Posted on Leave a comment

கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

ஆதி சங்கர பகவத்பாதர், நம் ஸனாதன தர்மத்தைக் காக்க வேண்டி பாரத பூமி முழுவதும் பயணம் செய்து நமது தர்மத்திற்குப் புத்துயிரூட்டினார். நம் பாரதத்தின் ஆச்சார்ய புருஷர்களில் மிக முக்கியமான ஒருவராகவே சங்கரர் விளங்குகிறார்.

அதன் அங்கமாக, இந்தியாவின் பல இடங்களில் அவருடைய சம்பந்தம் சொல்லப்படுகிறது. அவர் இந்த இடத்துக்கு விஜயம் செய்திருக்கிறார், இந்தக் கோவிலில் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை செய்திருக்கிறார், இந்த இடத்தில் அவர் தவம் செய்து இருக்கிறார் என்று பல தலங்களைச் சொல்லுவது வழக்கம். அதே போல அவருடைய வாழ்வில் நடந்த பல சம்பவங்கள் இந்த இடத்தில்தான் நடந்தது என்று ஒரே சம்பவத்தை இரண்டு மூன்று இடங்களில் சொல்வதும் வழக்கம் உண்டு. அந்த அளவுக்கு சங்கரரின் தாக்கம் பாரதக் கலாசாரத்தில் உண்டு.

அதேபோல சங்கர மடங்கள் என்று ஆதிசங்கரரால் உருவாக்கப்பட்ட மடங்களைப் பற்றியும், ஆதிசங்கரர் சமாதியான இடம் குறித்தும் பல்வேறு விதமான கருத்துக்கள் உண்டு.

Continue reading கேரளத்தின் சங்கர மடங்கள் | V.அரவிந்த் ஸுப்ரமண்யம்

Posted on Leave a comment

சபரிமலையும் மலை அரையர்களும் | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்ஒவ்வொரு வருடமும் மண்டலக் காலத்தில் சபரிமலையையொட்டிச் சர்ச்சைகள் கிளம்புவது சமீபகாலமாக வாடிக்கையாகவே ஆகி விட்டது. அதிலும்
இந்த ஆண்டு
உச்சநீதிமன்றத் தீர்ப்பும் அதற்கு
எதிர்வினையாக ஹிந்துக்களின் எழுச்சியும் பலரையும் கொதிப்படையச் செய்திருக்கிறது
. கேரளம்
தாண்டி
, தென்னிந்தியா தாண்டி உலகமெங்கும் சபரிமலையில் ஆசாரங்களை
மாற்றுவதற்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது
.

இதன் பின்னணியில் மிகப்பெரும் சதி இருப்பதைநடக்கும்
சம்பவங்களை கூர்ந்து கவனித்தால் உணர முடியும்.சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் சபரிமலையில் நடைபெற்ற ஒரு முக்கியமான
சம்பவத்தை இன்றைய தலைமுறையினர் அறிந்திருக்க மாட்டார்கள். அன்றைய திருவிதாங்கூர்
மாநிலம் எனப்படும்
(Travancore State) கேரளத்தில், 1950ல் சபரிமலையின் ஆலயம்
முற்றிலும் தீக்கிரையாக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டிருந்தது. விசாரணை நடத்த வந்த
காவல்துறை கூட ஒருகணம் ஸ்தம்பித்து நின்று விட்டது. உள்ளே ஐயப்பனின் திருமேனி
(முன்பு ஆலயத்தில்
பிரதிஷ்டை
செய்யப்பட்டிருந்தது) மூன்று துண்டுகளாக நொறுக்கப்பட்டுக் கிடந்தது.
காட்டுத்தீயினால் உண்டான விபத்து என்றே அனைவரும் நினைத்திருந்த நிலையில்
, காவல்துறை தன் விசாரணையைத் துவங்கியதும் அது விபத்தல்ல என்று
தெளிவாக்கியது.
எரிந்து போயிருந்த ஆலயத்தில் கிடைத்த நெய்யில் நனைக்கப்பட்ட
தீப்பந்தங்களும்
ஆலயக்கதவுகளில் காணப்பட்ட
கோடாலி அடையாளங்களும் இது
விபத்தாக இருக்கமுடியாது என்று
திட்டவட்டமாக உறுதி செய்தது. ஐயப்பன் எனும் தெய்வத்தை நாடி ஆண்டுக்கு ஆண்டு
பக்தர்கூட்டம் அதிகரித்து வருவதை
ச் சிலர்
விரும்பவில்லை. சாதிமத வித்
தியாசமில்லாமல் எல்லா
மதத்தவரும் சபரிமலைக்கு வருவதை
ப் பொறுக்க முடியாமல், சபரிமலை கோவிலையே அழித்துவிட்டால்
அத்துடன் அங்கு வரும் பக்தர் கூட்டமும் ஐயப்ப பக்தியும் அழிந்து விடும் என்று
எண்ணி இந்த
ச் சதிச்செயல்
அரங்கேறி இருப்பது தெரிய வந்தது. அரசியல் தலையீட்டால் அந்த வழக்கு மெல்ல பிசுபிசுத்து
விட்டது
.

அந்தச் சதியின் தொடர்ச்சி அவ்வப்போது சபரிமலையில் அரங்கேறவே செய்கிறது, முயற்சியின்
மனம் தளராத சில சக்திகள் சபரிமலை
க் கோவிலின் சான்னித்தியத்தையும் பக்தர் கூட்டத்தின் நம்பிக்கையையும் அழிக்கும் செயல்களில்
ஈடுபட்டே வருகிறார்கள்
.
1983ல் செயிட்
தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்றும் அது ஐயப்பனுடைய இடம் அல்ல
என்று கூறி ஒரு சர்ச்சையை கிளப்பினார்கள்
.
பின்னர் சில போலி மேதாவிகளைக் கொண்டு, ‘சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயமே அல்ல
! பௌத்த தெய்வத்தின் ஆலயம்
என்றொரு கதையைக் கிளப்பி விட்டார்கள். அதற்கு
தகுந்த ஆதாரங்களுடன் பதிலடி கொடுத்தோம்
.
சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புக்கு மக்கள்
எதிர்ப்பு வலுத்தவுடனே தங்கள் முயற்சியெல்லாம் பிரயோஜனம் இல்லாமல் ஆனவுடன்
, இப்போது, ஆதிவாசிகளிகளான மலை அரையர்களில் ஒரு பிரிவு
மக்களை ஹிந்துக்களுக்கு எதிரான சக்திகள் திருப்பி விட்டிருக்கிறார்கள்
.
சபரிமலை எங்களுக்குச் சொந்தமானது என்று கேரளாவின் மலை அரையர் பழங்குடியினர்
சபாவின் நிறுவனரான பி.கே. சஜீவ் பேட்டி கொடுத்துள்ளார்
. இதையே
கேரள ஆதிவாசி கோத்ரா மகாசபை தலைவி ஜி.கே.ஜானு வழிமொழிந்து இருக்கிறார்
. சபரிமலையை
ச் சுற்றியுள்ள
மலைக்காட்டின் ஆதிவாசிகள் பலரும் இன்று யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறார்கள்
, யார்
அவர்களை இயக்குகிறார்கள் என்பதும் ஊரறிந்த ரகசியம்
. அதேபோல
சபரிமலையின் மற்ற பற்றி
எரியும் பிரச்சினைகள் விஷயங்களில் வாயே திறக்காத கேரள முதல்வர் பினராயி விஜயன்
, “கோயிலின்
சம்பிரதாயம் மலை அரையன் ஆதிவாசி சமூகத்தினுடையது. இது
, அனைவருக்கும் தெரியும். சபரிமலை
ஆலயம் ஹிந்து ஆலயம் அல்ல
! அது செக்யுலர் ஆலயம்
என்று வரிந்து கட்டிக் கொண்டு பேசி இருப்பது, ‘அப்பன்
குதிருக்குள் இல்லை
என்பதை இன்னும் தெளிவாக்குகிறது இதன்
பின்னரே இந்த விஷயத்தில் என்மஹாசாஸ்தா விஜயம் நூலுக்காக ஆராய்ச்சி செய்தபோது கிடைத்த தகவல்களைத் தொகுத்திருக்கிறேன்.
முதலில் அவர்கள் வைக்கும் வாதத்தைப் பார்த்துவிட்டுப் பின்னர் அதற்கான
விளக்கங்களைச் சொல்கிறேன்
.
1. மலை அரையர் என்ற ஆதிவாசிகளின்
மூதாதையர்கள்தான் அய்யப்பன் கோவிலை நிர்வகித்து வந்தனர். ஆனால்
, 19ம் நூற்றாண்டில்
பந்தளம் மன்னர்களால் கோவில் அபகரிக்கப்பட்டது
;
2. மலையரையர் சமூகத்தைச் சேர்ந்த கந்தன் கருத்தம்மா என்ற பழங்குடியினத் தம்பதியருக்குத்தான் 41 நாட்கள் விரதமிருந்து அய்யப்பன் பிறந்தார்.
அரைய பழங்குடியினருக்கு பிறந்த அய்யப்பன் தனது நண்பர்களுடன்
சேர்ந்து போர்க்கலை பயிற்சி பெற்று அந்த
ப் பகுதியில், ஒரு வலுவான
சமூகத்தை உருவாக்கினார்
. பாண்டிய மன்னர்களை தாக்கிய சோழர்களை எதிர்க்க
அவர் உதவி புரிந்தார்
. அவருக்கு நாங்கள் கோவிலைக் கட்டினோம்.
எங்கள் சமூகத்தைச் சேர்ந்த எல்லா வயது
ப் பெண்களும் கோவிலுக்கு செல்லுவோம்;
3. ஆனால், 1900ம் ஆண்டுகளில், பந்தளம் அரச குடும்பத்தினர் சபரிமலை
அய்யப்பன் ஆலயத்திற்கு விஜயம் செய்தனர். அப்போது பிராமணர்களான தாழமண்
குடும்பத்தைச் (தந்த்ரி குடும்பம்) சேர்ந்த குருமார்களை அழைத்து வந்து
, சபரிமலை அய்யப்பன் கோவிலில் சடங்குகளை
குடும்பத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். அதன்பிறகு சபரிமலை கோவிலை
ச் சுற்றி உள்ள பகுதியில் வசித்து வந்த ஆதிவாசி மக்களை
அங்கிருந்து அப்புறப்படுத்தி விட்டனர்
.
இதுவே அவர்கள் முன்வைக்கும் வாதங்கள்.
இந்த வாதங்களைக் கேட்கும் நம் மக்களிலேயே
சிலர் கூட
இது உண்மையாக இருக்குமோ என்ற ஐயத்துக்கு ஆட்படுகிறார்கள்.
நம் மக்களும், ஏதோ சொல்கிறார்கள் நெருப்பில்லாமல்
புகையாது என்றெல்லாம் பேசத்தலைப்படுகிறார்கள்
. இன்னும் சில அறிவுஜீவி
எழுத்தாளர்கள்
, ‘இது தான் உண்மை! வனவாசி
தேவதைக் கோவிலான ஐயப்பன் கோவிலைக் கைப்பற்றி
சஸ்ம்கிருதமயமாக்கல் செய்துவிட்டார்கள்
என்று அடித்தும்
விடுகிறார்கள்
.
சபரிமலையின் பழைமை
சபரிமலையில் தர்மசாஸ்தாவின் ஆலயம் அமைந்திருப்பது ‘பிரம்மாண்ட
புராணம்
முதலான புராணங்களிலேயே
தெளிவாக
க் குறிப்பிடப்பட்டுள்ளது. அவை
ஒருபுறம் இருக்கட்டும்
.
வரலாற்று ரீதியாக – சபரிகிரி ஆலயம் பலமுறை
தீவிபத்துக்குள்ளாகியும்
, புனரமைக்கப்பட்டும் மூல விக்ரஹங்கள் மாற்றப்பட்டும்
இருக்கிறது
.
பொ.யு, 978ம் ஆண்டைச் சேர்ந்த
சபரிமலை கோயிலின் கல்வெட்டு ஒன்று
,
அப்படியொரு தீ விபத்துக்கு பின் அக்கோயில் புனரமைக்கப்பட்டு, ஸ்ரீ ப்ரபாகராசாரியார் என்பவரது கைகளால்
விக்
கிரகம் புனர்ப்ரதிஷ்டை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கிறது. (1900களில் இருந்த ப்ரபாகராசாரியார் இவர் அல்ல!
இவர் வேறு.)
ஸமீன பஸ்வ நயன ப்ரயாதீன ப்ரபாவதீ
பாக்யவச்ய க்ருபாலய /

ப்ரபாகராசார்ய கர ப்ரதிஷ்டிதோ மாகனய வக்ஷது பூரி மங்கலம்//
(கடபயாதி ஸங்க்யை என்று கூறப்படும் காலத்தைச் சுட்டும் கணக்கீட்டு முறையில், இந்த பிரதிஷ்டை பொயு
978
ல் நடந்ததாக இக்கல்வெட்டு கூறுகிறது. மிகச் சமீபகாலம் வரை காணப்பட்ட இக்கல்வெட்டு பெயர்த்து எடுக்கப்பட்டு
சில காலம் தேவஸ்வம் போர்டு
அலுவலகத்தில் இருந்தது. இப்போது
எங்கே என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம்
.)
ஆக, குறைந்த பட்சமாக
10ம் நூற்றாண்டிலிருந்தே அங்கே நம்பூதிரிகளின் பூஜை நடைபெற்றுக் கொண்டிருந்தது
என்பது தெளிவு
.


சாஸ்தாவின் சன்னிதியில் பூஜை முறை என்பது 10ம்
நூற்றாண்டிலிருந்தே
குழிக்காட்டில்லம், புதுமனை மற்றும் தாழமண் மடத்து தந்த்ரிகளிடம் இருந்தது. மேல்சாந்திகள் மட்டும் அவ்வப்போது நியமிக்கப்பட்டார்கள். ஒரே மேல்சாந்தி பலவருடம் நீடித்ததும் உண்டு. ஒரு
வருடத்திலேயே பலமேல்சாந்திகள் வந்ததும் உண்டு.

