்ந்தே விட்டது. இந்த
விற்பனையின் சித்தார்த்தாவுக்கு எல்.அண்ட்.டி வழங்கிய மதிப்பு ரூ 3269 கோடி. இந்தத்
தொகை சித்தார்த்தாவின் கடனை முழுமையாக அடைக்கப் போதுமானதில்லையா என்னும் கேள்வி எழுகிறது.
அப்படியானால் தொழில் நிறுவனப் புத்தகங்களில் காட்டப்பட்ட கடனைவிட வேறு என்ன கடன் எங்கெங்கு
என்பது இன்னும் தெரியவில்லை.
புத்தகங்களில் அவரின் கடன் சுமை ரூ 6500 கோடிவரை இருப்பதாகவும் அது தவிர தனிப்பட்டு
அவர் ஏராளமான தொகைகளைக் கடனாக வாங்கியிருந்தார் (கிட்டத்தட்ட ரூ 2000 கோடி வரை) என்றும்
உறுதி செய்யப்படாத தகவல்கள் சொல்கின்றன. சமீபத்தில் இன்னும் ரூ 1600 கோடி கடன் வாங்குவதற்கான
ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்தார் என்பதும் தெரிய வருகிறது.
கஃபே காபி டேவைத்தவிர தகவல் தொழில், ரியல் எஸ்டேட், நிதிச்சேவை, லாஜிஸ்டிக்ஸ் எனப்படும்
சரக்குப்போக்குவரத்து ஆகிய தொழில் துறைகளில் முதலீடு இருந்தது. இவை தவிர அவர் தென்
அமெரிக்காவில் 1.85 மில்லியன் ஹெக்டேர் வனப்பிரதேசக் காடுகளைக் குத்தகைக்கு எடுத்திருந்தார்.
தன் காபித் தோட்டங்களின் மதிப்பு மற்றும் சில்வர் ஓக் மரங்களின் மதிப்பை அவர் கிட்டத்தட்ட
ரூ 3000 கோடி என்று சொல்லியிருந்தார். ஆனால் விவரமறிந்த விற்பன்னர்கள் சிலர் இந்த மதிப்பை
ஒப்புக்கொள்ளவில்லை. அந்தச் சொத்துக்கள் அவர் கடனை அடைக்கப் போதுமானதில்லை என்றே கூறுகின்றனர்.
மரணத்தின் காரணம் அவர் கடிதத்தின்படி அவரால் கடன் சுமையைக் கையாள முடியவில்லை என்பதே.
மேலும் அவர் வாங்கியிருந்த பல கடன்கள் தனிப்பட்ட முறையில் பெற்றவை என்றும், அவை பற்றி
நிறுவனத்துக்கோ அதன் நிர்வாகிகளுக்கோ, ஏன் குடும்பத்தாருக்கோகூடத் தெரியாது. எல்லாவற்றுக்கும்
தானே பொறுப்பு என்னும் ரீதியிலேயே குறிப்பிட்டிருக்கிறார்.
தனி முதலிட்டாளரின் நெருக்கடியையும் ஒரு வருமானவரி அதிகாரியின் கிடுக்கிப்பிடியையும்
தன்னால் சமாளிக்க முடியவில்லை என்று கடிதத்தில் சொல்லியிருப்பது கேள்விக்கு உரியதாகிறது.
இந்தச் செயல்கள் தற்கொலைக்குத் தூண்டும் செயல்கள் என்று பார்க்கப்படுமா என்பது சட்ட
வல்லுனர்கள் கணிக்க வேண்டியதானாலும், இவை விசாரணைக்குட்படுத்தப் படவேண்டியவை என்பதில்
சந்தேகமே இல்லை. குற்றம் நிரூபிக்கப்பட்டால் தண்டனை வழங்கப்பட்டே ஆகவேண்டும்.
இதையே இன்னொரு கோணத்தில் பார்ப்போமா?
அதிகாரி நெருக்கடி கொடுக்க வேண்டிய அவசியம் என்ன, அதற்கு சித்தார்த்தா ஏன் பயப்படவேண்டும்
என்பதும் கேள்விக்குரியவையே! அவரின் வருமான வரிச்சிக்கல் சுருக்கமாக இதோ:
தொடர்புகள் அவருக்கு இருந்தாலும் அவை எதுவும் அவரைக் காப்பாற்றவில்லை. டி.கே.சிவகுமாரின்
நெருக்கம் அவருக்கு நெருக்கடியைத் தந்தது. சிவகுமார் வீட்டில் நடந்த ரெய்டின் பாதிப்பில்
கிடைத்த விஷயங்கள்தாம் சித்தார்த்தாவின் வீட்டு ரெய்டுக்கும் காரணம் என்று சிலர் சொல்லுகின்றனர்.
மாமனார் எஸ்.எம்.கிருஷ்ணாவின் அரசியல் பலமோ அவர் சமீபத்தில் பாஜகவில் இணைந்ததால் உண்டான
தொடர்பினாலோ கூட சித்தார்த்தாவைக் காப்பாற்ற இயலாமல் போனது.
விதத்திலும் சித்தார்த்தாவின் மரணம் ஏற்றுக்கொள்ளப்படக்கூடியது அல்ல. அவரின் மரணத்துக்கு
காரணமாக இருந்த எவருமே சட்டத்தின் படி தண்டிக்கப்பட வேண்டியவர்களே. ஆனால் நமக்கு ஏற்படும்
எண்ணம் இந்தச் சம்பவத்தைக்கொண்டு வேறொரு அஜெண்டாவை முன்வைக்கும் முயற்சிகள் தொடங்கிவிட்டன
என்பதே.
அரசு பதவிக்கு வந்த 2014 முதலே சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டுவிட்டன. மோடி அரசாங்கம்
ஊழலுக்கு எதிரானது என்று முழங்கியே ஆட்சிக்கு வந்த காரணத்தால் அவரின் அமைச்சர்கள் தத்தம்
துறைகளில் களை எடுத்த முயற்சிகளில் பல பின் விளைவுகள் தெரிய ஆரம்பித்தன. பண மதிப்பிழப்பு,
ஜிஎஸ்டி, வருமான வரி கிடுக்கிப்பிடிகள் போன்ற செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் அரசை
எதிர்க்கும் வியூகத்தை வகுத்து மீடியாக்கள் மூலமாக தம் பிஜேபி தாக்குதலைத் தொடர்ந்த
சங்கதிகளை நாமறிவோம். தேச விரோத சக்திகளும் இந்த மறைமுகத் தாக்குதாலை வைத்துத் தம்
நோக்கங்களை முன்னிறுத்த ஆரம்பித்தன.
மோடி வெறுப்பு தூவப்பட்டு பல நிலைகளில் அந்த எதிர்ப்புகள் வலுப்பெற ஆரம்பித்தன. முக்கியமாக
தென் மாநிலங்களில், அதுவும் தமிழகத்தில் இந்த எதிர்ப்பு பலம் பெற்றதும், அதனால்
2019 தேர்தலில் இவ்விடங்களில் பிஜேபி அதிகம் வெற்றி பெறமுடியாமல் போனதும் சரித்திரம்.
ஆனால் வட மாநிலங்களில் பிஜேபி இந்த அளவு மக்கள் ஆதரவைச் சம்பாதித்து மாபெரும் வெற்றியடைந்து
விடும் என்பதை இந்த எதிர்ப்பாளர்கள் எதிரே பார்க்கவில்லை. இந்த மாபெரும் வெற்றி பிஜேபியினருக்கே
தங்களின் முயற்சிகளின் மீது பெரும் நம்பிக்கையைத் தோற்றுவிக்க, புதிய அரசு ஊழல் களையெடுக்கும்
செயல்களில் தீவிரம் காட்டத் தொடங்கிவிட்டது. நிர்மலா சீதாராமன் பதவி ஏற்ற கையோடு வருமான
வரி மற்றும் பல அரசு இயந்திரங்களில் மேல் நிலை அதிகாரிகளின் மாற்றம் தொடங்கிவிட்டதைப்
பார்த்தோம்.
