Posted on Leave a comment

வலம் மே 2020  முழுமையான இதழ்


வலம் மே 2020 இதழ் படைப்புகளை முழுமையாக இங்கே வாசிக்கலாம்.

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் நேர்காணல் | அபாகி

நாவல் கொரோனா – அச்சமும் அறிவுறுத்தலும் | சுஜாதா தேசிகன்

முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்

ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்

ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்

மகாபாரதம் கேள்வி பதில் | ஹரி கிருஷ்ணன்

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா

 

Posted on 1 Comment

எல்.முருகன் நேர்காணல் | அபாகி

கிட்டத்தட்ட ஆறு மாத காத்திருப்புக்குப் பிறகு பா.ஜ.க. மாநிலத் தலைவராக எல்.முருகன் அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரோடு உரையாட சென்னை தி.நகரில் உள்ள தமிழக பா.ஜ.க.வின் தலைமை அலுவலகமான கமலாலயத்திற்குச் சென்றிருந்தோம். தொண்டர்கள், பிரமுகர்களின் வாழ்த்து மழையில் நனைந்திருந்த அவர், அதற்கு மத்தியில் ‘வலம் இதழுக்காக உரையாடினார். வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டு கேள்விகளை முன்வைத்தோம்.

நாமக்கலில் தொடங்கி பா.ஜ.க. மாநிலத் தலைவர் வரை, உங்கள் பயணத்தை எப்படிப் பார்க்கிறீர்கள்?

நான் 11ம் வகுப்பு அல்லது 12ம் வகுப்பு படிக்கும்போது, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள எங்கள் ஊருக்கு ஆர்.எஸ்.எஸ். மூத்த பிரசாரக் (முழு நேர ஊழியர்) ஸ்ரீகணேசன்ஜி வந்திருந்தார். எங்கள் பகுதி, பட்டியலின மக்கள் வசிக்கின்ற பகுதி. Continue reading எல்.முருகன் நேர்காணல் | அபாகி

Posted on Leave a comment

விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா

மடர்னிடி விடுப்பு முடிந்து முதல் நாள் மீரா வேலைக்குப் போன போது எல்லோரும் மிகக் கனிவாக இருந்தார்கள். 

“பாப்பா ப்ரோக்ராம் பண்ண ஆரம்பிக்கலையா?” என்று கேட்டார்கள்.

பாஸ்கர், டீமின் ஜோக்கர். “என் பையனுக்கு அல்லயன்ஸ் பாக்குறேன்” என்று சொன்னான். “உங்க மகள் கட்டின டயபரோட வந்தா போதும்.” 

“உங்க மாதிரி இல்லை. நல்லா இருக்கா பொண்ணு போன்ற ஜோக்குகள் வந்து விழுந்தன.

மீராவின் கம்ப்யூட்டரை வேறு யாருக்கோ கொடுத்து விட்டார்கள். நாள் முழுக்க அவள் புதுக் கம்ப்யூட்டருக்கு அலைந்தாள். பிறகு அதில் சாஃப்ட்வேர் எல்லாம் போட்டு முடிக்க நேரம் ஆகி விட்டது. அந்த நேரத்தில் பெண் போட்டோவை எல்லோருக்கும் காட்டி மகிழ்ந்தாள்.

ஆனால் மறுநாள் அவள் வேலையைத் தொடங்க முயற்சித்த போதுதான் கவனித்தாள் – வேலையே இல்லை. சற்று நேரம் சும்மா இருந்துவிட்டு ஐ.டி கம்பெனிகளில் வேலை கண்டுபிடிக்க செய்யும் யுக்தியைச் செய்தாள். எல்லோருக்கும் ஒரு மீட்டிங்கிற்கு வரச் சொல்லி ஈமெயில் அனுப்பினாள். Continue reading விடுப்பிற்குப் பின் (சிறுகதை) | ராமையா அரியா