பண்டைய காலத்தில் மகரவிளக்குக்கு
மட்டுமே நடை
த்திறப்பு. பின்னர்
மண்டலபூஜை வந்தது. பின்னர் வருடம் ஆறுமுறை நடைதிறந்து இருமாதத்து பூஜை ஒன்றாக
நடந்தது. பின்னர் இப்போது காணும் மாதாமாதம் நடை திறக்கும் முறை உருவானது. 1960 வரை
முழுக்க முழுக்க பெரியபாதை மட்டுமே.
கோவில் உருவான காலத்திலிருந்தே கேரள
தாந்த்ரீக பூஜையே அங்கு நடைபெற்று வந்தது என்பதில் எந்த ஐயமும் இல்லை.
1940களுக்கு மேல்தான் தேவஸ்வம் என்ற
அமைப்பே உருவானது.
1830ல் திருவிதாங்கூர் அரண்மனையின் சார்பில் ராணி சேதுலக்ஷ்மி பாய்க்காக வேண்டி சபரிமலையில் சதசதயம் பாயஸம் நைவேத்யம் செய்ததாக ஒருகுறிப்பு தெரிவிக்கிறது. அப்போது ராமய்யன் எம்ப்ராந்த்ரி என்ற துளு பிராமணர் பூஜை செய்ததாக ஆவணம் உள்ளது,
பந்தளக் குடும்பமும் சபரிமலையும்
புராண காலத்துக்கும் வரலாற்றுக்கும்
சற்று நெடிய கால இடைவெளி உண்டு. மஹிஷி என்ற புராண காலத்து அரக்கியை சாஸ்தா
ஸம்ஹாரம் செய்ததையொட்டி எழுந்ததே சபரிகிரி ஆலயம்.
9ம் நூற்றாண்டில் தமிழகப் பாண்டியர்கள் புலம்
பெயர்ந்து கேரளம் சென்று பந்தளம் என்ற சிற்றரசு உருவானது
. ஏற்
கெனவே அங்கே ஆலயம் இருந்ததையும் அதைப் பந்தள அரசர், புனரமைத்துக் கட்டியதையும் அவர்களது குடும்பத்தினர் வருடா வருடம்
வந்து வணங்க வேண்டிய நிர்பந்தத்தையும் இது தெளிவாக உணர்த்துகிறது
.

1909ல் ஐதீஹ்யமாலா எழுதிய கொட்டாரத்தில் சங்குண்ணி, அந்நூலில் சபரிமலை சாஸ்தா குறித்தும், பலகாலமாக,
குறிப்பாக
ப் பாண்டியர்கள்
மதுரையிலிருந்த ஆதிகாலம் முதலே என்று தெளிவாகக் கூறுகிறார். மதுரையில் இருந்த காலத்திலிருந்தே
பாண்டிய ராஜ குடும்பத்தினர் சபரிமலையில் வழிபாடு நடத்தியதையும்
, பின்னர்
அவர்கள் போர் காரணமாக கேரளம் வந்து இடங்கள் வாங்கி, பூஞ்சார், பந்தளம் என இரண்டு
ராஜ குடும்பங்களை உருவாக்கி
த் தங்கள் குல
வழக்கப்படி சபரிமலை சாஸ்தாவை வழிபட்டதையும்
, தாழமண் குடும்பத்தினர் பூஜைமுறை பற்றியும் தெளிவாக
எடுத்துரைக்கிறார்
.

சபரிமலையின் உள்ள தெய்வத்துக்கு சாஸ்தா என்றே
பெயர்
.
வழக்கச் சொல்லேஐயப்பன்’. பழனியின் மூலவர் தண்டாயுதபாணி, வழக்குச் சொல்
முருகன்
.
10ம் நூற்றாண்டில் பன்னெடுங்காலமாகவே இருந்த
சபரிமலை ஆலயப் பகுதியை
க் கொள்ளையர் படை ஆக்கிரமித்தது. அப்போது அரசகுமாரிக்கும் ஆலய நம்பூதிரிக்கும் மகனாகத் தோன்றிய ஆர்ய கேரள வர்மன், பந்தள அரசரின் துணையோடும்
பாண்டிய தேசப்படைகளோடும்
, அம்பலப்புழை ஆலங்காடு படை வீரர்களோடும்
ஆலயத்தை
ப் புனரமைக்கும்
பணியில் ஈடுபட்டார்
. ஆர்ய கேரள வர்மனை மக்கள் செல்லமாக ஐயப்பன் என்று
அழைத்தார்கள்
. இவர்களுக்கு
க் கோவிலைப் புனர் நிர்மாணம்
செய்ய பலரும் துணை நின்றார்கள். மலையரையர்களும் கட்டாயம் துணை நின்றிருக்கலாம்
. இறைவனின் பெயரையே ஏற்ற வீரனான ஐயப்பன், காலத்தால் சீரழிந்து போயிருந்த சபரிமலை ஆலயத்தை மீட்டு, மீண்டும் புனரமைத்து அங்கே இறைவனுடன் ஐக்கியமானார்.
இன்று மலைநாடெங்கும் பாடப்படும் பழமையான
ஐயப்பன் பாட்டுக்களை
ச் சற்று ஆராய்ந்தால், அதில்
வாவரை
த் தோழனாக கொண்டு
உதயணன் என்ற கொள்ளையனை வீழ்த்திய ஆர்ய கேரள வர்மன் எனும் ஐயப்பனை பற்றி மட்டுமே
காண முடிகிறது.
“வருடா வருடம் மலை ஏறி வந்து சபரிகிரியில் கோயில்
கொண்டிருக்கும் ஹரிஹர புத்ரனை பந்தள அரசர் வணங்குவதாக வாக்குறுதி கொடுத்தால்
, எதிரிகளை
நான் அழித்து ஆலயத்தை மீட்டுத்தருவேன்” என்று ஆர்ய கேரள வர்மன்
(ஐயப்பன்) கேட்பதாக ஐயப்பன் பாட்டுகள் கூறும்.
காலத்தையொட்டி வருகின்ற மகர ஸங்க்ரமயாமமதில்
பந்தள ராஜன் வன்படை திரட்டி மலை மீதேறி யிறங்கி நடந்து
சபரிமலை நாதனை வணங்கி வருவேனென்று சத்தியம் செய்தால்
இப்போது வரும் எதிரிகளை கொல்லத்தான் சிரமமே இல்லை”
ஆக 10ம் நூற்றாண்டிலிருந்தே
பந்தள அரசர்களே சபரிமலை ஆலயத்தை
ப் புனரமைத்தார்கள்
என்பதும் தெளிவாகிறது
.
இதன் பின்னர் 16ம்
நூற்றாண்டில் ஒருமுறை சபரிமலை பந்தள அரச குடும்பத்தால் புனரமைக்கப்பட்டதற்கும்
,
1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில், போர்ச் செலவுகளைச்
சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும், சபரிமலைக் கோவிலையும், திருவிதாங்கூர் அரசரிடம் அடமானம் வைத்ததற்கும் தெளிவான ஆதாரங்கள் உள்ள.
1780திலேயே
கோவில் நிர்வாகம் பந்தள அரசரிடமிருந்து திருவிதாங்கூர் அரசுக்கு
க் கைமாறி இருக்க, 1900ல் பந்தள அரசரும் தாழமன்
குடும்பத்தினரும் அரையர்களிடமிருந்து கோவிலை
ப் பறித்தார்கள் என்ற வாதம் ஆதாரமற்றது.
(இவர்கள் சொல்லும் கந்தன்கருத்தம்மா கதைக்கும் ஆதாரம் ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை. பல காலம் முன்பிருந்தே சபரிமலை ஆலயம் முறையான வழிபாட்டு கேந்திரமாக இருந்திருக்கிறது
என்பது மிகத் தெளிவு. அதே போல அரையர்கள் தெய்வங்களின் பெயரைச் சூட்டிக்கொள்வதும் வழக்கத்தில்
இல்லை.
)
பண்டைய கால நடைமுறை
பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் துவங்கி 41 மைல்
கொண்ட பெரியபாதை வழியே வந்து, பெரியபாதை வழியாகவே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப்
பாதை வழியே எறி வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. மேலே உள்ள பாடலில் ஆர்ய கேரள வர்மன் சத்தியம் கேட்பதிலிருந்தேரொம்பவும்
சிரமப்பட்டு வரவேண்டிய காரணத்தால் – ஆலயத்துக்கு
வருடா வருடம் கட்டாயம் வரவேண்டும் என்று
நிர்பந்திக்கும் நிலை

தெளிவாகிறது.

 

இது இப்படி இருக்க, சபரிமலை
மேல்சாந்தியாக இருந்து பூஜை செய்ய ஆள்கிடைக்காத காலங்களும் உண்டு. சபரிமலையில் இன்றும் ஒரு சடங்கு உண்டு : மகர
மஹோத்ஸவம் முடியும் அன்று, பதினெட்டாம் படியின் முன்பு, கோவிலின் வருமானம் என்று கூறி மேல்சாந்தி ஒரு பணமுடிப்பையும் கோவில் சாவியையும், பந்தள அரசப் பிரதிநிதியிடம் கொடுக்க, அவரோ அதில் கொஞ்ச பணத்துடன் சாவியையும் மேல்சாந்தியிடம் திரும்பக் கொடுத்து அடுத்த வருடம் வரை பூஜையை சிறப்பாக நடத்தும்படி கேட்டுக் கொள்வார். (இன்றைக்கு
கோவில் வருமானத்தை அரசு எடுத்துக் கொள்ளும் நிலையில் இது ஒரு வெறும் சடங்காக, பெயரளவில் நடக்கிறது. ஆனாலும் பந்தளம் அரசருக்கு கோவிலின் பந்தத்தை நிலைநாட்டும் உணர்ச்சிமிக்க சடங்கு இது.)
1800களில் கூட எத்தனையோ முறை பணமுடிப்பையும் சாவியையும் கொடுத்துவிட்டு, எங்கே மீண்டும் தன்னை பூஜை செய்யச் சொல்லிவிடுவார்களோ என்று மேல்சாந்தி பயந்து ஓடிப்போன கதைகள் கூட உண்டு.
சபரிமலைக்கு போவதும் அங்கே 3 நாட்கள்
தங்கி இருப்பதும் அந்த அளவுக்குக்
கடினமான ஒன்றாக இருந்தததை உணர முடிகிறது. (என்னுடைய சிறிய பாட்டானார் CV கிருஷ்ணய்யர்
1920ல் கூட அரிவாள் எடுத்துக்கொண்டு பாதைகளை வெட்டிக்கொண்டு வழியை உண்டாக்கித்தான்
சென்றார்கள்
.)
யாரோ மலைவாசிகள், தங்கள் மூதாதையர்களுகாகக்
காட்டுக்குள் கட்டி வைத்து வழிபடும் கோவிலாக அது இருந்தால், இவ்வளவு சிரமப்பட்டுப் போகும் அந்தக் கோவிலை, தேடிப்பிடித்து பந்தள அரசன் கையகப்படுத்த வேண்டிய அவசியம் என்ன?
பல நூற்றாண்டுகளாகத் தங்கள் குடும்பத்துக்கு நேரடி பந்தம் இருப்பதாலேயே பந்தளக் குடும்பமும் தாழமண் குடும்பமும் இன்றும் சபரிமலைக்காகக்
குரல் கொடுக்கிறார்கள்.
சபரிமலைக்கோவில் வழிபாட்டு முறைகளும் உரிமைகளும்
பண்டைய காலம் தொட்டே சபரிமலையில் உள்ள உரிமைகள் மிகத் தெளிவாகவே இருந்த.
1820ல் வெளியான Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட Memoirs of Survey of the
Travancore and Cochin States
என்ற
ஒரு கேரள அரசு சர்வே குறிப்புசபரிமலை நிர்வாகத்தை பிராமணர் ஒருவரும் இரண்டு நாயர்களும் அரசாங்கத்தின் சார்பில் கவனித்து வந்ததாக கூறுகிறது.
அந்தக் குறிப்புகளில் 1820களிலேயே ஒரு ஆண்டுக்கு 15,000 பக்தர்கள் வருவதாக அதில் தெளிவாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது பலரும்
அறிந்த முறையான கோவில்
. மலைக்காணிகளின் தனிப்பட்ட வழிபாட்டுத்தலம் அல்ல
என்பது தெளிவாகிறது
.
பந்தளத்திலிருந்து திருவாபரணம் சுமக்கும் குடும்பங்கள் முக்கியமாக நாயர் குடும்பங்களின் கீழ் உள்ளது.
அம்பலப்புழை, ஆலங்காடு பேட்டை உரிமைகள்
மேனன், நாயர்,
பிள்ளை எனப்படும்
அந்தந்த சமூகத்திடமே இன்றும் இருக்கிறது.
அதே போல கோவிலின் வெளிச்சப்பாடு என்று சொல்லப்படும் ஸ்தானம், பட்டர்கள்
என்று அழைக்கப்படும் தமிழ் பிராமணர்கள் வசமே இருந்தது. (1835 முதல் 1989 வரை யாரெல்லாம் இருந்தார்கள் என்ற ஆவணங்களும் தெளிவாக இருக்கின்றன.)
வெடி வழிபாட்டின் உரிமை சிறப்பன்சிரா (ஈழவ) பணிக்கர்கள் வசம் இருந்தது. வனதேவதைகளுக்குக் குருதி பூஜை நடத்தும் உரிமையோ குரூப் என்று சொல்லப்படும் சமூகத்திடம் இருக்கிறது.
இதையெல்லாம் விட விநோதம் என்னவென்றால் எந்த மலையரையர்கள் இன்று கோவிலுக்கு உரிமை கோருகிறார்களோ, அந்த மலையரையர்களின் பூஜையை, அவர்களின் குடியிருப்புப்
பகுதிகளில்
ஏற்று நடத்தி அவர்களுக்குமே வெளிச்சபாடாக (சாமியாடி) இருந்ததுநாகர்கோவிலைச் சேர்ந்த பார்வதீபுரம் வெங்டீஸ்வர ஐயர் என்பவர்தான். மகரவிளக்கு முடிந்து ஒரு வாரம்வரை இவர் அரையர்களின் குடியிருப்புப் பகுதிகளில் தங்கி அவர்களுக்கான பூஜையை முடித்த பின்னரே ஊர் திரும்புவார். இது 1895 முதல்
1970
ல் அவரது இறுதிக்காலம் வரை தொடர்ந்தது.
இதில் சில உரிமைகள் இன்று நடைமுறையில் இல்லை. அது
எப்படி என்றால்
, 1950 தேவஸ்வம் போர்டு சபரிமலையில் பரம்பரையாக
க் குறிப்பிட்ட வழிபாடு அல்லது சடங்குகளுக்கான உரிமை உள்ளவர்களை
ஆவணங்களுடன் பதிவு செய்து
கொள்ளும்படி கேட்டுக் கொண்டது
.
இதில் முதலில் ஆவணங்களைக் குறித்த நேரத்தில் கொடுத்தது வாவர் சம்பந்தப்பட்ட குடும்பம்தான். அவர்களுக்கு
சந்நதிக்கு எதிரே விரிவைக்கும் உரிமை உண்டு
. இன்றும் அவர்களை
மலையில் காணலாம்
. அடுத்து மணிமண்டப பூஜா உரிமைக
ள் குரூப் இனத்தவருக்கும் நிலை நாட்டப்பட்ட. குரூப்பு சமூகத்தினர்தான் இன்றைக்கும் குருதி
நடத்தி எழு
ந்தளிப்பு ஊர்வலம் நடத்துகிறார்கள்.
சிறப்பன்சிரா குடும்பத்தினருக்கு சபரிமலையில்
வெடி வழிபாடு நடத்தும் உரிமை இருந்தது
. 1950க்குள் அவர்கள் கம்யூனிஸ்ட்டுகளாகி கடவுள்
நம்பிக்கை இல்லாமல் போனதால் உரிமை தேவையில்லை என்று கருதி எந்த
க் கடிதமும் கொடுக்கவில்லை. அதே போல மலைமேல் நாயர் என்ற
குடும்பமே கொச்சு கடுத்தனின் பூஜை உரிமை கொண்டவர்கள்
, அவர்கள்
குறித்த நேரத்துக்குள் கடிதமோ
ஆவணமோ கொடுக்காததால்
அவர்கள் உரிமையும் பறிபோனது
. தமிழ் பட்டர்களின் வெளிச்சப்பாடு உரிமையும்
பாலா பாஸ்கர ஐயர் காலத்துக்குப் பின்
1989ல் அரசாங்கத்தால் நிறுத்தப்பட்டது.
ஆக பந்தள ராஜகுடும்பம், பிராமணர்களான நம்பூதிரிகள் மட்டுமல்லாமல் எல்லா
இனத்தவர்க்கும் சபரிமலையில் அவரவர்களுக்கான உரிமைகள் உண்டு. அப்படி ராஜ
குடும்பத்தினர் அரையர்களிடமிருந்து அபகரித்திருந்தால் குருதிக்கும் மணிமண்டப பூஜைக்கு
மட்டும் குரூப் இனத்தவர்க்ளை அனுமதிப்பானேன்?