அரசின் கடந்த ஐந்தாண்டுகளில் பாதிக்கப்பட்ட, சட்டத்தின் முன் கேள்விக்குரிய செயல்களைச்செய்த
நேர்மையல்லாத தொழில் நிறுவனங்கள் கொண்டிருந்த ‘இந்த முறை பிஜேபி ஆட்சிக்கு வராது’ என்ற
நம்பிக்கை பொய்த்துப்போகவே அவர்கள் ஒரு கையறு நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். மேலும்
ஏற்கெனவே எடுக்கப்பட்ட விஜய் மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு எதிரான செயல்பாடுகள் சர்வதேச
அளவிலேயே அவர்களுக்கு எதிராகப் போய்விட்ட நிலையில் இங்கு அதுபோன்ற நிலைமைக்குத் தள்ளப்பட்டுக்
கொண்டிருக்கும் பெரிய மனிதர்களின் தப்பித்தல் கனவு வலுவிழந்து போய்விட்டது.
மரணத்துக்கான காரணம் தனக்கு ஏற்பட்ட அதீத மன உளைச்சல் என்று அவரால் எழுதப்பட்ட கடிதம்
மூலம் தெரிய வர, இந்த மோடி எதிர்ப்பு சக்திகள் இதையும் தமக்கு சாதகமாகப் பயன்படுத்தத்
தொடங்கிவிட்டதைக் காண்கிறோம்.
வரித்துறை சித்தார்த்தாவை கடுமையான நெருக்கடிக்கு உள்ளாகிவிட்டது!” (Tax Terrorism
என்ற சொல்லைப்பயன் படுத்துகின்றனர்.)
கொடுத்த வங்கிகள் அவரைத் தற்கொலைக்குச் செல்லும்படி அழுத்தம் கொடுத்துவிட்டன!”
ஓரளவுக்கு உண்மை இருக்கக்கூடும்.
கடன் கொடுத்தவன் நெருக்கத்தான் செய்வான். மல்லையா விஷயத்திலும் நீரவ் மோடி விஷயத்திலும்
அரசு என்ன செய்து கொண்டிருந்தது, வங்கிகள் அவர் ஊரை விட்டுக் கிளம்பும் வரை வேடிக்கை
பார்த்தனவா என்று கேட்ட அதே நபர்கள்தான் இப்போது நெருக்கடி கொடுத்ததைக் குறை கூறுகின்றார்கள்.
நிருபிக்கப்படாத சந்தேகங்கள், அரசியல் மறைமுக நடவடிக்கைகள் என்று எல்லாவற்றையும் மறந்துவிட்டு
வெறும் தொழில் என்ற அளவில் பார்த்தால் ஓரளவு தெளிவு கிடைக்கலாம்.
மிகப்பெரும் தொழில் நிறுவனர் பலதரப்பட்ட வகை தொழில் நிறுவனங்களை ஒரே குடையின் கீழ்
நிர்வகிக்கும்போது சில தவிர்க்கமுடியாத நிர்வாகட் செயல்பாடுகளைச் செய்துவிடுகிறார்
என்பது உலகமெங்கும் நாம் பார்த்த ஒரு வழக்கம். பல நிறுவனங்கள் இயங்கும்போது, சில நல்ல
லாபகரமாக இயங்க, சில நிறுவனங்கள் தடுமாறும் அல்லது நொண்டியடிக்கும். அப்போது லாபகர
நிறுவனத்தில் இருக்கும் பணப்புழக்கத்தைச் சட்டென்று இன்னொன்றில் செலுத்தி நிலமையைச்
சமாளிப்பது வழக்கம்தான். ஆனாலும் இன்றைய கடுமையான வர்த்தகச் சட்டங்களுக்குட்பட்டு அதைச்செய்ய
முடியாது. எனவே பல சமயங்களில் சட்டங்கள் மீறப்படுகின்றன. நொண்டியடிக்கும் நிறுவனங்கள்
சீரடையாமல் நஷ்டத்திலேயே இயங்குமானால் இந்தக் குளறுபடி நிதி மேலாண்மை ஒரு கட்டுக்குள்
அடங்காமல் போய், சட்ட விதி மீறல், நேர்மையற்ற நிதிக்கணக்குகள், பெரும் கடன் சுமை என்று
முடிந்துவிடும். விதிகளை மீறிக் கடன் கொடுக்கும் வங்கிகளும் முதலீட்டாளர்களும் நிலைமை
நெருக்கடியாகும்போது தம் முதலீட்டையோ கடன் தொகையையோ காத்துக்கொள்ள நிறுவன அதிபரை நெருக்கத்தான்
செய்வார்கள். அவர் அதைச் சமாளிக்க இயலாமல் ஒன்று இன்சால்வென்ஸி கொடுத்துவிடுவார், இல்லை
ஓடி ஒளிந்துகொள்வார், அல்லது வேறென்ன, ஆற்றில் குதித்துவிடுவார்!
நிறுவனச் சங்கிலியைப்பாருங்கள்.
இதுவே நிகழ்ந்திருக்கலாம் என்று நம்மால் யூகிக்கத்தான் முடியும்.
பேருக்கு தம் நட்பையும் தொடர்புகளையும் வளர்த்துக்கொள்ள அருமையான இடம் கொடுத்த கஃபே
காஃபி டேவின் அதிபருக்கு, அவர் வாழ இந்த உலகத்தில் இடமில்லாமல் போய்விட்டது என்பதை
வாழ்க்கையின் அபத்தங்களுள் ஒன்றாகத்தான் கருத வேண்டியிருக்கிறது.
The death of an entrepreneur By Indulekha Aravind, Suman Layak, ET Online, 4th
August 2019)
ஆயிரம் பள்ளிகள் மூடல் – ஒரு யோசனை | ராமசந்திரன் கிருஷ்ணமூர்த்தி
என்ற படிக்கட்டின் மீதேறி நரகத்திற்குப் போகலாம் என்று சொல்வார்கள். அநேகமாக நம் நாட்டில்
உள்ள பல திட்டங்களும் சட்டங்களும் அப்படித்தான் இருக்கின்றன.
என்பது வியாபாரம் அல்ல, அது சேவை என்று வரையறை செய்து அரசும் லாபநோக்கிலாத டிரஸ்ட்களும்தான்
கல்விக்கூடங்களை நடத்தலாம் என்பது விதி. கல்வி நிறுவனங்கள் அதிகக் கட்டணம் வசூலிக்கக்
கூடாது என்பது சட்டம். கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் என்று தனியார்ப் பள்ளிகள்
25% இடங்களைப் பொருளாதாரத்தில் நலிந்த குடும்பத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு வழங்கவேண்டும்,
அதற்கான கட்டணத்தை அரசே செலுத்தி விடும் என்ற திட்டத்தில், ‘எல்லா மிருகங்களும் சமம்,
ஆனால் பன்றிகள் மட்டும் கொஞ்சம் கூட’ என்றும் ‘விலங்குப் பண்ணை’யில் கூறுவதுபோல. மொழிவழி/
மதவழிச் சிறும்பான்மைக் கல்வி நிலையங்களுக்கு விலக்கு.
கல்வி நிலையங்களை நடத்துகிறது, தமிழகத்தில் பெரும்பான்மையான மாணவர்கள் பள்ளிக்கு வருகிறார்கள்
என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆனால் நடுத்தரவர்க்கம் அரசுப் பள்ளிகளைக் கைவிட்டுத்
தனியார்ப் பள்ளிகளுக்குப் போய் குறைந்தபட்சம் முப்பது வருடங்களாவது இருக்கும். தரமான
கல்வியை அரசு பள்ளிகள் அளிக்கவில்லை என்ற கருத்தை இன்றுவரை மாற்றிக்கொள்ள காரணங்கள்
இல்லை.
நடுவில் ஆயிரம் பள்ளிகளுக்கு மேலாக மாணவர் சேர்க்கை இல்லை என்று மூடப்போவதாகத் தகவல்.
‘இல்லை, அதனை நூலகமாக மாற்றப் போகிறோம்’ என்று அரசு கூறுகிறது.
கல்வி என்பது அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெரும் பள்ளிகள் மற்றும் தனியார் என்று மூன்று
வகையில் இயங்குகிறது. இதில் அரசுப் பள்ளிகளில் மட்டும் ஒரு சிறிய மாறுதலை ஏற்படுத்தலாம்.