Posted on Leave a comment

சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

அந்த அமெரிக்க ஆராய்ச்சியாள தம்பதிகள் நாட்டுப்புறத் திருவிழாவைக் காண அந்த கிராமத்துக்கு வந்திருந்தனர். நகர்ப்புறங்களிலிருந்து மிகவும் விலகி இருந்த கிராமம் அது. அந்தத் தம்பதிகளுக்கு வழிகாட்டியாக ஒரு பதினேழு வயது இருக்கும் கிராமப்பெண் கிடைத்தாள். கெட்டிக்கார பெண். தன் பணியைச் செவ்வனே செய்தாள். கிராமத்திலிருந்த மிருக ஆஸ்பத்திரி அந்தத் தம்பதிகளின் கவனத்தை ஈர்த்தது. அங்கே சென்று பார்க்கலாமா? ஓ சரி என்றாள் அந்த வழிகாட்டிப் பெண். Continue reading சாதிக் கொடுமைகளின் சாம்ராஜ்ஜியம் | அரவிந்தன் நீலகண்டன்

Posted on Leave a comment

ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

பகுதி 13 – பரஸ்பர ஒத்துழைப்பிற்கான வேண்டுகோள்

 அ) தனது நாட்டை நேசிக்கும் எந்த இந்தியனும் தற்போதைய நிலையை வலியுடனும் மோசமான வேதனையுடனுமே பார்க்க முடியும். தாங்கள் இறப்பதற்கு முன் தங்களுடைய அன்பான பூர்வீக நிலத்தின் மீது சுதந்தர தேவி ஆட்சி செய்வதைக் காணலாம் என்ற நம்பிக்கையில் அனைத்தையும் தியாகம் செய்திருக்கும் பலர் பொது வாழ்க்கையில் உள்ளனர். Continue reading ஹிந்து முஸ்லிம் பிரச்சினை (1924) (பாகம் 13) | லாலா லஜ்பத் ராய், தமிழில் கிருஷ்ணன் சுப்பிரமணியன்

Posted on 2 Comments

மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்

திருதராஷ்டிரன் பார்வையற்றவனாக இருந்த காரணத்தால் மட்டுமே அரசு பாண்டுவின்வசம் ஒப்புவிக்கப்பட்டது என்றல் அது ஒரு Care taker அரசுதானே? அப்படியானால், பாண்டவர்களுக்கு ஆட்சியில் எப்படி உரிமை வந்தது? அவர்கள் எப்படி அரசுரிமை பெறுகிறார்கள்?

மக்களாட்சி மலர்ந்துவிட்ட காலத்தில் வசிக்கும் நமக்கு, மன்னராட்சிக் காலத்தில் நிலவிய முறைமைகள்—அதிலும் குறிப்பாக இந்தியத் திருநாட்டில் நிலவிய நிலைமைகள் — மிகவும் மசங்கலாகவே தெரிவிக்கப்பட்டும் புரிந்துகொள்ளப்பட்டும் இருக்கின்றன. இராமாயண பாரத இதிகாசங்களையும் பாகவதம் முதலான புராணங்களையும் ஆழ்ந்து படிக்கும்போது ஒரு பேருண்மை புலப்படுகிறது. மக்களாட்சிக் காலத்தைக் காட்டிலும் மிக அதிகமாக மன்னராட்சிக் காலத்தில், மன்னர்கள், மக்களுடைய குரலுக்கு மதிப்பளித்திருக்கின்றனர்; மக்கள் என்ன சொல்வார்களோ என்று பயந்திருக்கின்றனர். சொல்லப் போனால், ஒரு நாட்டில், மன்னனுக்கு உரிய இடம் என்ன என்பது காலந்தோறும் காலந்தோறும் மாறிக் கூட வந்திருக்கிறது. Continue reading மகாபாரதம் கேள்வி பதில் (பாகம் 3) | ஹரி கிருஷ்ணன்

Posted on Leave a comment

ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்

புதிய நோய்கள் அறியப்படும் போதெல்லாம் உலகச் சுகாதார அமைப்புகளின் கவனம் ஜெர்மன் நாட்டின் வடபகுதியில், பால்டிக் பெருங்கடலில் அமைந்திருக்கும் சின்னஞ்சிறு தீவான ரீம்ஸ் (Reims) தீவுக்குத் திரும்பும். இங்குதான் உலகின் மிகப் பழைமையான கிருமி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றான ஃபிரெடெரிக் லோஃப்லர் ஆராய்ச்சி மையம் (Friedrich Loeffler Institute) அமைந்திருக்கிறது. இது 1910ல் லோஃப்லர் எனும் விஞ்ஞானியால் ஆரம்பிக்கப்பட்டது.