 

வனத்தில் இருக்கும் தேவதைகள் எல்லாம்
வனவாசிகளின் தெய்வங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால்
கிட்டத்தட்ட 90% நம்பூதிரிகளின் குடும்ப தெய்வம், குல தெய்வம் வேட்டைக்கொருமகன்
என்று அழைக்கப்படும் வனதேவதையான கிராத சாஸ்தாதான்.
அப்படியானால் அரையர்கள்? அவர்களுக்கும்
சபரிமலையில் சில உரிமைகள் உண்டு. அதை யாரும் மறுக்கவில்லை
.
மலைதேவதைகள் என்றொரு சன்னிதி மாளிகைப்புறத்தில்
இருந்தது
. வெட்டவெளியில் உள்ள கல்பீடம். அதற்கு எதிரே
மலையரையர்கள் வழிபடும் வண்ணம் ஒரு ஆட்டின் கல்சிலை இருந்தது
. அங்கே வழிபடும் பூஜை உரிமை அவர்களுக்கே
.
(1980கள் வரை இருந்த அவற்றை நீக்கியது ஆலய நிர்வாக அரசு அதிகாரிகள்
.)
மூங்கில் தண்டில் தேன் கொண்டுவந்து சபரிமலை சாஸ்தாவின் அபிஷேகத்துக்கு கொடுக்கும் உரிமையும், மலைதேவதைகளுக்குப்
பூஜைகள் செய்யும் உரிமையும், மகரவிளக்குக்கு தீபம் ஏற்றும் உரிமையும் மலை அரையர்களுக்கு உண்டு. வற்றைப் பறித்தது தேவஸ்வம் போர்டுதான். பந்தள குடும்பம் அல்ல!
அது மட்டுமல்லாது அரையர்கள் தாங்களாகவே தங்கள்
அடையாளங்களை இழந்தது பாதிரிகளிடம்தான்
.
1883ல் எழுதப்பட்ட ஒரு புத்தகம் ‘Native life in
Travancore’ சாமுவேல் மடீர் என்ற பாதிரியார் எழுதியது. அதில் சபரிமலை
ப் பகுதியிலுள்ள
மலையரையர்கள் பற்றி விவரமாக எழுதியுள்ளார்
. 1862ல் H.பேக்கர் என்ற
பாதிரியாரும்
The Hill Arrians என்றொரு புத்தகம் எழுதியுள்ளார்.
இந்நூலில் மலையரையர்கள் காடுகளில் உள்ள பூதங்களை
வணங்கியதாகவும்
, சுமார் நூறாண்டு முன்பு (அதாவது
1762) தாலநாணி என்ற ஒரு சாமியாடி இருந்ததாகவும் கூறுகிறார். அதாவது அவர்களது கிராமத்தில் உள்ள குடியிருப்பில் ஐயப்பன் இவருக்குள் இறங்கி
ப் பேசுவதாக நம்பிக்கை. முட்ட முட்ட குடித்திருக்கும் தாலநாணி எருமப்பாறை
மலைப்பகுதியிலிருந்து சபரிமலைக்கு
த் தரிசனத்துக்காகச் செல்லும் மக்களிடம் தான் வரவில்லை என்று மறுத்துவிட்டு, அவர்களுக்கு
முன் சபரிமலையில் காத்திருப்பார் என்று புத்தகம் பேசுகிறது
. அதாவது
1700களிலேய மலையரையர்கள் சபரிமலைக்கு வழிபடத்தான் போனார்கள்.
கோவில் நிர்வாகமோ பூஜையோ செய்யவில்லை என்பதும் தெளிவாகிறது.
தாலநாணி, மற்றொரு மலைவாசிகளான சோகர்களால்
கொல்லப்பட்டு அவரது மகன் அவரது பதவியை அடைந்தார்
. All the descendants of
Talanani are now Christians. Thanks to Rev. Henry Baker’s work என்று
நூல் தெள்ளத்தெளிவாக உரைக்கிறது
.
‘Mr. Baker was privileged to baptize many hundreds of
Arayans Instructing them and forming them into congregation. This good work is
carried out by other missionaries and likely to extend’ என்று புத்தக
ஆசிரியர் பெருமைப்பட்டுக் கொள்கிறார்
. அப்போதே 2,000 அரையர்களை கிறிஸ்தவர்களாக்கி மேல்காவு எனும் காட்டுப்பகுதியில் சர்ச் கட்டி
இருக்கிறார்கள்
. மிச்ச சொச்சம் இருந்தவர்களையும் Rev
WJ.ரிச்சர்ட் என்பவர் மதம் மாற்றி இருக்கிறார்.
சபரிமலைக்கு அரையர்கள் வெளிச்சப்பாடாக இருந்ததில்லை
என்பதோடு
, அரையர்களுக்குமே அப்படி யாரும் இல்லாதபடி அவர்கள் வம்சத்தையே மதம்
மாற்றி அவர்களது பூஜை பொருட்களையும் விக்
கிங்களையும் ரிச்சர்ட் வாங்கிக் கொண்டதாகப் புத்தகத்திலிருந்து தெளிவாகிறது.


விஷயங்கள் இப்படி இருக்க,
சம்பந்தமே இல்லாத, ஆதாரமற்ற விஷயங்களைப் பேசி மக்களை திசை திருப்புவது
, பிரம்மாண்டமான சதிச்செயலின்
ஒரு அங்கம்தான். ஏதோ அரைகுறையாக உள்ள விஷயங்களை
க் கையில் வைத்துக்கொண்டு சபரிமலை
மீதான தாக்குதலுக்கு இவர்களை ஒரு அஸ்திரம் 
ஆக்கி இருக்கிறார்கள். *****  

Posted on Leave a comment

சபரிமலை: களத்திலிருந்து ஓர் அறிக்கை (செப்டம்பர் – நவம்பர் 2018) | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

கேரள மாநிலம் என்றுமே காணாத அளவுக்கு ஹிந்து மக்கள் எழுச்சி ஆங்காங்கே நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக குடும்பப் பெண்கள் இதில் பெருமளவு பங்குகொண்டு பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்துகொண்டு உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பு தங்களுக்கு ஏற்புடையது அல்ல என்று தெள்ளத் தெளிவாக உரைத்து வருகிறார்கள். கேரளத்தில் இவ்வளவு எதிர்ப்பு இருக்கும் என்பது யாருமே எதிர்பாராத ஒன்று.

நன்றி: லைவ்மிண்ட்

செப்டம்பர் 28, 2018

உச்சநீதி மன்றத் தீர்ப்பு வந்ததும் பாரம்பரியமான பக்தர்கள் அனைவரும் செய்வதறியாது திகைத்து நின்றார்கள். ஏற்கெனவே (தீர்ப்புக்கும் முன்னரே) உச்சநீதிமன்றத்தில் எந்த வயதுப் பெண்களும் சபரிமலைக்கு வரலாம் என்று மனு கொடுத்திருந்த கேரள அரசு- சீராய்வு மனு என்ற பேச்சுக்கே இடமில்லை என்று கொக்கரித்தது. கோயிலை நிர்வகிக்கும் தேவஸ்வம் போர்டு – அரசின் கைப்பாவையாக அமைதியாகவே இருந்தது. பக்தர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சிகள், ஆன்மீக அமைப்புக்கள் யாராவது பேசுவார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

பெண்களுக்கான சம உரிமை என்ற கோணத்தில் மட்டுமே நீதிமன்றம் பேசி இருக்கிறது. வெறும் புகழுக்காகப் பெண்ணியம் பேசும் ஒரு சிலரின் போக்குக்காக ஆலயத்துக்கான சம்பிரதாயம், பலகோடிப் பேர்களின் நம்பிக்கை அசைத்துப் பார்க்கப்பட்டிருக்கிறது.

பலரும் இதனை சதி (உடன்கட்டை ஏறுதல்), குழந்தைத் திருமணம் போன்ற செயல்களுடன் ஒப்பிட்டுப் பேட்டியளித்தார்கள். கட்டுரைகளும் எழுதினார்கள். அடிப்படைப் புரிதல் இல்லாத காரணத்தால் உண்டான அபத்தம் இது. சதியும், குழந்தைத் திருமணமும் இந்து மத நம்பிக்கை கிடையாது. அதற்கும் ஆலய வழிபாட்டுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. மேலும் அவை தனியொரு பெண்ணுக்குப் பாதிப்பை உண்டாக்குபவை. சபரிமலை கோவிலுக்கு அனுமதிக்காத காரணத்தால் எந்த இளம்பெண்ணுக்கும் வாழ்வாதாரம் பாதிக்கப்படப்போவதில்லை. இவை எல்லாவற்றுக்கும் மேலாக, ஆலயமும் அதன் சம்பிரதாயங்களும் நம்பிக்கை உள்ளவர்களுக்கே என்ற புரிதல் முக்கியம். நம்பிக்கை இல்லாதவர்கள் அங்கே வரவேண்டிய அவசியம் என்ன? என்னுடைய இஷ்டப்படிதான் ஆலய விதிகள் இருக்க வேண்டும் என்று சொல்ல இவர்கள் யார்?

இப்படிப்பட்ட பலவிதமான மனக்குமுறல்களுடன் பக்தர்கள் கொந்தளித்தார்கள். வழக்கமான அமைதியாக அது இல்லாமல், எல்லா இடங்களிலும் அது எதிரொலித்தது.

செப்டம்பர் 30, 2018

பாலக்காட்டின் உள்ள ஐயப்ப பக்தர்களும் பெண்களுமாக சுமார் 600-700 பேர் முதன்முதலாக உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்கு எதிராக நாம ஜப யாத்திரையைத் துவங்கினார்கள்.

இதே நேரத்தில் People For Dharma, NSS போன்ற அமைப்புகள் மட்டும் (ஏற்கனவே இந்த வழக்கில் பக்தர்கள் சார்பில் ஆறு வருடங்களாக வழக்கை வாதாடியவர்கள்) – நாங்கள் மறுசீராய்வு மனு கொடுக்கப் போகிறோம் என்று தெளிவாகச் சொல்லி ஆதரவு தெரிவித்தார்கள். அந்த நேரத்தில் அதுதான் பலருக்கும் ஆறுதல் கொடுத்தது.

அக்டோபர் 2, 2018

இரண்டொரு நாளில் இந்த அமைப்புகளுடன் இணைந்து பந்தள அரச குடும்பத்தினர் சபரிமலை தீர்ப்புக்கு எதிராக ஒரு பிரார்த்தனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்தார்கள். முடிவு செய்தது செப்டம்பர் 30ம் தேதி. அக்டோபர் 1ம் தேதி நான் அவர்களுடன் பேசியபோது 4000 பேர் வரை வரலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது புரிந்தது. அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணிக்குப் பிரார்த்தனைக் கூட்டம். 3மணிக்கு எனக்கு வந்த தொலைப்பேசியில் – இதுவரை எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டிவிட்டது என்றார்கள்.

இவ்வளவு மக்கள் கூடுவார்கள் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. காங்கிரஸ், பிஜேபி உட்பட பல முக்கியக் கட்சிப் பிரமுகர்கள் பக்தர்களுக்கு ஆதரவாக இந்தக் கூட்டத்தில் பங்கேற்றார்கள்.