என்பதை சேவை என்றல்லாது, வியாபாரம் என்று வகைப்படுத்திவிடலாம். லாப நோக்கோடு கல்வி
நிலையங்களை நடத்தலாம் என்று மாற்றி விட வேண்டும். குறைந்தபட்சம் தனியார்ப் பள்ளிகள்
வாங்கும் பணத்திற்குச் சரியான கணக்கும் அதற்கான வரியும் வெளிப்படையாக இருந்தால் போதும்.
கல்வி உரிமைத் திட்டம் என்பது ஒரு வடிகட்டிய மோசடி. 25% இடங்களை ஹிந்துப் பள்ளிகள்
மட்டும் அளிக்க வேண்டும் என்ற கருத்தே தவறு. அது போக, அந்த மாணவர்களுக்கான பணத்தை இப்படி
இடம் அளித்த பள்ளிகளுக்குத் தருவதிலும் மிகுந்த கால தாமதம் ஏற்படுகிறது. எனவே பள்ளிகள்
இந்த மாணவர்களுக்கான செலவை மற்ற மாணவர்களுக்குமேல் ஏற்றி வசூலிக்கிறது.
பள்ளிகளை கைவிட்டுத் தனியார்ப் பள்ளிகளுக்கு மாணவர்கள் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்
படி போகிறார்கள் என்றால் அரசுப் பள்ளிகள் செயல் இழந்துவிட்டன என்று அரசே ஒப்புக்கொள்கிறது
என்பதுதான் பொருள். யாருக்கும் எந்தப் பயனும் இல்லாமல் இருக்கும் சட்டத்தை இன்னும்
வைத்துக்கொண்டிருப்பது அறிவுடைய செயலா?
ஒரு மாணவனுக்கு தமிழக அரசு ஆண்டு ஒன்றுக்கு ஏறத்தாழ இருபதாயிரம் ரூபாய் செலவு செய்கிறது.
ஏறத்தாழ ஐம்பத்தி ஐந்து லட்ச மாணவர்கள் முப்பத்தி ஏழாயிரம் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள்.
நேர் சராசரியாக எடுத்தால் பள்ளிக்கு நூற்று ஐம்பது மாணவர்கள்.
சேர்க்கை இல்லாமல் மூடும் நிலையில் உள்ள பள்ளிகளைத் தனியார் வசம் ஒப்படைத்து விடலாம்.
நிலமும் கட்டடங்களும் உள்கட்டமைப்பு வசதியும் அரசின் பங்கு. நிர்வாகம் செய்வது தனியார்.
பள்ளியை நடத்தப் பொறுப்பேற்கும் தனியார், அரசு நிர்ணயித்த தகுதி உள்ள ஆசிரியர்களைத்
தேர்வு செய்து அவர்களுக்குப் பணி வழங்கவேண்டும். அவர்கள் அரசுப் பணியாளர்களாக இருக்க
மாட்டார்கள்.
சேர்ந்து படிக்கும் மாணவர்களுக்கு வருடம் ஒன்றுக்கு ஒரு குறிப்பிட்ட தொகையை அரசு ஒதுக்கி
விடும். அந்தத் தொகையை நேரடியாகத் தனியார் வசம் ஒப்படைக்காமல், அதிலிருந்து ஆசிரியர்களுக்கும்,
மற்ற பணியாளர்களுக்கும் சம்பளமாக அவர்களின் வங்கிக் கணக்குக்கு மாதா மாதம் அனுப்ப வேண்டும்.
பள்ளியை நிர்வாகம் செய்ய ஒரு குறிப்பிட்ட தொகையை பள்ளி நிர்வாகத்தை ஏற்றிருக்கும் தனியாருக்கு
அரசு வழங்கவேண்டும். தரமாகப் பள்ளியை நிர்வகித்தால் தனியார் நிறுவனம் போல அந்த ஆண்டு
முடிந்ததும் நிர்வாகம் செய்பவருக்கு ஒரு ஊக்கத் தொகை வழங்கப்படவேண்டும்.
உள்கட்டமைப்பு வசதி, தூய்மை, சுகாதாரம், மாணவர்களின் கல்வித் தகுதி, ஆசிரியர்களின்
தரம் ஆகியவற்றைத் தகுதியான நிறுவனங்கள் மூலம் தர ஆய்வு செய்து, அவர்களின் ஆலோசனைகள்
பள்ளியை நிர்வகிக்கும் தனியாரிடம் வழங்கப்பட வேண்டும். ஒரு வேளை அதில் முன்னேற்றம்
ஏற்படவில்லை என்றால் அரசு அந்தத் தனியாரோடு ஏற்படுத்திக் கொண்டிருக்கும் ஒப்பந்தத்தை
ரத்து செய்து விடலாம். அது போல ஆசிரியர் தகுதியில் குறைபாடு இருந்தால் போதிய அவகாசம்
அளித்து அவர்கள் தங்களைத் தரமுயர்த்தத் தேவையான உதவிகளைச் செய்யவேண்டும். அதன் பிறகும்
தேவையான தகுதியைப் பெறாத ஆசிரியர்களைப் பணி நீக்கம் செய்து விடலாம். ஆனால் இந்தச் செயல்
பள்ளியை நிர்வகிக்கும் தனியாரின் கட்டுப்பாடற்ற உரிமையாக இருக்கக் கூடாது.
வகுப்பில் இருந்து ஐந்தாம் வகுப்பு வரை – ஆறு வகுப்புகள்.
மூன்று பிரிவு, பிரிவுக்கு முப்பது மாணவர்கள் என்றால் மொத்தம் 6 X 3 X 30 = 540 மாணவர்கள்.
மாணவர்களுக்கு 20 ஆசிரியர்கள். ஆசிரியரின் மாத சம்பளம் ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம்.
மொத்த வருட சம்பளம் 20 X 12 X 25, 000 = ரூபாய் அறுபது லட்சம்.
ஓவியம், இசை ஆகியவற்றைக் கற்றுக்கொடுக்க நான்கு ஆசிரியர்கள். அவர்களின் வருட சம்பளம்
4 X 12 X 25, 000 = ரூபாய் பனிரெண்டு லட்சம்.
தொழிலாளி, காவலர்கள், அலுவலக உதவியாளர்கள் என்று மொத்தம் ஆறு பேர். அவர்களின் வருடச்
சம்பளம் 6 X 12 X 15, 000 = ரூபாய் பதினோரு லட்சம்.
நிர்வாகியின் சம்பளம் 12 X 50, 000 = ரூபாய் ஆறு லட்சம்.
சம்பள வகையில் அரசின் பங்களிப்பு தொன்னூறு லட்சம். சராசரியாக ஒரு மாணவனுக்கு அரசின்
பங்களிப்பு ரூபாய் பதினாறாயிரத்து எழுநூறு ரூபாய்.
மூவாயிரத்து முன்னூறு ரூபாயில் மாணவர்களுக்கான சீருடை, புத்தகங்கள், கல்வி உபகரணங்கள்,
சத்துணவு என்று பயன்படுத்தப்படலாம்.
தற்போது மூடப்படுவதாகப்
பேசப்படும் ஆயிரம் பள்ளிகளிலாவது இதனை முயன்று பார்க்கலாம். எவ்வித முயற்சியும் இல்லாமல்,
பள்ளிகளை மூடுவதும், 25% கட்டாயக் கல்வித் திட்டத்தில் சிறுபான்மைப் பள்ளிகளுக்கு மட்டும்
விலக்கு அளிப்பதும் என அரசு எடுக்கும் முடிவுகள் பள்ளிகளையும் கல்வியையும் சீர் செய்ய
உதவாது. மாறாக இன்னும் மோசமாக்கவே செய்யும்.
மகாத்மா காந்தி கொலை வழக்கு – சாவர்க்கரின் வாக்குமூலம் (பகுதி 5) | தமிழில்: ஜனனி ரமேஷ்
செல்வி. மோடாக் சாட்சி (பி. டபிள்யூ 60) :
சாட்சியின் சான்றாவணத்தில் என் வழக்கு தொடர்பாக இரண்டு அல்லது மூன்று வரிகளே உள்ளன.