Continue reading ஜெர்மனியின் அல்கட்ராஸ் சிறை (Friedrich Loeffler Institute) | ராம் ஸ்ரீதர்

Posted on Leave a comment

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்

வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது கடந்த நூற்றாண்டில், குறிப்பாகக் கடந்த இருபது ஆண்டுகளில்தான் உலகில் அதிகமான நாடுகள் தங்களை ஜனநாயக நாடாக அறிவித்துக் கொண்டுள்ளன. இப்போது உலகில் பாதிக்கும் அதிகமான மக்கள் ஜனநாயகத்தைப் பின்பற்றும் நாடுகளில் வாழுகின்றார்கள். இந்த மாற்றம் ஏனென்றால் பெருவாரியான மக்கள் ஜனநாயக முறையில் தங்களுக்கான ஒரு அரசை உண்டாக்க வேண்டும் என்று நினைப்பதுதான். 

Continue reading தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் 4-வது பிரிவு | பா.சந்திரசேகரன்

Posted on Leave a comment

ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

1953 மார்ச் மாதம் 4ம் தேதி இரவு ரேடியோ மாஸ்கோவில் ஒரு பியானோ இசை நிகழ்ச்சி நடந்தது. அது முடியும் நேரம் ரேடியோ மாஸ்கோ இயக்குநரை அழைத்து அந்த நிகழ்ச்சியின் இசைப்பதிவு வேண்டும் என்கிறார் ஸ்டாலின். நிகழ்ச்சியை மீண்டும் நடத்திப் பதிவு செய்து அனுப்புகிறார் இயக்குநர். அதில் பியானோ வாசிக்கும் மரியா யுடினா என்கிற பெண்மணி ஒரு குறிப்பை எழுதி அனுப்புகிறார். தன் மாளிகையில் அதைப் படிக்கும் ஸ்டாலின் மூச்சடைத்து விழுகிறார். கை கால் இழுத்துக் கொள்கிறது. ரஷ்யாவின் மத்திய ஆட்சிக் குழு மொத்தத்திற்கும் தகவல் போகிறது. முதலில் வரும் உள்துறை அமைச்சர் மற்றும் சிறப்பு உளவுப்பிரிவு (NKVD) தலைவர் பெரியா, யுடினாவின் குறிப்பைக் கண்டு அதைப் பத்திரப்படுத்துகிறார். கமிட்டியின் துணைத்தலைவர் மாலங்கோவ் ஸ்டாலினின் நிலை கண்டு பதறுகிறார். பெரியா அவரை சமாதானப்படுத்தி “நீங்கள் தலைமை ஏற்றுக்கொள்ளுங்கள் தோழர். மற்ற எல்லாம் என் பொறுப்பு என்கிறார். Continue reading ஸ்டாலினின் மரணம்: கம்யூனிஸ அதிகார வேட்கை | அருண் பிரபு

Posted on Leave a comment

முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்

கடந்த காலத் தவறுகள் எரிந்து போகட்டும் – இதுதான் தன் ஆய்வறை எரிந்தபோது எடிசன் சொன்னதாகச் சொல்லப்படும் வார்த்தைகள். இப்போது பற்றி எரியும் கொரொனா தீயில் நாம் எரிக்க வேண்டிய கடந்தகாலத் தவறுகள் கம்யூனிசமும் சோசியலிசமும்தான். நலத்திட்டங்கள், சமத்துவம் பேசும் சோசியலிசத்தை விடுத்து, நம்மைச் சுரண்டி ஏய்க்கும் முதலாளித்துவத்திற்கு வழிவகை செய்வதா எனக் கேட்கத் தோன்றலாம்.  Continue reading முதலாளித்துவமும் பொருளாதார சமத்துவமும் | சுசீந்திரன்