அதன் பின்னர் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு எனத் துவங்கி உலகெங்கும் இருக்கும் பல்லாயிரக்கணக்கான ஐயப்பப் பக்தர்கள் தங்கள் மனவருத்தத்தையும் எதிர்ப்பையும் காட்டும் வண்ணம் ஆங்காங்கே கூடி கூட்டங்கள் நடத்தினார்கள்.

அக்டோபர் 5, 2018

தேவஸ்வம் போர்டு தலைவர் பத்மகுமார் மறுசீராய்வு மனு செய்யப்போவதில்லை என்று திட்டவட்டமாக அறிவித்தார். உடனடியாக பந்தளம் அரச குடும்பத்தினரும், தந்திரி குடும்பத்தினரும் தாங்கள் உச்சநீதிமன்றத்தில் சீராய்வு மனுதாக்கல் செய்யப்போவதாக அறிவித்தார்கள்.

கேரள முதல்வரோ இளம் பெண்களை சபரிமலைக்கு ஏற்றியே தீருவது என்ற தீர்மானமான முடிவில் இருந்தார். உச்சநீதிமன்றத்தின் எத்தனையோ தீர்ப்புகளை கண்டும் காணாமல் விடும் மாநில அரசுகள் பல. அதிலும் கேரள அரசு கேட்கவே வேண்டாம். (உதாரணமாக ஒலிபெருக்கிகளுக்கான உச்சநீதிமன்றத் தடையை இதுவரை எந்த மாநில அரசுமே அமல்படுத்தவே இல்லை. இசுலாமியர் தொழுகைக்கு அழைப்பு விடுக்கும் அதனைத் தடுத்தால் அம்மத நம்பிக்கைக்கும் அமைதிக்கும் குந்தகம் விளைவித்ததாகும் என அமைதியாகவே இருக்கிறார்கள்.) ஆனால் சபரிமலைக்கு இவர்கள் ஏதோ உச்சநீதிமன்றம் சொன்னதை செய்துமுடிக்கும் அடிமைகள் போல பாவ்லா காட்டிக்கொண்டு ஆலயத்தின் நம்பிக்கைகளுக்குக் கொஞ்சமும் மதிப்பளிக்காமல் நடவடிக்கைகளை ஆரம்பித்தார்கள். ஐயப்ப பக்தர்களின் உணர்வுகள் நசுக்கப்பட்டன; நம்பிக்கைகள் நொறுக்கப்பட்டன.

அக்டோபர் 8, 2018

தந்த்ரியையும், பந்தள அரச குடும்பத்தினரையும் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார் கேரள முதல்வர். இளம்பெண்களை அனுமதிப்பதைத் தவிர வேறேதும் இருந்தால் பேசுவோம் என்று இருவருமே பேச்சுவார்த்தையைப் புறக்கணித்தார்கள்.

அக்டோபர் 16, 2018

அம்மாத நடைத் திறப்புக்கு ஒருநாள் மட்டுமே பாக்கி இருந்த நிலையில், பக்தர்கள், சபரிமலையை அடுத்துள்ள கேந்திரமான நிலக்கல் எனும் ஊரில் நாம ஜபத்தைத் துவங்கினார்கள்.

‘இளம் பெண்களை அனுமதிக்க முடியாது’ என்ற தீர்மானமான முடிவுடன் பக்தர்கள் அங்கே குழுமத்துவங்கினார்கள். அவர்களே ஒரு செக்போஸ்ட் அமைத்து, பெண் பக்தர்களின் அடையாள அட்டைகளைச் சோதித்து அனுப்பத் தயாரானார்கள். இந்தப் பக்தர்களே ஐயப்பனின் போர்ப்படைபோல அங்கே வியூகம் அமைத்தார்கள். ‘சரண கோஷமே எங்கள் ஆயுதம்’ என்ற தீர்மானத்துடன் அவர்கள் காத்திருந்தார்கள்.

சபரிமலை ஒரு வரலாற்று மாற்றத்தைச் சந்திக்கப்போகிறது என்றெல்லாம் பலரும் காத்திருந்தார்கள். நாட்டின் பல பகுதிகளிலும், சோஷியல் மீடியாவிலும், டீவியிலும் இதுவே பேச்சாக இருந்தது. சபரிமலையின் வரலாறு – வரலாறாகவே தொடர்ந்தது.

திடீரென அன்று இரவு. சரண கோஷம் முழக்கியபடி காத்திருந்த பக்தர்கள் மேல் லத்தியைச் சுழற்றியது போலீஸ் படை. லத்தி சார்ஜ் செய்தபோது கலைந்து ஓடிய பக்தர்கள், பயந்து ஓடவில்லை. மீண்டும் பகவானுக்காகக் கூடினார்கள்.

அக்டோபர் 17, 2018

நடந்த சம்பங்களையெல்லாம் கண்டு மனம் நொந்த ராமகிருஷ்ணன் என்ற 80 வயது குருசுவாமி ஆதங்கம் தாளாமல் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.

17ம் தேதி ஐப்பசி மாதத்துக்கான நடைத்திறப்பு பல்வேறு குழப்பங்களுக்கு இடையே நடந்தேறியது.

சபரிமலையின் ஆசாரம் காக்கப்படவேண்டும் என்று போராடிய கோவிலின் முன்னாள் தேவஸ்வம் போர்டு தலைவர் ப்ரயார் கோபாலகிருஷ்ணன் முதல் தந்திரி குடும்பத்து 85 வயது மூதாட்டி தேவிகா அந்தர்ஜனம் வரை காரணமின்றிப் பலரும் கைது செய்யப்பட்டார்கள். தலைவர்கள் யாரும் இல்லாமல் பக்தர்களின் போராட்டம் பிசுபிசுத்துவிடும் என்பது அவர்கள் எண்ணம். ஆனால் இதனாலெல்லாம் பக்தர்களின் கொதிப்பு அதிகமானதே தவிர எள்ளளவும் குறையவில்லை.

ஆந்திராவிலிருந்து வந்த ஒரு இளம் வயதுப் பெண்மணியை கேரள காவல்துறையினர் தைரியம் கொடுத்து அனுப்பி வைத்தார்கள். பம்பை தாண்டிச் சிறிது தூரம் நடந்த அப்பெண்மணி தானே முன்வந்து தனக்குத் தைரியம் இல்லை என்று திரும்பி விட்டார்.

அக்டோபர் 18

‘சபரிமலைக்கு வந்தே தீருவோம்’ என்று கங்கணம் கட்டி வந்த பெண்கள் யாரென்று பார்த்தால் அவர்கள் நோக்கம் தெளிவாகிறது.

லிபி – என்பவர் பெண்ணியவாத இயக்கத்தைச் சேர்ந்தவர். சுஹாசினி ராஜ் என்ற நியூயார்க் டைம்ஸ் பத்திரிகை நிருபர் நாத்திக, ஹிந்து எதிர்ப்பாளர். கவிதா ஜாக்கல் என்ற கிறிஸ்தவர். ரெஹானா பாத்திமா என்ற முஸ்லீம். மேரி ஸ்வீட்டி என்ற கிறிஸ்தவர்.

இதில் ஒருவர் கூட ஐயப்பன் மேலோ, சபரிமலை மேலே உள்ள நம்பிக்கைக்காகவோ பக்திக்காகவோ வரவில்லை. குழப்பம் விளைவிக்கவும், மத உணர்வுகளைப் புண்படுத்தவும் மட்டுமே வந்துள்ளார்கள் என்பது தெளிவு. இப்படிப்பட்டவர்கள் உள்நோக்கத்துடன் சபரிமலைக்கு வந்திருப்பதைக் கண்டு பக்தர்கள் உள்ளம் கொதித்தார்கள்.

கேரள அரசாங்கமோ ஒரு இளம் பெண்ணையாவது மேலே ஏற்றியே தீருவது என்ற தீர்மானத்துடன் அடாவடியாகப் பேசுவதும், பக்தர்களைத் தீவிரவாதிகள் போல நடத்துவதும் எனத் தகாத செயல்களைத் துவங்கியது.

பல ஊடகங்களும் ஏதோ ரௌடிகள் மட்டுமே சபரிமலையில் இருப்பது போன்ற காட்சிகளைக் காட்டியது. மக்களின் வண்டிகளை உடைத்தது யார், ரகளையில் ஈடுபட்டது யார் என்று அனைவருக்குமே தெரியும்.

இதில் முக்கியமாகப் பலரும் புரிந்துகொள்ள வேண்டிய ஒரு விஷயம் – ஊடகங்களில் பரப்பப்படும்படி, பக்தர்கள் யாரையும் தாக்கவும் இல்லை; தொல்லை தரவும் இல்லை. அவர்களைத் தொடக்கூட இல்லை என்பதே உண்மை. வீம்புக்காக வந்த இளம் பெண்கள் காலில் விழுந்து, மேலே போக வேண்டாம் என்று வயதான பெண்மணிகள் கேட்டுக்கொண்டார்கள். மீறிவந்தவர்கள் முன்பு, மனிதச்சுவர் போல நின்று சரண கோஷம் முழக்கினார்கள் ஏனைய பக்தர்கள். பம்பை முதல், அப்பாச்சி மேடு, நீலிமலை, சபரிபீடம், மரக்கூட்டம், சன்னிதானம் வரை ஆங்காங்கே சோறு-தண்ணி இல்லாமல், வெறும் கட்டாந்தரையிலும் காட்டுப்பாதையிலும் பக்தர்கள் படுத்துக் கிடந்து, சபரிமலை ஆச்சாரத்தை மீறி ஒரு இளம் பெண்ணும் ஏறிவிடாமல் காப்பதற்காக ஆறு நாட்களாகத் தவம் கிடந்தார்கள்.

அக்டோபர் 19, 2018

ஒரு மந்திரிக்குக் கூட இல்லாத அளவுக்கு கிட்டத்தட்ட 300 போலீஸ் பாதுகாப்புப் படை புடை சூழ, கவிதாவும், ரெஹானா பாத்திமாவும் காவல்துறை சீருடை, தலைக்கவசம் சகிதம் மேலே அழைத்துச் செல்லப்பட்டார்கள். பக்தர்கள் யாரையும் நெருங்கக் கூட விடாமல், கிட்டத்தட்ட 18ம் படியிலிருந்து 100 அடி தொலைவிலுள்ள நடைப்பந்தல் வரை, காவல் படையுடன் வந்துவிட்ட இவர்களை, பக்தர்கள் மனிதச்சுவர்களாக மாறி நின்று தடுத்தார்கள். லத்தி சார்ஜ் செய்ய எங்களிடம் ஆர்டர் உள்ளது என்று காவல்துறை பயமுறுத்தியது.

“நாங்கள் உங்களைத் தடுக்கவில்லை. எங்களை அடித்துவிட்டுத் தாராளமாக அவர்களைக் கூட்டிச்செல்லுங்கள். ஆனால் எங்கள் மீது விழும் ஒவ்வொரு அடியும் வனபாலகனான ஐயப்பன் மீது விழும் அடி என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என்று சரண கோஷங்களை முழங்கியபடி பக்தர்கள் கூடிவிட்டார்கள்.

இதற்கிடையே இப்படிப்பட்ட பெண்களைப் காவல்துறை அழைத்து வந்திருப்பதை அறிந்து பந்தள ராஜ குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவிக்க, மலையில் பூஜையில் ஈடுபடும் கீழ்சாந்தி எனப்படும் பூஜகர்களும், பூஜைகளை நிறுத்தி, பதினெட்டாம் படியின் முன்பிருந்து பஜனை பாடத் துவங்கினார்கள். இளம்பெண்களை ஏற்ற முயற்சித்தால், கோவில் நடை உடனடியாக அடைக்கப்படும் என்று தந்த்ரி அறிவித்தார்.

இத்தனை எதிர்ப்பையும் எதிர்பாராத காவல்துறை ஒருவழியாகப் பின்வாங்கியது.

ரெஹானா பாத்திமா தனது இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டுவந்ததாகவும், அதனை சன்னிதியின் ஐயப்பன் முன்பு வீசி எறிய திட்டமிட்டிருந்ததாகவும் செய்திகள் வெளியாயின. எந்தவிதமான ப்ரோட்டோகாலும் இல்லாத இவர்களுக்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பும், காவல்துறையின் சீருடையும் கொடுத்தது எப்படி என்று எல்லா எதிர்க்கட்சிகளும் கேள்விகள் எழுப்பினார்கள்.

அக்டோபர் 20, 2018

இதன் பின்னரும் தலித் போராளி என்ற பெயரில் மஞ்சு என்ற பெண்ணும், “ஏசுவின் சக்தி என்னை சபரிமலைக்கு அழைக்கிறது” என்று சொல்லிக்கொண்டு மேரி ஸ்வீட்டி என்ற பெண்ணும் முயற்சித்தார்கள். பக்தர்களின் விடாமுயற்சியால் அதுவும் தோல்வியுற்றது.

அக்டோபர் மாத அமர்க்களங்களுக்கு நடுவே எங்களது குழுவில் உள்ள பக்தர்களும், நானுமே சந்நிதானத்தில் இருந்தோம். பந்தள ராஜ குடும்பத்தினரும் எங்களுடன் இருந்தார்கள். அங்கே நடந்த சம்பவங்களை நேரில் பார்த்தோம்.

அக்டோபர் 22, 2018

மேலும் மூன்று 43 வயது பெண்களை பக்தர்களே தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பி வைத்தார்கள்.

அன்று மாலை நடை அடைக்கும் வரை இந்தப் பரபரப்பான சூழ்நிலை தொடர்ந்தது. அன்று காலை போலீஸ் ஐ.ஜி. ஸ்ரீஜித் ஐயப்பனின் சந்நிதியில் நின்று கண்ணீர் சிந்தி அழுதார். பின்னர் தான் நிர்பந்திக்கப்பட்டுப் பக்தர்களுக்கு எதிராக நிற்கும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டதாக ஜனம் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்து அங்கிருந்து கிளம்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அன்றுமாலை – நடை அடைக்க இன்னும் கொஞ்ச நேரமே இருந்த நிலையில் மாறுவேஷத்தில் பெண்களை மேலே ஏற்ற திட்டமிட்டிருப்பதாக ஒரு செய்தி வர, பக்தர்கள் அனைவரும் (நான் உட்பட) மனிதசங்கிலி அமைத்து அடுத்த 2 மணிநேரம் சந்நிதானத்தைச் சுற்றி நின்றுகொண்டோம். அந்த மாதத்துப் பூஜையும் நடை அடைப்பும், ஹரிவராஸனமும் பக்தர்களுக்கு இனம் புரியாத ஒரு உணர்வினை ஏற்படுத்தியது.