தனது சான்றாவணத்தின் பக்கம் 277ல் சாட்சி கூறுவதாவதுள்: ‘1948 ஜனவரி 14 அன்று ரயில்
பயணத்தின் போது, ஆப்தே மற்றும் கோட்சே இருவருக்குமான உரையாடலிலிருந்து சிவாஜி பூங்கா
அருகிலுள்ள சாவர்க்கர் சதனுக்குப் போக விரும்பியதாகத் தெரிய வந்தது’ என்கிறார்.
ஆப்தேவும் என்னைத் தனிப்பட்ட முறையில் சந்திக்க விரும்பியதாக இந்தச் சாட்சி எந்த இடத்திலும்
சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சாவர்க்கர் சதனுக்குப் போவதென்றால் சாவர்க்கரைச்
சந்திக்கத்தான் செல்லவேண்டும் என்று அர்த்தம் கொள்ள வேண்டியதில்லை. சாவர்க்கர் சதன்
குறித்து ப்ராஸிக்யூஷன் தரப்பே அளித்த சான்றின் அடிப்படையில், மேற்கண்ட விளக்கத்தைப்
பார்க்கும்போது, ஆப்தேவும், கோட்சேவும், சாவர்க்கர் சதனில் வாடகைக்குக் குடியிருக்கும்
பரிச்சயமான பலரை அல்லது என் செயலரின் பொறுப்பில் தரைத்தளத்தில் இருந்த இந்து சங்கதன்
அலுவலகத்தில் அடிக்கடி கூடும் அவர்களது நண்பர்களான இந்து சபா ஊழியர்களைப் பார்க்க விரும்பியிருக்கலாம்.
நான் முதல் தளத்தில் வசிப்பதால், அலுவலகத்துக்கு வரும் மக்கள் கட்டாயமாக என்னைப் பார்க்க
வர வேண்டிய அவசியமில்லை. சாவர்க்கர் சதனுக்குப் பலமுறை வந்திருந்தாலும் என்னை ஒரே ஒருமுறைதான்
பார்த்ததாக ப்ராஸிக்யூஷன் தரப்பு சாட்சியான பேட்ஜே அவரது சான்றாவணத்தில் ஒப்புக் கொண்டுள்ளார்
(பக்கம் 222).
பக்கம் 278ல் சாட்சி மேலும் கூறுகையில் ‘சாவர்க்கர் சதனுக்கு எதிரே தனது வாகனத்தை நிறுத்தியபோது
ஆப்தேவும், கோட்சேவும் இறங்கிக் கொண்டனர். ஆனால் அவர்கள் உண்மையில் சாவர்க்கர் சதனுக்குள்தான்
நுழைந்ததைத்தான் பார்க்கவில்லை’ என்கிறார். எனவே இந்த சாட்சிக்கு என்னைப் பொருத்தவரை
எந்த முக்கியத்துவமோ, உறுதிப்படுத்தும் மதிப்போ கிடையாது.
மற்றும் கோட்சேவை இருவராகவோ, இருவரில் ஒருவராகவோ, என் வீட்டுக்கு வந்ததை நான் பார்க்கவுமில்லை,
கேட்கவுமில்லை. மேலும் இருவரையும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, அந்நாளிலோ, அடுத்த நாள்களிலோ,
பார்க்கவுமில்லை என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
டபிள்யூ. 67)
ஜெயின் என்னை நேரடியாகவும், உறுதியாகவும், குறிப்பிடும் ஒரே பகுதி அவருடைய வாக்குமூலத்தின்
பக்கங்கள் 299-300. அவர் பதிவு செய்துள்ளதாவது: ‘அகமதுநகரில் மதன்லாலின் பணிகளைக் கேட்ட
பிறகு இந்து மகாசபாவின் வீர சாவர்க்கர் என்னை (மதன்லால்) வரச் சொல்லி இரண்டு மணி நேரம்
பேசினார்’ என்று மதன்லால் சொன்னார். மேலும் வீர சாவர்க்கர் அவருடைய முதுகில் தட்டி
“தொடர்ந்து செய்” என்றார். அவ்வளவுதான்.
ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படும் இக்கதை குறித்து எனது கருத்தைக் கீழ்க்கண்டவாறு
சமர்ப்பிக்கிறேன்:
நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்படவும் இல்லை, அவர் என்னைச் சந்திக்கவும் இல்லை,
அவரது பணிகள் குறித்து என்னிடம் விவரிக்கவும் இல்லை. அவருடன் எந்தச் சூழலிலும் உரையாடவும்
இல்லை. அவருடைய பணியைப் பாராட்டி அவர் முதுகில் தட்டி “தொடர்ந்து செய்” என்று சொல்லவும்
இல்லை.
என்னைச் சந்தித்த கதையை டாக்டர் ஜெயினிடம் மதன்லாலே சொன்னார் என்று வைத்துக் கொண்டாலும்,
அகமத் நகரில் ‘மதன்லால் பணி’ குறித்துத் தனது சான்றாவணப் பக்கம் 229ல் ஜெயின், ‘அகமத்
நகரில் தனது பணிகள் பற்றி என்னிடம் மதன்லால் விவரித்தார்’ என்று கூறியதுடன் ‘பட்வர்த்தன்
கூட்டத்தில் மதன்லால் தகராறு செய்ததுடன் என்னைத் தாக்கினார்; அகதிகள் மற்றும் இந்துக்களுக்காகத்
தன்னார்வக் குழுவை அமைத்தார்; நகரில் கட்சியைத் தொடங்கி ஆயுதங்களை வாங்கிக் குவித்ததுடன்
முஸ்லிம் பழக்கடைக்காரர்களை விரட்டி அடித்தார்’ என்றும் பதிவு செய்துள்ளார். அகமத்
நகரில் அவருடைய பணிகள் என்று ஜெயினே குறிப்பிட்டுள்ளார். பிறகு வீர சவார்க்கரைச் சந்தித்து
அகமத் நகரில் தனது பணிகளை அவரிடம் விவரித்ததாக மதன்லால் தன்னிடம் சொன்னதாகவும் ஜெயின்
குறிப்பிடுகிறார்.
தொடர்ச்சியை நுணுக்கமாகக் கவனிக்கும் போது “இவற்றை” அல்லது “பணிகளில்” சிலவற்றை மட்டுமே
என்னிடம் சொன்னதாகக் கூறப்படுகிறது. என்னை மதன்லால் சந்திக்க வந்த கதையைச் சொன்ன பிறகே
ஜெயின் அதன் பிற்பகுதியை பக்கம் 300ல் கீழ்க்கண்டவாறு விவரிக்கிறார்: ‘ஏதோவொரு தலைவரைக்
கொல்ல அவரது கட்சி சதித் திட்டம் தீட்டி வருவதாகவும் அந்தத் தலைவர் காந்திஜி என்றும்
கடைசியாகத் தன்னிடம் மதன்லால் தெரிவித்தாகவும்’ கூறுகிறார். எனவே இக்கதையின் தொடர்ச்சியிலிருந்து
காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் தனியான திட்டம் என்பதும், “அகமத் நகரில் மதன்லால்
பணிகள்” என்று ஜெயின் முன்னர் சொன்ன நிகழ்வுகளின் பட்டியலில் இது சேராது என்பதும் தெளிவு.
இதன் காரணமாக மதன்லால் என்னிடம் சொன்னதாகக் கூறப்படும் விஷயங்களில் அகமத் நகர் பணிகள்
மட்டுமே அடங்கும் என்றும் காந்திஜியைக் கொலை செய்யும் சதித்திட்டம் குறித்து என்னிடம்
எதுவும் கூறவில்லை என்பதும் தெளிவு. மேலும் மற்றும் இந்த அனுமானம் தவிர்த்துக் கவனிக்க
வேண்டிய முக்கிய விஷயம் என்னவெனில், டாக்டர் ஜெயினின் சாட்சியம் முழுவதும் காந்திஜியைக்
கொல்லும் சதித்திட்டம் பற்றி மதன்லால் என்னிடம் கூறியதற்கு ஆதரவாகவோ, அந்தக் கட்சியுடன்
எனக்குக் குறைந்தபட்சம் தொடர்போ, அறிவோ இருப்பதாகவோ, ஒரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மாறாக, மதன்லாலின் கட்சி உறுப்பினர்களின் பெயர்களோ, ஏனைய விவரங்களோ, அவரைப் பற்றியோ
கூட அதிகம் தெரியாது என்று டாக்டர் ஜெயின் தெளிவாக ஒப்புக் கொண்டுள்ளார். (பி. டபிள்யூ
67 பக்கங்கள் 306 & 308).
சதித்திட்டத்துடன் என்னைத் தனிப்பட்ட முறையில் தொடர்புபடுத்த முடியாத சூழலில், மதன்லால்
என்னைச் சந்தித்தது குறித்த இந்தப் பதிவுக்கு எந்த சாட்சியும் இல்லை என்பதைத் தாழ்மையுடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.
டாக்டர் ஜெயின் அல்லது திரு அங்கத் சிங்க் அல்லது மாண்புமிகு திரு தேசாய் ஆகியோர் எந்த
நிலையிலும் மதன்லால் கதையை நம்பவோ அல்லது அது பற்றிய குறிப்புகளையோ பதிவு செய்யவில்லை
என்பதும் குறிப்பிடத்தக்கது.
கதையின் சாரங்கள் பிரத்யேகமாக நினைவாற்றலின் அடிப்படையில் டாக்டர் ஜெயின் அளித்திருக்கும்
பட்சத்தில், பழமொழிக்கேற்ப விலாங்கு மீனைப் போன்று மனித நினைவும் ஞாபகமும் நழுவும்
தன்மை கொண்டதால், ஒன்றுக்கொன்று மாறுபடும் என்பதில் ஆச்சரியப்படுவதற்கு ஏதுமில்லை.
மதன்லால் என்னைச் சந்திக்க வந்ததைக் குறிக்கும் அப்பகுதி, என்னைத் தொடர்புபடுத்தும்
ஒரே பகுதி, காவல் துறையின் அழுத்தம் காரணமாகப் புனையப்பட்டுள்ளது என்பது கீழ்க்காணும்
காரணங்களால் தெள்ளத் தெளிவாகிறது:
என்னைப் பற்றிய மதன்லாலின் கதை குறித்த டாக்டர் ஜெயினின் கருத்திலுள்ள நேர்மை தொடர்பாக
எனது மேற்கண்ட ஆட்சேபணை, சந்தேகத்துக்கு இடமின்றித் தோன்றியதற்குக் காரணம், குற்றவியல்
நீதிபதி முன்பான தனது வாக்குமூலத்தில், அவர் இதுபோல் எதையுமே பதிவு செய்யவில்லை என்பதுதான்.
குற்ற வழக்கு விசாரணை முறைத் தொகுப்புச் சட்டம் பிரிவு 161ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்தை
விட பிரிவு 164ன் கீழ் அளிக்கும் வாக்குமூலத்துக்குச் சான்றளிப்பு ஆற்றலும் மதிப்பும்
அதிகம். ஆனால் பம்பாய் குற்றவியல் நீதிபதி முன்பு அவர் அளித்த புனிதமான உறுதிமொழி மீதான
வாக்குமூலத்தில், நீதிமன்றத்தில் இருந்து காவல் துறையை அப்புறப்படுத்தி, அழுத்தத்திலிருந்து
டாக்டர் ஜெயினின் மனச்சாட்சியை சிறிது நேரம் விடுவித்த போது, மதன்லால் என்னைச் சந்தித்தார்
என்னும் தற்போதைய பொய்யான கட்டுக்கதையை டாக்டர் ஜெயின் அப்போது கூறவில்லை.
அதைச் சொன்னார் என்றோ, குற்றவியல் நீதிபதி அதைப் பதிவு செய்யவில்லை என்றோ பொருளல்ல.
டாக்டர் ஜெயின் அதை அவரிடம் சொல்லவே இல்லை. குறுக்கு விசாரணையின் போது பக்கம் 303ல்
தனது சாட்சியில் அவர் தெளிவுபடுத்தியதாவது: ‘வீர சாவர்க்கர் தனக்குச் சொல்லி அனுப்பியதாக
மதன்லால் கூறியதாகவோ, இரண்டு மணி நேரத்துக்கு மேல் அவருடன் உரையாடியதாகவோ, தன் முதுகில்
தட்டி “தொடர்ந்து செய்யுங்கள்” என்று சொன்னதாகவோ நான் குற்றவியல் நீதிபதி முன்னிலையில்
பதிவு செய்யவே இல்லை. காவல்துறையிடம் வாக்குமூலம் அளித்த போது கூட ‘தொடர்ந்து செய்யுங்கள்’
என்பது குறித்த எந்தப் பதிவும் இல்லை. இந்த நீதிமன்றத்தின் முன் மறு விசாரணையின் போது
டாக்டர் ஜெயின் ப்ராசிக்யூஷனை இதிலிருந்து விடுவிக்க முயன்று கடைசியில் சிக்கலை இன்னும்
அதிகமாக்கிவிட்டார். அதாவது மதன்லால் என்னைச் சந்தித்தது தொடர்பான கதையை ஏற்கெனவே காவல்
துறை மற்றும் மாண்புமிகு உள்துறை உறுப்பினர் (ஜெயின் வாக்குமூலம் பக்கம் 311) ஆகியோரிடம்
தெரிவித்துவிட்டதால், குற்றவியல் நீதிபதி முன்பு சொல்லவில்லை என்று பதிலளித்துள்ளார்.
மற்றும் அமைச்சரிடம் மதன்லால் கதையிலுள்ள முக்கிய விவரங்கள் அனைத்தையும் மீண்டும் ஒரு
முறை ஜெயின் தனது வாக்குமூலத்தில் குற்றவியல் நீதிபதியிடம், விற்பனை செய்த புத்தகங்கள்
மற்றும் வெடி மருந்துகள் உள்படக், கூறியுள்ள நிலையில் அவரது பதில் அர்த்தமற்றதாக உள்ளது.
இருப்பினும் குற்றவியல் நீதிபதியிடம், மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படுவதை,
அதாவது, இப்போது ப்ராக்சிக்யூஷன் தரப்பு எனக்கு எதிராக வழக்கின் தொடக்கப் புள்ளியாக்க
எண்ணுவதை மட்டும் டாக்டர் ஜெயின் சொல்லவில்லை. இதுபோன்ற புனைந்துரைக்கப்பட்ட கதைகளை
புனிதமான உறுதிமொழியின் அடிப்படையில் உண்மையானவை என்று குற்றவியல் நீதிபதி முன்பாக
கூறும் நிலையில் டாக்டர் ஜெயின் இல்லை என்பதே உண்மையான காரணமாகும்.
படுகொலை திட்டம் குறித்து டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே மதன்லால் கூறியிருந்தால் அதைத்
தடுக்கச் சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் அவர் ஏன் கூறவில்லை? ஒரு நல்ல குடிமகனாக குற்றவியல்
சதித் திட்டங்களை உரிய நேரத்தில் கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு உதவுவது தனது கடமை என்பதை
அறிவேன் என்று டாக்டர் ஜெயின் தனது வாக்குமூலத்தில் (பக்கம் 303) ஒப்புக் கொண்டுள்ளார்.