 எத்தனை முயற்சித்தும் ஒரு இளம் பெண்ணையும் அனுமதிக்கவில்லை என்ற திருப்தி ஒருபுறம். அதே சமயம் – அமைதியாக, ஆனந்தமாக பகவானின் அருளை அனுபவித்த சந்நிதானத்தில் இத்தனை போராட்டங்களும், குழப்பங்களுமா என்ற ஆதங்கம் ஒருபுறம். ஐயோ நடை அடைக்கிறார்களே என்று வருத்தப்பட்ட காலம் போய், சீக்கிரம் நடையை அடைத்து விடுங்கள் என்று சொல்லும்படியான நிலை வந்துவிட்டது.

இதற்கிடையே எப்படியாவது சபரிமலையின் ஆச்சாரத்தை அழித்தே தீருவது என்ற முடிவில் இருக்கும் சக்திகள், புதிது புதிதாக ஒவ்வொருவராக களம் இறக்கினார்கள். சபரிமலை ஒரு பௌத்த ஆலயம் என்று ஒரு பொய்யுரை பரப்பப்பட்டது.

சஜீவ் என்ற ஆதிவாசி குழுத் தலைவர் சபரி கோவிலே எங்களுக்குதான் சொந்தம் என்கிற ரீதியில் ஒரு பேட்டி கொடுத்தார். (இது குறித்து தனிக்கட்டுரையாக விளக்கிச் சொல்கிறேன்). இது அடிப்படை ஆதாரமற்ற வெறும் குழப்பும் முயற்சி என்பது தெளிவு. சில விஷமிகளின் சதிச்செயல்.

1950களில் சபரிமலை என்பது ‘சவரிமலை’ (St. Xavier) என்று சொல்லி நடந்த தீ வைப்புச் சதி; அதன் பின்னர் 1983ல் செயிட் தாமஸ் நிலக்கல்லுக்கு வந்து சிலுவை நட்டுவைத்தார் என்று கூறி ஒரு சர்ச்சை – இப்போதைய பினராயி அரசு போலவே நிலக்கல்லில் பக்தர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும் அன்று நடந்தேறின.

இதன் பின்னணியில் நிற்கும் சில மதவாத சக்திகளின் சதிவேலையில் இதுவும் ஒன்று. உண்மையான கிறிஸ்தவர்களும், இஸ்லாமியர்களும் ஆலயத்தின் பாரம்பரியம் காக்கப்பட வேண்டும் என்று நம்முடன் தோளோடு தோள் நிற்கவேண்டும். ஒரு சில விஷமிகள் இதுபோல ஆதிவாசிகளைத் தூண்டிச் சதிச்செயல்களில் ஈடுபட்டு மத ஒற்றுமையைக் குலைக்க நினைக்கிறார்கள்.

25 அக்டோபர், 2018

இதுவரை நாங்கள் சீராய்வு மனு கொடுக்கப்போகிறோம் என்று சொல்லிவந்த தேவஸ்வம் போர்டு, நாங்கள் மனுத் தாக்கல் செய்யப்போவதில்லை என்பதோடு, பக்தர்கள் மேல் குற்றம் சொல்லியது. 1500 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

26 அக்டோபர், 2018

புனிதமான இருமுடியில் சானிடரி நாப்கின் கொண்டு சென்ற காரணத்துக்காக வழிபாட்டுத் தலத்தை இழிவு செய்ததாகவும், மத நம்பிக்கைகளுக்குக் குந்தகம் விளைவித்ததற்காகவும் ரெஹானா பாத்திமாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவரது முன் ஜாமீன் மனுவும் நிராகரிக்கப்பட்ட நிலையில், கேரள அரசு அவர் மேல் ஒரு நடவடிக்கையும் எடுக்காமல், அவரை சுதந்திரமாக வெளியே விட்டுவிட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களைத் தேடிப்பிடித்து வேட்டையாடியது.

27 அக்டோபர், 2018

கேரளமாநிலம் கண்ணூருக்கு வந்த பாஜக தலைவர் அமித் ஷா “ஐயப்ப பக்தர்களின் நம்பிக்கையை மாநில அரசு புண்படுத்த நினைக்கக்கூடாது. சபரிமலை பக்தர்களோடும் அவர்களது நம்பிக்கையோடும் பாஜக என்றும் துணை நிற்கும்” என்று பேட்டி கொடுக்க நிலைமை இன்னும் பரபரப்பானது.

2 நவம்பர், 2018

கடந்தமாதம் நடந்த நிலக்கல் போராட்டத்தில் காணாமல் போன சிவதாஸ் என்ற பக்தர் காட்டுக்குள் பிணமாக மீட்கப்பட்டார்.

4-5 நவம்பர், 2018

சித்திரை அட்டத்திருநாள் என்ற காரணத்துக்காக தீபாவளியை ஒட்டி ஒரு நாள் சபரிமலை நடைத்திறப்பு இருந்ததால் வரலாறு காணாத வகையில், கிட்டத்தட்ட 2500 காவலர்கள், 50 வயதுக்கு மேற்பட்ட 30 பெண்காவலர்கள் உட்பட சபரிமலையில் குவிக்கப்பட்டார்கள். நடைதிறக்கும் முன்னரே இந்தப் பெண் காவலர்கள் கண்ணீர் மல்க ஐயப்பன் திருநடைக்கு முன் நின்று வணங்கிவிட்டுப் பின்னர் வேலைக்குச் சென்றார்கள்.

6 நவம்பர், 2018

தீபாவளி நாளான அன்று சபரிமலையில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. கூட்டம் குறைவானால் இளம் பெண்களை எளிதாக ஏற்றி விடுவார்கள் என்று பரவலாக பேச்சு அடிபட்டது. சாதாரணமாக 1000 பேர் கூட வராத சித்திரை அட்டத் திருநாளுக்கு அன்று வந்தது 15,000 பேர். சிபிஎம் கட்சி உறுப்பினரின் மனைவியான அஞ்சு என்னும் இளம் பெண் பம்பைக்கு வந்து சேர, சபரிமலையில் மீண்டும் பக்தர்கள் கொதிப்படைந்தார்கள்.

கூடி இருந்த பக்தர்களுடன், பாஜக, ஆர்.எஸ்.எஸ் தலைவர்களும் சேர்ந்துகொண்டு மொத்த மலையிலும் சரண கோஷத்துடன் வலம் வந்தார்கள்.

தன் கணவன் வற்புறுத்திய காரணத்தால்தான் – தனக்கு விருப்பம் இல்லாமல் இங்கு வந்ததாக அஞ்சு தெரிவித்துத் திரும்பச் சென்றார்.

11 நவம்பர், 2018

பொய்யுரைகளைப் பரப்பி சபரிமலையை ஆர்எஸ்எஸ் கைப்பற்றப் பார்ப்பதாக கேரள முதல்வர் பகிரங்கக் குற்றச்சாட்டு வைத்தார். ஆன்லைன் முறையில் கிட்டத்தட்ட 539 இளம் பெண்கள் சபரிமலை தரிசனத்துக்காகப் பதிவு செய்திருப்பதாக தேவஸ்வம் போர்டு தெரிவித்தது.

12 நவம்பர், 2018

பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு ஏதும் தெரிவிக்கப்போவதில்லை என்று போர்டு திட்டவட்டமாக அறிவித்தது. 1947ல் ஆலயத்தைத் தனது நிர்வாகத்தில் கொண்டு வரும்போது, ஆலய சம்பிரதாயங்களை எக்காரணம் கொண்டும் மாற்ற மாட்டோம் என்று போர்டு தெரிவித்து ஓர் ஒப்பந்தத்தில் ஒத்துக்கொண்டதாக பந்தள ராஜ குடும்பத்தினர் அறிவித்தார்கள். அதைப் பற்றியெல்லாம் வாயே திறக்காத போர்டு பிரபல உச்சநீதிமன்ற வக்கீலான அர்யம சுந்தரத்தை சபரிமலை வழக்குக்கு தேவஸ்வம் போர்டு சார்பில் நியமித்தது.

பக்தர்களிடமிருந்து வந்த எதிர்ப்புக்களைக் கண்ட வக்கீல் சுந்தரமோ அடுத்த நாளே வழக்கிலிருந்து பின்வாங்கி விட்டார்,

13 நவம்பர், 2018

உச்சநீதிமன்றத்தில் அன்று சீராய்வு மனுக்களுக்கான பதில் வருவதாக இருந்ததால் பக்தர்களும் மற்றவர்களும் ஆவலுடன் காத்திருந்தார்கள். ஏற்கெனவே வழக்கு நடத்திய People for Dharma, NSS தவிர, பந்தளக் குடும்பம், தந்த்ரி குடும்பம், தனிப்பட்ட பக்தர்கள், அமைப்புகள் என 49 பேர் மறுசீராய்வு மனுக்களைத் தாக்கல் செய்திருந்தார்கள், 49 மனுக்களும் (ரிவ்யூ பெடிஷன்), 4 ரிட் பெடிஷன்களும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கப்பட்டு விசாரணை ஜனவரி 22ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இந்திய சட்ட அமைப்பைப் பொறுத்தவரை இது மிகப்பெரிய ஒரு வெற்றிதான். ஆனாலும் அதனை முழுதும் அனுபவிக்க விடாமல் உச்சநீதிமன்றம் ஒரு ‘…க்’ வைத்தே உத்தரவு வழங்கியது. ஜனவரி 22ம் தேதி விசாரணை நடைபெறும் வரையில் 10 முதல் 50 வயது வரையுள்ள பெண்களுக்குத் தடையில்லை என்பதே அது.

ஒரு பெண் வந்துவிட்டாலும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டங்கள் பாழாகிவிடுமே என்று பரிதவித்த பக்தர்களுக்கு இது ஏமாற்றமே. மேலும் அக்டோபர் மாதப் பூஜையில் 5 நாட்கள் நடைத்திறப்பு, தீபாவளியன்று ஒரு நாள் நடைத்திறப்பு மட்டுமே. ஆனால் இப்போதோ கிட்டத்தட்ட 56 நாள் நடை திறந்திருக்கும் மண்டல மகர காலகட்டத்தில், புற்றீசல் போல வீம்புக்காகக் கிளம்பி வரும் பெண்களை எப்படிச் சமாளிப்பது என்பது எல்லோருக்குள்ளும் இருந்த ஒரு கேள்வி.

14 நவம்பர்

இதற்கிடையே கேரள அரசு கூட்டிய அனைத்துக் கட்சிக் கூட்டம் தோல்வியடைந்தது. கேரள முதல்வர் தன் கருத்தை மற்றவர்கள் மேல் திணிக்க எதற்காக இந்தக் கூட்டம் என்று கம்யூனிஸ்ட் தவிர அனைவருமே வெளிநடப்பு செய்தார்கள்.

அன்று மாலையே தந்த்ரி குடும்பத்துடனும் பந்தள அரச குடும்பத்துடனும் மற்றொரு கூட்டம் ஏற்பாடானது. “குறிப்பிட்ட சில நாட்கள் மட்டும் பெண்களை அனுமதிக்கலாம். அதன் பின்னர் நீங்கள் வேண்டுமானால் சுத்தி செய்து கொள்ளுங்கள்” என்ற அற்புதமான யோசனையை கேரள முதல்வர் முன்வைத்தார். அறியாமல் செய்த தவறுகளுக்கே சுத்தி – தவறுகள் செய்ய அது லைசன்ஸ் இல்லை என்று கூறி அதனை நிராகரித்தது தாழமண் இல்லம்.

16 நவம்பர், 2018

விடியும் முன்னரே அன்றைய தினம் பரபரப்பானது அதிகாலை 4:30 மணியளவிலேயே மகாராஷ்டிராவைச் சேர்ந்த பெண்ணுரிமை செயற்பாட்டாளர் த்ருப்தி தேசாய், தன் தோழியர் ஆறு பெண்களுடன் கோயிலுக்குள் நுழைவேன் என்று கொச்சி விமான நிலையத்தில் வந்திறங்கினார். அவர் குழுவினரை அழைத்துச் செல்ல எந்த டாக்ஸியும் வர மறுத்து விட்டது. இதற்குள் செய்தி கேட்டு விமான நிலையத்தை அடைந்த பக்தர்கள் வாயிலை முற்றுகையிட்டு பஜனை செய்யத் துவங்கினார்கள். கிட்டத்தட்ட 19 மணி நேரம் தொடர்ந்த இந்த நாம ஜபத்தின் காரணத்தால் திருப்தி தேசாய் விமான நிலையத்தின் வாயிலைக் கூடத் தாண்ட முடியாமல் திரும்ப வேண்டிய நிர்பந்தம் உண்டானது.

நவம்பர் 18, 2018

கேரள அரசு பக்தர்களைத் துன்புறுத்தும் நோக்கில் சம்பந்தம் இல்லாத புதிய நடைமுறைகளை சபரிமலையில் அமல்படுத்தத் துவங்கினார்கள். சபரிமலையில் இரவில் யாரையும் தங்க அனுமதிக்கவில்லை. 2 ஐஜிக்கள், 4 எஸ்பிக்கள் தலைமையில் 5,200 போலீசார் குவிக்கப்பட்டார்கள்.

நடைப்பந்தலில் வேண்டுமென்றே தண்ணீரைப் பீய்ச்சி அடித்து யாரும் அங்கே தங்கமுடியாதபடி அனுப்பப்பட்டார்கள். சரண கோஷம் முழக்கியதாகக் கூறி நூற்றுக்கணக்கான ஐயப்பன்மார்கள் கைது செய்யப்பட்டார்கள்.