உள்துறை அமைச்சர் இத்தகவலை முன் கூட்டியே ஏன் தெரிவிக்கவில்லை என்று பின்னர் கடிந்து
கொண்டார். சதித் திட்டம் தொடர்பான மதன்லால் கதையைத் தான் முக்கியமாகக் கருதவில்லை என்பதே
டாக்டர் ஜெயினின் ஒரே பதிலாக இருந்தது (பக்கம் 309). ஆனால் அவரது இந்தச் சமாதானம் முற்றிலும்
பொய் என்பதற்கு, இதை முக்கியமாகக் கருதி தில்லியிலுள்ள அதிகாரிகளிடம் எச்சரிக்கையாக
இருக்குமாறு கூறுவார் என்ற நோக்கில் ஜெய் பிரகாஷிடம் “தில்லியில் நடைபெறவிருக்கும்
மிகப் பெரிய சதித்திட்டம்” பற்றி விவரித்ததற்கு அவரது சொந்த ஒப்புதல் வாக்குமூலமே சாட்சியாகும்
(ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
அரசை எச்சரிக்கும் அளவுக்கு இந்தக் கதை முக்கியம் எனில் பம்பாய் அரசிடமும் தகவல் தெரிவிக்கும்
அளவுக்கு அது நிச்சயம் முக்கியம் ஆகும். பம்பாய் காவல் துறையிடம் தகவலைத் தெரிவிக்கத்
தான் அச்சப்படுவதாகவும், ஆனால் குண்டு வெடிப்பு நடந்த பிறகு எந்தத் தயக்கமும் இல்லாமல்
தொடர்பு கொண்ட பம்பாய் பிரதமரிடம் சொல்ல பயப்படவில்லை என்று இன்னொரு சமாதானம் சொல்கிறார்
டாக்டர் ஜெயின். இந்தக் குழப்பமும், சுய-முரண்பாடும் கொண்ட இச்சாட்சியின் குணமே, இப்போது
அவர் சொன்னது போன்றும், பின்னர் புனைந்தது போன்றும், மதன்லாலிடம் இருந்து எந்தவொரு
கதையையும் டாக்டர் ஜெயின் கேட்கவில்லை என்னும் தவிர்க்க முடியாத முடிவுக்கு நம்மை அழைத்துச்
செல்கிறது.
குண்டு வெடிப்புக்குப் பிறகு இந்த முழுக் கதையையும் டாக்டர் ஜெயின் மற்றும் அங்கத்
சிங்க் புனையத் தூண்டிய நோக்கமும் கூட அவர்களது வாக்குமூலத்தின் உட்பொருளைக் கூர்ந்து
படித்தால் சுயமாகவே வெளிப்படையாகும். மதன்லாலுடன் டாக்டர் ஜெயின் நெருக்கமாகவே இருந்துள்ளார்.
மதன்லாலிடமிருந்து அவருக்குக் கடிதங்கள் வந்து கொண்டிருந்தன. சில கடிதங்கள் அவர் வசம்
இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தனது புத்தகங்களை விற்பதற்காக பல நபர்களை மதன்லால்
சந்தித்துள்ளதால் டாக்டர் ஜெயினுடனான மதன்லாலின் தொடர்பைப் பலர் அறிந்துள்ளனர். எனவே
1948 ஜனவரி 21 தேதியிட்ட ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழில் காந்திஜியின் பிரார்த்தனைக்
கூட்டத்தில் குண்டு வெடித்ததாகவும், குற்றத்தைச் செய்ததற்காக மதன்லால் என்பவர் கைது
செய்யப்பட்டதகாவும், அதைப் படித்தவுடன் தனக்கும் ஏதேனும் பிரச்சினை வருமோ என்று பயந்து
கவலைப்பட்டதாகவும், சம்மந்தப்பட்ட அதிகாரிகளைத் தொடர்பு கொள்வதற்கு முன்பாகவே ‘டைம்ஸ்
ஆஃப் இந்தியா’ நாளேட்டில் மதன்லால் என்ற பெயரைத் தான் படித்ததாகவும் டாக்டர் ஜெயின்
ஒப்புக் கொள்கிறார் (டாக்டர் ஜெயின் வாக்குமூலம் பக்கம் 301).
தங்களுக்கு இருக்கும் நெருக்கமான தொடர்பு பற்றி அவர் கட்டாயம் வெளிப்படுத்துவது குறித்தும்,
அதன் தொடர்ச்சியாக ஏற்படவுள்ள இடர் பற்றியும், டாக்டர் ஜெயின் மற்றும் திரு அங்கத்
சிங்க் ஆகியோர் அறிந்து கொண்டு அதற்கேற்ற வகையில் முன்னெச்சரிக்கையாகத் தங்களைத் தயார்ப்படுத்திக்
கொள்ள முடிவெடுத்துள்ளதாகத் தெரிகிறது. சதித் திட்டம் தொடர்பாக ஏதோவொரு தகவல், உண்மையோ,
பொய்யோ, அதை அதிகாரிகளுக்குத் தெரிவித்து உதவுவதன் மூலம் தங்களை வீரம் மிக்க குடிமகன்களாகக்
காட்டிக் கொள்ளும் இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையை விடவும் வேறென்ன சிறப்பாக இருக்க
இயலும்? குண்டு வெடிப்பின் பின்னணியில் ஏதோவொரு சதித் திட்டம் இருப்பதாக அன்றைய காலைத்
தினசரிகள் ஏற்கெனவே குறிப்பாக செய்தி வெளியிட்டிருந்தன. டாக்டர் ஜெயின் அந்தக் குறிப்பையே
தனது கதையின் அடிப்படையாக எடுத்துக் கொண்டார்.
இந்து சிந்தனையுடன் அகதிகளிடம் பணியாற்றிக் கொண்டிருப்பதையும், நான் இந்து சங்கதான்களின்
அங்கீகரிக்கப்பட்ட தலைவராக மக்களிடையே பிரபலமாக இருப்பதையும் டாக்டர் ஜெயின் அறிவார்.
மதன்லாலுடனும் சதித் திட்டத்துடனும் என்னைத் தொடர்புபடுத்திக் கதைக்குள் பொருத்திவிட்டால்,
காவல் துறைக்கும் பொது மக்களுக்கும் கட்டாயம் அதுவொரு தலைப்புச் செய்தியாக மிகப் பெரிய
அளவில் பரபரப்பை ஏற்படுத்தும். இதன் காரணமாகக் காவல் துறைக்கு முன் கூட்டியே சதித்
திட்டம் பற்றிய தகவலைத் தெரிவிக்காமல் இருந்த குற்றத்துக்காக டாக்டர் ஜெயின் கட்டாயம்
மன்னிக்கப்படுவார். எனவேதான் டாக்டர் ஜெயின் அவசர அவசரமாக உள்துறை உறுப்பினரிடம் தனது
கற்பனைக் கதையைக் கூறியுள்ளார். டாக்டர் ஜெயின் சாட்சியிலுள்ள இந்த முரணும், குழப்பமுமே,
இந்தக் கதையின் தோற்றம் புனைவு என்பதைச் சாத்தியமாக்குகிறது.
இந்த நீதிமன்றத்தின் முன்பு மதன்லால் அளித்த வாக்குமூலத்தில் மகாத்மா காந்திக்குக்
கெடுதல் விளைவிக்கும் எந்தச் சதித்திட்டத்தையும் மறுத்ததுடன், அதுபோன்ற சதித்திட்டத்தில்
தான் எப்போதுமே ஈடுபட்டதில்லை என்றும் கூறியுள்ளார். இந்தப் பதிவே டாக்டர் ஜெயின் கதையை
ஏற்றுக் கொள்ள முடியாததாக்கி உள்ளது.
டாக்டர் ஜெயின் என்னைத் தொடர்புபடுத்தி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படுவது
பற்றி டாக்டர் ஜெயினிடம் அவர் சொன்னதைத் துல்லியம் மற்றும் உண்மை என்றே வைத்துக் கொண்டாலும்,
டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னது உண்மைதானா என்பதை நிரூபிக்க இது போதுமானதாக இல்லை.
மதன்லால் குறித்த ஜெயின் மற்றும் அங்கத் ஆகியோரின் கருத்து, அவர்களே சொன்ன வார்த்தைகள்
மூலமாகவே மேற்கோள் காட்டுவதெனில் ‘தன்னைப் பற்றியே அதிகம் பீற்றிக் கொள்ளும் இளைஞனின்
பேச்சுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்க வேண்டியதில்லை’ என்பதே. ஆனால் இவரைப் போன்ற
இளைஞர் ஒருவர், டாக்டர் ஜெயினின் மனத்தில் தன்னைப் பற்றிய நல்ல அபிப்பிரயாயத்தையும்,
முக்கியத்துவத்தையும் அழுத்தமாக உணர்த்த, இதுபோன்ற ஒரு கதையை, அதாவது, இந்து மகா சபையின்
தலைவரான வீர சாவர்க்கரே தன்னை அழைத்து முதுகில் தட்டி வாழ்த்தினார் என்று கூற எண்ணுவது
இயற்கையே.