பக்தர்களிடம் போலீஸ் சார்பாக நோட்டீஸ் வழங்கப்பட்டது

போலீஸ் நோட்டீசில் கூறப்பட்டுள்ளதாவது:

1. பக்தர்கள் குழுவாகக் கோயில் வளாகத்தில் நிற்கவோ, அமரவோ கூடாது.
2. சரண கோஷங்களை இடக்கூடாது.
3. ஊடகங்களிடம் பேசக்கூடாது.
4. ஆறு மணிநேரத்துக்கு மேல் கோயில் வளாகத்தில் தங்கியிருக்கக்கூடாது.
5. ஆறு மணி நேரத்துக்குப் பின்னர் கோயிலை விட்டு வெளியேறுவதுடன், காவல்துறையிடம் அதை உறுதிப்படுத்த வேண்டும்.
6. இவற்றைக் கடைப்பிடிக்காவிட்டால், உங்கள் மீது சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.

நவம்பர் 22, 2018

சபரிமலை நடை திறந்து ஆறு நாட்கள் ஆகி விட்டது. எந்த வருடமும் இல்லாதபடி இம்முறை பக்தர்கள் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. சபரிமலையில் காவல்துறையினரே நிறைந்திருக்கிறார்கள். அவர்கள் விதித்துள்ள 144 தடை உத்தரவு, பக்தர்கள் மீது காட்டும் காட்டுமிராண்டித்தனமான கெடுபிடிகள், பக்தர்களை ஏதோ குற்றவாளிகளைப் போல் பார்த்து நடவடிக்கை மேற்கொள்வது போன்றவற்றைப் பார்த்து மும்பையிலிருந்து வந்த 110 ஐயப்பன்மார்கள், பாதி வழியில் திரும்பச் சென்று, ஆரியங்காவில் தங்கள் இருமுடியைப் பிரித்து அபிஷேகம் செய்துள்ளார்கள்.

நிலைமையைக் காணவந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாக்ருஷ்ணனிடமே நக்கலும் அதிகார தோரணையுமாக போலீஸ் அதிகாரி பேசுகிறார். “பக்தர்கள் பம்பையிலிருந்து மேலே வர 45 நிமிடங்கள் தானே ஆகும்? வாருங்கள் சாமி கும்பிடுங்கள். கிளம்புங்கள்” என்று பேட்டி கொடுக்கிறார். ஒரு சராசரியான நபர் மேலே ஏறி வர குறைந்தபட்சம் ஒண்ணேகால் முதல் ஒன்றரை மணிநேரம் ஆகும். 45 நிமிடத்தில் எப்படி ஏறுவது? 6 மணி நேரத்துக்குள் திரும்ப வேண்டும் என்றால் சபரிமலையின் முக்கியச் சடங்கான நெய்யபிஷேகம் எப்படிச் செய்வது? இதையெல்லாம் தீர்மானிக்க இவர்கள் யார்?

“அன்னதான பிரபுவே சரணம் ஐயப்பா” என்று அழைத்தோம், மலையெங்கும் பக்தர் செய்யும் அன்னதானத்தை தடுத்து விட்டார்கள்.

“ஏழைப் பங்காளனே சரணம் ஐயப்பா” என்றோம், குறைந்தது 100ரூபாய் இருந்தால்தான் நிலக்கல்லிலிருந்து பஸ்ஸில் பம்பா வர முடியும் என்றானது.

“சரணகோஷ ப்ரியனே சரணம் ஐயப்பா” என்றோம், சபரியில் சரணம் கூப்பிட்டால் கைது செய்யப்படுவாய் என்று உத்தரவு பிறப்பித்துள்ளார்கள்.

எந்த உச்சநீதிமன்றத் தீர்ப்பில் வழிபடுவதற்கான உரிமை – Article 25- Right to Pray என்று முழக்கமிட்டு இத்தனையும் செய்தார்களோ, அந்த உரிமை – Right to Pray – இங்கே சாமானிய பக்தனுக்குப் பறிக்கப்பட்டுவிட்டது. அவன் காலம்காலமாக வழிபட்ட முறையில் அவனுக்கு வழிபட உரிமை மறுக்கப்படுகிறது. 

***** 
Posted on 3 Comments

சபரிமலையின் வரலாறு | V. அரவிந்த் ஸுப்ரமண்யம்

சபரிமலைக் கோவிலின் புராண சரிதம்

மஹாவிஷ்ணு மோகினியாக உருக்கொண்டு அவதாரம் எடுத்து, சிவ விஷ்ணு சக்திகள் சங்கமமாக – கர்ப்பவாசம் புரியாமல் சங்கல்ப மாத்திரத்தில் அவதரித்தவர் மஹாசாஸ்தா. இங்கே புரிந்துகொள்ள வேண்டிய விஷயம் சிவ விஷ்ணு சங்கமம் என்பது சக்திகளின் சேர்க்கையே. உடல் சேர்க்கை அல்ல.

சாஸ்தாவின் ஆவிர்பாவம் ஆனதும் அவர் கைலையங்கிரியில் தனக்கென ஓர் உலகத்தை உருவாக்கி, பூரணை புஷ்கலை எனும் இரு தேவியரை மணந்து அவ்வுலகிலிருந்து அருளாட்சி நடத்தலானார்.

மஹிஷி எனும் அரக்கியை அழிக்கும் பொருட்டு, மனித அவதாரம் எடுக்கத் தீர்மானித்து, ஆகாய கங்கைவழியாக பம்பையாற்றங்கரையில் ஒரு குழந்தையாகத் தோன்றினார். பரமசிவன் கொடுத்த நவரத்தின மணிமாலையைக் கழுத்தில் அணிந்திருந்த காரணத்தால் – மணிகண்டன் என்று பெயரிடப்பட்டார், (எல்லோரும் கருதுவது போல, அடிக்கும் கோவில் மணியல்ல – சம்ஸ்க்ருதத்தில் அதற்கு கண்டா என்று பெயர். மணி என்றால் நவரத்தின மணி என்றே பொருள். மணிப்பூர் என்றொரு மாநிலம் உள்ளதும் இங்ஙனமே. Land of Jewel என்றே அதற்குப்பெயர்.)

கழுத்தில் நவரத்தினமணிகள் ஜொலித்த காரணத்தால் மணிகண்டன் என்று பெயரிட்டு ராஜசேகர பாண்டியன் வளர்த்து வந்தான். அவதார நோக்கத்துக்காக பால பிரம்மச்சாரியாகவே வாழ்ந்த மணிகண்டன் – மஹிஷியை சம்ஹாரம் செய்து, கலியுக வரதனாக கோவில் கொள்ளத் தீர்மானித்தான். சாஸ்தாவின் அவதாரமான மணிகண்டனை மஹா யோகபீடமாக விளங்கும் ஸ்தலமான சபரிபர்வதத்தில் பரசுராமர் பிரதிஷ்டை செய்தார்.

உலக நன்மைக்காக யோகத்திலேயே ஆழ்ந்து தவக்கோலம் பூண்ட மணிகண்டன் வருடத்தில் ஒருநாள் மகர சங்க்ரமத்தன்று கண்விழித்து பக்தர்களை அனுக்ரகிப்பேன் என்று வாக்களித்தார்.

பாண்டியர்களின் குருவான அகத்திய மாமுனிவரே சபரிமலைக்கான விரத வழிமுறைகளைக் கொடுத்தவர். ஒரு மண்டல பிரம்மச்சர்யாதி விரதங்களை மேற்கொள்ளுவோரே சபரிமலை செல்லத் தகுதி உடையவர் என்று வகுத்தளித்தார்.

சபரிமலைக் கோவிலின் ஸ்தலபுராணம் இதுவே. பிரமாண்ட புராணத்தின் பூதநாதோபாக்யானம் என்ற கேரளகல்பப் பகுதியில் நமக்குக் கிட்டும் புராண சரிதம்.

புராண காலம் தொட்டே சபரிமலை ஆலயம் உண்டென்றாலும் – வருடம் ஒருநாள் மட்டுமே வழிபாடு என்பதால் வந்து செல்லும் பக்தர் கூட்டம் மிகக் குறைவு. விரத அனுஷ்டானங்கள் பெண்களுக்கு நடைமுறைப்படுத்த முடியாத காரணங்களால் ஆண்கள் மட்டுமே சபரிமலை சென்றார்கள். (இன்றைக்குமே பெண்கள் செல்லவே முடியாத, ஆண்களுமே 15-16 வயதுக்குப் பின்னரே அனுமதிக்கப்படும் பல சாஸ்தா ஆலயங்கள் உண்டு.)

வரலாற்று நாயகன் ஐயப்பன்:

புராண சரிதம் கடந்து பல நூற்றாண்டுகள் தாண்டி, பத்தாம் நூற்றாண்டில் பாண்டிய வம்சம் கேரளத்தில் புலம் பெயர்ந்து, பூஞ்சார், பந்தளம் எனக் கிளைகளாகப் பிரிந்தது. சபரிமலைக் கோவிலை பந்தள வம்சம் பராமரித்து வந்தது. அப்போதைய சபரிமலைப் பகுதி காட்டில் எல்லையாக விளங்கிய காரணத்தால், வணிகர்களின் நடமாட்டம் மிகுந்தது. வணிகர்கள் மிகுந்ததால் ஒரு காலகட்டத்தில் அப்பகுதி கொள்ளையர் வசமானது.

கொள்ளையர் தலைவன் உதயணன் என்பவன் சபரிமலை ஆலயத்தைத் தீக்கிரையாக்கி அழித்தான். பாண்டிய வம்சமான பந்தள ராஜ குடும்பத்தில், ராஜகுமாரிக்கு தெய்வாம்சத்துடன் ஆர்ய கேரள வர்மன் என்ற ஓர் மகன் பிறந்து, சபரிமலைக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்து மீண்டும் அங்கே சாஸ்தாவின் விக்ரகத்தை பிரதிஷ்டை செய்கிறான். ஆர்ய கேரள வர்மன் என்ற அந்த ராஜகுமாரனின் செல்லப்பெயரும் ஐயப்பன். சபரிமலையின் தேவதையான மணிகண்ட சாஸ்தாவின் பெயரே கேரள வர்மனுக்கும் இருந்ததால் பின்னாளில் சிலபல குழப்பங்கள் உண்டாயின.

இஸ்லாமியரான வாவர் என்ற கதாபாத்திரம் கதைக்குள் நுழைந்தது இந்தக் காலகட்டத்தில்தான். அது புராணக் கதை அல்ல.

யாத்திரையின் நடைமுறை:

இது இப்படி இருக்க, கேரள மக்கள் சபரிமலை தர்மசாஸ்தாவை தங்கள் ரட்சக தேவதையாக ஆராதித்து சபரிமலை யாத்திரை செல்வது தொடர்ந்தது. ஆண்கள் மட்டுமே யாத்திரை மேற்கொண்டார்கள். சபரிமலை யாத்திரைக் கிரமங்களில் பண்டைய கால நடைமுறை – இருமுடி கட்டி அவரவர் வீட்டிலிருந்தே நடந்தே செல்வது. பகவான் மணிகண்டன் கட்டிக்கொண்டு போன இருமுடி போல, யோகத்தில் இருக்கும் பகவானுக்காக காராம்பசுவின் நெய்யை இருமுடியில் அடைத்து அவனுக்காக ஆத்ம சமர்ப்பணமாகக் கொண்டு சென்றார்கள்.

நடைபாதையாக வரும் பக்தர்கள் சென்றடையும் முதல் கேந்திரம் எருமேலி. பண்டைய கால நடைமுறை பற்றிக் கேட்டால் வியப்பு உண்டாகிறது. காளார்க்காடு அப்பு ஐயர் என்ற பக்தர் 1850களில் சபரிமலை வெளிச்சப்பாடு ஸ்தானம் வகித்து வந்தார். அவரே எருமேலி வரும் பக்தர்களின் விரதத்தை அங்கீகரித்து பெரியபாதைக்குள் செல்ல அனுமதிப்பார். அனுமதி இல்லாதோர் மீண்டும் வீடு திரும்பித்தான் வேண்டும். இதுவே அப்போதைய நடைமுறை.

பகவான் மணிகண்டன் பயணப்பட்ட வழியே பெரிய பாதை எனப்படும் பாரம்பரியப் பாதை. இதனையே பகவானின் பூங்காவனம் என்பார்கள். எருமேலி துவங்கி கரிமலை கடந்து சன்னிதானம் அடையும் கிட்டத்தட்ட 41 மைல் கொண்ட பாதை. பண்டைய காலத்தில் சபரிமலைப் பயணம் என்பது எருமேலியில் வணங்கி, பெரியபாதை வழியே வந்து, பதினெட்டாம் படி ஏறி சாஸ்தாவை வணங்கி, மீண்டும் பெரியபாதை வழியே நடந்து திரும்புவது. அல்லது பெரியபாதை வழியே வந்து, புல்மேட்டுப் பாதை வழியே எறி, வண்டிப்பெரியர் குமுளி வழி திரும்புவது. சபரிமலை யாத்திரை என்பது பெரிய பாதையில் மட்டும் 7-8 நாட்கள் இருக்கும் வகையிலேயே அமைந்திருந்தது. வீட்டிலிருந்து கிளம்பும் ஐயப்பன்மார்கள் வீடு திரும்ப குறைந்தது 15-20 நாட்கள் ஆகும்.

இந்தியா சுதந்திரம் அடையும் முன்பு ஒன்றிணைந்த தமிழக-கேரளத்தில், கேரள மக்களும், நெல்லை, குமரி பகுதி மக்களும், கோவை பாலக்காட்டு மக்களும் சபரிமலை யாத்திரையை சகஜமாக மேற்கொண்டவர்களே. என்னுடைய சிறிய பாட்டனார் ஸ்ரீ CV.கிருஷ்ண ஐயர் 1920-30களிலேயே சபரிமலை யாத்திரை மேற்கொண்டவர். அவருடைய டைரிக் குறிப்புகளில் கையில் அரிவாளுடன் பாதையை செப்பனிட்டுக்கொண்டு சென்ற சபரிமலைப் பயணம் பற்றி விவரித்திருக்கிறார். மற்ற தமிழகப் பகுதி மக்களுக்கு, நியமங்களுடன் கூடிய சபரிமலை யாத்திரை என்பது புதிய ஒன்றாக இருந்தது.

ஸ்வாமி ஐயப்பன் நாடகம்

நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை

இப்படி இருந்த சூழ்நிலையில், கிட்டத்தட்ட 1940களில் ஒருமுறை கேரள மாநிலம் ஆலப்புழையில் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நாடகம் போட தன் குழுவுடன் வந்திருந்தார். அப்போது ஒரு பக்தர் ராஜமாணிக்கம் பிள்ளையைத் தொடர்புகொண்டு ஐயப்பன் கதையை நாடகமாகப் போடச் சொல்லிக் கேட்டுக் கொண்டார். ஆரம்பத்தில் தயக்கம் காட்டிய ராஜமாணிக்கம் பிள்ளை, ஐயப்ப சரிதத்தைக் கேட்டவுடன் மனம் உருகி சபரிமலைக்குப் பயணப்பட்டார். அவருடன் நாடகக் குழுவில் பயணப்பட்ட நடிகர் மஞ்சேரி நாராயணன் என்பவரே பிற்காலத்தில் நம்பியார் குருசுவாமியாக அறியப்பட்ட எம்.என்.நம்பியார்.

முதன்முதலில் தமிழகத்தில் திருநெல்வேலி கல்லிடைக்குறிச்சியில் ஸ்வாமி ஐயப்பன் நாடகம் அரங்கேற்றப்பட்டது. நாடகம் மக்கள் மனதை ஈர்த்து தமிழகம் எங்கும் மக்கள் சபரிமலையை நாட ஆரம்பித்தார்கள். நாடகம் போட்ட நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை, தான் கேட்ட கதைகள் பலதையும் திரைக்கதையில் இணைத்து விட்டார். அதன் நம்பகத்தன்மையை முழுமையாக அவர் ஆராயவில்லை. முடிவாக : புராண காலத்து ஐயப்பனும் வரலாற்று ஐயப்பனும் குழப்பப்பட்டு விட்டார்கள். நாடகத்தில் இடைவேளைக் காட்சியில் மேடையில் கடல், கடலில் கப்பல், கப்பலில் வாவர் என ஜனங்கள் வாய்பிளந்து பார்த்தார்கள். அதுவே மனதில் நின்றுவிட்டது. இன்று ஏதோ வாவர் பள்ளிக்குப் போனால்தான் சபரிமலைக்குப் போன பலன் கிடைக்கும் என்று நம்பும் அளவுக்கு அது வளர்ந்து விட்டது. பின்னாளில் வந்த புத்தகங்களும் இதே கதைகளையே சொல்ல ஆரம்பித்துவிட்டன.

புனலூர் சுப்ரமண்ய ஐயர், என்னுடைய தாத்தா CV ஸ்ரீநிவாஸ ஐயர், தளிப்பறம்பா நீலகண்ட ஐயர் முதலான பண்டைய குருமார்கள் தொட்டு தாணுலிங்க நாடார், எம்.என்.நம்பியார் வரை யாருமே வாவர் பள்ளிக்குச் செல்வதை ஏற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இது போன்றே அடுத்த குழப்பம் – மாளிக்கைப்புறத்தம்மன் ஐயப்பனை திருமணம் செய்யக் காத்திருப்பதாகக் கூறப்படும் வரலாறு. இதெல்லாம் நாடகத்தில் சுவைக்காகச் சேர்க்கப்பட்ட சம்பவங்கள். புராண ஆதாரம் ஏதும் கிடையாது. மாளிகைப்புறத்தம்மனுக்கு உருவம் கிடையாது. பல கேரள ஆலய பகவதி ஸங்கல்பம் போலவே கண்ணாடி பிம்பமாகவே இன்றும் பூஜிக்கப்படுகிறாள். மேலே கவசமே சார்த்தப்படுகிறது. அவள் துர்கா லக்ஷ்மி சரஸ்வதி ஸ்வரூபமாகவே பூஜிக்கப்படுகிறாள். பாண்டிய குல தேவதையான மீனாக்ஷி ஸங்கல்பம் என்பதே பந்தள அரண்மனையின் நம்பிக்கை. அவள் ஐயப்பனுக்கு தாய் ஸ்தானமே அல்லாது, இணையாக புராணத்தில் எங்குமே சொல்லப்படவில்லை. மகரவிளக்கு உற்சவத்தில் யானை மீது சரங்குத்திக்கு பவனிவருவது மாளிகைப்புறத்து அம்மன் என்றே பலரும் கருதுகிறார்கள். உண்மையில் பவனி வருவது ஐயப்பனே- அந்த பிம்பத்தில் தெள்ளத் தெளிவாக மீசை உள்ளதைக் காணலாம்.

சபரிமலையும் திருவிதாங்கூர் அரசும்

1780களில் தர்மராஜா என்று அழைக்கப்படும் கார்த்திகைத் திருநாள் ராமவர்மா காலத்தில் திப்புவின் கேரள ஆக்ரமிப்பு துவங்கியபோது, போர்ச் செலவுகளைச் சமாளிக்க முடியாத பந்தள அரசு, தனது மொத்தச் சொத்துக்களையும் திருவிதாங்கூர் அரசரிடம் அடைமானம் வைத்தது. அடைமானத்தை மீட்க முடியாத நிலை உருவாகி, சபரிமலைக் கோவில் உட்பட மொத்தமும் திருவிதாங்கூர் அரசர் வசமானது. சபரிமலை ஆலயம் திருவிதாங்கூர் ஆளுகைக்குச் சென்றது இப்படித்தான்.

வழக்கமாக ஆலயத்தைக் கையகப்படுத்தும்போது அதன் நகைகளையும் எடுத்துக்கொள்ளும் அரசு, சபரிமலை விஷயத்தில் திருவாபரணத்தை பந்தள அரசரிடமே இருக்கும்படியும், அவரே மகர ஸங்க்ரமத்துக்குக் கொண்டு வரும் சம்பிரதாயத்தைத் தொடரும்படியும் சொல்லியது.

இந்திய சுதந்திரத்துக்குப் பின் திருவிதாங்கூர் அரசர் சித்திரை திருநாள் பாலராமவர்மா தன் கட்டுப்பாட்டுக்குள் இருந்த கோவில்களை தனி அமைப்புடன் இணைத்தார். அதுவே திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு. இப்படித்தான் சபரிமலை நிர்வாகம் திருவிதாங்கூர் போர்டு கையில் சென்றது. தேவஸ்வம் போர்டு கேரள அரசின் ஒரு அங்கம் ஆனது.

சபரிமலையில் புனர் பிரதிஷ்டை

சபரிமலையில் பகவானின் யோகாக்னி காரணமாக ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்திக்கும் என்பது பெரியோர் நம்பிக்கை. அதே போல ஆலயம் பலமுறை தீ விபத்துக்களைச் சந்தித்துள்ளது. பல முறை விக்ரஹமும் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. கல்விக்ரஹம், பஞ்சலோகம் எனப் பலமுறை மாற்றப்பட்டது. 1800களில் பல வருடங்கள் தாரு சிலை என்று சொல்லப்படும் மரவிக்ரஹம் கூட இருந்தது. இந்தக் காலகட்டத்தில்தான், மர விக்ரஹத்தில் நெய் அபிஷேகம் நேரடியாகச் செய்ய முடியாமல் இருமுடி நெய்யை நெய்த்தோணியில் கொட்டிவிடும் பழக்கம் உண்டானது. அன்று பெரும்பாலும் வந்தவர்கள் கேரளத்தவர்களே. இன்றும் அந்தக் குறிப்பிட்ட சில ஊர்க்காரர்கள், இருமுடி நெய்யைக் கருவறையில் ஸ்வாமிக்கு அபிஷேகம் செய்வதில்லை. நெய்த்தோணியிலேயே நெய்யைக் கொட்டி அதிலிருந்து சிறிதளவு பிரசாதம் எடுத்துச் செல்கிறார்கள்.

பின்னர் பஞ்சலோக விக்ரஹம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 1902ல் ஒரு தீவிபத்து ஏற்பட்டு, மேல்சாந்தியின் முயற்சியால் விக்ரஹம் காப்பாற்றப்பட்டு, 1904ல் புனர்பிரதிஷ்டை செய்யப்பட்டது. முழு ஆலயமும் சீரமைக்கப்பட்டது. அப்போது வேறு பாதை இல்லை. எல்லாக் கட்டுமானப்பொருட்களும் பெரிய பாதை வழியாகவே சன்னிதானம் வந்தடைய வேண்டும்.

பந்தளம் அரண்மனையிலிருந்து திருப்பணிக்காக மரங்கள் எருமேலிக்குக் கொண்டு வரப்பட்டன. அழுதைவரை மரங்களைக் கொண்டுவந்துவிட்ட தொழிலாளர்கள் கல்தூண் போல கனத்த மரங்களை இனி மலையேற்ற முடியாது என்று பிரமித்துக் கைவிரித்தார்கள்.

திடீரென எங்கிருந்தோ அங்கே வந்து சேர்ந்த ஒரு பக்தர், உரத்த குரல் கொடுத்தார். ஆவேசம் வந்தவர் போல ஒரு பரவச நிலையில் காணப்பட்ட அவர், கட்டளை போல ஒரு வாக்கினைச் சொன்னார் : “இனி இந்தத் தூண்களை சுமப்பவர்கள், சன்னிதானம் அடையும் வரை எந்தச் சுமையையும் உணரவே மாட்டார்கள்.”

இவரது ஆவேசத்தால் உந்தப்பட்ட தொழிலாளர்கள் அவரது சத்திய வாக்குக்கு ஏற்ப சுமையே இல்லாமல் மயிலிறகு போலச் சுமந்து சென்றார்கள்.

சன்னிதானம் அடைந்து எல்லாவற்றையும் கீழே வைக்கும் வரை அதே ஆவேசத்துடன் உடன் இருந்த அந்த பக்தர், அடுத்த நொடி யார் கண்ணிலும் காணாமல் மறைந்து விட்டார். அப்படி உருவாக்கப்பட்டதே இன்று நாம் காணும் சபரிமலை அமைப்பு.

1950ல் உடைக்கப்பட்ட ஐயப்பன் விக்ரஹம்

சபரிமலையின் புகழ் நாளுக்கு நாள் அதிகமானது அங்கிருந்த சில ஆசாமிகளுக்குப் பொறுக்கவில்லை. கோவிலின் பாரம்பரியத்தை அழிக்கும் முயற்சி அப்போதே நடந்தது. 1950ல் சதியின் காரணமாக சபரிமலையில் பெரு நெருப்பு உண்டாக்கப்பட்டு திருக்கோவில் சாம்பலானது. ஐயப்பனின் விக்ரஹமும் மூன்றாக உடைந்து சேதமடைந்தது. ஆனால் ஐயனின் திருவுள்ளம் வேறுவகையில் இருந்தது. எந்தக் காரணத்துக்காக இந்தச் சதிச்செயல் அரங்கேறியதோ அதற்கு நேர் எதிராக, மிகச்சிலர் மட்டுமே அறிந்திருந்த சபரிமலைக் கோவில் பார் முழுவதும் அறிய இந்த நெருப்பு காரணமாகி விட்டது. இதன் பின்னர் சில மாதங்கள் பின்னப்பட்ட விக்ரஹமே பூஜையை ஏற்றது.

இந்தச் சந்தர்ப்பத்தில் குறிப்பிட வேண்டிய மற்றொரு விஷயம் – தீவிபத்து குறித்து கேள்விப்பட்டு வந்த போலீஸும், தீயணைப்புத்துறை வீரர்களும் பம்பையில் பரிதவித்து நின்றார்கள். விரதமில்லாத நாம் எப்படி சபரிமலை ஏறுவது, அதனால் ஏதும் தெய்வதோஷம் உண்டாகுமோ என்ற பயம் அவர்களை ஏறவிடாமல் தடுத்தது. அப்போது என்னுடைய பாட்டனார் உட்பட அங்கிருந்த குருமார்கள் அவர்களுக்கு விபூதி கொடுத்துக் கடமையைச் செய்யுங்கள் என்று ஆசி கூறி மலையேறச் சொன்னதாக அவர்கள் சொல்லிக் கேட்டுள்ளேன்.

இன்றைய ஐயப்ப பிரதிஷ்டை

இதன் பின்னர் சபரிமலையில் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டிய புதிய விக்ரஹம் உருவாக்கப்பட்டது. கேரளத்தைச் சேர்ந்த சுவாமி விமோசனானந்தா என்பவர் ஒரு விக்ரஹத்தையும், தமிழகத்தின் பிடி.ராஜனும் நவாப் ராஜமாணிக்கம் பிள்ளை இருவரும் சேர்ந்து ஒரு விக்ரஹத்தையும், என்னுடைய பாட்டனார் CVஸ்ரீநிவாஸ ஐயர் ஒரு விக்ரஹத்தையும் தயார் செய்தார்கள். 1952ல் இன்று நாம் காணும் ஐயப்பனின் விக்ரஹம், பிடி.ராஜன், ராஜமாணிக்கம் பிள்ளை கொணர்ந்த விக்ரஹம் தேவ ப்ரச்னத்தின் மூலம் ஏற்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது. இந்தப் பிரதிஷ்டையை நடத்தியது கண்டரரு சங்கரரு. (பின்னர் ஐயப்பனைக் குறித்து மக்களுக்குத் தெரியப்படுத்த, பிடிராஜன் தலைமையில் தென்னகம் எங்கும் எடுத்துச் செல்லப்பட்ட மற்றொரு விக்ரஹமும் உண்டு. அது ஹரித்வாரில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. ஸ்வாமி விமோசனானந்தா உருவாக்கிய விக்ரஹம் காசியில் 18 படிகளுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டது. எனது பாட்டனார் உருவாக்கிய விக்ரஹம், இன்றும் பாலக்காட்டில் எங்கள் பூர்வீக வீட்டில் உள்ளது.)

பின்னம் அடைந்த பழைய ஐயப்ப விக்ரஹம் மணியாக்கப்பட்டு சந்நிதிக்கு எதிரே கட்டிவைக்கப்பட்டது. மணி ரூபத்தில் காட்சி தரும் மணிகண்ட ஸ்வாமி, ஒலி ரூபமாகவும் அதாவது சப்தமாகவும் இருந்து அருள்பாலிக்கிறார். இதன் பிறகுதான் சபரிமலையின் ஒலி, உலகெங்கும் இன்னும் பிரவாகமெடுத்துப் பரவியது.