என்னைச் சந்திக்க வந்த போது டாக்டர் ஜெயின் உடனில்லை என்பதுடன் மதன்லாலுக்கும் எனக்கும்
இடையே நடைபெற்றதாகச் சொல்லப்படும் உரையாடலைத் தனிப்பட்ட முறையில் அவர் கேட்கவும் இல்லை
என்பது ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. எனவே டாக்டர் ஜெயினிடம் மதன்லால் சொன்னதாகக் கூறப்படுவது,
நான் மதன்லாலிடம் கூறியதாக அவரே சொன்ன கட்டுக்கதை ஆகும். ஆகவே ஜெயினிடம் சொன்னது செவி
வழிச் செய்தியே தவிர, அதன் உண்மை மற்றும் நம்பகத் தன்மையை அவர் உறுதிப்படுத்தியிருக்க
வாய்ப்பே இல்லை. அதேபோல் மதன்லால் என்னைச் சந்தித்ததாகக் கூறப்படும் கதை தொடர்பாக அதை
நிரூபிக்கப் ப்ராசிக்யூஷன் தரப்பும் எந்தவொரு சான்றாவணத்தையும் சமர்ப்பிக்கவில்லை.
ஆகவே நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில், டாக்டர் ஜெயின் சாட்சியின் சான்றாவணப்
பக்கங்களில் இடம்பெற்றுள்ள இப்பகுதி, அதாவது, மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கதையும் இருவருக்கும் இடையே நடைபெற்றதாகக் கூறப்படும் உரையாடலும், தெளிவற்ற, உறுதிப்படுத்தப்படாத,
நிரூபிக்கப்படாத, செவி வழிச் செய்தியே ஆகும். ஆகவே சட்டப்படி இவை ஏற்கத்தக்கதல்ல என்பதுடன்,
ஒருவேளை இவை பதிவு செய்யப்பட்டிருப்பின், இந்த நீதிமன்றம் அவற்றைக் கருத்தில் கொள்ளாமல்
நீக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். மதன்லால் என்னைச் சந்தித்தாகக் கூறப்படும்
கட்டுக்கதையின் ஆசிரியர் யாராக இருந்தாலும் அது முழுவதும் பொய் என்பதை மீண்டும் ஒரு
முறை தாழ்மையுடன் வலியுறுத்துகிறேன். நான் மதன்லால் என்பவர் பற்றிக் கேள்விப்பட்டதும்
இல்லை, அவரைச் சந்தித்ததும் இல்லை.
திரு அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு உள்துறை அமைச்சர் திரு தேசாய் (பி. டபிள்யூ
72 மற்றும் 78) சாட்சி குறித்து நான் சமர்ப்பிப்பது என்னவெனில்:
இது செவிவழிச் செய்தி என்பதாலும், அதிலும் மூன்றாம் தரச் செவிவழிச் செய்தி என்பதாலும்,
சட்டத்தின் முன்பு இதைச் சாட்சியாக எடுத்துக் கொள்ள முடியாது. சாட்சிகளிடமிருந்து நீதிமன்றம்
கதையைக் கேட்கிறது. அக்கதையை டாக்டர் ஜெயினிடம் இருந்தும், அதை அவர் மதன்லாலிடம் இருந்தும்
கேட்கிறார். மொத்தத்தில், சொன்னதாகக் கூறப்படும் கதை உறுதிப்படுத்தப்படாதது, நிரூபிக்கப்படாதது
மற்றும் ஆதாரமற்றது என்பதுடன் மதன்லாலே இதுபோல் தான் யாரிடமும் சொல்லவில்லை என்றும்
அத்தனையும் பொய் என்றும் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
இந்தக் கதை, உண்மையோ, பொய்யோ, மதன்லால் டாக்டர் ஜெயினிடம் உண்மையிலேயே சொல்லப்பட்டது
என்பதை நிரூபிக்க மட்டுமே இவ்விருவர்களின் சான்றாவணம் எனில், நான் தாழ்மையுடன் சமர்ப்பிப்பது
என்னவெனில் ஜெயின் இதை பலரிடம் சொன்னார் என்பதை மட்டுமே வைத்துக் கொண்டு கூட நிரூபிக்க
முடியாது. மதன்லால் இதைத் தன்னிடம் சொல்லும்போது நான் தனியாக விடப்பட்டேன் என்று ஜெயின்
தெளிவாகச் சொன்னதே இதற்குக் காரணம் ஆகும் (ஜெயின் வாக்குமூலம் பக்கக் 299). இதைத் தவிர
இந்தக் கதையை மதன்லால் டாக்டர் ஜெயினிடம் சொன்னார் என்பதை நிரூபிக்க வேறொரு சாட்சியும்
இல்லை. மதன்லால் அவரிடம் எதுவுமே சொல்லவில்லை என்றாலும் கூட ஜெயின் அதை ஏராளமான நபர்களிடம்
சொல்லி இருக்கலாம்.
இதுபோன்ற சான்றாவணம் ஐ.இ.ஏ. பிரிவு 157ன் கீழ் ஏற்கத்தக்கதல்ல என்பது கீழ்க்காணும்
(சர்க்காரின் இந்தியச் சாட்சியச் சட்டம், 7வது பதிப்பு பக்கம் 1374ல் இருந்து எடுக்கப்பட்டுள்ள)
சிறு சுருக்கத்திலிருந்து விளங்கும்: “உங்களின் பல நண்பர்களுக்குச் சொல்லிவிட்டுப்
பின்னர் அவர்களை நீங்கள் சொன்னது உண்மை என்று நிரூபிக்கச் சாட்சிகளாக வரச் சொல்லி சாட்சிகளை
உருவாக்குவது சுலபம். இந்தப் பிரிவு காதால் கேட்ட சாட்சியை உறுதிப்படுத்தும் சான்றாக
ஏற்றுக் கொள்வதில்லை”.
இந்த இரு சாட்சிகளின் சான்றாவணமும் பிரிவு 157ன் கீழ் வராததற்கு இன்னொரு காரணம் அதில்
குறிப்பிடப்பட்டுள்ள விதிகளை நிறைவு செய்யாமையே ஆகும்.
அங்கத் சிங்கின் சான்றாவணம், ஒரு கதை ஒருவர் வாயிலிருந்து மற்றொருவர் வாய்க்குச் செல்லும்போது
மாறுபடுவதுடன் அபாயகரமாகவும் இருப்பதைச் சிறப்பாகத் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும்
கதை சொல்பவர்கள் எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யாத நிலையில், காதால் கேட்ட சாட்சிகளை
நம்புவது அநீதி ஆகும். இதை அங்கத் சிங்கே எழுத்துபூர்வமாக எதையும் பதிவு செய்யவில்லை
என்று ஒப்புக் கொண்டுள்ளார் (அங்கத் சின் வாக்குமூலம் பக்கம் 334). உதாரணத்துக்கு அங்கத்
சிங்க் (வாக்குமூலம் பக்கம் 332 & 333ல்) கூறுவதாவது: ‘மதன்லால் தன்னிடம் (ஜெயின்)
சொன்னதாக டாக்டர் ஜெயின் கூறுவது என்னவெனில் “என்னுடைய (மதன்லால்) கட்சிக்கு ஆதரவராகச்
சாவர்க்கர் இருக்கிறார், அதாவது மதன்லால் சொல்வதுபோல் சதித் திட்டத்தின் பின்னணியில்
சாவர்க்கர் உள்ளார் என்றும் இது உண்மையாகும்” என்பதாகும். இப்போது டாக்டர் ஜெயினின்
வாக்குமூலம் முழுவதிலும், எந்தவொரு இடத்திலும், சாவர்க்கர் தனது கட்சிக்கு ஆதரவாக அல்லது
சதிக்கு உடந்தையாக இருப்பதாக மதன்லால் அவரிடம் கூறியதாக ஓரு வார்த்தை கூடச் சொல்லவில்லை.
மேலும் இந்த நெறி தவறிய கதையை அங்கத் சிங்கிடம் மீண்டும் ஒரு முறை சொன்னதாகவும் டாக்டர்
ஜெயின் பதிவு செய்யவில்லை. எனக்கு பாதிப்பு ஏற்பட வேண்டும் என்பதற்காகவே ஜெயின் தனது
சாட்சியில் மீண்டும் சொன்ன இக்கதையின் தொடர்ச்சியைக் கூட அங்கத் சிங்க் திரித்துள்ளார்.