சின்னப்பாதை

இந்த சம்பவங்களுக்குப் பிறகு கொஞ்சக் கொஞ்சமாக சபரிமலைக்கு பக்தர் கூட்டம் வரத்துவங்கியது. 1960களில் திரு விவி.கிரி கேரள மாநில கவர்னராகப் பணியாற்றினார். கவர்னருக்கு சபரிமலை செல்லும் ஆசை உண்டானது. ஆனால் பெரிய பாதையில் செல்ல அவரால் முடியாது. கவர்னர் விவி.கிரிக்காக சாலக்காயம் பாதை உருவானது. அதிலிருந்துதான் சின்னப்பாதை என்று சொல்லப்படும் பம்பை பாதை பிரபலமானது. இன்று நாம் காணும் பம்பா கணபதி ஆலயம், ராமர் சன்னிதி போன்றவையெல்லாம் இதன் பின்னர் உருவானதே. பழமலைக்காரர்களைப் பொருத்தவரை பகவான் குழந்தையாக வந்திறங்கிய பம்பை என்பது பெரியானவட்டம் பகுதியில் ஓடும் பம்பைக்கரையே.

ஆக, அரசியல் தலையீடே பெரியபாதையை சுருக்கி சின்னபாதையை உருவாக்கிய காரணம். அதே போல டோலி முறை உருவாகவும் விவி.கிரியே காரணம். சின்னப்பாதையிலும் நடந்து ஏற முடியாத விவி.கிரி தன்னை நாற்காலியில் அமர்த்திச் சுமந்து செல்லும்படிக் கேட்டுக் கொண்டார். சபரிமலை விதிகளை மீறி அப்படி சுமந்து செல்ல எல்லோருமே பயப்பட்டார்கள். தன்னைச் சுமந்து செல்ல முன்வருபவர்கள் நால்வருக்கும், குடும்பத்துக்கு ஒரு ஆளுக்கு அரசு வேலை தருவதாக விவி.கிரி சொன்னார் என்று பெரியோர்கள் சொல்வார்கள். அப்படி டோலி முறையும் சபரிமலைக்குள் வந்தது.

பெண்களுக்கான நிலை

சில விஷயங்கள் சட்டம் போட்டுத்தான் சொல்லப்பட வேண்டும் என்றில்லை. பாரம்பரிய நம்பிக்கை என்பது நம் பாரத மக்கள் உணர்விலேயே கலந்தது. ஆலயத்துக்குள் செருப்புப் போட்டுக்கொண்டு வரக்கூடாது என்பது போர்டு எழுதி தெரிவிக்க வேண்டிய நிலை இந்தியாவில் இல்லை. ஆனால் அதை அறியாதவர்களுக்கே விதிகளை எடுத்துச் சொல்லவேண்டும்.

1820ல் வெளியான ஒரு கேரள அரசு சர்வே குறிப்பு சபரிமலை பற்றிப் பேசுகிறது. Word and Connor என்ற ஆங்கிலேய அதிகாரிகள் வெளியிட்ட அரசு வெளியீடு, பூப்படைந்த பெண்களும் மாதவிடாய் நிற்காத பெண்களும் சபரிமலை ஏறத் தடை இருப்பதைத் தெளிவாக உரைக்கிறது. ஆங்கிலேயர்களும் கூட அதற்கு மதிப்பளித்து அந்த ஆலய சம்பிரதாயத்தை மாற்ற முயற்சிக்கவில்லை.

ஆனாலும் 1950கள் வரை ஒன்று இரண்டு பெண்கள் சபரிமலைக்கு வந்தது கூடக் கேள்விப்பட்டது இல்லை. அது யோகபீடம் என்ற காரணத்தால், மாதவிடாய் சுழற்சி இருக்கும் பெண்களின் உடற்கூறுக்கு அந்த க்ஷேத்ரத்தின் யோக நிலை ஏற்றது இல்லை, அதனால் பாதிப்பு உண்டாகும் என்பதை பக்தர்கள் நம்பி, அதற்கு மதிப்பளித்தே இருந்தார்கள்.

திருவிதாங்கூர் அரசுக்கே அப்போது சபரிமலைக் கோவில் சொந்தமாக இருந்தது. ஆனால் திருவிதாங்கூர் மஹாராணி, ராணி பார்வதி பாய், கோவில் விதிகளை அனுசரித்து, 1942ல், தனது கருப்பை நீக்கப்பட்ட பின்பே சபரிமலை வந்து ஐயப்பனை தரிசித்தார்.

பம்பை கணபதி கோவில் உருவாக்கப்பட்டு, சின்னப்பாதையும் வந்த பிற்பாடே அதாவது 1960களுக்குப் பிறகே பெண்கள் சபரிமலைக்கு வரத்தலைப்பட்டார்கள். அப்போதும் இளம் வயதுப் பெண்கள் மலைக்கு வரவில்லை. யாரும் அழைத்து வரவும் இல்லை. தனது 50வது வயதுக்குப் பிறகு சபரிமலை யாத்திரை துவங்கி 40 மலை யாத்திரை முடித்த ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த ஒரு பாட்டியம்மா மிகவும் பிரபலம். பஜனைப்பாடகியான பெங்களூர் ரமணியம்மாளும் தனது 55 வயதுக்குப் பின்னர் சபரிமலை யாத்திரை மேற்கொண்டு பெரும் குழுக்களையும் அழைத்துச் சென்றார். சபரிமலையுடனும் ஐயப்பனுடனும் தொடர்புடைய குடும்பங்களான தாழமன் இல்லம், கம்பங்குடியார், பந்தளம் ராஜ குடும்பம், ஆலங்காடு, அம்பலப்புழை சங்கம் என இவர்கள் குடும்பங்களில் யாரும் விதியை மீறித் தங்கள் குடும்பப்பெண்களைக் கூட மலைக்கு அழைத்து வருவதில்லை என்பதையும் அறிந்துகொள்ள வேண்டும்.

1900களில் வருடம் ஒருமுறை திறந்த சபரிமலை நடை, பின்னர் மண்டல பூஜைக்குத் திறக்கப்பட்டு, இரு மாதங்களுக்கு ஒருமுறை திறக்கப்பட்டு, 1960க்குள் மாதா மாதம் திறக்கும் நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில்தான் பம்பா வழிப்பாதை உருவான காரணத்தால், வசதிகள் அதிகமாயின. பெண்கள் அதிகம் வரத்துவங்கினார்கள். 1975-80களுக்குப் பின் ஆந்திர கர்நாடக மாநில பக்தர்கள் அதிகம் வருவதும், அவர்கள் குடும்பத்துடன் வந்து, பம்பையில் பெண்களை விட்டுவிட்டு, தாங்கள் மட்டும் மேலே சென்று தரிசனம் கண்டு வரும் வழக்கத்தை உருவாக்கினார்கள். மாத பூஜைகளில் பலநாட்களில் ஆளே இல்லாத நிலை இருப்பதைக் கண்டு இந்தப்பெண்களில் சிலர் தன்னிச்சையாக மேலே வரத் துவங்கினார்கள்.

அதிகாரிகள் சிலரும் இதனைக் கண்டும் காணாமலும் இருந்து வந்தார்கள். இந்த இடத்தில் இன்னொரு விஷயத்தையும் சொல்லவேண்டும். 2017ல் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட வேண்டி, பழைய கொடிமரம் பிரிக்கப்பட்டபோது ஒரு குட்டு வெளிப்பட்டது. 1965-66களில் சபரிமலைக்குக் கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அந்தக் காலத்திலேயே வெறும் காங்க்ரீட் சிமெண்ட்டைக் கொண்டு கொடிமரம் போலக் கட்டி அதற்கு மேலே பித்தளைத் தகடுகளால் மூடும் அளவுக்கு அரசு அதிகாரிகள் ஜித்தர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால் விதிகளை மீறி அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண்களை அனுமதித்ததில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை.

இந்நிலையில், இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல எம்.என்,நம்பியார் நடித்த ‘நம்பினார் கெடுவதில்லை’ திரைப்படத்தை சபரிமலையிலேயே படமாக்க எண்ணினார்கள். 1986ல் சுதாசந்திரன், ஜெயஸ்ரீ போன்ற இளம் நடிகைகளுடன் படக்குழுவினர் அங்கே வந்து நடிக்க, படம் எடுக்கப்பட்டது. இதன் பின்னரே பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது.

கேரள நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, 1991ல் (பூப்பெய்திய பெண்கள், மாதவிடாய் நிற்காத பெண்கள் என்றெல்லாம் விதியில் எழுத முடியாத காரணத்தால், நாகரீகமாக) 10 வயதுக்கும் குறைவாகவும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் மட்டுமே சபரிமலையில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற விதி அமலானது.

1972ல் பரணீதரன் ஆனந்த விகடனில் கேரள விஜயம் என்ற பெயரில் ஒரு தொடர் எழுதினார். அதில் ஒரு சம்பவத்தைச் சுட்டிக் காட்டுகிறார்: சபரிமலையில் ஒரு பெரியவர் தேவஸ்தான அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். அங்கிருந்த தகவல் பலகையைச் சுட்டிக் காட்டி, “இங்கே குழந்தைகளுக்கு அன்னப்ராஸனம் நடத்த கட்டணம் என்று போட்டிருக்கிறீர்களே, அம்மா இல்லாமல் கைக்குழந்தை எப்படி வரும்? நீங்களே இங்கே இளம் பெண்கள் வருவதை ஊக்குவிக்கிறீர்களா?” என்று சண்டை போட்ட சம்பவம் ஒன்றைக் குறிப்பிடுகிறார்.

1994ல் இதே போல வத்ஸலா குமாரி என்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி தனது 42வது வயதில், பணி நிமித்தமாக சபரிமலை செல்ல அனுமதி வேண்டி நீதிமன்றத்தை அணுகினார். பணிநிமித்தமாக மேலே செல்ல அனுமதி அளித்த நீதிமன்றம், ஆலய சம்ப்ரதாயத்தில் தலையிடக்கூடாது என்ற காரணத்தால் பதினெட்டாம்படி ஏறவோ, சன்னிதானம் செல்லவோ அனுமதி அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. வத்ஸலா குமாரியும் 50 வயது வரை காத்திருந்தே ஐயப்பனை தரிசனம் செய்தார்.

அப்போதுமே பக்தர்கள் இது ஆலய ஸம்ப்ரதாயத்துக்கு எதிரானது என்று உணர்ந்து அதை கடைப்பிடிக்கவே செய்தார்கள், அதை மீற நினைத்தவர்களை எதிர்த்தும் இருக்கிறார்கள்.

இன்றைய நிலை

இன்று சபரிமலை மாறிவிட்டது; பழைய ஆசாரங்கள் பலதும் பலரும் கடைப்பிடிப்பது இல்லை. மண்டல விரதம் இன்ஸ்டண்ட் விரதம் ஆகிவிட்டது. பெண்கள் மட்டும் வந்தால் தவறா என்ற கேள்வி முன்வைக்கப்படுகிறது.

இன்றைக்கும் மண்டல விரதத்தை திரிகரண சுத்தியோடு கடைப்பிடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள். 40 வருடம் ஆனாலும் ஒரே குருநாதருடன் அவர் கட்டளையை ஏற்றே மலைக்குச் செல்பவர்களும் இருக்கிறார்கள். சிலர் தவறு செய்கிறார்கள் என்பதால் தவறு நியாயம் ஆகாது என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

ஐயப்பனைப் பக்தி பூர்வமாக நம்புபவர்கள் ஐயப்பன் வாக்கை மீற மாட்டார்கள். மீறி வர நினைப்பபர்கள் ஐயப்பனை முழுமையாக நம்பவில்லை என்றே பொருள்.

சபரிமலை ஆலயம் தனித்தன்மை கொண்டது. பகவான் சாஸ்தா மனிதனாக பூமியில் தோன்றி, நமக்காக தவக்கோலம் பூண்டு நைஷ்டீக பிரம்மச்சரியத்தில் தனியோகம் புரியும் மஹா யோக பீடம். இன்னும் அங்கே மணிகண்டன் ஜீவனோடுதான் இருக்கிறான். அதனாலேயே எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு விரத நியமம் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு பதினெட்டுப் படியும் அதற்கான பூஜையும் இல்லை; எந்த ஒரு கோவிலுக்கும் இப்படி ஒரு ஆத்ம சமர்ப்பண தத்துவமான இருமுடியும் நெய் அபிஷேகமும் இல்லை.

இப்படிப்பட்ட ஒரு சம்பிரதாயத்தைதின் ஒரு பகுதியைத்தான் இன்று நீதிமன்ற ஆணை மூலம் தகர்த்துவிட்டதாக எண்ணுகிறார்கள். ஆனால் இது ஒரு சோதனைக் காலம் என்றே பக்தர்கள் கருதுகிறார்கள். தீ விபத்தைக் காரணமாக்கி ஐயப்ப தர்மத்தை உலகறியச் செய்த பகவானின் லீலை போல, இந்தச் சோதனையை சாதனையாக்கி இன்னும் லீலைகள் நடத்துவான் ஹரிஹரசுதன்.

க்ஷத்ரிய தர்மத்தைக் கைவிடாமல், நீதிமன்றத் தலையீட்டை ஏற்காமல், சம்பிரதாயத்தைக் கடைப்பிடிக்க குரல் கொடுக்க பந்தள ராஜா கூட்டிய கூட்டத்துக்கு 1 லட்சம் பக்தர்கள் – பெண் பக்தைகள் கூடி இருக்கிறார்கள். உண்மை பக்தர்கள் இருக்கும் வரை ஆலயத்தின் சம்பிரதாயங்கள் காக்கப்படும்.

ஸ்வாமியே சரணம் ஐயப்பா.

குறிப்பு: கட்டுரையாசிரியர் கடந்த 22 வருடங்களாக ஐயப்பனைக் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார். சபரிமலையில் பங்குனி உத்திரத் திருநாளை துவங்கி நடத்திய கல்பாத்தி ஸ்ரீநிவாஸ ஐயரின் பேரன் என்ற முறையில், இவரது குடும்பத்துக்கும் சபரிமலைக்குமான தொடர்பு நூறாண்டுகளுக்கும் மேலானது. இவர் ஐயப்பனைக் குறித்து மஹா சாஸ்தா விஜயம் என்ற 1000 பக்க நூலை இயற்றியுள்ளார்.