எனவே அங்கத் சிங்கின் இந்த வாக்குமூலம் செவிவழிச் செய்தி மட்டுமின்றி, தீய நோக்கம்
கொண்ட செவி வழிச் செய்தியுமாகும்.
மாண்புமிகு அமைச்சர் வாக்குமூலத்தில் கவனிக்க வேண்டிய முதல் அம்சம் என்னவெனில் இது
1948 ஜனவரி 21 தொடங்குவதால் மிகுந்த எச்சரிக்கையுடன் இதைப் படிக்க வேண்டும். இந்தக்
கதை குறித்து எந்த நேரத்திலும் எந்தக் குறிப்புகளையும் எழுதவில்லை என்பதையும் அமைச்சர்
ஒப்புக் கொள்கிறார் (பி. டபிள்யூ 78 பக்கம் 38). மேலும் டாக்டர் ஜெயின் அவரிடம் சொன்னதை
மட்டுமே தொடர்புபடுத்தி உள்ளதால், இவரது சாட்சிக்கும் திரு அங்கத் சிங்கைப் போன்றே
எந்த உண்மையான மதிப்பும் இல்லை.
நான் மீண்டும் ஒருமுறை தாழ்மையுடன் சமர்ப்பிப்பது என்னவெனில் மதன்லால் என்னை ஒருபோதும்
சந்திக்கவே இல்லை என்பதுடன் நானும் அவருடன் எந்தத் தருணத்திலும் எந்தவிதமான பேச்சுவார்த்தையையும்
வைத்துக் கொள்ளவில்லை என்றும் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் மேற்கண்ட பத்திகள்
18 மற்றும் 19 அளிக்கப்பட்டுள்ள காரணங்களின் அடிப்படையில், நான் குற்றவாளி அல்லது நிரபராதி
எப்படியிருப்பினும், டாக்டர் ஜெயின், அங்கத் சிங்க் மற்றும் மாண்புமிகு மொரார்ஜி தேசாய்
ஆகியோரின் சான்றாவணங்களைப் பரிசீலனையிலிருந்து விலக்க வேண்டுமென நீதிமன்றத்தைத் தாழ்மையுடன்
கேட்டுக் கொள்கிறேன்.
ஜனவரி 9 காலை 9.20 மணிக்கு தில்லி 8024ல் இருந்து பம்பாய் 60201க்குப் பதிவு செய்யப்பட்ட
தொலைபேசி அழைப்பு (பி 70) தொடர்பாக இதுவரை பி.டபிள்யூ 23, பி.டபிள்யூ 40, பி.டபிள்யூ
41, பி.டபிள்யூ 42, பி.டபிள்யூ 93 என மொத்தமாக 5 சாட்சிகளை ப்ராசிக்யூஷன் தரப்பு விசாரித்துள்ளது.
நேரத்தையும் ஆற்றலையும் வீணடித்த பிறகு ப்ராசிக்யூஷன் தரப்பு கடைசியாக சாதித்தது என்ன?
யாரோ ஒருவர் (அவர் யார் என்று எவருக்குமே தெரியாது) தாம்லே அல்லது கசர்-க்கு (இதிலும்
தெளிவில்லை) ட்ரங்க் கால் பதிவு செய்தார் என்பது மட்டுமே. தாம்லே அல்லது கசர் என்ற
பெயரில் அப்போது யாருமே இல்லாததால் கடைசியில் அந்த ட்ரங்க் கால் அழைப்பும் பயனற்றுப்
போய்விட்டது. மேலும் ப்ராசிக்யூஷன் தரப்புக்கு அந்த ட்ரங்க் கால் அழைப்பின் உள்ளடக்கம்
கூடத் தெரியவில்லை என்று ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. பி.70 மற்றும் பி.59 ஆகியவற்றின்
பொருண்மைகள் ஒன்றிலிருந்து ஒன்று மாறுபடுவதால் இரண்டையுமே சேர்த்துப் படிக்க வேண்டும்.
சாவர்க்கர் சதன் தரைத்தளத்தில் படிக்கும் அறையில் ஒரு தொலைபேசி இணைப்பு இருப்பதும்,
அதை அந்த வீட்டில் வாடகைக்குக் குடியிருப்பவர்களும், இந்து சங்கதான் அலுவலகத்துக்கு
வரும் இந்து மகாசபா செயலாளர்களும், ஊழியர்களும் பயன்படுத்துகின்றனர் என்பதும் ஏற்கெனவே
உறுதிப்படுத்தப்பட்டுள்ளது (பி. டபிள்யூ 57 பக்கம் 24 & 25, பி. டபிள்யூ 130 பக்கம்
7 பார்க்கவும்). மகாசபா பணிகள் தொடர்பாக தில்லியிலுள்ள இந்து சபா பவனிலிருந்து ஏராளமான
ட்ரங்க் கால் அழைப்புகள் என் வீட்டிலுள்ள இந்து சங்கதான் அலுவலகத்துக்கு வரும்.
ட்ரங்க் கால் தனிநபர் அழைப்பாக தாம்லே மற்றும் கசர் ஆகிய பெயர்களில் பதிவு செய்யப்பட்டனவே
தவிர என் அலுவலகச் செயலாளர்கள் பெயர்களில் அல்ல. தில்லியிலுள்ள தாம்லே அல்லது கசர்
ஆகியோரின் நண்பர்கள் யாரேனும் சட்ட ரீதியான பணிகளுக்காக அந்த ட்ரங்க் கால் அழைப்பைப்
பதிவு செய்திருக்கலாம். தொலைபேசி அழைப்பின் இரு முனைகளிலும் எனது பெயர் எங்கேயும் தொடர்புபடுத்தப்படவில்லை.
இருப்பினும் ப்ராசிக்யூஷன் தரப்பு இந்த ட்ரங்க் கால் அழைப்பு யாருக்கு எதிரானது என்று
யாருக்குமே தெரியாமல் நிரூபிக்க முயன்று, கடைசியில் எதையுமே நிருபிக்க முடியவில்லை
என்பதை மட்டுமே நிரூபிக்க, ஐந்து சாட்சிகளையும் மிகத் தீவிரமாக விசாரித்து வெற்றி பெற்றுள்ளது.
சங்கதான் இயக்கத்தின் அன்றாடப் பணிகளை மேற்கொள்ளப் பல இந்து தன்னார்வ அமைப்புகள் உள்ளன.
அவை பல்வேறு தளங்களில் தனித்தனியாக இயங்கி வருகின்றன. அவற்றுள் இந்து ராஷ்ட்ர தளம்
ஒன்றாகும். கோட்சே, ஆப்தே மற்றும் ஏனைய ஊழியர்கள் அதை நிர்வகித்து வருகின்றனர். அதன்
உறுப்பினர்களுள் (பக்கம் 232) ஒருவரான பேட்ஜ் தளத்தின் நோக்கம் தேர்தல்களில் மகாசபா
வேட்பாளர்களுக்கு உதவுவது, பிரசாரப் பணிகளை மேற்கொள்வது, ஒழுங்குபடுத்துவது மற்றும்
கட்டுப்பாட்டைப் பராமரிப்பது ஆகியவை என்று தனது வாக்குமூலத்தில் (பக்கம் 245) கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் அழுத்தம் தந்தபோதும் அதன் தலைவராகவோ உறுப்பினராகவோ என்னை நான் அடையாளப்படுத்திக்
கொள்ளாததற்குக் காரணம் மகாசபாவின் தலைவர் என்ற முறையில் ஏனைய இந்து சங்கதான் துணை அமைப்புகளின்
மீது எனக்கிருக்கும் அனுதாபம் மட்டுமே ஆகும். இந்த அமைப்பு வெளிப்படையான மற்றும் மக்களுக்கான
அமைப்பாகவே தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு வருகிறது. அதன் வருடந்திர முகாம்களில் கூட
நான் பங்கேற்க முடியாமல் போனதால் சில தருணங்களில் அவர்களது மன வருத்தத்தையும் சம்பாதிக்க
நேர்ந்தது. ஏனைய இந்து தன்னார்வ அமைப்புகளைப் பொதுவாக வாழ்த்தியது போலவே நான் இதையும்
வாழ்த்தினேன். அவ்வளவே.
(தொடரும்…)